எப்போது வருவார் எப்படி வருவார் என்று யாருக்கும் தெரியாது, ஆனால் வரவேண்டிய நேரத்தில சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கண்டிப்பாக வருவார் என்று அவரது மருமகனும், நடிகருமான தனுஷ் தெரிவித்தார்.
மூச்சுதிணறல், சிறுநீரக பாதிப்பு போன்ற உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் ஒரு மாதமாக சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
ரஜினிகாந்த் சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அண்மையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தற்போது அவர் சிங்கப்பூரில் வாடகைக்கு வீடு எடுத்து ஓய்வு எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் ரஜினிகாந்தை பார்த்து விட்டு நடிகர் தனுஷ் நேற்றிரவு 10.30 மணிக்கு சென்னை திரும்பினார். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஜினிகாந்த் நலமாக இருக்கிறார் என்றார்.
தனி வீட்டில் அவர் தங்கி இருந்த படியே, மருத்துவர்களின் ஆலோசனைப்படி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் தனுஷ் கூறினார்.
ரஜினிகாந்த் எப்போது சென்னை திரும்புவார் என்று கேட்டதற்கு, அவர் எப்போது வருவார் எப்படி வருவார் என்று யாருக்கும் தெரியாது, ஆனால் வரவேண்டிய நேரத்தில கண்டிப்பாக வருவார் என்றார் தனுஷ்.
12 கருத்துரைகள்:
தலைவா....வெயிட்டிங்!!
விரைவில் தமிழகம் வர வேண்டுகிறேன்.....
ரானாவில் தங்களின் ஆதிக்கம் தொடரட்டும்...
நான் தான் பஸ்ட்டா...
This comment has been removed by the author.
//வரவேண்டிய நேரத்தில் ரஜினி கண்டிப்பாக வருவார்: தனுஷ் //
தாங்க முடியல
//அட்ராசக்க சி.பி. செந்திலின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி//
எப்போ படம் ரிலீஸ்?
தலைவா சீக்கிரம் வாங்க...
ரானா படத்துல நீங்க வரும் முதல்காட்சியில் விசிலடிக்க கத்து கொண்டிருக்கிறோம்..
ok thanks for the information!
சீக்கிரம் வரணும்
அப்போ ஜூலை 10ம் தேதி வரலையா?..சம்திங் ராங்.
இவருக்கு சிறு நீராக மாற்று அறுவை சிகிச்சை செய்யப் பட்டுள்ளதாகவும் இவரது மூத்த மகள் சிறுநீரக தானம் செய்துள்ளதாகவும் தகவல்கள் கசிகின்றன. இதை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. இவருக்கு பல முறை டயாலிசிஸ் செய்யப் பட்டது, சிங்கப்பூருக்கு போகும் போது களைப்பான குரலில் பேசியது, [எத்தனையோ ஊர் இருக்க, சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு அமர்சிங் போன அதே சிங்கப்பூர் ஹாஸ்பிடலுக்கு எதுக்கு போவனும்!]கூடவே இவரது மகள்களும் சென்றது என்று கூட்டி கழித்துப் பார்த்தால் இது உண்மையாக இருக்கும் என்றே தோன்றுகிறது. நான்கைந்து முறை டயாலிசிஸ் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஒருத்தர் பத்தே நாளில் சகஜமாகும் அளவுக்கு உலகில் எந்த சிகிச்சையும் இருக்கும் போலத் தெரியவில்லை. மேலும் ஆபரே ஷன் முடிந்த கையேடு அங்கே ஓய்வெடுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இந்த செய்தி பொய்யாகி, அவருக்கு அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்றால், நமக்கும் மகிழ்ச்சியே!!