இன்று கதம்ப சாதம் மற்றும் காய்கறி கட்லெட் செய்வது எப்படி என்பதை பார்க்க போறோம். நீங்களும் செய்து பாருங்களேன்...
கதம்ப சாதம்
தேவையான பொருட்கள்:
அரிசி: 1 கிலோதுவரம் பருப்பு: 250 கிராம்
உளுந்தம்பருப்பு: 50 கிராம்
கடலைபருப்பு: 50 கிராம்
தக்காளி: 250 கிராம்
வெங்காயம்: 250 கிராம்
புளி: 50 கிராம்
காய்ந்த மிளகாய்: 10 கிராம்
முழு மல்லி: கிராம்
மிளகு, சீரகம்: 25 கிராம்
பெருங்காயம்: 5 கிராம்
துருவிய தேங்காய்: 150 கிராம்
காராமணி: 250 கிராம்
கேரட், பீன்ஸ்: 200 கிராம்
சேனை கிழங்கு: 250 கிராம்
கிராம்பு, கடுகு, கருவேப்பில்லை கொஞ்சமாக...
செய்முறை:
அரிசி, துவரம் பருப்பு, தக்காளி, பாதி அளவு வெங்காயம் இவற்றை குக்கரில் போட்டு வேக வைக்கவும். காய்ந்த மிளகாய், முழு மல்லி, மிளகு, சீரகம், கடலை பருப்பு, இவற்றை அரைத்து மாவாக்கி கொள்ளவும், புலியை கரைத்து கொள்ளவும், எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, கருவேப்பில்லை போட்டு தாளிக்கவும். மிச்சமுள்ள வெங்காயம் மற்றும் காய்கறிகளை போட்டு வதக்கவும், பிறகு மிளகாய் தூள், மல்லி தூள், தேங்காய் துருவல் போட்டு வேக விடவும்.
வெந்ததும் ஏற்கனவே வெந்து எடுத்து வைத்திருக்கும் அரிசி, பருப்பு, கலவையில் போடவும். அதன் மீது தேவையான மசாலா தூள் மற்றும் புளிக்கரைசலை ஊற்றி, கடைசியாக நெய் கரைத்து விடவும். இப்போது சுவையான கதம்ப சாதத்தை வீட்டில் அனைவருக்கும் மகிழ்ச்சியோடு பரிமாறவும்.
காய்கறி கட்லெட்
உருளை கிழங்கு: 1/4 கிலோ
ரஸ்க் - 6
பட்டாணி: 100 கிராம்
பெருஞ்சீரகம்: 2 தேக்கரண்டி
காரட்: 150 கிராம்
முருங்கை பீன்ஸ்: 50 கிராம்
பெரிய வெங்காயம்: 2
இஞ்சி: சிறிய துண்டு
வற்றல் தூள்: 2 தேக்கரண்டி
பூண்டு: 8 பல்
மல்லி தழை, கருவேப்பில்லை சிறிது
கொஞ்சம் நெய்
பட்டை: 1
கிராம்பு: 6
உப்பு: தேவைக்கேற்ப
முந்தரி பருப்பு: 10
மைதா அல்லது கடலை மாவு: 2 மேசை கரண்டி
செய்முறை:
உருளை கிழங்கை வேக வைத்து உரித்து உதிர்த்து வைத்துக் கொள்ளவும். மற்ற காய்கறிகளை பொடியாக நறுக்கு ஆவியில் வேக வைத்து இறக்கி அகன்ற பாத்திரத்தில் உதிர்த்த உருளைக் கிழங்கு, வற்றல தூள், மசாலா போடி, தேவையான உப்பு சேர்த்து வைக்கவும். வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பூண்டு, இஞ்சி, முந்தரி பருப்பு, மல்லி தழை, கருவேப்பில்லை போட்டு வதக்கி, நன்றாக வதங்கியதும் காய்கறி கலவையை அதில் கொட்டி தண்ணீர் வற்றும் வரை அடுப்பில் வைத்து இறக்கி வைக்கவும்.
மைதாவை சிறிது உப்பு சேர்த்து கெட்டியாக கரைத்து காய்கறி கலவையில் பெரிய எலுமிச்சம் பழ அளவு எடுத்து வட்டமாக அழுத்தி சீராக கையால் உருட்டி மைதா மாவில் தோய்த்து ரஸ்க் தூளில் நன்றாக புரட்டி (காய்கறி தெரியாமல் புரட்ட வேண்டும்) தாம்பாளத்தில் வைக்கவும். எல்லா காய்கறிகளையும் இவ்வாறு புரட்டி வைத்துக் கொள்ள வேண்டும். வாணலியில் நெய்யை காய வைத்து கட்லேட்டுகளை போட்டு பொன்னிறமாக எடுக்கவும். தோசைக் கல்லிலும் நெய்யை ஊற்றி, கட்லேட்டுகளை போட்டு இரு பக்கமும் திருப்பி போட்டு சிவந்ததும் எடுக்கலாம். சுவையான காய்கறி கட்லெட் பரிமாற, ருசி பார்க்க ரெடி.
16 கருத்துரைகள்:
உனக்கு தெரியாத விஷயமே கிடையாதா? சமையல் குறிப்பெல்லாம் கூட கொடுக்கரே. ம்ம்ம்ம்ம் கலக்கு.
நல்ல சுவையான ரெசிப்பிதான்
@Lakshmi
என் மனைவியின் குறிப்பு இது...
தமிழ்மணம் காணவில்லை. எங்கே போனது?
Very tasty foods
Did you taste it . .
தினமும் அண்ணன் சமையல்தான் வீட்டில். ””எங்க குடும்பத்தின் ஆரோக்கியத்திற்கு என் கணவரின் தினசரி சமையலே காரணம் ”” அப்படின்னு அண்ணி என்கிட்ட விளம்பரம் செய்யாத குறையா சொல்லியிருக்கிறார்கள். ஆனால் என் மனைவியின் குறிப்புன்னு சொல்லி எஸ்கேப் ஆகிறார் பாருங்கள்.
சண்டே சமைக்கும்போது அப்படியே எழுதியாச்சா அருமை சமயல்வாசி பிரகாஷ் .. ஹா ஹா
அடுத்த பதிவர் சந்திப்புக்கு நீ தான் சமையல் - இந்த ரெண்டு ஐட்டமும் இருக்கணும் - ஆமா சொல்லிப்புட்டேன் - நட்புடன் சீனா
பரோட்டா செய்வது எப்படி.....??
பீர் அடித்து விட்டு, பரோட்டாவையும் மிக்சரையும் எப்பிடி சாப்பிடுவது இப்பிடி பட்ட சரித்திர முக்கியம் வாய்ந்த கேள்விக்கெல்லாம் பதில் சொல்லணுமாக்கும் சரியா....
தமிழ்மணம் அவுட்டு ஹே ஹே ஹே ஹே ஹை ஜாலி ஜாலி......
அருமையான சமையல் குறிப்புகள் பாஸ்
//என் மனைவியின் குறிப்பு இது..// பாருங்கய்யா..அண்டப்புளுகு..ஆகாசப்புளுகு.
சமைச்சதில் மிச்சம் சொச்சம் ஏதாச்சும் இருக்கிறதா ?
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
குழந்தைகளுக்கான நுண் அறிவு வளர்க்கும்(fine movement) இலகு கருவி (உள்ளுர் கண்டுபிடிப்பு)
பயனுள்ள பதிவு சகோ,
அருமையான டிப்ஸ்,
வீட்டில் செய்து பார்த்த பின்னர் எப்படி உங்க டிப்ஸ் என்று சொல்றேன்.
கட்லெட் ரெஸிப்பிக்கு நான் கியாரண்டி. நன்றாக வந்தது. மைதாவிற்கு பதிலாக அரிசி மாவில் பூச்சு கொடுத்தேன்.