ஜெல்லி புரூட் சாலட்
ஒரு கப் மோல்ட் ஜெல்லி தயாரிக்க தேவையான பொருட்கள்:
ஜெலட்டின் - 1 டீஸ்பூன்தண்ணீர் - 1 டேபிள்ஸ்பூன்
சுடு தண்ணீர் - 1 கப்
அன்னாசிப்பழம் - 40 கிராம்
கிராம்எலுமிச்சை சாறு - 1/2 டேபிள்ஸ்பூன்
வினிகர் - 1/2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
almond (பாதாம்பருப்பு) - 2
அன்னாசி சாறு - 2 மேசைக்கரண்டி
காரட் துருவியது - 50 கிராம்
செய்முறை:
1. பச்சை தண்ணீரில் ஜெலட்டினை ஊர வைத்து அதை கரைக்க சூடு பண்ணவும்.
2. அன்னாசிப்பழ சாறு எடுக்க பழத்தை லேசாக பிழிந்து மீதி பழத்தை துண்டுகளாக தனியாக எடுத்து வைக்கவும்.
3. பழச்சாற்றில் தண்ணீரை ஊற்றி 1 1/2 கப் வருமாறு பார்த்துக் கொள்ளவும். வினிகர் அல்லது எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்க்கவும்.
4. அன்னாசி பழம், துண்டுகளுடன் துருவிய காரட், வால்நட் ஆகியவற்றை கலந்து வைக்கவும்.
5. எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து ஜெல்லி மொல்ட்டில் ஊற்றி பிரிட்ஜில் குளிர வைக்கவும். நன்றாக கெட்டியான பின்னர் எடுத்து பரிமாறவும்.
----------------------------------------------------------------------------------------
சிக்கன் சாலட்
தேவையான பொருட்கள்:
வேகவைத்த சிக்கன் - 150 கிராம்
ஸ்ப்ரிங் ஆனியன் - 1 கட்டு
அன்னாசிப்பழம் - 1 கப்
கிஸ்மிஸ் பழம் - 10
கொத்தமல்லி - கொஞ்சம் நறுக்கியது
நறுக்கிய தக்காளி - 2 மட்டும்
உப்பு - தேவையான அளவு
மிளகு தூள் - தேவையான அளவு
ஆலிவ் எண்ணெய் - 1 ஸ்பூன்
செய்முறை:
ஒரு கிண்ணத்தில் உப்பு, மிளகு, போட்டு வேக வைத்த சிக்கனை வைத்து அதைச்சுற்றி ஸ்ப்ரிங் ஆணியனை நறுக்கி தூவ வேண்டும். தக்காளி, அன்னாசிப்பழம் எல்லாவற்றையும் சேர்த்து அதில் உப்பு,மிளகு போடி தூவிக் கொள்ள வேண்டும், ஆலிவ் எண்ணெய் அதில் சேர்த்து கொத்தமல்லி கொண்டு சிக்கனை அலங்கரிக்கலாம்.
18 கருத்துரைகள்:
இனிய காலை வணக்கம் மச்சி.
சமையலறை: ஜெல்லி புரூட் சாலட், சிக்கன் சாலட் செய்வது எப்படி?//
ஆஹா,
சண்டேன்னா லீவு,
ஆனால் தமிழ் வாசி வீட்டில் மட்டும் அவரோடை சமையல் ஸ்பெசலு!
வடை போச்சே..
சரி சிக்கன் சாலட் ..
எப்படியோ காலை டிபன் ஓவர்...
வித்தியாசமான இரு ஜெலி சாலட் செய்யும் முறையினைப் பகிர்ந்திருக்கிறீங்க.
வீட்டில் அம்மாவிடம் சொல்லிச் செய்து பார்க்கிறேன்,
நன்றி சகோ.
sako/ippidiyellaam podurinka
neenkal samaiyalil nalla puliya?
nalla pakirvu...
seythu paarpoam orunaal
ஒரு பிடி பிடிச்சிடவேண்டியதுதான்
hi hi hi ஹி ஹி ஹி
சண்டே மட்டுமா அண்ணன் சமையலு?..நடக்கட்டும்..நடக்கட்டும்.
இப்பதான் புரியுது மனையாள் ஏன்
வீட்டில் சமைக்கப் பஞ்சிப்படுகிறாள் என்று.சமையுங்கோ சமையுங்கோ சகோ என்றாவது ஒருநாள் உங்கள் நளபாகத்தை ருசிக்க வாய்ப்புக் கிடைக்காதா!!!............
நிருபன்,தமிழ்வாசி இன்னும் யார் யாரோ சமைல்க்கட்டின் எதிர்கால வல்லுனர்களாகத் திகழ வாழ்த்துக்கள்..ஹி...ஹி....ஹி....
ஞாயிறு ஸ்பெசலா
ennaila irunthu ipidi ., diffent item than senju pakkuren sago
இரண்டுமே அருமை.
செய்து பார்க்கிறேன். நன்றி!
அருமையான சமையல் ரிப்ஸுங்கோ... செஞ்சு பாத்திட்டா போச்சு
முயற்சி செய்து பார்த்து ஒரு பிடி பிடிக்க வேண்டியதுதான்
மாப்ள வீட்ல நல்லா சமைக்கிறேன்னு தெரியுது ஹிஹி!
சரி எப்போ ஜெல்லி சால்அட் செஞ்சு கொண்ட வர்ப் போறே - அடுத்த பதிவர் சந்திப்புக்கு நீதான் செஃப் - ஜெல்லி ஃப்ரூட் சாலட் தான் எல்லாருக்கும்
ஆமா சிபி தூங்கிட்டாரோ - இல்ல சாலட் பிடிக்காதா ?
நானானியே அருமைன்னு சொல்லிட்டாங்க - நிச்சயம் நல்லாத்தான் இருக்கும்