முதல் பாகம்: மதுரை ஜங்க்ஷனில் நடந்த பதிவர்களின் மினி சந்திப்பு - 1
குறையொன்றுமில்லை ப்ளாக் லட்சுமி அம்மா தான் அவர்கள். எங்களை பார்த்ததும் அவருக்கு எல்லையில்லா மகிழ்ச்சி ஏற்பட்டது. அவருக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. எங்களுக்கும் தான். அவரையும் சேர்த்து மூன்று பேர் வந்திருந்தார்கள். வழக்கமான் நலம் விசாரிப்புக்கு பின் அவர் தன் பிறந்த சொந்த ஊருக்கு செல்வதாக சொன்னார். நிறைய வருசங்களுக்கு பின் தமிழ்நாடு வந்திருப்பதாக சொன்னார்.
நெல்லை பதிவர்கள் சந்திப்பு பற்றிய பதிவுகளில் வந்திருந்த போட்டோக்களை பார்த்து எங்களை அடையாளம் கண்டு கொண்டதாக சொன்னார். அந்த நேரத்திலும் அவர் தூங்காமல் முழிதிருந்ததாக சொன்னார். எப்போதும் இரவு பண்ணிரண்டு மணி ஆகுமாம் அவர் தூங்க. ஆனால் இங்கே தமிழ்நாட்டில் அவரின் சொந்தங்கள் ஒன்பது, பத்து மணிக்கே தூங்கி விடுவார்களாம். அம்மாவுக்கு தூக்கம் வராமல் கம்ப்யுட்டரும் இல்லாமல் முழிசுட்டே இருந்தாங்களாம். ஆனால் காலையில் எழுந்திருக்க கொஞ்சம் லேட் ஆகும்னு சொன்னாங்க. ஹிந்தி நிகழ்ச்சிகள் பார்த்தே பழக்கப்பட்டு இருந்த அவங்களுக்கு தமிழ் நிகழ்ச்சியை தவிர வேற ஹிந்தி நிகழ்ச்சிகள் பார்க்க முடியவில்லையாம். இந்த மாதிரி தன் தமிழக அனுபவங்களை சொன்னார்கள்.
உங்கள் ப்ளாக் ரொம்ப நல்லா இருக்கு. உங்களோட எழுத்து நடை நல்லா இருக்கு என்று சொன்னோம். அதற்கு நான் பள்ளிக்கூடம் பக்கமே போனது கிடையாது. அனுபவத்தில் தெரிஞ்சதை வச்சு எழுதுவதாக சொன்னார். ஒவ்வொரு விசயத்தையும் மிக ரசிச்சு ஆச்சர்யப்பட்டு பேசினார். என்ன நண்பர்களே, ட்ரெயின் நிக்கிற ஐந்து நிமிடத்தில் இம்புட்டு பேச முடியுமான்னு நினைக்கறிங்களா? என்னமோ தெரியல் ட்ரெயின் கிளம்பான நின்னுட்டே இருந்துச்சு. அவங்க கூட வந்திருந்தவங்களும் லட்சுமி அம்மாவை ரொம்ப பெருமையா சொன்னாங்க. லட்சுமி இவ்ளோ எழுதறத எங்களால நம்பவே முடியல... என சொன்னார்கள். ட்ரெயின் சிக்னல் போட்டாங்க. அப்ப அவங்க சொன்னாங்க வரும் ஞாயிற்று கிழமை திரும்ப ரிடர்ன் வர்றதா சொன்னாங்க. நைட் 9:30 க்கு மதுரைக்கு வரும்னு சொன்னாங்க. அப்பவும் அவங்கள பார்க்க வருவதாக சொன்னோம். எங்க ரெண்டு பேருக்கும் ஒரு நினைவு பரிசு ஒண்ணு கொடுத்தாங்க. ட்ரெயின் மெல்ல நகர ஆரம்பித்தது. திரும்ப வரும் போது போன் செய்வதாக சொன்னாங்க. அவரும், நாங்களும் பார்வை மறையும் வரை கையசைத்து விடைபெற்றோம்.
அடுத்து ஞாயிறு வந்தது. ஐயாவும் நானும் சரியா ஒன்பது மணிக்கு ஜங்சன் சென்றோம். ட்ரெயின் அப்பவும் அரை மணி நேரம் தாமதமாக வருவதாக சார்ட் போட்டிருந்தாங்க. அவனைக் சொன்ன கோச் வரும் இடத்தை யூகம் செய்து நின்றோம். சரியாய் பத்து மணிக்கு ட்ரெயின் வந்தது. அம்மாவை பார்த்து கையசைத்த படி சென்றோம். ஊரில் நன்றாக என்ஜாய் செய்ததாக சொன்னார். சிறு வயது நண்பிகளை அடையாளம் பார்த்து பேசியதாக சொன்னார். முதல் நாள் சந்திப்பில் புகைப்படம் எடுக்க மறந்து விட்டதாக சொன்னார். அட, நாங்களும் மறந்து விட்டோம். அப்புறம் மொபைலில் போட்டோ எடுத்துக் கொண்டோம். கோயிலுக்கு போனதாக சொன்னார். எங்களை பார்த்து பேசியதில் மகிழ்ச்சி என சொன்னார். எங்களுக்கும் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. இவ்வளவு இன்ட்ரெஸ்ட் எடுத்து எங்களை அவர் சந்தித்ததில் ரொம்பவே நெகிழ்ச்சியாக இருந்தது. சென்னையில் ஒரு வாரம் இருந்துவிட்டு மும்பை செல்வதாக சொன்னார்.
ஒரு மாசமா கம்ப்யுட்டர் தொடாமல் என்னவோ போல் இருப்பதாக சொன்னார். அப்புறம் ஓரிரு நிமிடங்கள் பேசிக்கொண்டு இருந்தோம். ட்ரெயின் சிக்னல் விழுந்தது. எங்களுக்கு என்னவோ போல இருந்தது. சந்திப்பு முடிய போகிறதே என... ட்ரெயின் ஏறினார். மெல்ல நகர்ந்தது. நாங்கள் மறையும் வரை கையசைத்து கொண்டே சென்றார். நாங்களும் அப்படித்தான். ஒரு இனிமையான, நினைவில் நீங்காத சந்திப்பு அது. ட்ரெயின் சென்றவுடன் நாங்கள் வீட்டிற்கு கிளம்பினோம்.
டிஸ்கி: ஆங்... ஒண்ணு சொல்ல மறந்திட்டேன்... அவங்க நெல்லை வந்துட்டு போறதால எங்க ரெண்டு பேருக்கும் அல்வா கொடுத்தாங்க. நெல்லை போனாலே இப்படித்தானா?
முடிந்தது...
55 கருத்துரைகள்:
முதல் சந்திப்பு....
அருமையான சந்திப்பு வாழ்த்துக்கள் மூவருக்கும்....!!!
நெல்லைக்கு போனாலே ஒரே அல்வா மயம்தான் போங்க.....
எலேய் தம்பி, அண்ணனும் வாறேம்லேய் அருவாளை ரெடி பண்ணி வைய்யி.....
@MANO நாஞ்சில் மனோ
எலேய் தம்பி, அண்ணனும் வாறேம்லேய் அருவாளை ரெடி பண்ணி வைய்யி.....>>>
மதுரையில் அருவாளுக்கு பஞ்சம் இல்லை மக்கா....வாங்க
மனோ - நேத்திக்கு பார்சல் வந்துச்சா - ஜென்னத் ஹோட்டல்லே இருந்து அனுப்பினோமே ! நேத்து வரவேற்கறதுக்கு திருநெல்வேலி விமான நிலைஅய்த்தில் பெரிய ஏறபாடெல்லாம் செஞ்சோம் - ஏமாத்திப்புட்டீங்களே
நெல்லை சந்திப்பு அல்வா அருமை.
பிரகாஷ் - அபாரமான நினைவாற்றல் - அப்படியே எழுதிட்டேயே - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா
@cheena (சீனா)
திருநெல்வேலி விமான நிலைஅய்த்தில் பெரிய ஏறபாடெல்லாம் செஞ்சோம் - ஏமாத்திப்புட்டீங்களே>>>>
ஏமாத்தறதே மனோ வேலையா போச்சு.
ரைட்டு...
தமிழ்மணத்தில் இணைத்து முதல் ஓட்டை நான் போட்டுட்டேன்...
ஏதோ என்னால முடிஞ்சது...
ஏலே .. ஒரே பதிவர் சந்திப்பு மேட்டராவே இருக்கே..
அல்வா...
அல்வாவில் என்னோட பங்கை குரியர் செய்யவும்!
@!* வேடந்தாங்கல் - கருன் *!
ஏலே .. ஒரே பதிவர் சந்திப்பு மேட்டராவே இருக்கே..>>>
ஆமாம் பதிவர் சந்திப்பாவே இருக்கே
கடைசியிலே அவங்க அல்வா கொடுத்தது தான் இதிலே ஹைலைட் பாயிண்ட்.
அவங்க நிஜமாமே உங்களுக்கு அல்வா கொடுத்தாங்களா அல்லது நகைச்சுவைக்காக நீங்க எங்களுக்கு அல்வா கொடுத்தீங்களான்னு தெரிய வில்லை.
நல்ல அருமையான பதிவு.
உங்களையெல்லாம் சந்திக்க மதுரைப்பக்கம் நாங்களும் புறப்பட்டு வரணும் போலத்தோணுது.
வந்தால் மதுரை மல்லி கிடைக்குமோ?
உங்கள் ப்ளாக்கை திறந்தாலே கொட்டிக்கிடக்குதே!
ஆனால் வாசனையே இல்லை. வாசமில்லா மலரிது.....ன்னு பாடத்தோணுது.
பதிவுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
நன்றி.
@ஷர்புதீன்
அல்வாவில் என்னோட பங்கை குரியர் செய்யவும்!>>>>
நெல்லை பதிவர் சந்திப்புல நிறைய அல்வா சாப்பிட்ட ஆள் நீங்க தானே
@வை.கோபாலகிருஷ்ணன்
கடைசியிலே அவங்க அல்வா கொடுத்தது தான் இதிலே ஹைலைட் பாயிண்ட்.>>>
நிஜமாவே அல்வா பாக்கெட் கொடுத்தாங்க... நம்புங்க...
//ஆங்... ஒண்ணு சொல்ல மறந்திட்டேன்... அவங்க நெல்லை வந்துட்டு போறதால எங்க ரெண்டு பேருக்கும் அல்வா கொடுத்தாங்க. நெல்லை போனாலே இப்படித்தானா?//
மாப்ள நீ போனதே அந்த அல்வாவுக்கு தானே தெரியாதுன்னு நினைச்சியா ஹீ ஹீ
ஏதோ நினைவு பரிசுன்னு சொன்னா என்னென்னு சொல்லவே இல்லையே
முத்தான முதல் சந்திப்பு
சத்தான நெல்லை இனிப்பு
அருமை!
புலவர் சா இராமாநுசம்
@sasikumar
ஏதோ நினைவு பரிசுன்னு சொன்னா என்னென்னு சொல்லவே இல்லையே>>>
மாப்ளே.... இன்னைக்கு நீ குடுத்த பரிசு தான் சூப்பர்
@புலவர் சா இராமாநுசம்
முத்தான முதல் சந்திப்பு
சத்தான நெல்லை இனிப்பு
அருமை!>>>
நன்றி புலவரே..
அப்பாடா...... நல்லவேள ரெண்டுபாகத்தோட முடிஞ்சது....!
@பன்னிக்குட்டி ராம்சாமி
அப்பாடா...... நல்லவேள ரெண்டுபாகத்தோட முடிஞ்சது....!>>>>
இன்னும் எதிர்பார்த்திங்களா? அடுத்த முறை நிறைய தொடர் எழுதறேன்.
///// தமிழ்வாசி - Prakash said...
@பன்னிக்குட்டி ராம்சாமி
அப்பாடா...... நல்லவேள ரெண்டுபாகத்தோட முடிஞ்சது....!>>>>
இன்னும் எதிர்பார்த்திங்களா? அடுத்த முறை நிறைய தொடர் எழுதறேன்.
//////
ம்ம் அதெல்லாம் இருக்கட்டும், ஏதாவது நல்ல பிட்டுப்படமா பாத்துட்டு விமர்சனம் எழுதுறது.....? நேயர் விருப்பம்.....!
இந்த பதிவை வாசிக்கும் போது, நெல்லை பதிவர்கள் சந்திப்பு தான் நினைவுக்கு வருது.... அங்கேயும் அல்வா .... :-)
@பன்னிக்குட்டி ராம்சாமி
ம்ம் அதெல்லாம் இருக்கட்டும், ஏதாவது நல்ல பிட்டுப்படமா பாத்துட்டு விமர்சனம் எழுதுறது.....? நேயர் விருப்பம்.....!>>>>
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
பன்னி.... விமர்சனம் நமக்கு வராது... அதுவும் பிட்டு படத்துக்கா? ஹையோ...
@Chitra
இந்த பதிவை வாசிக்கும் போது, நெல்லை பதிவர்கள் சந்திப்பு தான் நினைவுக்கு வருது.... அங்கேயும் அல்வா .... :-)>>>
நல்லா அல்வா கொடுக்கறாங்க...
மனம் நெகிழ வைக்கும் சந்திப்பு .
பகிர்வுக்கு நன்றி நண்பரே
நல்ல சந்திப்பு...
மச்சி...மினி சந்திப்பு என்றாலும், சூப்பரா கலக்கியிருக்கிறீங்க.
என்னோடை அல்வாப் பங்கு எங்கே மச்சி.
அல்வா நல்லாயிருந்துச்சா??
அருமை பிரகாஷ். வாழ்த்துக்கள்.
// ஒண்ணு சொல்ல மறந்திட்டேன்... அவங்க நெல்லை வந்துட்டு போறதால எங்க ரெண்டு பேருக்கும் அல்வா கொடுத்தாங்க. நெல்லை போனாலே இப்படித்தானா?//
ஆமாய்யா..பின்னே நெல்லைக்குப் போய் பீட்சாவா வாங்கிட்டு வருவாங்க..
ரஜினி எப்போதும் ஒரு எளிய மனிதன் வருகிறது. வெற்றிக்கு அவரது கொள்கையே ஒரு எளிய வாழ்க்கை மற்றும் வெற்றி அவரது தலையில் போகவிடவில்லை உள்ளது. மேலும் அறிய இங்கே சொடுக்கவும்
http://bit.ly/n9GwsR
வெற்றிகரமா பதிவுக்கு வந்து கமண்டு போட்டுட்டேன்...மாப்ள சூப்பரா..அப்படியே அந்த அல்வா ஒண்ணு பார்சல்!
thamizanum தமிழனும் தமிழ் வாசியும் எங்கே போனாலும் ஓ சி சாப்பாட்டை மறக்கறது இல்லை
வெரிகுட், எப்போதும் திருநெல்வேலி அல்வா மதுரைக்காரங்களுக்கு பிடித்தம்தானே பிரகாஷ்.
நெகிழ்வான சந்திப்பு,
சுவாரஸ்யமான பதிவு.
இப்படி... ஒவ்வொரு தமிழனும் ஒவ்வொரு ப்ளாக்கின் மூலமாக ஒவ்வொருத்தரையும் சொந்தமாக ஏற்றுக் கொண்டால் இதில் மதம் ஏது,சாதி ஏது,சண்டைகள் ஏது?
மனம் அமைதிக்காக தொடங்கப் பட்டிருக்கும் ப்ளாக்குகள் அவர் அவரின் திறமையை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காண்பிக்கிறது அதில் சில பதிவர்கள் நோ வாட்ஸ் பல்பை போன்று எழுதியாலும் சில பதிவர்கள் மெர்குரி பலபை போன்றும் எழுதியாலும் கிடைப்பது என்னவோ வெளிச்சம்தான்.
லக்ஷ்மி அம்மாவை நேரில் பார்த்ததைப் போன்ற ஒரு பிரமை.
நன்றி நண்பரே!
இனிப்பான (அல்வா)மதுரை (பதிவர்)சந்திப்பு ......
நல்லது
வாவ்,,,,ரசிச்சு எழுதி இருக்கீங்க பாஸ்!
நெகிழ்ச்சி...
பதிவுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்...
லெட்சுமிம்மா பழகுறதுக்கு ரொம்ப இனிமையானவங்க... அவங்களோட பழக கொடுத்து வச்சுருக்கணும்!!!
நல்ல பதிவு
சந்திப்பு பற்றி திரிலிங்கா எழுதியிருக்கீங்க
I think blogger Mrs Lakshmi lives in Mumbai.
நெகிழ்வான சந்திப்பு, சீனா அண்ணாவுக்கும் தமிழ்வாசி தம்பிக்கும் வாழ்த்துக்கள், லக்ஷ்மி அம்மாவுக்கு பாராட்டுகள் வாழ்க வளமுடன் அம்மா!
பிரகாஷ், ஆமினா, ராஜேஸ்வரி, வை
கோபால் சார் எல்லாருமே சரியா யூகம்
பண்ணி இருந்தாங்க. இந்த உன் பதிவின்மூலமாக இன்னமும் நிரையா பேருக்கும் என் பெயர் தெரியவரும்.
நன்றி. பதிவு நல்ல வந்தி ருக்கு
பரவாயில்லையே மாப்பிள நீ குறி வைச்சுதான்யா கோல் போடுற.. வாழ்த்துக்கள்...
காட்டான் குழ போட்டான்...
பதிவர் சந்திப்பின் சிங்கமே வாழ்த்துகள்.
அழகாக எழுதியுள்ளீர்கள்.......அருமை
அனுபவம் தேடுபவரும் அனுபவம் அடைந்தோரும் ஆனந்த சந்திப்பு