உங்கள் வாழ்நாளை நீட்டிக்க, ஒவ்வொரு ஆண்டும் உடல் பரிசோதனை செய்து கொள்வது ரொம்ப நல்லது. நோயை கண்டுபிடிக்க தாமதம் ஏற்படுவதால் தான் பல வியாதிகள் உயிருக்கு ஆபத்தை தருவதாக அமைகின்றன. ஆகவே தான் ஒவ்வொரு ஆண்டும் உடல் பரிசோதனை செய்வது தான் வருங்காலம் நலமானதாக இருக்க நீங்கள் செய்யும் முதலீடாகும்.
எந்த வயதில் என்னென்ன பரிசோதனை செய்யலாம்?
- 2 வயது முதல் - ஆண்டுக்கு ஒரு முறை பல் பரிசோதனை.
- 3 வயது முதல் - ஆண்டுக்கு ஒரு முறை கண் பரிசோதனை.
- 18 வயது முதல் - ஆண்டுக்கு ஒரு முறை இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை.
- 18 வயது முதல் (பெண்கள்) - ஆண்டுக்கு ஒரு முறை இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை மற்றும் பேப் ஸ்மியர் பரிசோதனை.
- 30 வயது முதல்- ஆண்டுக்கு ஒரு முறை சர்க்கரை பரிசோதனை.
- 30 வயது முதல் (பெண்கள்) - ஆண்டுக்கு ஒரு முறை சர்க்கரை பரிசோதனை மற்றும் மார்பக பரிசோதனை.
- 40 வயது முதல் (ஆண்கள் மற்றும் பெண்கள்): ஆண்டுக்கு ஒரு முறை கிட்னி மற்றும் லீவர் பரிசோதனை.
- 50 வயது முதல் - ஆண்டுக்கு ஒரு முறை கண், காத்து, சிறுநீரியல் மற்றும் மூட்டு சிகிச்சை பரிசோதனை.
- 50 வயது முதல் (பெண்கள்): ஆண்டுக்கு ஒரு முறை கண், காது, சிறுநீரியல், எலும்பு, மூட்டு. கருப்பை புற்றுநோய் பரிசோதனை.
எனவே நண்பர்களே, உங்கள் வயதுக்கேற்ற உடல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இதைவிட முழு உடல் பரிசோதனை செய்வது மிக மிக நல்லது.
இரத்தத்தில் உள்ள கொலஸ்டிரால் பற்றியும் தெரிஞ்சுக்கலாம்:
- கொலஸ்ட்ரால் நமது இரத்தத்தின் ஒரு முக்கியமான பகுதி மேலும் நமது உடலுக்குள்ளேயே உற்பத்தி செய்யப்படுகிறது. உடலுக்கு தேவையான அளவை விட அதிகமாகும் போது தீங்கு விளைவிக்க கூடும்.
- உங்கள் உடம்பில் மொத்த கொலஸ்டிரால் எவளவு உள்ளது என்பதையும் அது உங்கள் உடல்நலத்தை எப்படி பாதிக்கிறது என்பதையும் நீங்கள் அறிய வேண்டும். அதிக அடர்த்தி லைப்போ ப்ரோட்டின் அதிக அளவிலும், குறை அடர்த்தி லைப்போ ப்ரோட்டின் குறைந்த அளவிலும் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
- காய்கறிகளில் உள்ள கொழுப்புகளில் கொலஸ்டிரால் எப்போதும் இருப்பது இல்லை.
- பல நிலை பூரிதக் கொழுப்பு, ஒரு நிலை பூரிதக் கொழுப்புகளும் கெட்ட கொலஸ்டிராலைக் குறைக்கின்றன.
நமது ரத்தத்தில் கொலஸ்டிரால் கூடுவதையும் கட்டுப்படுத்த வேண்டும்.
34 கருத்துரைகள்:
நண்பர்களே, தமிழ்மணத்தில் இணைக்கவும். நன்றி.
எங்க மேல எவ்ளோ அக்கறை உங்களுக்கு.பகிர்வுக்கு நன்றி.
தமிழ்மணம் இணைத்துவிட்டேன் நண்பா!
//நண்பர்களே, தமிழ்மணத்தில் இணைக்கவும். நன்றி.//
புது இடுகைகள் எதுவும் காணப்படவில்லை.
அடிக்கடி இப்படி தான் ஆகுது....
_________
நல்ல பகிர்வு... வாழ்த்துக்கள்!
கண்டிப்பாக இன்றை மக்களின் உணவு விதத்தில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம் பல்வேறு விதமான நோய்களை கூடவே அழைத்து வந்து விடுகிறது...
இந்த பரிசோதனைகள் மிகமிக அவசியம்...
நல்ல பதிவு...
பகிர்வுக்கு நன்றி பிரகாஷ்....
Nalla thagavalkal......
Ithai notice adithu tamilnadu
fulla kodukkalam
Very useful information thanks
நிறையபேரு தெரிஞ்சுக்க வேண்டிய
பயனுள்ள பதிவு.
பிரகாஷ் - நல்ல தகவல்கள் - உடம்பப் பாத்துக்கணுமில்ல - செஞ்சிடுவோம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Good information. Thanks to Mrs.Prakash (அப்படித்தானே?)
மாப்ள இதுக்கு பேசாமா சுருக்கமா சம்பாதிக்கறதே ஹாஸ்பிட்டல மொத்தமா கொடுத்துடுங்கன்னு சொல்லி இருக்கலாம்.
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி.
தமிழ்மணம் ஓட்டும்.
மிகவும் பயனுள்ள பதிவு .... வாழ்த்துக்கள் பிரகாஷ் ...!
நல்ல தகவல் பாஸ் ,
மச்சி நீ முதல்ல செய்தியா? பரிசோதனை...
ஆஹா.. மருத்துவ துறையிலும் கலக்குகிறீர்கள்..
முக்கியமான அறிந்து கொள்ள வேண்டிய விஷயம் பகிர்ந்துள்ளீர்கள் .
நன்றி நண்பரே
தமிழ் மணம் 11
நல்ல பயனுள்ள பதிவு.. சகோ..
பகிர்வுக்கு மிக்க நன்றி..
எனக்கு Follower ஆனதற்க்கு மிக்க மகிழ்ச்சி, நன்றி சகோ..
நன்றி தகவலுக்கு அருமையான பகிர்வு
மிகவும்ம் பயனுள்ள பதிவு. நன்றி. voted. in indli & tamilmanam
பயனுள்ள தகவல்கள்
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி பிரகாஷ்...
அப்படியே எத்தனை வருஷத்துக்கு ஒரு முறை மூளை இன்னும் இருக்கான்னு பார்க்கணும்னு சொல்றீங்களா டாக்டர்...
பயனுள்ள பதிவு!உடல் நலம் முக்கியம்!
நன்றி டாகுடர் பிரகாஷ்.........
இந்த பிரகாஷ் தான் அந்த பிரகாஷ்னு இன்னைக்கு கன்ஃபார்ம் ஆயிடுச்சு!
நம்ம ஆளுக காய்ச்சலுக்கே ஆஸ்பத்திரி போக மாட்டாங்களே,,செக்கப்புக்கு எப்படி போவாங்க?
நினைவூட்டலுக்கு நன்றி நண்பா.
அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய ஒன்று. நன்றி.
dr வாழ்க
பயனுள்ள தகவல் நண்பா............
நல்ல பகிர்வு... வாழ்த்துக்கள்!
அருமையான பயனுள்ள தகவல்....பகிர்வுக்கு மிக்க நன்றி