CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! (CNC PROGRAMMING & OPERATIONS) - PART-1

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
இனிய  நண்பர்களே! 
      இன்று  முதல்  ஒரு  தொழில்  நுட்ப  தொடர்  எழுத  இருக்கிறேன்  என  நேற்று  அறிவிப்பு  வெளியிட்டு  இருந்தேன். நான்  MECHANICAL துறையை  சார்ந்தவன்  என்பதால்  அதில்  ஒரு பிரிவான  CNC PROGRAMMING AND OPERATIONS பற்றி  எழுத இருக்கிறேன் . கடந்த  ஒன்பது  வருடங்களாக  இந்த  CNC துறையில்  அனுபவம்  இருப்பதால்  ஓரளவு  உங்களுக்கு  புரியும்  படி  எழுதுவேன்  என நினைக்கிறேன். CNC MACHINE-இல்  OPERATOR ஆக பணிபுரிய  வேண்டுமானால்  CNC  FIELDஇல்   நுழைய  வேண்டுமானால்  BASIC PROGRAMMING தெரிந்திருக்க  வேண்டும் . MECHANICAL FIELD-இல் CNC துறையில் இந்தியா , வெளிநாடுகள்  என எல்லா  இடங்களிலும்  வேலை  வாய்ப்பு  எளிதாக   கிடைக்கும் .
    இன்றைய  DIPLOMA MECHANICAL துறையிலும் , இளநிலை  பொறியியல்  MECHANICAL துறையிலும் , TOOL AND DIE MAKING துறையிலும் CNC PROGRAMMING AND OPERATIONS ஒரு பாடமாகவும் , LAB ஆகவும் உள்ளது . ஆனால்  மாணவர்களால்  எளிமையாக  புரிந்து  கொள்ள  இயலாததால்  வேலை வாய்ப்பு மிகுதியாக  உள்ள  அந்த  பாடங்களை  தவிர்த்து  விடுகிறார்கள் . இதற்க்கு  காரணம்  ஆசிரியர்களும்  சரிவர  சொல்லித் தருவது  கிடையாது . அவர்களுக்கு  CNC துறையில்  அனுபவம் இல்லாமல்  இருப்பதால் இந்நிலை  ஏற்படுகிறது . எல்லா  ஆசிரியர்களையும்  சொல்லவில்லை . சிலர்  இப்படி  இருக்கிறார்கள் . சில  மாணவர்கள்  ஆசிரியர்களால்  இப்பாடங்கள்  சரிவர சொல்லித் தராமல்  அடுத்த  பாடங்களுக்கு  தாவி  விடுவதாக  சொல்லக்  கேட்டு  இருக்கிறேன் . எனக்கும்  DIPLOMA படிக்கையில்  இந்த பாடங்களை புரியாமல்  விட்டு  விடுவோம் . அப்போது  எனக்கு   தெரியவில்லை இந்த துறையில் தான்  பணியாற்ற  போறோம்  என தெரியவில்லை. எனக்கு  கஷ்டமாக  தெரிந்த  CNC இன்று எனக்கு விரல்  நுனியில்  உள்ளது . 
   இத்தொடர் இன்னும் வாராவாரம் வர இருக்கிறது. CNC BASIC பற்றிய உங்கள் சந்தேகங்களை thaiprakash1@gmail.com என்ற மின்னஞ்சலில் கேட்கவும்.
தொடரும்...


35 கருத்துரைகள்:

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

அந்த ஸ்பேனர் எங்கே? பிரகாஷ் தலைல டமார்னு தட்டலாம்

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

ஹைய்யா, அண்ணன் செங்கோவி ஏமாந்தாரு

கோகுல் said... Best Blogger Tips

நமக்கு தெரிந்ததை பிறர்க்கு சொல்லாமல் தாமே வைத்துக்கொள்வதால் எந்த பயனுமில்லை.அதை பலருக்கு சொல்லும்போது அறிவும்,திறமையும் பலமடங்கு பெருகும்.தங்கள் முயற்சிக்கு வாழ்த்துகளும்,நன்றிகளும்.

cheena (சீனா) said... Best Blogger Tips

அன்பின் பிரகாஷ் - நல்லதொரு தொடர் - தொடர்க - அனைத்து ந்ண்பர்களின் ஐயங்களையும் களைக ! வாழ்க வளமுட்ன - நட்புடன் சீனா

சக்தி கல்வி மையம் said... Best Blogger Tips

தங்கள் முயற்சிக்கு வாழ்த்துகளும்,நன்றிகளும்...

சக்தி கல்வி மையம் said... Best Blogger Tips

Thanks for sharing..

குறையொன்றுமில்லை. said... Best Blogger Tips

முயற்சிக்கு வாழ்த்துக்கள். எனக்கு இதுல ஏதும் புரியப்பொரதில்லே. ஹி, ஹி

கூடல் பாலா said... Best Blogger Tips

மெக்கனிக்கல் துறையை சார்ந்தவர்களுக்கு இது ஒரு பரிசு ....தொடருங்கள் ........

Unknown said... Best Blogger Tips

அடடா எல்லாரும் வாத்தியார் ஆகிட்டு வராங்களே...இனி பிட்டு பதிவுகள் குறைஞ்சிடுமோ டவுட்டு!

M.R said... Best Blogger Tips

நண்பர் பிரகாஷிற்கு

நல்ல உபயோகமான பதிவு
பகிர்வுக்கு நன்றி நண்பரே

நிகழ்வுகள் said... Best Blogger Tips

அருமை ,அது சார்ந்த துறையினருக்கு பயனுள்ளதாக இருக்கும்,

செங்கோவி said... Best Blogger Tips

பிரகாசு, சூப்பர்யா...சும்மா அடிச்சு விளையாடு மாமூ..

நான்கூட டெக்னிகல்னா வீடியோ க்ளிப்பிங்ஸ் கட் பண்றது, பிட்டுப் படம் ரெடி பண்றதுன்னு ஏதாவது போடுவீங்கன்னு பார்த்தா அசத்திட்டீங்களே..

செங்கோவி said... Best Blogger Tips

//இத்தொடர் இன்னும் வாராவாரம் வர இருக்கிறது. CNC BASIC பற்றிய உங்கள் சந்தேகங்களை thaiprakash1@gmail.com என்ற மின்னஞ்சலில் கேட்கவும்.//

பின்னூட்டத்திலயும் கேட்கலாம்ல?

நான் ஆரம்பிக்கிறேன் : CNC என்பதன் விரிவாக்கம் என்னவோ? ரம்பா படத்துடன் விளக்கவும்.

செங்கோவி said... Best Blogger Tips

//எனக்கும் DIPLOMA படிக்கையில் இந்த பாடங்களை புரியாமல் விட்டு விடுவோம் . //

இந்த ஒரு பாடம் தான் புரியலையாக்கும்..அது எப்படிய்யா வாத்தியார் ஆயிட்டாலே கருன் மாதிரி எல்லாரும் சும்மா அடிச்சு விடுதீங்க?

செங்கோவி said... Best Blogger Tips

//ஆசிரியர்களும் சரிவர சொல்லித் தருவது கிடையாது . அவர்களுக்கு CNC துறையில் அனுபவம் இல்லாமல் இருப்பதால் இந்நிலை ஏற்படுகிறது .//

உண்மை தான் நண்பா..

செங்கோவி said... Best Blogger Tips

//சி.பி.செந்தில்குமார் said... 2
ஹைய்யா, அண்ணன் செங்கோவி ஏமாந்தாரு//
வடைக்காகச் சொல்றாரா..இல்லே பதிவுக்காக சொல்றாரா..

சசிகுமார் said... Best Blogger Tips

எனக்கு தெரிந்தவரை தமிழில் இது போன்ற ஒரு பிளாக் இல்லை. நிச்சயம் நிறைய பேருக்கு பயனுள்ளதாக இருக்கும். கற்றதை சொல்லி கொடுப்பதிலும் உள்ள சந்தோசத்தை நீங்கள் கண்டிப்பாக பெறுவீர்கள். நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து நடத்தி எழுதி வந்தால் எதிர்காலம் உங்கள் பெயர் சொல்லும்.

Unknown said... Best Blogger Tips

cnc traning institute நிறைய, முக்கியமா மாவட்ட தலைநகரங்களில் புற்றீசல் போல வந்திருக்கு.இப்ப வெளி நாடுகளிலும் நல்ல சான்ஸ் இந்த வேலைக்கு இருக்குன்னு,நிறையபேர் இந்த படிப்பு படிச்சுட்டு இருக்காங்க.அவங்ளுக்கெல்லாம் துறையை பற்றி தெளிவா விளக்கம்,பாடம் நட்த்துங்க சார்,பயனுள்ள புதுமையான முயற்சி.வாழ்த்துக்கள்.

Unknown said... Best Blogger Tips

நல்ல முயற்சி . அனைவருக்கும் பயனுள்ள வகையில் தொடர நல்வாழ்த்துக்கள்.

காட்டான் said... Best Blogger Tips

மாப்பிள காட்டான கட் பண்ண பாக்கிறியோ..!? உதெல்லாம் நம்மட்ட நடக்காதையா... காட்டாண்ட குழ எப்பிடியோ வருமையா..

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

புதிய அனுபவங்களை பாடங்களை கற்க்கலாம் போல...

Anonymous said... Best Blogger Tips

As I am suffering from fever....
இன்றைய வகுப்புக்கு வர முடியாது அய்யா..

Unknown said... Best Blogger Tips

advance thanks for posting cnc material...me also an mechanical engg student .............

Prabu Krishna said... Best Blogger Tips

வாழ்த்துகள்....

• » мσнαη « • said... Best Blogger Tips

அருமையான பதிவு...தொடரட்டும் தங்கள் சேவை...(ஆரம்பத்தில் ஒன்றரை வருடம் CNC யில் ஆணி புடுங்கியவன் என்ற முறையில் )அப்படியே job fair ம்ம் நடத்துங்க!!படிப்பு முடித்து தடுமாறும் மாணவர்களுக்கு ....

• » мσнαη « • said... Best Blogger Tips

உஷாரய்யா உஷாரு செங்கோவி அய்யா உஷாரு!!! தமிழ் வாசியும் கிளம்பிட்டாரு mechanical dept பதிவின் மூலமாக!!!

மாய உலகம் said... Best Blogger Tips

அப்ப டிங்கரி பண்ணிக்கலாம்

mathan said... Best Blogger Tips

வாழ்த்துக்கள் .. எனக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் . நான் கடந்த ௪ வருடங்களாக தென் கொரியாவில் CNC PROGRAMMING AND OPERATIONS தொழில் புரிந்து வருகிறேன் .. .. உங்கள் தொடருக்கு என் வாழ்த்துக்கள் ... மதன்.

பாபு உடையார் said... Best Blogger Tips

தங்கள் முயற்சிக்கு வாழ்த்துகளும்,நன்றிகளும்.

ம.தி.சுதா said... Best Blogger Tips

சசிக்குமார் சொல்வது போல காலப்போக்கில் இது யாரோ ஒருவருக்காகவது கட்டாயம் பிரயோசனப்படும்...

கவி அழகன் said... Best Blogger Tips

சிறந்த பதிவு.. பாராட்டுக்கள் பல...

Mahan.Thamesh said... Best Blogger Tips

புதிய பயனுள்ள தொடரினை படைக்க போகும் உங்களுக்கு வாழ்த்துக்கள் சகோ .

சாகம்பரி said... Best Blogger Tips

இந்த துறையில் சிறப்பான தொழில் வாய்ப்பு இருப்பதால் CNC பற்றித் தெரிந்தவர்கள் ஆசிரியர்களாக இருக்க விரும்பமாட்டார்கள். ஒரு மெக்கானிக்கல் பொறியாளறின் கடைசி தேர்வாகத்தான் ஆசிரியர் பணியிருக்கும். மேலும் இயந்திரத்தின் விலை வெகுசாதாரணமாகவே லட்சங்களைத் தாண்டும். எனவே அதன் பராமரிப்பு பயத்தில் இயக்கியும் காட்டமாட்டார்கள்.

சாகம்பரி said... Best Blogger Tips

வாழ்த்துக்கள் பிரகாஷ். இந்த தொடரை நன்றாகவே வழங்கிவீர்கள் என்ற நம்பிக்கையுள்ளது. வீடியோ, புகைப்படங்கள் மூலம் விளக்கம் அளிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

Unknown said... Best Blogger Tips

Tamil PDF format la books irukku Tha sollu ga

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1