டிஸ்கி: இந்தப் பதிவு மெக்கானிகல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ/டிகிரி படிக்கும் மாணவர்களுக்காக. உங்களுக்குத் தெரிந்த மாணவர்கள் யாராவது இருந்தால், அவர்களிடம் இந்தப் பதிவைப் பற்றிச் சொல்லி உதவவும். நன்றி
எந்த ஒரு துறையாய் இருந்தாலும் அதன் அடிப்படை விதிகளையும், formet method-களையும் புரிந்து கொண்டோமானால் அந்த துறையில் சும்மா புகுந்து விளையாடலாம். CNC field-ல் அடிப்படை விஷயங்கள் மிக எளிமையானவையே. அந்த அடிப்படையை உங்களுக்கு புரிய வைப்பதே இந்த கட்டுரை தொடரின் நோக்கம் ஆகும். இன்றைய தேதியில் CNC கற்றுத் தருவதற்கான institutes ஒவொரு ஊரிலும் மிகுதியாகி விட்டது. அங்கே பணியாற்றும் ஆசிரியர்கள் பெரும்பாலும் அனுபவம் இல்லாதவர்களே. என்னடா, இது அனுபவம் இல்லாதவர்கள் எப்படி CNC பற்றி சொல்லித் தர ஆசிரியராக முடியும் என நினைக்கிறீர்களா?
CNC basic formet களை அவர்கள் புரிந்து கொண்டதாலையே அவர்களால் ஆசிரியராக இருக்க முடிகிறது. அவர்களிடம் ஏதேனும் சந்தேகம் கேட்டுப் பாருங்களேன். நாம ப்ளாக்-ல் template கமெண்ட் போடுவோமே, அதே போல அவர்கள் சில template விளக்கங்கள் வைத்திருப்பார்கள். எப்பிடி சந்தேகம் கேட்டாலும் அவர்களிடமிருந்து அந்த template பதிலை தவிர வேற விளக்கங்களை எதிர் பார்க்க முடியாது. Template விளக்கம் வைத்திருப்பதும் நல்ல விஷயம் தான். அந்த விளக்கத்தை பலமுறை சொல்லிக் கொடுத்து நன்கு பழகி இருப்பார்கள் . ஆனால் கற்றலில் ஆர்வம் இருக்கிற மாணவனுக்கு அந்த விளக்கம் போதாது. அனுபவம் சார்ந்த விளக்கமாக இருக்க வேண்டும். அப்போது தான் அவன் தேடலுக்கான விளக்கம் அவனுக்கு கிடைக்கும். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் அந்த துறையில் ஆர்வம் இருந்தால் மட்டுமே சாத்தியம்.
எனக்கும் சில காலம் ஒரு institute இல் பணிபுரிந்த அனுபவம் இருப்பதால் எவ்வாறு விளக்கம் சொன்னால் உங்களுக்கு புரியும் என்பதை நன்றாக அறிவேன். இன்னும் CNC-யை பற்றி சொல்லாமல் சும்மா கதை பேசிக்கொண்டு இருக்கிறேன் என நினைகிறீர்களா?
சரி நண்பர்களே, CNC-யை பற்றி ஒரு வீடியோ பகிர்வு மூலம் ஆரம்பிக்கிறேன். CNC Machine மூலம் என்னென்ன செய்யலாம் என பாருங்கள்.
நன்றி: youtube
இத்தொடர் இன்னும் வாராவாரம் வர இருக்கிறது. CNC BASIC பற்றிய உங்கள் சந்தேகங்களை thaiprakash1@gmail.com என்ற மின்னஞ்சலில் கேட்கவும்.
(CNC PROGRAMMING & OPERATIONS) - PART-1 படிக்க...
தொடரும்...
26 கருத்துரைகள்:
நான் தான் முதலாவதா
இதுக்கும் நம்மளுக்கும் சம்மந்தம் இல்லயே,,,, சோ மீ எஸ்கேப்
திரட்டிகள்ள இணையுங்கப்பா... ஓட்டு போடணுமில்ல
வாழ்த்துக்கள் பிரகாஷ்
உங்கள் முயற்சி வெற்றி பெறட்டும்
yaaraavathu tamil10, ulavu thirattikalil inaikkavum. nanri.
@தமிழ்வாசி - Prakash
இணைச்சுட்டேன் நண்பா
வீடியோ நல்லாருக்கு ..நிறைய சந்தேகங்கள் இருக்கு.. நீங்கள் தொடரும் பாகங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி
வழிகாட்டல் பதிவுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்..
இப்ப தாம்பா இதைப் பற்றி கொஞ்சம் கொஞ்சம் விளங்குது...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என்னை கடுப்பேற்றும் பதிவர்களின் செயற்பாடுகள் மூன்று
மச்சி அந்த மேசின்ல வேலை செய்யறது யாரு?
பயனுள்ள பகிர்வு
நான் இந்த துறையில் இல்லாத காரணத்தால் படிக்கவில்லை. என் நண்பர்களிடம் இதை பகிர்கிறேன்.
பலருக்கு பயன்படும் இத்தொடர் ...பண்புடன் தொடருங்கள் ...
CNC ,VMC ,fanuc, OT series இதெல்லாம் என்ன தல ??
அருமை பிரகாஷ்.
இதைத் தான் உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.
நல்ல பதிவுகளாக தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.
யோவ், இப்பத் தான்யா பாக்குறேன்..நேத்தே போட்டாச்சா..
CNC-ன்னா என்ன வாத்யாரே..அதைச் சொல்லும் முதல்ல..
ஆசிரியர்கள் பற்றிய உங்க்ள் கருத்து உண்மை தான்..
வீடியோ நல்லாப் புரிய வைக்குது..தமிழ்வாசி படங்காட்டுதாரே...
தமிழ்10 ஒர்க் ஆகலை..மெஷின்ல கோளாறு..
தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் நண்பா!
கருத்திட்ட அனைவருக்கும் நன்றி
useful பயனுள்ள உபயோகமான பதிவு
பலே பிரபு said... 12
நான் இந்த துறையில் இல்லாத காரணத்தால் படிக்கவில்லை. என் நண்பர்களிடம் இதை பகிர்கிறேன்./////
அதே அதே ....
ulavu 6, thamil manam 12, tamil 10 :13
Good very useful thank u sir