அறிவியல் விஞ்ஞானியான தாமஸ் ஆல்வா எடிசன் தன் பரிசோதனை கூடத்தில் இரவும் பகலும் ஏதாவது சோதனைகளும், பரிசோதனைகளும் செய்வதிலேயே பிசியாக இருப்பார். அப்படிச் செய்யும் போது அந்த அறை முழுவதுமே கணக்கற்ற, தூக்கி எறியப்பட்ட விதவிதமான சிறிய பெரிய பொருட்களால் நிறைந்து விடும். அந்த குப்பை முழுதும் அவர் அந்த ஆய்வகத்திலிருந்து வீட்டின் புழக்கடையில் கொண்டு போய் போட்டு விடுவார். அவர் ஒரு புதிய ஆய்வகத்திற்கு மாற்றம் செய்து போன போது தன் பழைய வீட்டை ஹென்றி ஃபோர்டு (முதன் முதலாக போர்டு காரை உருவாக்கியவர்) அவர்களுக்கு விற்று விட்டார். ஹென்றி ஃபோர்டு வீட்டை புதுப்பித்து குடியேறினார். ஆனால் புழக்கடையிருந்த குப்பைக் குவியல் மட்டும் அகற்றாமல் அப்படியே விட்டு வைத்திருந்தார்.
இந்த குப்பையை எதற்காக அகற்றாமல் வைத்திருக்கிறீர்கள் என அவர் நண்பர் ஒருவர், ஒருநாள் அவரைப் பார்த்து கேட்டார். அதை நான் அப்படியே பாதுகாப்பாக வைத்திருக்க போகிறேன். பலப்பல கண்டுபிடிப்புக்கு பின்னால், எடிசன் எவ்வளவு உழைத்திருக்கிறார் என்று மக்களுக்கு நான் காட்டப் போகிறேன். பல சோதனைகளில் அவர் எத்தனை முறை ஏதோ தவறு காரணமாக தொல்லி அடைந்தார் என்பதற்கு இந்தக் குப்பைக் குவியல் தான் சாட்சி. எந்த ஒரு லட்சியத்தை அடைவதற்கு முன்பு பலமுறை தோல்வியடைந்தாலும், அதை எதிர் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்று என் நண்பர்களுக்கும், வேண்டியவர்களுக்கும் இதன் மூலம் அறிவுறுத்த போகிறேன்.
வெற்றியடைவதற்கு முன் தோல்விகளைச் சந்திக்க தைரியமில்லை எனில், எந்த ஒரு லட்சியத்தையும் நாம் அடைய முடியாது என்று கூறினார் ஃபோர்டு. உண்மைதான் தவறுகள் இழைக்க சுதந்திரமிருக்கும் இடத்தில் தாமதமாக வேணாலும் வெற்றி கிடைப்பது நிச்சயம். தவறிழைக்க அஞ்சுபவர்கள் பாதுகாப்பைத் தேடி ஆமை போலத் தன் ஓட்டுக்குள் புகுந்து விடுகிறார்கள். அவர்களால் எதையும் சாதிக்க முடியாது.
24 கருத்துரைகள்:
காலையிலே வரலாறா?
இருந்தாலும் ஒரு தேவையான பதிவு...
உழைப்புக்கு உதாரணம் காட்ட ஒரு குப்பை...எப்பிடி....பதிவு சூப்பர்யா மாப்ள!
Hard work never fails
சூப்பர் விசயம் நண்பா... நன்றி
குப்பையில் கிடைத்த கோமேதகம்...னு ஏதோ சொல்லுவாங்களே..
பழமொழி கரெக்ட்டா???
கடின உழைப்பு எப்போதும் தோல்வியடையாது என்பதற்கு உதாரணம்
நல்ல பதிவு
ஒவ்வொரு முறை தோற்கும் பொழுதும் வெற்றியை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
மிக அருமையான பதிவு.நன்றி பகிர்வுக்கு.
ஒரு குப்பை தொட்டி ஒரு வரலாறு ஆனது...!!!
எடிசனின் நண்பனின் நட்பும் ஒரு வரலாறுதான் இல்லையா....?
சுவாரசியமான ஒரு நிகழ்வு. பகிர்வுக்கு நன்றி நண்பரே.
அருமை புதுமை..
தலைப்பு கவர்ந்திழுக்கிறது...
நல்ல தகவல் ))
கடின உழைப்பு என்றுமே வெற்றி பெரும் என்பதற்கு தகுந்த உதாரணம்
அவங்க நட்பு அதிசயிக்க வைக்குது.அதுக்கு நீங்க வைச்ச தலைப்பும் தான்!
அருமையான தத்துவம் நிறைந்த வரலாறு தான் நண்பரே .
தோல்வியை கண்டு துவளாதே
வரலாறும் நல்லாத்தான் இருக்கு!
சுவாரசியமான பகிர்வுக்கு நன்றி நண்பரே...
அருமை அருமை .........
//வெற்றியடைவதற்கு முன் தோல்விகளைச் சந்திக்க தைரியமில்லை எனில், எந்த ஒரு லட்சியத்தையும் நாம் அடைய முடியாது..//
உண்மைதான். வெற்றி வானத்திலிருந்து பொழிந்து விடுவதில்லை. தோல்வியைக் கண்டு துவளாத தொடர் முயற்சியால் விளைவதே வெற்றி. வெற்றி கண்டவர்கள் சொல்லும் உண்மைகளைக் கேட்டு வீறுநடை போட்டால் வாழ்வில் ஏற்றத்தை யாரும் தடுக்க முடியாது.
பகிர்விற்கு நன்றிங்க, பிரகாஷ்!
இனிய காலை வணக்கம் பாஸ்,
ஒரு முயற்சிக்குப் பின்னே உள்ள வெற்றியினை வெளிப்படுத்தும் செயலினையும், எடிசனின் அரிய முயற்சியின் பின்னே உள்ள கடின உழைப்பினை உணர்த்தும் செயலையும் விளக்கமாகப் பகிர்ந்திருக்கிறீங்க.
இறுதிப் பந்தியில் தத்துவத்தோடு கூடிய வகையில் அசத்தலாகப் பகிர்ந்திருக்கிறீங்க.
மிக்க நன்றி,
தேவையான பதிவு தான் நண்பரே
அருமை.....!