ஒரு மனிதன் பணம் இருக்கும் போது எப்படி இருக்கிறான், பணம் இல்லாத போது எப்படி இருக்கிறான் என்பதை ஒரு ஆங்கில தொகுப்பிலிருந்து மொழிபெயர்த்துள்ளேன். வாசித்து உங்கள் கருத்தை சொல்லுங்கள்.
மனிதனுக்கு பணம் இல்லாமல் இருக்கும் போது, அவர் வீட்டில் காய்கறிகளை சாப்பிடுகிறார்.
அதே மனிதனுக்கு பணம் இருக்கும் போது, அவரே ஒரு நல்ல ஹோட்டலில் காய்கறிகளை சாப்பிடுகிறார்.
மனிதனுக்கு பணம் இல்லாமல் இருக்கும் போது, அவர் வேலைக்கு சைக்கிளில் போகிறார்.
அதே மனிதனுக்கு பணம் இருக்கும் போது, அவர் சைக்கிளை உடற்பயிற்சி செய்ய உபயோகப்படுத்துகிறார்.
மனிதனுக்கு பணம் இல்லாமல் இருக்கும் போது, உணவை அவர் சாப்பிடுகிறார்.
அதே மனிதனுக்கு பணம் இருக்கும் போது, உணவு அவரை சாப்பிடுகிறது.
மனிதனுக்கு பணம் இல்லாமல் இருக்கும் போது, அவர் திருமணம் செய்ய விரும்புகிறார்.
அதே மனிதனுக்கு பணம் இருக்கும் போது, அவர் விவாகரத்து பெற விரும்புகிறார்.
மனிதனுக்கு பணம் இல்லாமல் இருக்கும் போது, அவரது மனைவி செயலாளராக வேலைக்கு செல்கிறார்.
அதே மனிதனுக்கு பணம் இருக்கும் போது, அவர் செயலாளரை மனைவியாக ஆக்கிக் கொள்கிறார்.
மனிதனுக்கு பணம் இல்லாமல் இருக்கும் போது, ஒரு பணக்காரனை போல செயல்படுகிறார்.
அதே மனிதனுக்கு பணம் இருக்கும் போது, அவர் ஒரு பிச்சைக்காரன் போல செயல்படுகிறார்.
மனிதன் பங்கு சந்தை மிக மோசமாக உள்ளது என்பான். ஆனால் அதில் சாமார்த்தியசாலியாக இருப்பார்.
மனிதன் பணத்தை சாத்தான் என்பான். ஆனால் பணத்தாசை அடங்காமல் பணத்தின் மேல் ஏக்கம் கொள்வான்.
மனிதன் உயர் பதவிகளை பெற்றுக்கொண்டே இருப்பான். ஆனால் அதை போராடி பெற்றதாக தம்பட்டம் கொள்வான்.
மனிதன் சூதாட்டம் தப்பு, மது சாப்பிடுவது தப்பு என சொல்வான். ஆனால் அதற்கு முன்னாலேயே உட்கார்ந்துக்கொண்டு வியாக்கியானம் பேசுவான்.
34 கருத்துரைகள்:
மனிதனுக்கும் பணத்துக்குமான ஒப்பீடு அருமை. வாழ்த்துக்கள்.
திரும்ப திரும்ப பேசுற நீ! ஹிஹி!
மனிதனுக்கும் பணத்துக்கும் உள்ள ஒப்பீடு நல்லாவே சொல்லி இருக்கீங்க.
GOOD COMPARICEN
100 க்கு 100 உண்மை..
இதுதான் உலகம்...
பகிர்வுக்கு நன்றி
அது எப்படீங்க,ஒங்களுக்கு மட்டும் புதுசு,புதுசா தோணுது?
அப்புடியே நச்சுன்னு.பணமின்னா பொணமும்....................அப்பிடீம்பாங்க!
நல்லாச் சொன்னீர்கள் இந்தப் பணம் படுத்துகிறபாடு ரொம்பமோசம்
மச்சி இது எல்லாம் உன் அனுபவமா?
பணம் இருக்கும்போது நீ இதத்தான் செய்வியா?
ஒரளவு சிரித்து பேரளவு
சிந்திக்க வைக்கும் பதிவு
நன்று நன்றி!
புலவர் சா இராமாநுசம்
//மனிதனுக்கு பணம் இல்லாமல் இருக்கும் போது, அவர் வேலைக்கு சைக்கிளில் போகிறார்.
அதே மனிதனுக்கு பணம் இருக்கும் போது, அவர் சைக்கிளை உடற்பயிற்சி செய்ய உபயோகப்படுத்துகிறார்.//
நல்ல உதாரணம்
நல்ல பகிர்வு
தத்துவங்கள் பலமா இருக்கே !
அடடடடா அருமையா இருக்கே மக்கா....!!!
எல்லாம் நூறு சதவீதம் உண்மை...!
வணக்கம் பிரகாஷ் சார், கும்புடுறேனுங்கோ!
மொத்தத்துல பணம் இல்லாமல் இருப்பதுதான் நல்லது போலிருக்கு!
ஆனால் பணம் கண்டிப்பா அவசியம் சார்!
இருத்தாலும் பிரச்சனை இல்லன்னாலும் பிரச்சனை ..))
நல்ல மொழிபெயர்ப்பு.
பணம் இருக்கோ இல்லையோ மனிதன் மனிதனாக இருந்தா சரி..
நல்ல ஒப்பீடு பிரகாஷ்
//மனிதனுக்கு பணம் இல்லாமல் இருக்கும் போது, உணவை அவர் சாப்பிடுகிறார்.
அதே மனிதனுக்கு பணம் இருக்கும் போது, உணவு அவரை சாப்பிடுகிறது.
மேலே இருக்குறதை மட்டும் கேழே இருக்குற மாதிரி மாத்திக்கிட்டா நல்லா இருக்கும்
மனிதனுக்கு பணம் இல்லாமல் இருக்கும் போது, பசி அவரை கொல்கிறது
அதே மனிதனுக்கு பணம் இருக்கும் போது, பசியை அவர் கொல்கிறார்
மத்த எல்லாம் சூப்பர்..
நம்மூரில் பணம் இருந்தால் அவனுக்கு யாரையும் தெரியாது
பணம் இல்லாவிட்டால் அவனை யாருக்கும் தெரியாது
எனச் சொல்வார்கள் அதைப்போலவே மிக அருமையான
விஷயங்களை உண்மையான விஷயங்களை மிக அழ்கான
பதிவாக்கித் தந்துள்ளீர்கள். அனைவரும் படித்து புரிந்து
கொள்ள வேண்டிய பயனுள்ள பதிவு
தொடர வாழ்த்துக்கள் த.ம 9
/////மனிதனுக்கு பணம் இல்லாமல் இருக்கும் போது, உணவை அவர் சாப்பிடுகிறார்.
அதே மனிதனுக்கு பணம் இருக்கும் போது, உணவு அவரை சாப்பிடுகிறது.////
ஹ...ஹ... எல்லாத்துக்கும் பசிதாம்பா காரணம் சிலருக்கு பணப் பசி சிலருக்கு வயித்துப் பசி..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
யாரிந்த பதிவுலக கணக்குத் திருடர்கள்-சில ஆதாரங்களுடன்
என்னய்யா ஆச்சு..இப்படி இங்கிலிபீஸ் புக் எல்லாம் படிக்கிறீங்க?
"பணமமில்லாமலிருக்கும்போது உணவை அவர் சாப்பிடுகிறார்.
பணம் இருக்கும்போது மாத்திரைகள் அவரை சாப்பிடுகினறன." இதுதான் சரியாக இருக்கும் என்பது என் கருத்து. காலிங்கராயர்.
ஆங்கில தொகுப்பிலிருந்து மொழிபெயர்த்துள்ளேன். //
அடேங்கப்பா அண்ணன் பெரிய பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்கார்.
good news/// அள்ள.. அள்ள.. பணம்.. வேண்டுமா?.. உங்களுக்கு.. அப்ப இங்க வாங்க.. பண்ணத்தை அள்ளும் விதத்தை தெரிஞ்சிகோங்க...http://www.noolulagam.com/product/?pid=2055
ஆராட்சி எல்லாம் நல்லாத்தான் போகுது பயப்புள்ளைக்கு!.....
வாழ்த்துக்கள் சகோ .....தமிழ்மணம் 12
ஹா!ஹா!ஹா!எல்லாத்துக்கும் ப.சி.தாம்பா காரணம்.ஹி!ஹி!ஹி!
வணக்கம் சகோதரம்,
மனிதனின் மனிதத் தன்மையினை மாற்றும் வல்லமை கொண்ட பணம் பற்றிய நல்ல பதிவினைத் தந்திருக்கிறீங்க.
அழகான
சிந்தனை மிகுந்த ஒப்பீடு
மனிதனுக்கும் பணத்துக்கும் உள்ள ஒப்பீடு நல்லாவே சொல்லி இருக்கீங்க...
அட பயன் உள்ள பதிவு பாஸ்,
எல்லாம் காசு மயம் ஹீ ஹீ
அன்பின் பிரகாஷ் - மொழி பெயர்ப்பு அருமை - நன்று ! நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
நன்றாகச் சொன்னீர்கள்
வணக்கம்
இன்றுதங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்சென்று பார்வையிட இதோ முகவரி
http://blogintamil.blogspot.com/2014/12/ar-2011.html?showComment=1419016437833#c8701066033669350162
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-