டிஸ்கி:நண்பர்களே, கீழ்க்கண்ட உரையாடல் முற்றிலும் கற்பனையே, பெரிய பீப்பா, சின்ன பீப்பா பெயர்களும் கற்பனையே, யாரையும் குறிப்பிடுவன அல்ல.
இனி ரெண்டு பீப்பாக்களின் ஆட்டம் ஆரம்பம்.....
பெரிய பீப்பா: ஹலோ.. ஹலோ...யார் சின்ன பீப்பா இருக்காங்களா? நான்தான் பெரிய பீப்பா பேசறேன்...சின்ன பீப்பா: ஹாய் பெரிய பீப்பா, எப்படி இருக்குற,? நான் நல்லா இருக்கேன்.
பெரிய பீப்பா: நான் நல்லா இருக்கேன்டி... உன்கிட்ட பேசி எம்புட்டு நாளாச்சு தெரியுமா?
சின்ன பீப்பா: ஆமாங்க்கா, ரொம்ப நாளாச்சு... என்ன விஷயம் இம்புட்டு நாளா போன் பண்ணாம இருந்திங்க.?
பெரிய பீப்பா: எம் புருசன் தான் என் அம்மா வீட்டுக்கு போன் ரொம்ப பேசறேன்னு என் மொபைலை பிடுங்கி வச்சுக்கிட்டார். ரொம்ப படுத்தறார்டி. உம் புருசன் உன்னை எப்படி வச்சிக்கிறார்? குழந்தைகள் எப்டி இருக்குங்க?
சின்ன பீப்பா: அவருக்கென்ன கொறச்சல், அதெல்லாம் நல்லாத்தான் இருக்கார். இந்த கட்டிக்கிட்ட மனுஷன் என்னை ஆட்டி வைக்கிறார். குழந்தைகள் அதுபாட்டுக்கு படிப்பு, படிப்புன்னு போகுதுங்க.
பெரிய பீப்பா: ஏண்டி, இந்த மனுசன்களே இப்பிடி தானா? இல்ல தெரியாம தான் கேட்கறேன். அவங்களுக்கு நாம அடிமையா? என்னை ரொம்ப பாடா படுத்தறாரு
சின்ன பீப்பா: என்ன பண்றது? நம்ம தலையில கட்டி நாம அழ வேண்டியதா இருக்கு? சரி விடு, இந்த ஆம்பிளைங்க கொட்டம் காலங்காலமா நடக்கிறது தானே. உன் உடம்பு எப்பிடி இருக்கு. ஆபீஸ்க்கு எப்படி போற? கால் வலி சரியாரிருச்சா?
பெரிய பீப்பா: அத ஏன் கேட்குற? கால் வலி கொஞ்சம் கூட கொறயலே. டெய்லியும் ஆபீசுக்கு பஸ்ல தான் போறேன். இந்த பெட்ரோல் வில கூடினதுல இருந்து வண்டிய எடுக்க விட மாட்டிங்குறார். வண்டிய மூலையில வச்சுட்டார்.
சின்ன பீப்பா: இங்கேயும் அதே கதை தான், அவரு வேலைக்கு போற வழியில தான் பசங்க ஸ்கூல் இருக்கு, அவங்கள எப்பவும் கூட்டிட்டு போயி இறக்கி விடுவாரு. இப்ப விலை கூடினதுல இருந்து பசங்கள பஸ்ல போக சொல்லிட்டாரு. அவரும் பஸ்ல தான் போறாரு.
பெரிய பீப்பா: உனக்க்காச்சும் பரவாயில்ல. நீ வேலைக்கு போகாததுனால வண்டி இல்லாத கஷ்டம் உனக்கு தெரிய மாட்டிங்குது. உன் புருசனாச்சும் அவரும் வண்டிய வச்சுட்டு போறாரு, எம் புருசன் என்னைய வைக்க சொல்லிட்டு அவரு மட்டும் எடுத்துட்டு போறாரு. கேட்டா அவர் ஆபீஸ்க்கு பஸ் ரூட் கிடையாதுன்னு சாக்கு போக்கு சொல்றாரு. ம்ஹும் எண்ணத்த சொல்ல?
சின்ன பீப்பா: சரி விடுக்கா? நாம பொம்பளையா பொறந்துட்டோம். என்ன பண்றது? அப்புறம் என்ன சமையல் அங்க?
பெரிய பீப்பா: அட போடி.... எல்லா விலையும் கூடிப் போச்சு. வெறும் அரிசிய போட்டு கஞ்சி காய்ச்சினேன். அப்படியே மாங்கா ஊறுகா இருக்கு. அதான் தொட்டுக்க. காய் வாங்க போனா மலை ரேட்டு சொல்றாங்க. அதான் இப்ப அரிசி ரேட் தான் கொஞ்சம் கூடாம இருக்கு. அதனால பெரும்பாலும் கஞ்சி தான்.
சின்ன பீப்பா: பரவாயில்ல, நீங்க இங்க என் வீட்டுக்காரருக்கு கஞ்சினாலே பிடிக்காது. எப்பவும் நாக்கு ருசியா கேட்க்கறாரு. பிள்ளைங்க கூட அட்செஸ்ட் பண்ணிக்குதுங்க. அவருக்கு நல்லா ஆக்கி போட வேண்டியதா இருக்கு. அதனால விலையை பத்தி கவலைபடுறது இல்லை.
பெரிய பீப்பா: அட பாவமே, உன் பாடு ரொம்ப கஷ்டமா இருக்கே.
சின்ன பீப்பா: ஆமா ரொம்ப கஷ்டம் தான்.
பெரிய பீப்பா: இந்த அம்மாவை நம்பி ஓட்டு போட்டு நம்மள இப்பிடி மோசம் பண்றாங்களே? எல்லா விலையும் ஏத்திட்டாங்களே, பெட்ரோல் கண்ட்ரோல் தான் மத்திய கையில இருக்கு. அம்மாவால ஒன்னும் செய்ய முடியல. ஆனா, நேத்துல இருந்து அவங்க கண்ட்ரோல்ல இருக்குற எல்லாத்தையும் இப்படி ஏத்திட்டாங்களே.
சின்ன பீப்பா: ஆமா, இவங்கள நம்பி நாம மோசம் போயிட்டோமே. பால் விலைய இப்படி சகட்டு மேனிக்கு ஆறு ரூபா ஏத்தி விட்டுட்டாங்களே, நம்மள மாதிரி நடுத்தர குடும்பம் என்ன செய்யும்?
பெரிய பீப்பா: அட போடி, நடுத்தர குடும்பம் மட்டுமா பாதிக்குது, எல்லா மட்டத்திலயும் விலையேற்றம் பாதிக்க தான் செய்யும். அப்புறம் இந்த பஸ் ரேட் கூடியத தான் தாங்க முடியல. ஏற்கனவே ஐயா சொகுசு பஸ் விட்டதுல இருந்து ரேட் தாறுமாறா ஏறிப போச்சு. இந்தம்மா அதையும் ஏத்தி விட்டுட்டாங்க.
சின்ன பீப்பா: ஆமா, இந்த ரேட் அதிகம் இப்போ அவசியமா? கஜானா காலி ஆச்சுனா அதுக்கு வேற திட்டம் போட வேண்டியது தானே, அதை விட்டுட்டு நம்ம தலையில கையை வைக்கறாங்களே?
பெரிய பீப்பா: அந்த அய்யா இலவசம் கொடுத்து கஜானாவை காலி பண்ணினாருன்னு இந்த அம்மா சொல்றாங்க. இவங்களும் இலவசம் தராங்களே, இதுக்கு பணம் எங்க இருந்து வரும்?
சின்ன பீப்பா: அம்மா தர்ற இலவசத்துக்கு சிங் கிட்ட கை ஏந்தியிருக்காங்கனு கேள்விப்பட்டேன், இப்போ விலையேற்றத்த பார்த்தா அவரும் கையை விரிச்ச மாதிரியில தெரியுது.
பெரிய பீப்பா: அப்போ நீ சொல்றத பார்த்தா நாம கிட்ட வாங்கி நம்மகிட்டயே தர போறாங்களா? என்னா ஒரு மைன்ட் இந்த அம்மாவுக்கு...
சின்ன பீப்பா: அக்கா, நாம் பொலம்பி என்னா நடக்கப் போகுது. அப்பவே நல்லது செய்வாங்கன்னு நம்பி ஓட்டு போட்டோம்ல நமக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்.
பெரிய பீப்பா: ஆமா அந்த பதினோரு மணிக்கு இப்போ என்னா சீரியல் போடறாங்க? பகல்ல சீரியல் பாக்றதே கொறஞ்சு போச்சு.
சின்ன பீப்பா: ஆமா நானும் இப்போ பாக்றதே இல்லை. பாதி நேரம் கரண்ட் இருக்க மாட்டிங்குது. பேப்பர்ல நம்ம ஏரியாவுக்கு இத்தன மணிக்கு கரண்ட் போகும்னு போடறாங்க. நாம அதுக்காக பிளான் பண்ணினா அந்த நேரத்தை விட மத்த நேரத்துல தான் கரண்ட் கட் அதிகமா இருக்கு. ஒரு வேலையும் ஓட மாட்டிங்குது. காலையில ஆறு ஆரம்பிச்ச கரண்ட் கட் நைட் பத்து மணி வரை உள்ள டைம்ல எப்படியும் ஒரு அஞ்சு மணி நேரத்தை முழுங்கிடுது. பாவம் பசங்க படிக்றப்பவும் கரண்ட் இருக்க மாட்டிங்குது.
பெரிய பீப்பா: ஆமாண்டி, இங்கேயும் அதே கதை தான், அம்மா எதாவது நல்லது செய்வாங்கன்னு பார்த்தா அய்யாவை மிஞ்சிடுவாங்க போல. சரி விடு சின்ன பீப்பா, அவரு வீட்டுக்கு வர்ற நேரம், இம்புட்டு நேரம் நான் போன் பேசுனது தெரிஞ்சா ரொம்ப திட்டுவாரு.
சின்ன பீப்பா: ஆமா போனை வாங்கி வச்சுட்டார்னு சொன்ன? இப்போ எப்படி பேசற?
பெரிய பீப்பா: அவரு இன்னைக்கு போனை வீட்டுல மறந்து வச்சுட்டு போயிட்டாரு. அதான் உன்கிட்ட பேச முடிஞ்சது. சரி இன்னொரு நாள் நாம அந்த எக்கோ பார்க்ல மீட் பண்ணலாம்.
சின்ன பீப்பா: எப்படி மீட் பண்றது? அந்த பார்க் தான் சயிந்தரம் தான் ஓபன் பண்ணுவாங்க.
பெரிய பீப்பா: நான் என் பிள்ளைகளை வாக்கிங் போகனும்னு கூட்டிட்டு வரேன், நீயும் அப்படி சொல்லியே கூட்டிட்டு வா?
சின்ன பீப்பா: சரி அக்கா, நேரம் இருக்கிற சமயம் போன் பண்ணுங்க, நானும் பண்றேன், வைக்கறேன் இப்போ. பை..பை...
பெரிய பீப்பா: ஓகே, பை.. பை...
இனி அடிக்கடி இவர்களின் உரையாடல் நம் தளத்தில் வரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இனி ஆண்கள் பாடு திண்டாட்டம் தான்.
இன்றைய பொன்மொழி:
பசு மாடு கருப்புன்னா பாலும் கருப்பா இருக்குமா?
இன்றைய விடுகதை:
வெள்ளை மாடு தன்
வாலால் நீர் குடிக்குது. அது என்ன?
விடை அடுத்த இடுகையில்...
விடை தெரிந்தவர்கள் இங்கே கருத்துரையில் பகிர வேண்டாம். எனக்கு மெயில் (thaiprakash1@gmail.com) அனுப்புங்கள். சரியாக சொல்பவர்களுக்கு ஒரு மின் புத்தக இணைப்பு அனுப்பப்படும்.
குறிப்பு:
மெயிலில் விடை அனுப்புகிறவர்கள் விடுகதை கேள்வியையும் சேர்த்தே அனுப்புங்கள். சிலர் வெறும் பதில் மட்டுமே அனுப்புவதால் எந்த விடுகதைக்கான பதிலை முயற்சித்து பார்த்திருக்கிறார்கள் என்பதில் சற்று குழப்பம் ஏற்படுகிறது.
முந்தைய இடுகையில் கேட்கப்பட்ட விடுகதைக்கான விடை: பல்
முந்தைய விடுகதைக்கான இடுகை:
18 கருத்துரைகள்:
இனி அடிக்கடி இவர்களின் உரையாடல் நம் தளத்தில் வரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.//
எண்ணக கொடுமை சரவணா?
வரட்டும்,வரட்டும்...
நாட்டு நடப்ப அலசராங்களோ?
மாப்ள அம்மாவுக்கு அம்மாங்கள வச்சே ரிப்ளை கொடுக்கறியா ஹிஹி!
த மம்மி ரிட்டன்ஸ்.....!!!
அம்மா ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாங்க, அய்யா ஆட்டத்தை நிருத்தியாச்சு....!!!
யோவ் அம்மாவை காய்கறி வாங்குறதுக்கு அனுப்புங்கய்யா அப்போதான் விலைவாசி பற்றி தெரியும்...!!!
ஆமாண்டி, இங்கேயும் அதே கதை தான், அம்மா எதாவது நல்லது செய்வாங்கன்னு பார்த்தா அய்யாவை மிஞ்சிடுவாங்க போல. //
ஹய்யோ ஹய்யோ நாசமாபோச்சு போங்க....
//த மம்மி ரிட்டன்ஸ்.....!!!//
ரிப்பீட்டு!
( வீட்டிற்கு ஆட்டோ வர வாய்ப்பிருக்கிறது)
பீப்பா பேச்சு!
நல்லா இருந்துச்சு... ஆனா கேரக்டர் பேரை மாத்தினால் நல்லா இருக்கும் என்பது என் எண்ணம்... கவனம் பூரா பீப்பா பீப்பா அப்படின்னே போகுது.. மெயின் சுப்ஜெக்ட் கிட்ட வர மாட்டேங்குது...
mmmmm - நாட்டு நெலம நல்லாத்தான் அலசி இருக்காங்க - வேற வழி - ஒண்ணூம் சொல்றதுக்கில்ல - நல்வாழ்த்துகள் பிரகாஷ் - நட்புடன் சீனா
இலவசத்தை நாம் வாங்கும் போதே ஆப்ப வைச்சறாங்க..
தொடர்ந்து படிப்போம்
காப்பி பேஸ்ட் பதிவர் மன்னர் மார்த்தாண்டம் VS பிரபல பதிவர்கள் PART -II
நல்ல அலசல் எல்லா சாயமும் வெளுக்கட்டும்..
டிஸ்கி:நண்பர்களே, கீழ்க்கண்ட உரையாடல் முற்றிலும் கற்பனையே, பெரிய பீப்பா, சின்ன பீப்பா பெயர்களும் கற்பனையே, யாரையும் குறிப்பிடுவன அல்ல.
>>
ஓக்கே நம்பிட்டோம்
அட வித்தியாசமான அலசல் தொடருங்கள்........
அட வித்தியாசமான அலசல் தொடருங்கள்........
நல்ல அலசல்..ஆனா ஏன் அந்த டிஸ்கி...?
சாதாரண நடுத்தர மக்கள் பார்வையில் ஒரு உரையாடல் அருமை. விலையேற்றம் பற்றி எதுவும் சொல்ல தெரியவில்லை.
rompa sirippu