CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



"வலைச்சரம்" சீனா ஐயா சிறப்புப் பேட்டி

அன்பார்ந்த வலைப்பூ நண்பர்களே, தமிழ்வாசியில் முன்பே வெளியான வலைச்சரம் சீனா ஐயாவின் பேட்டி மீள்பதிவாக இங்கே...

01 : சீனா பெயர்க்காரணம் கூறுக
          என்னுடைய பெயர் சிதம்பரம். எங்கள் உறவு முறையில் சீனாதானா என முதலிரண்டு எழுத்துகளை வைத்து அழைப்பார்கள். நான் அதில் இருந்து முதற் சொல்லை மட்டும் வைத்து சீனா எனப் புனைப் பெயர் வைத்துக் கொண்டேன். அவ்வளவு தான் - சீன நாட்டிற்கும் எனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. 
02: புதியதாக வலைப்பூ துவங்குபவர்க்கு நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?
          புதியதாக வலைப்பூ துவங்குபவர்கள் முதலில் சிறிய சிறிய இடுகையாக எழுதலாம். மூன்று இடுகைகள் இட்ட வுடன் திரட்டிகளில் இணைக்கலாம்., தமிழ் மணத்தில் இணைப்பது அவசியம்.  பிறகு வருகிற மறுமொழிகளுக்கு அன்பான நன்றி கலந்த பதிலுரைகள் அளிக்க வேண்டும். அவர்களின் வலைப்பூவினிற்குச் சென்று படித்து மறு மொழி இட வேண்டும். 
          பிறகு தமிழ் மணத்தில் உள்ள சூடான இடுகைகள் , வலது பக்கம் வரும் இடுகைகள் - இவற்றிர்க்கெல்லாம் சென்று படித்து மறு மொழிகள் இட வேண்டும். எதிர் மறை எண்ணங்கள் துவக்கத்தில் எழுத வேண்டாம். ஆக்க பூர்வமான நேர் மறை கருத்துகளையே துவக்கத்தில் எழுத வேண்டும்.
03 : இன்றும் நீங்கள் விரும்பிப் பார்க்கும் பழைய திரைப்படங்கள் எவை ? ஏன் ? 
          விரும்பிப் பார்க்கும் திரைப்படங்கள் எனில் - தில்லானா மோகனாம்பாள், வீர பாண்டிய கட்ட பொம்மன், கப்பலோட்டிய தமிழன், கல்யாணப் பரிசு இன்னும் எத்தனை எத்தனையோ ..... இப்பொழுதெல்லாம் பொழுது போக்குவதற்காக வீட்டிற்கு அருகில் உள்ள அம்பிகா திரையரங்கத்தில் சனி / ஞாயிறு ஏதேனும் ஒரு நாள் மாலைக் காட்சிக்கு என்ன படம் என்று கூடப் பார்க்காமல் சென்று விடுவோம். ஆக மாதத்தில் 4 / 5 படங்கள் அவ்வளவு தான். 
04 : பணி ஓய்விற்கு முந்தைய வாழ்க்கை - பிந்தைய வாழ்க்கை . இந்த இரண்டில் தங்களுக்குப் பிடித்த, மகிழ்ச்சியை அளிக்கக் கூடிய வாழ்க்கை எது ? ஏன் ? 
         பணி நிறைவிற்குப் பின் - பணி நிறைவிற்கு முன் - ஓய்வு என்ற சொல்லே நமது அகராதியில் இருக்கக் கூடாது. இறுதி வரை ஏதேனும் செய்து கொண்டே இருக்க வேண்டும். சரி எது பிடித்ததெனில் - எதெது எவ்வப்பொழுது நடக்கிறதோ அதனை அப்படியே ஏற்றுக் கொள்ளும் எண்ணம் கொண்டவன். திட்டமிடுதல் எல்லாம் கிடையாது. செய்பவை அனைத்துமே பிடிக்கும். முன்னர் பணிச்சுமை அதிகம் - தற்பொழுது நேரம் எவ்வாறு கழிப்பதென எண்ணம். இரண்டுமே பிடித்திருக்கிறது. பணி புரிந்த காலத்தில் செல்ல இயலாத இடங்களுக்கெல்லாம் இப்பொழுது செல்கிறோம். ஆன்மீகச் சிந்தனை வளர்ந்திருக்கிறது. 
05 : நீங்கள் எத்த்னை பேரிடம் ஐ லவ் யூ சொல்லி இருக்கிறீர்கள் ? அப்படி சொல்லி அடி வாங்கிய அனுபவம் உண்டா ?
           ஐ லவ் யூ சொல்வது மிகவும் எளிதான செயல். அன்பினைப் பகிர்வதர்க்கு யாருடைய அனுமதியும் தேவை இல்லை, அடியும் வாங்க வேண்டியதும் இல்லை. காதல் எல்லாம் கல்லூரி வாழ்க்கையோடு சரி. இப்பொழுது சில நேரங்களில் நினைத்துப் பார்ப்பதுண்டு. அவ்வளவு தான். எங்கள் காலத்தில் காதல் என்பது அவ்வளவு எளிதல்ல. 
06 : வலயுலகில் உங்கள் சாதனை என்ன ? அச்சாதனையை எட்டிப் ப்டிக்கக் காரணமாக இருந்தது எது ? 
         ஒரு புகழ் பெற்ற ஓவியரிடம் ஒருவர் கேட்டாராம். உங்களின் படைப்பிலேயே சிறந்த படைப்பு எது என. அவர் பதிலளித்தாராம் - எனது அடுத்த படைப்பெனெ. நீதி என்ன வெனில் சாதனை என்று ஒன்றுமில்லை. நாளுக்கு நாள் முன்னேற வேண்டும். பிரபலமாக வேண்டும். எழுதும் திறமை வளர்க்க வேண்டும். நட்பு வட்டம் பெருக வேண்டும். 
         நாங்கள் அயலகம் சென்றிருந்த போது, நேரத்தைச் செலவிட, தேடிய பொழுது, தமிழ்ப் பதிவுகள் கண்களில் பட்டன. அதனை ஆய்ந்து நானும் ஒரு வலைப்பு ஆரம்பித்து நான் பிறந்ததில் இருந்து ....  என வாழ்க்கைச் சரிதம் எழுத ஆரம்பித்தேன். நடை ஒரு மாதிரி இருந்தாலும் மறு மொழிகள் அதிகம் வந்த காரணத்தினால் தொடர்ந்து எழுதினேன். பிறகு கணினியில் அதிக நேரம் செலவிடும் வாய்ப்பு ( தினசரி 10 / 12 மணி நேரம் ) கிடைத்தது. கண்ணில் பட்டவற்றை எல்லாம் படித்தேன் - மறு மொழி இட்டேன். டெம்ப்ளேட் மறுமொழி அல்ல - 2 3 வரிகள் இடுகையில் இருந்து எடுத்துப் பாராட்டி எழுதிய மறுமொழிகள். திரட்டி தமிழ் மணத்தில் "ம" திரட்டியில் தினசரி என் பெயர் முதலில் இருக்க வேண்டும் என வெறியுடன் படித்து எழுதினேன். பின்னூட்டப் பிதாமகன் எனப் பெயர் பெற்றேன். இப்பொழுது இருக்கும் பதிவர்களுக்கு நான் அதிகம் அறிமுகமில்லாதவனாக இருக்கலாம். நான் சென்று பார்வை இட்ட பதிவர்களின் பெயர்கள் ஒரு இடுகையில் இட்டிருக்கிறேன். சென்று பார்க்க அன்புடன் அழைக்கிறேன்.  
07 : தற்போது சில பதிவர்களிடையே கருத்து மோதல் ஏற்படுகிறேதே ? இதைப் பற்றி தங்கள் கருத்து ?
           எழுத்தாளர்கள் என்றாலே சர்ச்சை இருக்கத்தான் செய்யும். தவிர்க்க இயலாது. சங்க காலத்திலேயே புலவர்கள் சர்ச்சை செய்திருக்கிறார்கள். ஆகவே கருத்து மோதல் என்பது தவறல்ல. ஆனாலும் வரம்பு மீறாமல் இருக்க வேண்டும். அணி சேர்க்கக் கூடாது. ஊதிவிட்டு மகிழ்பவர்களைத் தவிர்க்க வேண்டும். ஆனால் எனக்குத் தெரிந்த வரை எல்லா மோதல்களுமே சுபமாகத் தான் முடிந்திருக்கிறது. ரசிப்போம்.
08 : உங்களூக்கு சிகரெட், மது பானம் போன்ற பழக்கங்கள் உண்டா ?  
         இப்பழக்கங்கள் இல்லாத மனிதனே கிடையாது. யாராவது நான் நினைப்பது கூடக் கிடையாதென்று கூறினால் அவன் தான் உலக மகா பொய்யன். வாழ்வினில் ஒரே ஒரு தடவையாவது மது / புகை பிடித்தல் இவற்றில் ஈடு படாதவனே கிடையாது. பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு காரணங்களினால் ஈடு படுவார்கள். தவறில்லை. ஆனால் அடிமையாகக் கூடாது.
09 : மனைவியிடம் பொய் சொல்லி மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?
         அந்தரங்கம் புனிதமானது. இருப்பினும் வள்ளுவரே கூறிய படி பொய்யும் பேசலாம் அவை நன்மை பயக்குமெனில். கண்டு பிடிக்கும் திறமை பெண்களிடம் அதிகம்.
10 : இது தேர்தல் சமயம் என்பதால் கேட்கிறேன். யார் ஆட்சிக்கு வந்தால் நல்லதென நினைக்கிறீர்கள் - ஏன் ?
        இனிமேல் பிறப்பவர் ஆட்சிக்கு வந்தால் தான் நல்லது. இருப்பவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமெனில் கோடி வீட்டில் கொள்ளி வைப்பவர்தான் இன்று சிறந்தவர்.
11 : பணி செய்த காலத்தில் லஞ்சம் வாங்குவது / கொடுத்தது 
உண்டா ?
         லஞ்சம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ள பதவியில் நான் இல்லை. அதனால் லஞ்சம் வாங்க வில்லை. வாய்ப்புகள் வந்து நான் வாங்க வில்லை எனில் தான் நான் உயர்ந்தமனிதன்.  இன்று லஞ்சம் கொடுக்காமல் ஏதேனும் செய்ய இயலுமா ? அரசு இயந்திரங்கள் செயல் படும் விதம் உலகம் அறிந்ததே! 
12 : உங்களை சோகத்தில் ஆழ்த்திய நிகழ்ச்சி எது ?
         தாயும் தந்தையும் இறந்தது தான்.
13 : வலைச்சர ஆசிரியராக வாரம் ஒருவரைத் தேர்ந்தெடுத்து எழுதச் சொல்வது போல  - என் பதிவினிற்கு உங்களை ஒரு வாரம் ஆசிரியராக நியமித்தால் - என் வலைப்பூவினில் எழுதுவீர்களா ?
         எழுத மாட்டேன். ஏனெனில் நான் தற்பொழுது என் வலைப்பூவினிலேயே எழுதுவதில்லை.சிறப்பான காரணம் ஒன்றும் இல்லை.,
14 : பிரபல பதிவராக என்ன செய்ய வேண்டும் ?
        இரண்டாவது கேள்விக்கான பதில் இதற்கும் பொருந்தும். அடிப்படை எண்ணம் நம் திறமையினை வளர்க்க வேண்டும். நாளுக்கு நாள் எழுத்து மிளிர வேண்டும். படிப்பவர்கள் / தொடர்பவர்கள் அவர்களாகப் பெருக வேண்டும். நாம் ஒவ்வொருவரையும் வாருங்க எங்கள் வீட்டிற்கென அழைப்பதெல்லாம் ஆரம்ப காலத்திலேயே நிறுத்தி விட வேண்டும். தொடர்ந்து அழைத்தால் வெறுப்பு கூடும். டெம்ப்ளேட் மறுமொழிகள் / மொக்கை / கும்மி - மழை பொழியும். பயனில்லாத ஒன்றாகச் சென்று விடும். 
15 : இந்தியாவில் உங்களுக்குப் பிடித்த, பிடிக்காத இடங்கள் எவை ?
        பிடித்த இடங்கள் சென்று இரசித்த இடங்கள் அனைத்துமே - பிடிக்காத இடங்கள் செல்லாத இடங்கள் அனைத்துமே !
16 : அடுத்த தலைமுறை என்று ஒன்றிருந்தால் நீங்கள் என்னவாக பிறக்க ஆசைப் படுகிறீர்கள் ?
        அடுத்த பிறவியே வேண்டாமென விரும்புகிறேன். நம் கையில் இல்லையே !
17 : உங்களிடத்தில் உங்களுக்குப் பிடித்த, பிடிக்காத விஷயங்கள் எது ?
       என்னிடத்தில் எனக்குப் பிடித்த குணம் - என் தன்னம்பிக்கை. எதனையும் செய்து முடிக்க இயலும் என்ற நம்பிக்கை. பிடிக்காதது என் சோம்பேறித் தனம். அது என் இரத்தத்தில் ஊறியது. இரண்டும் முரண்பட்டதல்ல - இரண்டுமே ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்.


இதுவரை நான் சீனா ஐயாவிடம் கேட்ட கேள்விகளைப் படித்தீர்கள். இனி வாசகர்கள், நண்பர்களின் கேள்விகள். 


ம.தி.சுதா; www.mathisutha.blogspot.com
என்னுடைய கேள்வி என்னண்ணா உங்களுக்கு வலைச்சரம் என்ற ஒரு தரமான வலை பதிவை தொடங்கும் ஐடியா எப்படி தோன்றியது? 
          வலைச்சரம் காலஞ்சென்ற நண்பர் சிந்தாநதியால்  துவங்கப்பட்டு 11.11.2006  - இல் முதல் இடுகை இடப்பட்டது.
வலைச்சரத்தின் முதல் ஆசிரியராக பொன்ஸ் பொறுப்பேற்றிருக்கிறார். பிறகு பணிச்சுமை காரணமாக சிந்தாநதி ஆசிரியர்கள் குழுவாக பொன்ஸையும்       முத்துலெட்சுமியையும் சேர்த்துக் கொண்டார்.   பிறகு என்னிடம் பொறுப்பாசிரியர் பணி வந்தது.
*************************************************************** 
ரஹீம் கஸாலி; http://ragariz.blogspot.com/

ஒரு வாரத்திற்கு வலைச்சரத்தில் ஆசிரியராக பணியாற்ற எதன் அடிப்படையில் பதிவர்களை தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று அறிந்து கொள்ளலாமா? 
       குறிப்பிட்டுச் சொல்லும் படியாக விதி முறைகள் இல்லை. எல்லோருடைய இடுகைகளையும் படித்துக் கொண்டே போகும் போது, இவர் ஆசிரியப் பொறுப்பேற்க தகுதியானவர் என மனதில் படும் பொழுது அவரை அழைத்து விடுவோம். அவ்வளவுதான். 

***************************************************************
நா.ஜானகிராமன்; http://podhujanam.wordpress.com/
பதிவுகளின் பின்னுட்டத்தில் டெம்ப்ளேட் கமெண்ட்களை (மீ த பர்ஸ்ட்முத வடைமுத வெட்டுரைட்டுஇன்ன பிறபோடுபவர்களை தடுக்க என்ன செய்யலாம்? 
        மட்டுறுத்தல் வைக்கலாம். வெளியிடாமல் இருக்கலாம். போனாப்போறாங்களே! போட்டுட்டுப் போறாங்களே!  

இன்னும் வருஷம் கழிச்சி தமிழ் பதிவுலகம் எப்படி இருக்கும்?
        பதிவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகி இருக்கும். தரமான இடுகைகள் வெளி வரும். ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறும். 

புதிதாக எழுத வரும் புதுப்பதிவர்களை ஆக்கப்பூர்வமாக உற்சாகப்படுத்தி வழிநடுத்துவதில் பிரபல பதிவர்களின் பங்கு என்ன? (இப்பல்லாம்பதிவர்கள் பிரபலமாய்டாலே அவருக்கென்று ஒரு குழுவை சேர்த்துக்கொண்டு சுருங்கிவிடுகிறார்கள் /புதுப்பதிவர்களின் பதிவுகளுக்கு கமெண்டிடுவதை நேர விரயம் என்று நினைக்கிறார்கள்)
         உண்மை தான் - நேரமின்மை என்பது உண்மையான காரணம். இருப்பினும் எல்லோருடைய இடுகைகளையும் படிப்பவர்கள் அனேகம் பேர். நாம் எழுதும் எழுத்துகள் மற்றவர்களைச் சுண்டி இழுக்க வேண்டும். பிரபல பதிவர்கள் என்று ஒருவரும் பிறப்பது கிடையாது. நட்பு வட்டம் குழுக்கள் - இவை எல்லாம் தவிர்க்க இயலாது. புதுப் பதிவர்களிடையேயும் குழுக்கள் உள்ளனவே!  
***************************************************************
லக்ஷ்மி - echumi; http://www.echumi.blogspot.com/
நான் ப்ளாக்குக்கு புதுசுகடந்த 5 மாதங்களாகத்தான் பதிவு எழுதி வருகிறேன். வலைச்சரத்தில் என்னை இதுவரை, 4-பேர்கள் அறிமுகம் செய்திருக்கிறார்கள். நானும் நிறைய ப்ளாக் போயிமத்தவங்க பதிவெல்லாம் படிச்சு பின்னூட்டமும் கொடுத்து வருகிறேன்எல்லாரும் கலக்கலா எழுதராங்கஅவங்களுக்கு முன்னாடி நான் u,k,g.  l,k,g. கூட இல்லைஆனாகூட நிறைய நிறைய எழுதனும்னு ஆர்வம் மட்டும் நிறையவே இருக்குஉங்ககூட அறிமுகமும் இல்லை .இப்பதான் முதல் முதலா பேசரேன்எந்தவிதத்தில் என்ப்ளாக்கை இன்னமும் சிறப்பாக வைக்கமுடியும்தகுந்த ஆலோசனை தருவீர்களாகம்ப்யூட்டரைப் பற்றியும் அதிகம் தெரியாது. முகம் தெரியாத பல நண்பர்கள் சமயத்தில் தகுந்த ஆலோசனைகள் சொல்கிரார்கள்ப்ளாக் எழுத ஆரம்பித்த பிறகு தான் எனக்கு நல்ல பல நட்புகள் கிடைத்திருக்காங்கரொம்ப சந்தோஷமா இருக்கு. பாக்கப்போனா எனக்கு வயது கொஞ்சம் அதிகம் தான்என் சொந்தபந்தங்களே நான் கம்ப்யூட்டரில் எழுதுவதற்கு எகைன்ஸ்டதான் இருக்காங்கஎங்கரேஜ் மெண்டே கிடையாதுஎன்பதிவுக்கு வரும் பின்னூட்டம்தான் எனக்கு எனர்ஜிநான் எழுதுவது என்பக்கம் யாருமே படிச்சுகூட மாட்டாங்க. எனக்கு அதைப்பத்தியெல்லாம் கண்டுக்கொள்வதே இல்லைதான். முடிந்தால் டைம் கிடைத்தால் என் ப்ளாக் வந்து என் ப்ளாக் படிச்சு எனக்கு தகுந்த ஆலோசனை சொல்லுங்க
     கலங்க வேண்டாம். - தொடர்பு கொள்க - cheenakay@gmail.com
(9840624293) படிக்கிறேன்.

***************************************************************

குண்டு(ராஜகோபால்); http://enpakkangal-rajagopal.blogspot.com/
வலைபூ வரமாசாபமா?


கூகுள் இலவசமாக அனைவருக்கும் ஒரு இடம் கொடுத்தது நல்லது தான் இதனால் பலர் தமது  படைப்புகள் உலகத்தில் உள்ள அனைவர் பார்வைக்கும் கட்டுபாடுகளின்றி  வழி கிடைக்க செய்தது மற்றும்  நண்பர்கள் வட்டம் பெருக செய்தது  சரிஅது போல  பல ஆபாச தளங்கள் பெருக செய்வதர்க்கும் துணை புரிகிறதே உங்கள் கருத்து என்ன?
       கத்தியின் இருபக்கம் கூர்மையாகத்தான் இருக்கும். பயன்படுத்துபவர்கள் சாக்கிரதையாக பயன் படுத்த வேண்டும். அதே தான் இங்கும் (இரண்டு கேள்விகளுக்கும்)

வலைச்சரத்தில் பன்னிக்குட்டியின் (ராம்சாமி) பின்னூட்ட  சாதனை பற்றி உங்கள் கருத்து?
       பன்னிக்குட்டி ராமசாமி ஒரு விளையாட்டிற்காக - ஏற்கனவே இருந்த ரெகார்ட், பிரேக் பண்ண வேண்டும் என்ற எண்ணத்தில் அவரது நண்பர்கள் செய்தது அது. தவறென்று கூற மாட்டேன். தவிர்க்கலாம். இனி தவிர்ப்போம். 
***************************************************************

ஆசியா உமர்; http://asiyaomar.blogspot.com/
குடும்பத்தலைவிகள் பதிவர்களாவது பற்றி உங்கள் கருத்துஅவர்கள் இணையத்தில் நேரங்களைச் செலவழிப்பதால் ஏற்படும் நன்மை தீமை என்ன
       அது அப்பெண்கள் தீர்மானிக்க வேண்டிய நிகழ்வு. பதிவர்களாகி வெற்றிகரமாக நடத்துகிறார்கள். குடும்பச் சுமைகளையும் அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். 


பதிவுலக அரசியல் என்றால் என்னதகுதியிருந்தும் பதிவுலக அரசியல் பின்பலம் இருந்தால் தான் பிரபலமாகலாம் என்று சொல்கிறார்களே உண்மையாஇந்த அரசியலில் சிக்காமல் பிரபலமாவது எப்படி?
       பதிவுலக அரசியல் என்பது என்ன என்று எனக்கும் புரியவில்லை. ஆனால் தவிர்க்க வேண்டும். பிரபலமாவதற்கும் இதற்கும் தொடர்பு கிடையாது 


சமையல் வலைப்பூ வைத்திருப்பவர்களுக்கு தாங்கள் கூறும் ஆலோசனை என்னவெஜ்,நான்வெஜ் இருவகையினரையும் திருப்திபடுத்த தனித்தனி வலைப்பூ வைத்திருப்பது நல்லதா?அல்லது ஒரே வலைப்பூவில் இரண்டும் கலந்து கொடுக்கலாமாதாங்கள் எல்லா மக்களுடன் கலந்து பழகுபவர் என்பதால் இந்த கேள்வி,சுத்த சைவப்பிரியர்களுக்கு ஒரே வலைப்பூவில் இரு வகையான குறிப்புக்கள் கொடுப்பதால் அவர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும்அவர்கள் வந்து செல்வதில் தடை ஏற்படுமா?
      சமையல் கலை பற்றி எழுதுபவர்கள் இரண்டையும் கலந்தே எழுதலாம். யார்க்கு எது வேண்டுமோ அவர்கள் அதனை எடுத்துக் கொள்வார்கள்.  வந்து செல்வதில் தடை இருக்காது.

உணவுப் பழக்கத்தில் உங்கள் வரையறை என்ன?
        புரிய வில்லை. உணவுப் பழக்கத்தில் வரையறை என்று ஒன்றும் இல்லை. 


ஒன்றிற்கு மேற்பட்ட வலைப்பூக்கள்  வைத்துக்கொள்வது பற்றி  தங்கள் கருத்துஎப்பொழுதும் பரபரப்பாக செயல்படும் வலைப்பூவினரை கண்டு ஆச்சரியப்படுவதுண்டுஅவர்களின் வேலைச் சிரமங்களை எவ்வாறு சமாளிக்கிறார்கள்எப்பொழுதும் வலைப்பூவில் இருந்தால் குடும்பத்தையும்தங்களையும் அவர்களால் கவனிக்க முடியுமா?
      எத்தனை வலைப்பூக்கள் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். எழுதும் திறமையும் நேரமும் இருப்பின் செய்யலாம். குடும்பத்தையும் கவனிக்க வேண்டும். திட்ட மிட வேண்டும். 

****************************************************************

ரத்தினவேல்; http://rathnavel-natarajan.blogspot.com/
தமிழில் வெளிவரும் வலைப்பதிவுகளில் அதிகம் படிக்கப்படும் 'முதல் பத்து வலைப்பதிவுகள்எவை என்ற விபரங்கள் அளிக்க வேண்டுகின்றேன்.
      தமிழ் மணத்தில் தற்பொழுது ரேங்க் வருகிறதே!

 ***************************************************************

Speed Master;www.speadsays.blogspot.com
1 Japanese yen = 0.552670994 Indian rupees
1 Vietnamese dong = 0.00217855036 Indian rupees
 நம் பணமதிப்பு அந்த நாடுகளை விட அதிகமாக உள்ளது ஆனால் பொருளாதாரத்தில் நாம் அவர்களை விட பின்தங்கியுள்ளோம். மக்கள் வாழுவதற்கான சிறந்த நாடுகளில் நம்மளை விட பணமதிப்பில் குறைவாக உள்ள வியட்நாம் வது இடத்தில் உள்ளது. யாரேனும் விளக்கவும்?
      இது தனிப்பட்ட முறையில் விவாதிக்கலாம். பல காரணங்கள் உண்டு. ஊழல் முதலான காரணம்.  

பன்னிக்குட்டி ராமாசாமி அவர்கள் ஜப்பானில் 100யென் தான் ஒரு பணம் என கூறினார்கள். அப்படி என்றால் நாம் கூறும் 100 பைசாக்கள் போலதான் அந்த 100யென் மதிப்பா யாரேனும் விளக்கம் கூறுங்கள்
       இல்லை - யென் என்பது தான் கடைசி ஜப்பானில். ஒரு யென் என்பது இந்திய மதிப்பில் ஐம்பத்து ஐந்து பைசா என நினைக்கிறேன். 

வண்ணங்களுக்கு Colour என்று சொல்லுவோம் ஆனால் கணினியில் COLOR என்றுதான் கூறிகிறோம். ஏன் என்று காரணம் சொல்லவும்?
      ஆங்கிலம் -  அமெரிக்க ஆங்கிலம், பிரிட்டீஷ் ஆங்கிலம் என வேறுபாடுகள் உள்ளன. கலர் என்றால் color என்பதும் colour என்பதும் இந்தியாவில் வண்ணம் என்பதற்கு பயன்படுத்துகிறோம்.  


பெரிய பெரிய நிறுவன்ங்களுக்கு 24 மணி நேரம் மின்சார இணைப்பு கொடுத்து ஏழைகளையும், நடுத்தர மக்களையும் கஷ்டப்படுத்துவது ஏன்?

       இதற்கெல்லாம் ஆயிரம் காரணங்கள் உள்ளன. விவாதிக்க இயலாது. நிறுவனங்களின் தயவு அரசிற்கு வேண்டும்.  


வெயில் அதிகமாக இருக்கும் நம் நாட்டில் சோலர் சிஸ்ட்த்தை குறைந்த பட்சம் பெரிய பணக்கார நிறுவனங்கள் கூட கண்டுகொள்ளாதது ஏன்?
       பலர் பயன்படுத்துகின்றனர். பெரிய அளவில் தொடர்ச்சியாக இல்லை. இதற்கும் பல காரணங்கள் உண்டு.  

***************************************************************

அமைதி அப்பா; www.amaithiappa.blogspot.com
       நான் சமூக சீர்திருத்தம் பற்றி மட்டுமே எழுத விரும்புகிறேன்எனது மகன்எல்லா விஷயங்களையும் எழுது என்கிறான்ஆனால்நான் எப்படி ஆரம்பித்தாலும் சமுக விழிப்புணர்வை விட்டு என்னால் வெளியில் வர முடியவில்லைமற்ற விஷயங்கள் குறித்துதான் அனைவரும் எழுதுகிறார்களேநாம் இந்த ஒரு விஷயத்தோடு நிறுத்திக் கொள்வோமென்று முடிவு செய்து விட்டேன்இது சரியா
       இது நீங்கள் முடிவு செய்ய வேண்டிய செய்தி. தவறென்றோ சரியென்றோ யாரும் கூற இயலாது. 

நான்  எழுதுவதை ஒரு சிலர் தவிர படிப்பதில்லைஇருந்தும் ஆளில்லா கடையில் டீ ஆத்துவது போல் எழுதிக் கொண்டிருக்கிறேன்இது எவ்வளவு நாள் சாத்தியமாகும்?
       இது நீங்கள் கொஞ்ச நாட்கள் பல வலைப்பதிவுகளுக்கும் சென்று படித்து மறுமொழி போடுங்கள். அவர்களை உங்கள் வலைப்பூவினிற்கு அழையுங்கள். ஆனால் தொடர்ந்து செய்ய வேண்டாம். முடிந்த வரை தமிழ் மணத்தில் வரும் அத்த்னை பதிவுகளுக்கும் சென்று மறு மொழி இடுங்கள் - தன்னால் உங்கள் வ்லைப்பூவினிற்கு அவர்கள் வருவார்கள். எழுதுவது கொஞ்சம் கவர்வதாக எழுதுங்கள்.   


எந்த மாதிரி கேள்விகள் கேட்டால் நாம் சிறப்பாக பதில் சொல்லலாம் என்று இருந்தீர்கள்அந்த மாதிரியான ஒரு கேள்வியும்அதற்குரிய பதிலையும் வாசகர்களுக்கு தெரிவிப்பீர்களா
       அப்படி எல்லாம் ஒன்றுமில்லை.

***************************************************************

C.P. Senthil kumar; www.adrasakka.blogspot.com
நான் கடந்த மாதமாக பார்த்ததில் வலைச்சரத்தில் ஃபிலாசபி பிரபாகரனின் உழைப்பு பிரம்மிக்க வைத்ததுஅவருக்கு எதாவது ஸ்பெஷல் கிஃப்ட் கொடுத்தீங்களா?
       வாய் நிறைய வாழ்த்துகளும் மனம் நிறைய பாராட்டுகளூம் தான். 

வலைச்சரம் ஆசிரியர் பணிக்கு எந்த அடிப்படையில் ஆட்களை செலக்ட் பண்றீங்க?
       இரண்டாம் கேள்விக்கான பதில். 


வலைத்தளத்தை அறிமுகப்படுத்தும் படலமே போதும்ங்கற தைரியமான எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது?
       முதல் மற்றும் இரண்டாம் கேள்விக்கான பதில். 

***************************************************************


முனைவர் இரா. குணசீலன்; www.gunathamizh.blogspot.com 
தமிழ் வலையுலகில் கல்விப்புலம் சார்ந்தவர்களின் பங்கு எவ்வாறு உள்ளது?
       அவரவர்கள் அவரவர்கள் துறையில் சிறப்புடன் பணியாற்றுகின்றனர். 

ஒரு சிறந்த வலைப்பதிவுக்கு என்ன தகுதிகள் இருக்கவேண்டும்?
(
பார்வையாளர் எண்ணிக்கையாநிறைய இடுகைகளா? ....????)

        இதற்கென்று தனித் தகுதி கிடையாது. பொதுவாக மறுமொழிகள் / இடுகைகள் / பின் தொடர்பவர்கள் இவைகளை வைத்தும் தமிழ மணத்தின் ரேங்க் படியும் சிறந்த வலைப்பதிவென கூறலாம்.  


தமிழ் வலையுலகம் இன்னும் சராசரி மக்களுக்கும் சென்றடைய எது
தடையாக உள்ளது?

        கேள்வி புரியவில்லை. வலையுலகம், இணையத் தொடர்பு உள்ள அனைவருக்கும் செல்கிறது. கொஞ்சம் ஈடுபாடு வேண்டும். தமிழில் எழுத, படிக்க ஆர்வம் வேண்டும். பிளாக் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும். சராசரி மக்கள் என்பவர்கள் யார்? இணையத் தொடர்பு இல்லாதவர்களா? தமிழில் படிக்க ஆரவமில்லாதவர்களா? 

         மதுரைப் பதிவர்கள் கல்லூரிகளில் தமிழ் வலைப்பூக்கள் ( பிளாக் ) பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு வகுப்புகள் எடுக்கிறோம். கல்லூரி அனுமதியுடன் - இரு வகுப்புகள் எடுக்கிறோம். பிளாக் துவங்குவது, தமிழில் எழுதுவது இவை பற்றி வகுப்பெடுக்கிறோம். ஈரோடு பதிவர்கள், திருப்பூர் பதிவர்கள் பல கல்லூரிகளில் வகுப்பெடுக்கிறார்கள். 
(ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன). 
***************************************************************
பிரபாஷ்கரன்; http://writerprabashkaran.blogspot.com/
இன்றைய வளர்ச்சி என்பதன் மூலம் எதனைக் குறிப்பிடுகிறீர்கள்? 
        அறிவியல் வளர்ச்சி - தொழில் நுடப் வளர்ச்சி அனைவருக்கும் கிடைக்கும். அதனை பெறுவதற்கான வசதிகள் உள்ளவர்களுக்கு,
.
மேலும் வாசிக்க... ""வலைச்சரம்" சீனா ஐயா சிறப்புப் பேட்டி"



பைக் ஸ்டாண்டு ஏன் இப்படி இருக்கு?

      ஏதோ, குடும்பத்தோட நாலு பேரா சேர்ந்து போற மாதிரி கார் தான் வாங்க முடியாட்டியும், அட்லீஸ்ட் ரெண்டு பேராவது போற மாதிரி கடன உடன வாங்கி, லோனு கீனு போட்டு பிக்கப் இருக்குற மாதிரி, மைலேஜ் அதிகமா, இன்ஜின் லைப் நல்லா இருக்குற மாதிரி நாலு கம்பெனி வண்டிகள அலசி ஆராய்ஞ்சு ஒரு பைக்கை ஆசையா வாங்கறோம். வாங்கிட்டு வீட்டுல நிறுத்திட்டு பைக்கை பாக்கும் போதெல்லாம் நமக்குன்னு சொந்தமா ஒரு பைக் இருக்கித நெனச்சு ரொம்ப சந்தோஷப்படுவோம். லேசா தூசி பட்டாலும் ஆளாளுக்கு துணிய வச்சு தொடைப்போம். இப்படி நம்ம வண்டிய தங்கமா நெனச்சு இருப்போம். இப்படிப்பட்ட பைக்கை நாம ஆபீசுக்கு போகறப்போ அல்லது ஊருக்கு போகறப்போ பைக் ஸ்டாண்டில் நிருதிட்டுப் போக வேண்டிய சூழ்நிலை வரும். பைக் ஸ்டாண்டுல நம்ம வண்டி நம்பர சொல்லிட்டு நிழலான இடமா இருக்கா, வண்டிய நிறுத்த நல்லா விலாசமான இடமா இருக்கான்னு பாத்து பாத்து அந்த பைக் ஸ்டாண்டையே ஒரு ரெண்டு மூணு தடவ சுத்தி சுத்தி வந்து ஒரு இடத்தை சூஸ் பண்ணி நிறுத்திட்டு நம்ம வேலையை பாக்க போயிருவோம்.
   அப்புறமா நம்ம வேலையெல்லாம் முடிச்சுட்டு பைக் எடுக்கலாம்னு நாம நிறுத்தின இடத்துக்கு வந்து பார்த்தோம்னா, அங்க நம்ம பைக் இருக்குற நிலைமையை பார்த்தோம்னா நமக்கு கண்ணீரே வந்திரும். ஆமாங்க, நம்ம பைக்கோட சைடு மிர்ரர் ரெண்டும் வேற பக்கமா திரும்பி இருக்கும். பக்கத்து பைக்குக்கும், நம்ம பைக்குக்கும் கேப்புன்னு பார்த்தோம்னா ஒரு இஞ்ச் கூட இருக்காது. வண்டியோட பம்ப்பர் பக்கத்து வண்டியோட பம்ப்பர் கூட சேர்ந்து இருக்கும். கேபிள் வயர்கள் பக்கத்து வண்டியோட ஹேண்டில் பார்ல மாட்டிட்டு இருக்கும். அப்புறமா ரோட்டுல இருக்குற தூசி, புழுதியெல்லாம் நம்ம வண்டி மேல இருக்குற மாதிரி ஒரு பீலிங் வரும். வேறென்ன செய்றது? நம்ம வண்டிய அந்த இடத்துல இருந்து எடுக்கணும்னா அந்தப்பக்கம் அஞ்சாறு வண்டிகளையும், இந்தப்பக்கம் அஞ்சாறு வண்டிகளையும் கொஞ்சம் கொஞ்சமா நகத்தி கடைசியா நம்ம வண்டியை எடுக்க வேண்டிஇருக்கும். அங்க ஸ்டாண்டுல இருக்கறவங்கள ஹெல்ப்புக்கு கூப்பிடலாம்னு பார்த்தா,அப்பா பார்த்து அவங்க வேணும்னு வேற பக்கமா திரும்பிக்கிட்டு இருப்பாங்க. இல்லையினா யார்கிட்டயாவது வாக்கு வாத்ததுல இருப்பாங்க.
     ஒரு வழியா வண்டியை வெளியே எடுத்து துணிய வச்சு தூசி போற மாதிரி தொடச்சு வீட்டுக்கு போறப்ப இனிமே ஸ்டாண்டுல பைக் வைக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணுவோம். ஆனாலும், அடுத்த நிமிசமே, வேலைக்கு ஊருக்கு போகணும்னா இந்த கஷ்டத்தை எல்லாம் சந்திச்சு தான் ஆகணும்னு நாமல நாமளே தேத்திக்கணும்.
மேலும் வாசிக்க... "பைக் ஸ்டாண்டு ஏன் இப்படி இருக்கு?"



Offline-இல் Wikipedia தளத்தை உபயோகப்படுத்துவது எப்படி? Download Pocket Wikipedia


உள்ளடக்க கட்டுரைகள், விளக்கங்கள் என எல்லாவற்றுக்கும் அர்த்தம் தேடித் தரும் தளங்களில் முதல் தளமாக விக்கிபீடியா தளம் உள்ளது. இந்த தளத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே சுமார் 3.8 மில்லியன் கட்டுரைகள் உள்ளன. உலகம் முழுதும் சுமார் 365 மில்லியன் வாசகர்களைக் கொண்டு அலாஸ்கா தரவரிசை முன்னணியில் ஆறாம் இடத்தைப் பெற்றுள்ளது விக்கிபீடியா. எந்தவித லாப நோக்கில்லாமல் இயங்கி வரும் இந்த தளம் உலகம் முழுதும் 283 மொழிகளில் உள்ளது. இத்தகைய விக்கிபீடியா தளத்தை அடிக்கடி பார்ப்பவர்களுக்காக ஆப்லைனில் இயங்கக்கூடிய பாக்கெட் விக்கிபீடியா என்ற சிறு மென்பொருள் வந்துள்ளது.

14 மில்லியன் கட்டுரைகள் மற்றும் 24,000 படங்களைக் கொண்டு சுமார் 175MB கொள்ளளவு உள்ள ZIP File-ஆக கிடைக்கிறது. கட்டுரைகளை விரைந்து தேடவும், எளிமையாக கையாளும் வகையில் இந்த சிறு மென்பொருள் உள்ளது. இது விண்டோஸ் மற்றும் லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும், விண்டோஸ் இயக்க மொபைல்களிலும் எளிதாக இயங்குகிறது.

Pocket Wikipedia தரவிறக்கம் செய்ய...
மேலும் வாசிக்க... "Offline-இல் Wikipedia தளத்தை உபயோகப்படுத்துவது எப்படி? Download Pocket Wikipedia"



வலிய உதவி செய்து வம்பில் சிக்கிய பதிவர்!

வீடு பதிவர் சுரேஷ்  வீட்டில் ஒருநாள் காலை வேளையில்....

ன்னும் இந்த பேப்பர் போடறவன காணோமே, முக்கியமான விசியம் இருந்தா ஏதாவது பதிவு தேத்தி சில முக்கிய பதிவர்களுக்கு ரெடி பண்ணி தர வேண்டிய வேலை இருக்கே... இன்னும் காணோமே,,, இப்பவே நாலு பேர் பதிவு வேணும்னு சாட்ல புக் பண்ணிட்டாங்க... இவங்களுக்காக நாம நாலு பேப்பர் வாங்கி பதிவையும் தேத்தி படம் போட்டு கொடுக்குற வேலைக்கு இந்த பதிவருங்க "நன்றி வீடு" அப்படின்னு கீழே மட்டும் போடறாங்க. பய புள்ளைங்க ஒரு நூறு ரூவா கண்ணுல காட்டுதா.. ம்ஹும் ஒன்னும் இல்லை... கொஞ்ச பேரு மட்டும் காசு தர்றாங்க... காலையில அஞ்சு மணிக்கே எந்திரிச்சு வலையை தொறந்து வச்சா இன்னைக்கு கூட்டம் ரொம்ப கம்மியா இருக்கே..... எம்புட்டு விஷயம் தேடி வச்சிருக்கேன் நேத்து வந்த மாலைமலர் பேப்பர வச்சு..... ஹலோ பதிவர்களே இன்னும் எந்திரிக்கலையா... இதுக்குத்தான்யா சொல்றது நைட் ரொம்ப நேரம்  கண்ணு முழிக்காதிங்க... காலையில லேட் ஆகுதுல. எனக்கு யாவாரமும் லேட் ஆகுதுல...

(ஒரு போன் வருது)

"சிபி நம்பர் போல தெரியுதே... இவரு ட்விட் ஜோக்ஸ் வேணும்னு கேப்பாரே.... அது எந்த பேப்பர்லயும் போட மாட்டாங்களே...."
"ஹலோ... ஹலோ.... வீடு சுரேஷ் பேசறேன்... யாரு பேசறா?"
"நான் சிபி பேசறேன், இன்னைக்கு ஒரு பதிவு போடணும்... ஏதாவது மேட்டர் இருக்கா?"
"என்னது மேட்டரா' அண்ணே, என்ன மேட்டர் வேணும்னு தெளிவா சொல்லுங்க..."
"லேட்டஸ்ட் அரசியல்ல சூடான செய்தி இருந்தா தாங்க..., ப்ளாக் அணல் பறக்கணும், அப்படி ஏதாச்சும் சூடான அரசியல் மேட்டர் இருக்கா?"
"அடடா... ப்ளாக் அணல் பறக்கிற மாதிரி வேணுமா? ஆங்... இருக்கண்ணே... ஆனா, அந்த செய்தி போட்டா உங்களுக்கு ஏதாவது பாலிடிக்ஸ் பிரஷ்ஷர் வந்தாலும் வரலாம்னே... நீங்க சமாளிச்சா அந்த அணல் பறக்கற செய்தியை மெயில் பண்றேன். அந்த செய்திக்கு ரஸ்க் சாரி ரிஸ்க் எடுத்திருக்கேன். கொஞ்சம் ஏதாச்சும் போட்டுக் கொடுங்கண்ணே..."
"நான் சமாளிச்சுக்கறேன் சுரேஷ், காலையில ஒன்பது மணிக்கு பதிவு போடணும், அதுக்குள அனுப்பிடுங்க. ஏதாச்சும், போட்டுத் தர சொன்னிங்கள்ல, ஒரு அஞ்சு பாக்கெட் ரஸ்க் கூரியர் பண்றேன்... ஓகே தானே..."
(போனை வைக்கிறார் சிபி)
"யோவ்... சிபி.... ஏதாச்சும் பணம் தருவாருன்னு பார்த்தா, ரஸ்க் பாக்கெட் தர்றேன்னு சொல்லிப்புட்டு போயிட்டாரே...."

" சரி, அடுத்து இந்த சம்பத் வேற அமெரிக்க குழந்தைகள் வளர்ப்பு பற்றி கேட்டிருந்தாரே, அங்க அவன் குழந்தைகளை எப்படி வளர்த்தா இவருக்கு என்ன? அதுக்காக இங்கிலீஸ் பேப்பரெல்லாம் படிக்க வேண்டியதா இருக்கு. என்ன பொழப்பு இது... ச்சே...ச்சே... ரெடி பண்ணிட்டோம் எப்படியோ சம்பத்க்கு. அவரு ஒரு பதிவுக்கு எப்படியும் நூறு ரூவா கொடுப்பாரு. அதனால கஷ்டப்படலாம்."

(அடுத்து ஒரு போன் வருது)

"ஹலோ... ஹலோ... நான் வீடு சுரேஷ் பேசறேன், யாருங்க அங்க"
ஹலோ, நான் சென்னையில இருந்து சிவா பேசறேன்..." எனக்கு ஒரு பதிவு வேணும்? கிடைக்குமா...?"
"சிவாவா? யாரு அது... உங்க ப்ளாக் பேரு என்ன?"
"நான்தான் மெட்ராஸ்பவன் ஓனர் சிவா"
என்னமோ ஒரு ஹோட்டலுக்கு ஓனர் மாதிரி சொல்றிங்க" சரி... என்ன மாதிரி செய்தி வேணும் சிவாவுக்கு?"
"புதுசா ரிலீஸ் ஆன மலையாள சினிமா பட விமர்சனம் வேணும்" இன்னைக்கே வேணும்."
"இப்படி அவசரமா கேட்டா கிடைக்காது. உங்கள மாதிரி நிறைய பேரு பதிவு கேட்டிருக்காங்க. வரிசை படி தான் தர முடியும்! என்ன சொல்றிங்க?"
"சரி ரொம்ப கிராக்கி பண்ணாதிங்க... நாளைகாச்சும் தருவிங்களா?"
"நாளைக்கு ஈவ்னிங் கிடைக்கும், பரவாயில்லையா"
"சரி... நாளைக்கு தாங்க..... நல்லா பிட்டு சேர்த்து எழுதிக் கொடுங்க"
"யோவ், என்ன பிட்டு, கிட்டுன்னு.... நான் எழுதி தர்றத வாங்கிக்கங்க,,,"
(சிவா போனை கட் செய்தார்)
"இதுக்கு தான் சினிமா பட விமர்சனமே எழுதக் கூடாது. பிட்டு, கில்மான்னு கேட்கறாங்க?" 

(நாலஞ்சு மணி நேரம் கழிச்சு... சிபி-கிட்ட இருந்து போன்)


"யோவ்... சுரேஷ்... என்னய்யா பதிவு தந்த? நான் நெனச்சத விட ரொம்ப அணலா இருக்கு. பதிவு போட்ட பத்து நிமிசத்துல ஏகப்பட்ட போன் வந்திருச்சு. எல்லாமே ஆளுங்கட்சிக்காரங்க மிரட்டல் போன்... ஆளுங்கட்சிக்கு எதிரா எழுதி தந்திருக்கிங்க. நானும் படிக்காம போஸ்ட் போட்டுட்டேன்."
"சரி சிபி, இப்ப வேற எழுதித் தரவா?"
"யோவ், அதுக்கு இப்போ டைம் இல்லை" நான் எஸ்கேப் ஆகுறதுக்காக போன் பண்ணினவங்க கிட்ட உன் பேரை சொல்லிட்டேன்... உன்ன தேடி வந்துட்டு இருக்காங்க... எஸ்கேப் ஆகிக்க"
(போன் கட் ஆனது)

"அட, சிபி இப்படி வம்புல மாட்டி விட்டுடாரே... எனக்கு இது தேவையா? யாரோ, எப்படியோ போஸ்ட் தேத்தட்டும் இருக்காம. ஏதோ கொஞ்ச காசுக்கும், ஒரு விளம்பரத்துக்கும் சேவை செஞ்சது நமக்கே வம்பா போச்சே..."


(சுரேஷ் வீட்டு கதவு சிலரால் தட்டப்படுகிறது...)


டிஸ்கி: எதுக்காக சுரேஷை தேடி பதிவர்கள் போறாங்கன்னு கேட்கறிங்களா? அவரு ரெண்டு நாள் வரைக்கும் தாங்கக் கூடிய யூபிஎஸ் வச்சிருக்கார். கரண்ட் பிரச்சனை காரணமா பதிவு எழுத முடியமாட்டிங்குது. நானும் ஒரு மொக்கை பதிவு வேணும்னு அவர்கிட்ட கேட்டு, எழுதிக் கொடுத்த பதிவு தான் இது. ஆக, பதிவு வேண்டுவோர் சுரேஷ்க்கு மெயில் பண்ணுங்க.
மேலும் வாசிக்க... "வலிய உதவி செய்து வம்பில் சிக்கிய பதிவர்!"



எல்லா Audio or Video File Formatகளை இயக்க Top Five Video Players!

      ஆடியோ மற்றும் வீடியோ files நிறைய format களில் இன்று உள்ளன. இவைகளை play செய்வதற்காக நிறைய players உள்ளன. இவைகளை download செய்தும், அல்லது online இல் நேரடியாகவும் play செய்ய நிறைய softwares உள்ளன. Media players சில முக்கியமான audio / video file களை support செய்தாலும் MKV(Matroska video format) என்ற format ஐ support செய்வது இல்லை. MKV file ஐ MP 4 ஆக convert செய்தால் மட்டுமே use செய்ய முடியும். ஆனால் MKV file ஐ நேரடியாக open செய்ய சில media players உள்ளன. அவைகளில் top five Media  Player களை பார்ப்போம்.


GOM Media Player 
     GOM Media Player  AVI, MP4, MKV, FLV, 3GP, WMV  என முக்கியமான முக்கியமான audio / video format களை support செய்யும். இதன் graphical interface  எளிமையாக use செய்யும் வகையில் உள்ளது.
click here to download



DivX Plus Media Player
 DivX®, AVI, MKV, MP4 or MOV formats போன்றவைகளை சப்போர்ட் செய்கிறது. மேலும் இந்த ப்ளேயருடன் இணைந்த DivX to Go என்ற வசதி மூலம் எல்லா வகையான DivX fileகளை சப்போர்ட் செய்கிறது. மேலும் MKV file formatக்கு தெளிவான வீடியோ மற்றும் துல்லியமான ஆடியோவையும் இந்த ப்ளேயர் தருகிறது. இந்த ப்ளேயரில் fast-forward மற்றும் rewind மிக எளிதாக இயக்கும் வகையில் உள்ளது.
click here to download


K-Lite Codec Media Player
K-Lite Codec Media Player மற்ற மீடியா பிளேயரை காட்டிலும் சிறந்ததாக உள்ளது. பலவகையான codec மற்றும் பல formatகளை support செய்யும் toolsகளை எளிதாக இயக்குகிறது. AVI, DivX, FLV,  MKV, MP4, MP3, OGG போன்ற நிறைய formatகளை இந்த பிளேயர் இயக்குகிறது. இந்த ப்ளேயர் microsoft windowsஇல் மட்டுமே இயங்கக் கூடியது.
click here to download


Kantaris Media Player
இந்த ப்ளேயர் ஒரு open source media player ஆகும். இது RAR archive முறையில் உள்ள வீடியோ fileகளை extract செய்யாமலே இயக்கக் கூடியது. இதன் graphical interface எளிமையாக யூஸ் செய்யும் வகையில் உள்ளது.
click here to download


VLC Media Player
      மிக பிரபலமான இந்த பிளேயரை அறியாதோர் யாரும் இருக்க வாய்ப்பு இல்லை. எல்லாவகையான ஆடியோ, வீடியோக்களை இந்த ப்ளேயர் எளிதாக இயக்குகிறது. AVI, MKV, FLV போன்ற எல்லா வீடியோ fileகளை எளிதாக இயக்குகிறது. 3gp foematகளையும் எளிதாக இயக்குகிறது. Live streaming TV option இந்த ப்ளேயரில் உள்ளது. மேலும் இந்த ப்ளேயர் formatகளை கன்வர்ட் செய்யவும் பயன்படுகிறது.
click here to download
மேலும் வாசிக்க... "எல்லா Audio or Video File Formatகளை இயக்க Top Five Video Players!"



காதல் பண்ணாதிங்க - காதலர் தின ஸ்பெஷல்!

      காதலர் தின ஸ்பெஷல்ன்னு போட்டுட்டு காதல் பண்ணாதிங்கன்னு வேற போட்டிருகேனேன்னு யோசிக்கறிங்களா? சரி.... சரி... யோசிக்றத விட்டுட்டு வாசிங்க... எம்மனசுல தோனுனத சொல்றேன்...

       ஆணோ, பெண்ணோ தங்களுக்கு மனசுக்கு பிடிச்ச ஜோடியை செலக்ட் பண்றதுக்கு முன்னாடி கடைசி வரை இணைபிரியாம சந்தோசமான வாழ்க்கை நடத்தணும்னு முடிவு செய்றது ரொம்ப முக்கியம். அதுவும் முதல் காதலன், காதலியாக இருக்கணும். சும்மா சும்மா காதலனோ, காதலியோ அப்பப்ப மாத்துறது கூடவே கூடாது. சிலருக்கு அதே வேலையாவே வச்சு இருப்பாங்க. அது தப்புங்க.

  இனக் கவர்ச்சிக்காகவோ, அல்லது வெறும் சவால்களுகாக, போட்டிக்காக காதல் செய்யக்கூடாது. ஏன்னா காதல் விளையாட்டு பொருள் இல்லை... வேணும்னா ஜெயிக்றதும், வேனாட்டி தோக்கிறதுக்கும்,.. காதல் நம்ம வாழ்க்கைப் பயணத்திற்கான முதல்படிங்கிறத ஞாபகம் வச்சுக்கணும்.

        காதல் பண்ணுங்க... காதலிக்க ஆரம்பிச்சவுடன் ஒருத்தருக்கு ஒருத்தர் அவங்கள பத்தி முழுசா புரிஞ்சுக்றதுக்கான வாய்ப்பை நீங்களாவே உருவாக்குங்க. ஆகா, காதலனோ, காதலியோ கிடைச்ச சந்தோசத்தில ஒருத்தருக்கு ஒருத்தர் புரிஞ்சுக்காம விட்டுட்டிங்கன்னா அப்புறம் கல்யாணம், வாழ்க்கை என எல்லாமே பொம்மை நாடகமா போயிரும்.

     அவங்கவங்க வீட்டுக்கு உங்க காதலை எவ்வளவு சீக்கிரம் சொல்ல முடியுமோ, சொல்லிருங்க. நம்மள பெத்து, வளர்த்து நம்மள ஒரு தகுதியான ஆளா மாத்துறது அவங்க தான். காதல்ன்னு வந்தவுடனே பெத்தவங்கள தூக்கி எரிஞ்சுறாதிங்க. உங்களோட காதலை, துணையை, அவங்க குடும்பத்தை உங்கள பெத்தவங்களுக்கு புரிய வையுங்க. அவங்க ஆசிர்வாதம் ரொம்ப அவசியம். 
      காதலை கோழை ஆக்காதிங்க. காதலனோ, காதலியோ, காதல் கைக் கூடலைன்னா விபரீதமான முடிவுக்கு போகாதிங்க. தன்னை வருத்திக்கறது, பழி வாங்குறது, கேவலப்படுத்துவது என தப்பான முடிவுக்கு வந்துறாதிங்க. ஏன்னா, உங்க காதலை நீங்கதான் விரும்பி ஏற்படுத்திக்கிட்டிங்க. இதனால உங்களுக்கு மட்டும் துன்பம் வர்றது மட்டுமிலாம உங்கள பெத்தவங்களும் துன்பம் வரும். நீங்க தப்பான முடிவ எடுத்தா அவங்க நெலமை என்னாகும்னு யோசிங்க. எந்த சூழ்நிலையிலும் நம்மளால யாருக்கும் பிரச்சனை வரக் கூடாது.

     கல்யாணம் செஞ்சுக்கனும்னு சூழ்நிலை வரும்போது யாருக்கும் பிரச்சனை இல்லாம பாத்துக்கங்க. இன்னைக்கு சூழ்நிலையில பெரும்பாலும் பொண்ணு வீட்டு பக்கம் தான் பிரச்சனை ஆரம்பமாகுது. பொண்ணு காதலிக்கறான்னு தெரிஞ்ச உடனே, அவளுக்கு மாப்பிள்ளையை தேட ஆரம்பிச்சுறாங்க. மொதல்ல அதச் செய்யாம பொண்ணு சொல்ற பையன விசாரிங்க, குடும்பத்தை விசாரிங்க. உங்க மகளுக்கு ஏத்த வகையில இருந்தா தாராளமா கல்யாணம் செஞ்சு வைக்கலாமே. இப்போதைக்கு உள்ள காலத்துல சொந்தத்துல பொண்ணோ, பையனோ அமையறது புளியங் கொம்பாத்தான் இருக்கு. புரோகர வச்சு அந்நியதுல முடிவு பண்றதுக்கு பொண்ணோ, பையனோ விரும்பியவங்கள சேர்த்து வைக்றதுல தப்பே இல்லைங்க.

     பெத்தவங்க கல்யாணத்துக்கு எதிர்ப்பு காட்டியும், அவங்கள எதிர்த்துட்டு கல்யாணம் செஞ்சா, மறுபடியும் அவங்க கால்ல விழுந்திருங்க. தப்பே இல்லை. அவங்க உங்கள ஏத்துக்கற மாதிரி, உங்கள நம்பும்படியாக வாழ்ந்து காட்டுங்க. 
      சரிங்க, முடிவா சொல்றேன், காதல் பண்ணுங்க. சக்சஸ் ஆகுற மாதிரி காதல் பண்ணுங்க, பிரச்சனைன்னு வந்தா சமாளிங்க, கோழையான முடிவுக்கு போகாதிங்க. காதலை டைம் பாஸ் பண்ற பொருளா மாத்திறாதிங்க. 

டைம் பாஸ்ன்னு நெனச்சா ஒரு நிமிஷம் கூட காதல் பண்ணாதிங்க.
ஏனப்பா, நான் சொல்றது சரிதானே....
மேலும் வாசிக்க... "காதல் பண்ணாதிங்க - காதலர் தின ஸ்பெஷல்!"



நமது தமிழ்வாசிக்கு THE VERSATILE BLOGGER விருது! நன்றி மகிழம்பூச்சரம்

நண்பர்களே,
நமது தமிழ்வாசி தளத்திற்கு மகிழம்பூச்சரம் சாகம்பரி அம்மா அவர்களால் THE VERSATILE BLOGGER AWARD கொடுக்கப்பட்டுள்ளது. அவர் விருது தந்தமைக்கான காரணங்களாக அவரது பதிவில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொழில் நுட்பக்கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், பிரச்சினைகளுக்குத் தீர்வுகள், சிறந்த பதிவாளர்கள் பேட்டிகள் என பல தரப்பட்ட இலக்கிய ரசனையுடன் வலம்வரும் தமிழ்வாசி  வலைப்பூவிற்கு சொந்தக்காரரான திரு.பிரகாஷ்.


இவ்விருதை நான் மகிழ்வுடன் பெற்றுக் கொண்டு எனக்கு விருப்பமான ஐந்து பதிவர்களுக்கு இந்த விருதை அளிக்க உள்ளேன். இவ்விருதின் முக்கிய நோக்கமே பதிவுலகில் நிறைய விசயங்களில் திறமையாக எழுதி வரும் வலைப்பதிவுகளை ஊக்குவிப்பதே ஆகும்.

இந்த VERSATILE BLOGGER விருது ”Nitya's Knits Quoin" என்ற வலைப்பதிவில் எழுதி வரும் திருமதி நித்யகல்யாணி http://nityakalyani-kalmat.blogspot.in என்ற மற்றொரு ஆங்கிலப்பதிவர் அவர்களால் திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கு வழங்கப்பட்டு, அவரால் திரு. வை.கோபாலகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டு உள்ளது. அவரால் மகிழம்பூச்சரம் சாகம்பரி அம்மாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் நமது தமிழ்வாசி தளத்திற்கு வழங்கியுள்ளார். மிக்க நன்றி அம்மா. இந்த விருதை பெற்றமையால் எனக்கு பிடித்த ஏழு விஷயங்களை குறிப்பிட வேண்டும் என்றும், மேலும் திறமையான ஐந்து பதிவர்களுக்கு இந்த விருதை வழங்க வேண்டும் என்பது விருதை ஏற்றுக் கொண்டதற்கான அடையாளம் ஆகும்.  எனவே இந்த விருதை பெறப் போகும் நண்பர்கள், உங்களுக்கு பிடித்த வலைப்பூவுக்கு விருதை அளிக்கவும்.


எனக்கு பிடித்த விஷயங்கள்:
இணையதளம், விடுமுறை தினங்கள், இசை கேட்டல், பயணம்,  மழை சாரல், சுற்றுலா இடங்கள், புத்தகம் வாசித்தல்.


விருதுக்காக நான் தேர்வு செய்த பதிவர்கள்:
1. வலைப்பூ சந்தேகங்கள், நுட்பங்கள், கணினி, இணைய நுட்பங்களில் கலக்கும் வந்தேமாதரம் "சசி" அவர்கள்,


2. இலக்கிய அமுது ஊட்டும் "வேர்களைத்தேடி முனைவர் குணசீலன்" அவர்கள்,


3. குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு இடையேயான உறவை பறைசாற்றும் "தமிழ் பேரன்ட்ஸ் சம்பத்குமார்அவர்கள்,


4. தனது அனுபவங்கள், சுவாரஸ்யமான விஷயங்களை தொகுக்கும் "காணாமல் போன கனவுகள் ராஜி" அக்கா,


5. தற்சமயம் பதிவுலகில் இருந்து சற்று ஒதுங்கியிருந்தாலும் வாசகர்களை தன் வசீகர எழுத்தால் கவர்ந்த செங்கோவி அவர்கள்,


இவர்களுக்கு VERSATILE BLOGGER விருது வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த விருதை தங்கள் தளத்தில் நிறுவ அன்புடன் விழைகிறேன். அதோடு மட்டுமல்லாமல் உங்களுக்கு பிடித்த சிறந்த வலைப்பதிவர்களுக்கு வழங்கி கௌரவியுங்கள். நன்றி,
மேலும் வாசிக்க... "நமது தமிழ்வாசிக்கு THE VERSATILE BLOGGER விருது! நன்றி மகிழம்பூச்சரம்"



ஆனந்த விகடன் - என் விகடனில் நமது தமிழ்வாசி தளம் பகிர்வு!

     முன்னணி வார இதழான ஆனந்த விகடன் - என் விகடனில் இந்த வார (15-02-2012) வலையோசை பக்கத்தில் நமது தமிழ்வாசி தளத்தை குறிப்பிட்டு பகிர்ந்து இருக்கிறார்கள். மிகவும் நெகிழ்ச்சியான, மகிழ்ச்சியான தருணமாக உணர்கிறேன். விகடன் எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் வாசித்து வருகிறேன். 2000 - 2002 இல்   கல்லூரி நாட்களில் பாட புத்தகங்களுக்கு நடுவில் விகடனும் இருக்கும்.  விகடனை வாங்கிக் கொண்டு தான் கல்லூரி பேருந்தில் ஏறுவேன். வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்த ஆரம்பிப்பார். நான் விகடனை வாசிக்க ஆரம்பிப்பேன். முதலில் சினிமா விமர்சனத்தையும், ஒரு பக்க கதைகளையும் தேடிப்பார்த்து படிப்பேன். இப்படியே மதிய இடைவேளை வரும் வரையில் எப்படியும் இருமுறையாவது புரட்டி விடுவேன். 
    அப்போதைய விகடனில் வந்த "மனசே ரிலாக்ஸ் பிளீஸ்" மிகவும் பிடித்த தொடர். கூட இருக்கும் நன்பர்களுக்கு விகடனை பிடிக்காது. காரணம் அதில் கவர்ச்சி படங்கள், சினிமா செய்திகள் என அதிகமாக இல்லையாம். அப்போது, விகடனின் அருமை உங்களுக்கு தெரியாது, என சொல்வேன். ஆனந்த விகடன் புத்தகத்தில் அவ்வளவு ஆர்வம். உலகம் முழுதும் பெரும்பான்மையான வாசகர்களை கொண்ட பெருமை வாய்ந்த விகடனில் நமது தமிழ்வாசி தளம் குறிப்பிடப்பட்டுள்ளது எனக்கும், என் தள வாசகர்களுக்கும் கிடைத்த அங்கீகாரமாக நினைக்கிறேன். 




    தட்டுத்தடுமாறி எழுத ஆரம்பித்து இன்று, மெக்கானிகல் மாணவர்களுக்கு பயன்படும் ஒரு தொடர் (கண்டிப்பாக தொடரை எழுதி முடிப்பேன் என்ற நம்பிக்கையில்), அறிந்த பிளாக் நுட்பங்கள், பிளாக்கில் எனக்கு ஏற்பட்ட பிரச்சனைகள், கூகிள் தேடலின் போது எனக்கு பயன்படும் வகையில் இருந்த சில தொழில்நுட்ப தளங்களையும் பதிவேற்றி வருகிறேன். என் அனுபவங்கள், அறிந்த விழிப்புணர்வு செய்திகளையும் அவ்வப்போது பதிவேற்றி வருகிறேன். இவ்வாறான அங்கீகாரம் இன்னும் என்னை கூர்மைப்படுத்தி கொள்ள உதவும் என்பதில் மாற்றமில்லை.
    500க்கும் அதிகமான தொடரும் நண்பர்கள், 400க்கும் அதிகமான இடுகைகள், 8500க்கும் அதிகமான கருத்துரைகள், நான்கு லட்சத்து நாற்பதாயிரத்திற்கும் மேலான பக்க பார்வைகள் என தமிழ்வாசியின் அனைத்தும் எனது வாசகர்களையும், நண்பர்களையும், எனது குடும்பத்தினரையுமே சேரும் என்பதை இத்தருணத்தில் குறிப்பிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். 
      ஆனந்த விகடனின் அங்கீகாரத்தை பாராட்டி மின்னஞ்சல், அலைபேசி, முகநூல் வழியே வாழ்த்து தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்த்து பதிவாக அவரது தளத்தில் பகிர்ந்த "வீடு" சுரேஷ்க்கு ஸ்பெஷல் தாங்க்ஸ்.
பகிர்ந்த விகடன் குழுவிற்கும், பரிந்துரைத்த நண்பர்களுக்கும் நன்றி.....
      
"மகிழம்பூச்சரம்" சாகம்பரி அம்மா அவர்கள் THE VERSATILE BLOGGER விருது தமிழ்வாசிக்கு தந்திருக்கிறார்கள். அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது சம்பந்தமான பதிவு விரைவில்....
மேலும் வாசிக்க... "ஆனந்த விகடன் - என் விகடனில் நமது தமிழ்வாசி தளம் பகிர்வு!"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1