CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!

Showing posts with label மொபைல். Show all posts
Showing posts with label மொபைல். Show all posts


ஸ்பெக்ட்ரம் ஊழல் ஆ. ராசா ஜாமீனுக்கும், மொபைல் சிம்கார்டு ஆபர்களுக்கும், சம்பந்தம் இருக்குமோ?

ஸ்பெக்ட்ரம்ல பெரும் ஊழல்ன்னு ஜெயிலுல பதினைஞ்சு மாசமா நம்ம ராசா தனிமையில குடும்பத்த விட்டுபுட்டு, ருசியா சாப்பிடாம, தலைவருக்கு ஆதரவா தேர்தல் மேடைகளில் ஏறாம ரொம்பவே இறுகிப் போயிட்டார். என்ன நெனச்சாரோ, ஜாமீன்ல வந்தா உயிருக்கு உத்திரவாதம் இல்லைன்னு சொல்லிட்டு இருந்தவரு, திடீர்னு ஜாமீனுக்கு அப்ளை பண்ணி, கோர்ட்டும் அவரை ஜாமீன்ல விட்டுடுச்சு. ஆனா தலைநகரத்தை விட்டு வெளியே போக முடியாதுன்னு நீதிபதி சொல்லிப்புட்டார். அதனால ராசா கொஞ்சம் நிம்மதியா இருப்பார்னு சொல்றாங்க. ஏன்னா, ஏற்கனவே உயிருக்கு உத்திரவாதம் இல்லைன்னு சொல்லி இருக்காரே, அப்போ தமிழகம் வந்தா?????? அதான் வரமுடியாம கோர்ட் தடை போட்டிருக்கு.

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைது செஞ்ச எல்லோருமே ஜாமீனுல வெளிய வந்துட்டாங்க. திமுக எம்பி கனிமொழி, சித்தார்த் பெகுரா, என வழக்குல சிக்கிய எல்லோருமே ஜாமீனுல வந்ததுக்கு அப்புறமா நம்ம ராசா வந்திருக்கார். இனி இந்த வழக்குல என்ன நடக்கும்? ஸ்பெக்ட்ரம்ல பல கோடிகளுக்கு வித்த தொலைதொடர்பு அலைவரிசைகள் என்னாவாகும்? சில மொபைல் நிறுவனங்கள் ஆபர் மேல ஆபர் போட்டு, சிம் கார்டுகளை ரோட்டோரத்துல ஒரு நிழல்குடையை போட்டு விக்கராங்களே, அதெல்லாம் ஸ்பெக்ட்ரம்ல வாங்கினதா இருக்குமோ? என்னமோ போங்க, கம்மியான காசுல சிம் கார்டு, அதுல நம்ப முடியாத அளவுக்கு டாக்டைம் இருக்குல. அது போதுங்கன்னு சொல்றிங்களா? ஓகே... ரைட்டுங்க.... இருக்குற வரை என்சாய் பண்ணுங்க. 

இப்படித்தான் நானும் ரெண்டு வருசத்துக்கு முன்னாடி குடைக்கு கீழ வித்த டிவி நிறுவன சிம் கார்டு நல்லா ஆபர் (டெயிலி ஒரு மணிநேரம் பிரீ டாக் டைம்) இருக்குன்னேன்னு வாங்கி யூஸ் பண்ணிட்டு இருந்தேன். ஆனா, ஒரு மாசமா சரியா கவரேஜ் கிடைக்க மாட்டிங்குது. சிட்டிக்கு அவுட்டர்ல போனா வேற மொபைல் நிறுவன கவரேஜ் காட்டும். ஆனா, இப்போ அந்த நிறுவன கவரேஜ்ம் கிடைக்க மாட்டிங்குது. இந்த நிறுவன கவரேஜ்ம் கிடைக்க மாட்டிங்குது. அந்த ஏரியாவுல டவர் பிராப்ளமா இருக்கும்னு நெனச்சுட்டு இருந்தேன். அப்புறமா ரீசார்ஜ் கடையில கேட்டா, அந்த மொபைல் நிறுவனம் ஓட்ட போன் டவரை வாடகைக்கு எடுத்திருந்தாங்க, இப்போ அந்த டீலிங் முடிஞ்சிருக்கும்னு சொன்னார். சரி, கஸ்டமர்கேர் போன் போட்டு கேட்டா ஒன்னை அமுக்குங்க, ரெண்டை அமுக்குங்க, மூணை அமுக்குங்க அப்படித்தான் சொல்றாங்க. யாருமே பேச வர மாடிங்கறாங்க. அப்படியே லைன் கிடைச்சாலும் எல்லா சேவை அதிகாரிகளும் ரொம்ப பிசியா இருக்காங்கன்னு சொல்லி கட் பண்றாங்க. இந்த கவரேஜ் இல்லாத்ததுனால கம்பெனி வேலை விஷயமாவும், நண்பர்கள் கிட்டயும் தொடர்பு கொள்ள முடியாம போயிருச்சு.

அதுக்காக யார்கிட்டயும் பேசாம இருக்க முடியாதே, அதான் மறுபடியும் ஒரு குடைக்கு கீழ வித்த இன்னொரு கம்பெனி சிம் வாங்கிட்டேன். ஹி..ஹி... அதுலயும் கம்மியான காசுக்கு நிறைய பேசலாம். டாப்அப் பணத்துக்கும் அதிகமா டாக்டைம். நமக்கு அதானே வேணும். ஒரு ஏழெட்டு வருசமா டெல் நிறுவன நம்பர்தான் பெர்மணென்ட்டா வச்சிருந்தாலும், ஒரு கால் பேசவே கால்ரேட் அதிகம். அதனால தான் இன்னொரு சிம் கார்டு.... 

இப்ப என்ன சொல்ல வரேன்னா? ஸ்பெக்ட்ரம் ராசா ஊழலுக்கும் இந்த சிம் கார்டுகளுக்கும் தொடர்பு இருக்கக் கூடாது. ஆமாங்க, நாம யூஸ் பண்ணிட்டு இருக்குற சிம் கார்டுகள் திட்டீர்னு முடங்கி போகக்கூடாதுங்க..... இப்படியே எத்தனை சிம்கார்டு வாங்குறது???
மேலும் வாசிக்க... "ஸ்பெக்ட்ரம் ஊழல் ஆ. ராசா ஜாமீனுக்கும், மொபைல் சிம்கார்டு ஆபர்களுக்கும், சம்பந்தம் இருக்குமோ?"



மொபைல் பேட்டரியின் லைப் அதிகரிக்க எளிய 15 வழிகள்

நம்ம மொபைல் பேட்டரியின் சார்ஜ் சீக்கிரம் தீர்ந்து விடாமல் நீண்ட நேரம் இருக்க சில வழிகளை கையாள வேண்டும். அவை என்னென்ன என பார்ப்போமா?

1. மொபைல் சார்ஜ் போடும் போது இடையில் நிறுத்தாமல் முழுமையாக சார்ஜ் போடவும்.


2. முழுமையான சார்ஜ் போட்டு முடித்தவுடன் மின் சப்ளையை துண்டிக்கவும். தொடர்ந்து சார்ஜரை மின் இணைப்பில் வைக்க கூடாது.


3. புளூடூத் வசதியை பயன்படுத்திய பின்னர் புளுடூத்தை சுவிட்ச் ஆப் செய்யவும்.


4. WI-FI தேவையில்லாத சமயங்களில் சுவிட்ச் ஆப் செய்யவும்.


5. 3G வசதி இருந்தாலும் GSM Mode-ஐ யூஸ் செய்யவும். 3G/GSM Mode என இரண்டையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தினால் பேட்டரி சார்ஜ் விரைவில் தீர்ந்து விடும்.


6. மொபைலின் Auto Brightness வசதியை எப்பொதும் ஆப் செய்தே வைக்க வேண்டும்.


7. மொபைல் ரிங் டோன் உடன் சேர்த்தோ அல்லது தேவைப்படாத சமயங்களில் வைப்ரேசன் வசதியை ஆப் செய்யவும்.


8. மொபைல் ஸ்கிரீன் background light நேரத்தை முடிந்த வரை குறைவான நேரத்திற்கு செட் செய்ய வேண்டும்.


9. மொபைல் கேமரா பயன்படுத்தும் போது அதிக நேரம் கடத்தாமல் விரைந்து போட்டோ எடுக்கவும். கேமரா ஆன் செய்து தாமதப்படுத்தினால் சார்ஜ் விரைவில் தீர வாய்ப்பு உண்டு.


10. பின்புலத்தில் ரன் ஆகும் சில அப்ளிகேசன் ப்ரோக்ராம்களை நிறுத்த வேண்டும்.


11. வார்னிங் டோன், கீபேட் பட்டன் டோன், இன்னும் சில தேவையில்லாத அதிகப்படியான டோன்களை ஆப் செய்ய வேண்டும்.


12. மொபைலில் அதிக நேரம் கேம்ஸ் விளையாடுவதை முடிந்தளவு தவிர்க்கவும்.


13. தேவையில்லாமல் நீண்ட பேசுவதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும்.


14. அனிமேட்டட் வால்பேப்பர் படங்களை திரையில் வைக்க வேண்டாம். 


15. கேம்ஸ் விளையாடும் போது வைப்ரேசன், ம்யூசிக் போன்றவற்றை ஆப் செய்ய வேண்டும்.
மேலும் வாசிக்க... "மொபைல் பேட்டரியின் லைப் அதிகரிக்க எளிய 15 வழிகள்"



Offline-இல் Wikipedia தளத்தை உபயோகப்படுத்துவது எப்படி? Download Pocket Wikipedia


உள்ளடக்க கட்டுரைகள், விளக்கங்கள் என எல்லாவற்றுக்கும் அர்த்தம் தேடித் தரும் தளங்களில் முதல் தளமாக விக்கிபீடியா தளம் உள்ளது. இந்த தளத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே சுமார் 3.8 மில்லியன் கட்டுரைகள் உள்ளன. உலகம் முழுதும் சுமார் 365 மில்லியன் வாசகர்களைக் கொண்டு அலாஸ்கா தரவரிசை முன்னணியில் ஆறாம் இடத்தைப் பெற்றுள்ளது விக்கிபீடியா. எந்தவித லாப நோக்கில்லாமல் இயங்கி வரும் இந்த தளம் உலகம் முழுதும் 283 மொழிகளில் உள்ளது. இத்தகைய விக்கிபீடியா தளத்தை அடிக்கடி பார்ப்பவர்களுக்காக ஆப்லைனில் இயங்கக்கூடிய பாக்கெட் விக்கிபீடியா என்ற சிறு மென்பொருள் வந்துள்ளது.

14 மில்லியன் கட்டுரைகள் மற்றும் 24,000 படங்களைக் கொண்டு சுமார் 175MB கொள்ளளவு உள்ள ZIP File-ஆக கிடைக்கிறது. கட்டுரைகளை விரைந்து தேடவும், எளிமையாக கையாளும் வகையில் இந்த சிறு மென்பொருள் உள்ளது. இது விண்டோஸ் மற்றும் லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும், விண்டோஸ் இயக்க மொபைல்களிலும் எளிதாக இயங்குகிறது.

Pocket Wikipedia தரவிறக்கம் செய்ய...
மேலும் வாசிக்க... "Offline-இல் Wikipedia தளத்தை உபயோகப்படுத்துவது எப்படி? Download Pocket Wikipedia"



மொபைல் அப்ளிக்கேஷன்ஸ் டவுன்லோட் செய்ய சிறந்த பத்து தளங்கள்

     மொபைல் அப்ளிக்கேஷன்ஸ் டவுன்லோட் செய்ய சிறந்த பத்து தளங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. 
 

      இந்த தளங்கள் மூலமாக மொபைல்களுக்கு தேவையான கேம்ஸ், அப்ளிக்கேஷன்ஸ், தீம்ஸ், ரிங்டோன்ஸ், அனிமேஷன் படங்கள், 3gp வீடியோஸ், MP3 சாங்ஸ், ப்ளாஷ் படங்கள், சாப்ட்வேர்ஸ் ஆகியவைகளை இந்த தளங்களில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.










   மேற்கண்ட தளங்கள் மொபைல் அப்ளிக்கேஷன்ஸ்களுக்கு முன்னணித் தளங்கள் ஆகும். இத்தளங்களில் இருந்து ஜாவா, சிம்பியன், விண்டோஸ், ஆண்ட்ராய்டு போன்ற ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை கொண்ட மொபைல்களுக்கும், முன்னணி மொபைல் பிராண்ட்களில் இருந்து சைனா பிராண்ட் வரை எல்லா தரப்பு மொபைல்களுக்கும் தேவையான அனைத்தும் டவுன்லோட் செய்யலாம். கிட்டத்தட்ட எல்லாமே இலவசமாக கிடைக்கிறது. சில தளங்களில் உறுப்பினரானால் மட்டுமே டவுன்லோட் செய்ய முடியும் என்பதை கருத்தில் கொள்க.
படமும், தளங்களும் கூகிள் தேடல் மூலம் பெறப்பட்டவை 
பொன்மொழியும், விடுகதையும் அடுத்த இடுகையில் வெளிவரும்.
.
மேலும் வாசிக்க... "மொபைல் அப்ளிக்கேஷன்ஸ் டவுன்லோட் செய்ய சிறந்த பத்து தளங்கள்"



ப்ளாக் ஓனர்களுக்கு ஓர் வேண்டுகோள். இது மொக்கை பதிவு அல்ல.

இனிய நண்பர்களே,


   இன்றைய காலகட்டத்தில் ப்ளாக் புதியதாக உருவாக்கவும், உருவாக்கிய ப்ளாக்கை இம்ப்ரூவ் செய்யவும் பல டிப்ஸ்கள் உள்ளன. இன்றைய நாளில் ப்ளாக்கை கம்பியூட்டரில் வாசிப்பதோடு, மொபைலில் வாசிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மொபைலில் வாசிப்பவர்களுக்கு ஏற்ற வகையில் உங்கள் ப்ளாக் இருக்கிறதா என ஒரு முறையாவது சோதனை செய்து பார்த்தது உண்டா? இல்லையென்றால் சில டிப்ஸ் சொல்றேன். அதன்படி உங்கள் ப்ளாக்கை மாற்றிக் கொள்ளுங்கள்.


1. முதலில் உங்கள் ப்ளாக்கை mobile view வசதியை enable செய்துள்ளீர்களா? முதலில் அதை disable செய்யுங்கள்.


எப்படி செய்வது?
     dasboard--- settings ---- email&mobile பக்கத்திற்கு செல்லவும். அதில் show mobile template என்பதில் Yes. Show mobile template on mobile devices. என்ற option ஓகே செய்திருந்தால் அதை மாற்றி No. Show desktop template on mobile devices. என்பதை ஓகே செய்யவும். பின்னர் save settings கொடுக்கவும்.
      
       இவ்வாறு மாற்றுவதால் என்ன பயன் என கேட்கறீர்களா? மொபைலில் உங்கள் ப்ளாக் கம்ப்யுட்டரில் ஓபன் ஆவது போல மொபைலிலும் ஓபன் ஆகும். மேலும் புதிய பதிவை தமிழ்மணம் மற்றும் இன்ட்லியில் எளிதாக இணைக்கலாம். அதோடு தமிழ்மணம் ஓட்டும் எளிதாக போடலாம். இந்த விஷயம் பற்றி ரஹீம் ஹசாலி ஏற்கனவே பதிவாக போட்டுள்ளார். அவர் குறிப்பிடாத விசயங்களையும் சொல்லத்தான் இந்த பதிவு.


2. comment box popup window
      உங்கள் பதிவுக்கு கமென்ட் போடுவதற்கான கமென்ட் பாக்ஸ் பதிவுக்கு கீழே வைத்திருப்பீர்கள். இதனால் மொபைலில் இருந்து கமென்ட் போடுவது சற்று சிரமமான விஷயம் தான். எப்படியெனில், உங்கள் பதிவை ஓபன் செய்ய ஒரு முறை லோட் ஆகும். அப்புறம் கமென்ட் பாக்சில் கிளிக் செய்தால் இன்னொரு முறை reload ஆகும். அப்புறம் நம்முடைய கமெண்ட்டை டைப் செய்து முடித்து apply கொடுத்தால் இன்னொரு முறையும் reload ஆகும். மறுபடியும் apply கொடுத்த பின்னர் மறுபடியும் ஒருமுறை reload ஆன பின் பதிவிற்கு கீழே நம் கமென்ட் காட்டும். ஆக, மொபைலில் இருந்து ஒரு பதிவுக்கு கமென்ட் போட சுமார் நான்கு முறை அந்த பதிவு முழுமைக்குமே reload ஆகிறது. இதனால் உங்கள் பதிவுக்கு மொபைலிலிருந்து படிப்பவர்களிடமிருந்து கமென்ட் வருவது குறைய வாய்ப்பு இருக்கு. மொபைலில் இருப்பவர்களும் எளிமையாக கமென்ட் போட உங்கள் கமென்ட் பாக்ஸை popup window ஆக வைக்கவும். இதனால் மொபைலில் loading நேரம் குறையும். கமெண்ட்ஸ் நிறைய கிடைக்கும். 


கமெண்ட் பாக்ஸ் popup window எப்படி வைப்பது?
dasboard --- settings ---- comments ---- comment form placement --- popup window optionஐ ஓகே செய்யவும். பின்னர் save settings கொடுக்கவும்.
பார்க்க படம்.


     இந்த முறையில் வைப்பதன் மூலம் கம்பியூட்டரில் கமெண்ட் போடுபவர்களுக்கும் எளிது. பதிவு அப்படியே இருக்கும். கமென்ட் பாக்ஸ் புது window ஆக ஓபன் ஆகும். இன்னொரு முக்கியமான விஷயம் கும்மி கமென்ட் போட இந்த முறைதான் எளிது.


3. உங்கள் ப்ளாக் template மொபைலுக்கு ஏற்றதா?
         அடுத்ததா உங்க ப்ளாக் மொபைலில் முழுமையா ஓபன் ஆகுதான்னு template வைத்தவுடன் செக் பன்னி பாருங்கள். ஏனெனில் சிலரது ப்ளாக் மொபைலில் ஓபன் ஆகும், ஆனால் தமிழ் எழுத்துக்கள் தெரியாது. இதனால் உங்கள் ப்ளாக்கை மொபைல் மூலமாக வாசிக்க இயலாது. இது ஒரு சில template பிரச்சனையாக இருக்கலாம். எனவே புதிய templateஐ உங்கள் பிளாக்கில் வைக்கும் போது மொபைலில் படிப்பவர்களுக்கும் பிரச்சனை இல்லாதவாறு கவனமாக தேர்ந்தெடுங்கள். 


         நண்பர்களே, மேற்கண்ட மூன்று வழிகளையும் இன்றே செக் செய்து கொள்ளுங்கள். இதனால் உங்கள் ப்ளாக்கை மொபைல் மூலம் படிப்பவர்களின் எண்ணிக்கை கூடும். தமிழ்மணம் ஓட்டும் கிடைக்கும். கமென்ட்டுகளும் கிடைக்கும். வாசகர்களும் அதிகரிப்பார்கள்.
மேலும் வாசிக்க... "ப்ளாக் ஓனர்களுக்கு ஓர் வேண்டுகோள். இது மொக்கை பதிவு அல்ல."



மொபைல் போனை எப்படி யூஸ் பண்ணலாம்! கண்டிப்பாக தெரிஞ்சுக்கங்க!!

  • சார்... உங்க மொபைல் ரிங் டோன் சத்தம் உங்களுக்கு கேட்டால் மட்டுமே போதும். சும்மா ஊரையே கூப்பாடு போடற மாதிரி வைக்க வேண்டாம். 
  • தேவையிலாத இடத்துல லவுடு ஸ்பீக்கர் போடாதிங்க.. அது உங்களுக்கும் இடைஞ்சல். உங்கள சுத்தி இருக்கறவங்களுக்கு இம்சை. அதோடு உங்களுக்கு பிரச்சனையும் வர வாய்ப்பு உள்ளது.
  • அடுத்தவங்க மொபைல் போனை தேவையில்லாம யூஸ் பண்ணாதிங்க. அப்படி யூஸ் பண்ற நெலமை வந்துச்சுன்னா அந்த மொபைல் போனை நோன்டாதிங்க. அதுல இருக்கற எஸ் எம் எஸ் பாக்கிறது, பிக்சர்ஸ் பாக்கிறது, போன்ற விசயங்களை தவிர்த்துருங்க.
  • அப்புறமா கான்பிரன்ஸ் கால் ஒருவருக்கு தெரியாம போடாதிங்க. எல்லோருக்கும் இன்பார்ம் பண்ணிட்டு கான்பிரன்ஸ் போடுங்க. அது உங்களுக்கும் நல்லது எதிர் தரப்புக்கும் நல்லது.
  • ஸ்க்ரீன் சேவர் படங்கள் வச்சிருப்பிங்க. அதுல என்ன வச்சிருக்க கூடாது என்ற விசயத்தில் கவனமா இருங்க. நடிகர், நடிகைகள், சாமியார்கள் போன்றோர்களின் படங்களை வைத்து நீங்கள் இப்படித்தான் என மற்றவர்கள் நினைக்கும் படி வைக்காதிங்க.
  • ஆபீஸ் லீவு, இறப்பு அறிவிப்பு, விபத்து போன்ற சில விசயங்களை எஸ் எம் எஸ் மூலமா அனுப்பாதிங்க. கால் பண்ணி பேசிருங்க. அது தான் நல்லது.
  • ஒருத்தருக்கு கால் பண்றதுக்கு முன்னாடி நாம் பேச வேண்டிய விஷயத்தை தெளிவா சுருக்கமா செய்தியோட முக்கியத்துவத்தை தெரிஞ்சு வச்சிட்டு பேசணும்.
  • தேவையான விசயத்த மட்டும் பேசுங்க... தேவையில்லாத அரட்டையை கொறச்சுக்கங்க. தேவையில்லாத அரட்டையினால மொபைல் பேலன்ஸ் கொறஞ்சும், டைமும் வேஸ்டா போயிரும்.
  • ஆபீசில் உங்கள் மேல் அதிகாரிக்கு தெரிவிக்கும் அன்றாட விசயங்களை தினமும் போன் செய்து இன்பார்ம் செய்யாமல் அவர் அனுமதி வாங்கி எஸ் எம் எஸ் அனுப்பிருங்க. அவரு முக்கியமான மீட்டிங்கில் இருந்தாலும் தொந்தரவு இல்லாம சொல்ல வேண்டிய செய்தியை சொல்லிரலாம்.
  • போன் பேசும் போது தேவையிலாத சத்தங்களை கொறச்சு வச்சிருங்க. டி வி, ரேடியோ போன்றவைகளின் சத்தத்தை கொறைங்க. அதனால் எதிர் தரப்பில் பேசுபவர்க்கு தேவையில்லாத தொந்தரவை தவிர்க்கும்.
  • வெரி லோ பேலன்ஸ், லோ பேட்டரியில் சுவிட்ச் ஆப் போன்ற நிலைகளை தவிர்க்க பாருங்க. இதனால சில முக்கிய கால்கள் பேச முடியாமல் போயிரும்.
  • ஆபீஸ்ல உங்க மொபைல் பில்லை கட்டினாலும் நீங்க வரைமுறை தாண்டாம அளவா யூஸ் பண்ணுங்க. தேவையில்லாம யூஸ் பண்ணாதிங்க. கரெக்டா யூஸ் பண்ணினா உங்களை பத்தி ஆபீசுல நல்ல நேம் கிடைக்கும்.
மேலும் வாசிக்க... "மொபைல் போனை எப்படி யூஸ் பண்ணலாம்! கண்டிப்பாக தெரிஞ்சுக்கங்க!!"



மனோ... பிளைட்ல வர்றப்ப உங்க மொபைல் சுவிட்ச் ஆப் பண்ணுங்க!

விமானத்தில் பயணிக்கும் போது மொபைல்களை பயன்படுத்தினால் ஆபத்து ஏற்படும் என புதிய ஆராய்ச்சியில் கண்டறிந்து உள்ளார்கள்.
மொபைல்களில் உள்ள மைக்ரோ அலைகள் விமானத்தில் உள்ள மின்னணு இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களை பழுதடைய செய்வதாக கூறப்படுகிறது.
மேலும் வாசிக்க... "மனோ... பிளைட்ல வர்றப்ப உங்க மொபைல் சுவிட்ச் ஆப் பண்ணுங்க!"



வோடாபோன் வாடிக்கையாளரின் குமுறல்கள்

சேவையாளர்:  சார்...சார்...

வாடிக்கையாளர்:  சொல்லுங்க.. உங்களுக்கு என்ன வேணும்?


சேவையாளர்:  இங்க (.. பெயர்...) யாருங்க? அவர்கிட்ட பேசணும்..

வாடிக்கையாளர்:  நான் தான் (..பெயர்...)  என்ன விசயமா பேசணும்?

சேவையாளர்:  சார்... நாங்க வோடாபோன் சேவையாளர் மையத்திலிருந்து வர்றோம்... நீங்க, வோடாபோன் தானே யூஸ் பண்றீங்க,, அதான் சேவை எப்படியிருக்குன்னு கேட்க வந்திருக்கோம்.. சொல்லுங்க சார், வோடாபோன் ஆபெர்கள் உங்களுக்கு பிடிச்சிருக்கா?

வாடிக்கையாளர்:  என்ன சார் ஆபர் போடுறிங்க? ஒரு புல் டாக்டைம் ஆபர் இருக்கா? சுத்த வேஷ்டுங்க...
மேலும் வாசிக்க... "வோடாபோன் வாடிக்கையாளரின் குமுறல்கள்"



தனிநபர் செல்போன்களுக்கு அவரவர் தேசிய அடையாள அட்டை எண்?

தேசிய அடையாள அட்டையில் இடம்பெறும் 10 இலக்க எண்ணையே செல்போன் எண்ணாக வழங்குவது குறித்து சி-டாட் பரிசீலித்து வருகிறது. கடந்த ஆண்டு பாகிஸ்தானிலிருந்து பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து நாட்டில் உள்ளவர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கென தனி ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக நந்தன் நிலகேணி நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது செல்போன் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாதந்தோறும் ஒரு கோடி பேர் புதிதாக செல்போன்களை வாங்குகின்றனர். இதனால் 10 இலக்க எண்கள் ஒதுக்கீடு செய்வது பெரும் பிரச்னையாக உள்ளது. 10 இலக்க எண்கள் முற்றிலுமாக தீர்ந்துபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு மாற்று ஏற்பாடுகளை உருவாக்க மத்திய தொலைத்தொடர்புத் துறை சி-டாட் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது 11 இலக்கம் அல்லது 12 இலக்க எண்ணை ஒதுக்கலாமா என்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டது. அவ்விதம் ஒதுக்கினாலும் அதிகரித்து வரும் செல்போன் உபயோகிப்பால் இந்த எண்களும் தீர்ந்துவிடும் வாய்ப்புள்ளது.
எனவே ஒரே எண்ணை பல வகைகளில் பயன்படுத்தும் முறையைக் கையாள முடிவு செய்யப்பட்டுள்ளதாக சி-டாட் செயல் இயக்குநர் பி.வி. ஆச்சார்யா தெரிவித்தார்.

அமெரிக்காவில் உள்ளது போல சமூக பாதுகாப்பு எண், தேசிய அடையாள அட்டை எண் உள்ளிட்ட அனைத்துக்கும் ஒரே எண் இருப்பது போல செல்போன் எண், ஓட்டுநர் உரிமம் அனைத்துக்கும் ஒரே எண் அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படுகிறது.

தற்போது இது பரிசீலனையில் உள்ளது. இதை அமல்படுத்துவது குறித்து உரிய அனுமதி பெற்று அதன் பிறகே சோதனை அடிப்படையில் பயன்படுத்தி பின்னர் செயல்பாட்டுக்குக் கொண்டு வர முடியும் என்றார் ஆச்சார்யா.

கடந்த மே மாதம் இது தொடர்பான கள ஆய்வு நடத்தப்பட்டது. இதற்கு எவ்வளவு செலவாகும் என்பதும் இறுதி செய்யப்படவில்லை.
இருப்பினும் ஓராண்டுக்குள் இது இறுதி வடிவம் பெறும் என்றும் ஆச்சார்யா நம்பிக்கை தெரிவித்தார்.

2003-ம் ஆண்டில்தான் செல்போன்களுக்கு 10 இலக்க எண் ஒதுக்கீடு செய்வதென தீர்மானிக்கப்பட்டது. 2030-ம் ஆண்டில் செல்போன் உபயோகிப்பாளர் எண்ணிக்கை 75 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போதே செல்போன் உபயோகிப்பாளர் எண்ணிக்கை 44 கோடியைக் கடந்துவிட்டது.

தற்போது புழக்கத்தில் உள்ள 10 இலக்க எண்ணுக்கு மாற்றாக கூடுதலாக எண்கள் அதாவது 11 இலக்கமோ அல்லது குறைவாக 9 இலக்கமோ உபயோகிக்க வேண்டுமென்றால், செல்போன் சேவை அளிக்கும் நிறுவனங்கள் பெருமளவு தொகையை முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.
இதைக் கருத்தில் கொண்டு செல்போன் எண் முறையை சீரமைக்க அரசும் தனியார் செல்போன் நிறுவனங்களும் தீவிரம் காட்டுகின்றன.
1993-ம் ஆண்டு தொலைபேசி எண்கள் முறை வகுக்கப்பட்டது. பின்னர் இரண்டாவதாக 2003-ல் மாற்றப்பட்டது. தற்போது மீண்டும் மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

செல்போன் எண்கள் மாற்றப்படுவது இந்தியாவில் மட்டும் நிகழ்வதல்ல. உபயோகிப்பாளர் எண்ணிக்கை அதிகரிப்பதற்கேற்ற சீனா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் மாற்றப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க... "தனிநபர் செல்போன்களுக்கு அவரவர் தேசிய அடையாள அட்டை எண்?"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1