அன்பார்ந்த வலைப்பூ நண்பர்களே, தமிழ்வாசியில் முன்பே வெளியான வலைச்சரம் சீனா ஐயாவின் பேட்டி மீள்பதிவாக இங்கே...
01 : சீனா பெயர்க்காரணம் கூறுக
என்னுடைய பெயர் சிதம்பரம். எங்கள் உறவு முறையில் சீனாதானா என முதலிரண்டு எழுத்துகளை வைத்து அழைப்பார்கள். நான் அதில் இருந்து முதற் சொல்லை மட்டும் வைத்து சீனா எனப் புனைப் பெயர் வைத்துக் கொண்டேன். அவ்வளவு தான் - சீன நாட்டிற்கும் எனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.
02: புதியதாக வலைப்பூ துவங்குபவர்க்கு நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?
புதியதாக வலைப்பூ துவங்குபவர்கள் முதலில் சிறிய சிறிய இடுகையாக எழுதலாம். மூன்று இடுகைகள் இட்ட வுடன் திரட்டிகளில் இணைக்கலாம்., தமிழ் மணத்தில் இணைப்பது அவசியம். பிறகு வருகிற மறுமொழிகளுக்கு அன்பான நன்றி கலந்த பதிலுரைகள் அளிக்க வேண்டும். அவர்களின் வலைப்பூவினிற்குச் சென்று படித்து மறு மொழி இட வேண்டும்.
பிறகு தமிழ் மணத்தில் உள்ள சூடான இடுகைகள் , வலது பக்கம் வரும் இடுகைகள் - இவற்றிர்க்கெல்லாம் சென்று படித்து மறு மொழிகள் இட வேண்டும். எதிர் மறை எண்ணங்கள் துவக்கத்தில் எழுத வேண்டாம். ஆக்க பூர்வமான நேர் மறை கருத்துகளையே துவக்கத்தில் எழுத வேண்டும்.
03 : இன்றும் நீங்கள் விரும்பிப் பார்க்கும் பழைய திரைப்படங்கள் எவை ? ஏன் ?
விரும்பிப் பார்க்கும் திரைப்படங்கள் எனில் - தில்லானா மோகனாம்பாள், வீர பாண்டிய கட்ட பொம்மன், கப்பலோட்டிய தமிழன், கல்யாணப் பரிசு இன்னும் எத்தனை எத்தனையோ ..... இப்பொழுதெல்லாம் பொழுது போக்குவதற்காக வீட்டிற்கு அருகில் உள்ள அம்பிகா திரையரங்கத்தில் சனி / ஞாயிறு ஏதேனும் ஒரு நாள் மாலைக் காட்சிக்கு என்ன படம் என்று கூடப் பார்க்காமல் சென்று விடுவோம். ஆக மாதத்தில் 4 / 5 படங்கள் அவ்வளவு தான்.
04 : பணி ஓய்விற்கு முந்தைய வாழ்க்கை - பிந்தைய வாழ்க்கை . இந்த இரண்டில் தங்களுக்குப் பிடித்த, மகிழ்ச்சியை அளிக்கக் கூடிய வாழ்க்கை எது ? ஏன் ?

பணி நிறைவிற்குப் பின் - பணி நிறைவிற்கு முன் - ஓய்வு என்ற சொல்லே நமது அகராதியில் இருக்கக் கூடாது. இறுதி வரை ஏதேனும் செய்து கொண்டே இருக்க வேண்டும். சரி எது பிடித்ததெனில் - எதெது எவ்வப்பொழுது நடக்கிறதோ அதனை அப்படியே ஏற்றுக் கொள்ளும் எண்ணம் கொண்டவன். திட்டமிடுதல் எல்லாம் கிடையாது. செய்பவை அனைத்துமே பிடிக்கும். முன்னர் பணிச்சுமை அதிகம் - தற்பொழுது நேரம் எவ்வாறு கழிப்பதென எண்ணம். இரண்டுமே பிடித்திருக்கிறது. பணி புரிந்த காலத்தில் செல்ல இயலாத இடங்களுக்கெல்லாம் இப்பொழுது செல்கிறோம். ஆன்மீகச் சிந்தனை வளர்ந்திருக்கிறது.
05 : நீங்கள் எத்த்னை பேரிடம் ஐ லவ் யூ சொல்லி இருக்கிறீர்கள் ? அப்படி சொல்லி அடி வாங்கிய அனுபவம் உண்டா ?
ஐ லவ் யூ சொல்வது மிகவும் எளிதான செயல். அன்பினைப் பகிர்வதர்க்கு யாருடைய அனுமதியும் தேவை இல்லை, அடியும் வாங்க வேண்டியதும் இல்லை. காதல் எல்லாம் கல்லூரி வாழ்க்கையோடு சரி. இப்பொழுது சில நேரங்களில் நினைத்துப் பார்ப்பதுண்டு. அவ்வளவு தான். எங்கள் காலத்தில் காதல் என்பது அவ்வளவு எளிதல்ல.
06 : வலயுலகில் உங்கள் சாதனை என்ன ? அச்சாதனையை எட்டிப் ப்டிக்கக் காரணமாக இருந்தது எது ?
ஒரு புகழ் பெற்ற ஓவியரிடம் ஒருவர் கேட்டாராம். உங்களின் படைப்பிலேயே சிறந்த படைப்பு எது என. அவர் பதிலளித்தாராம் - எனது அடுத்த படைப்பெனெ. நீதி என்ன வெனில் சாதனை என்று ஒன்றுமில்லை. நாளுக்கு நாள் முன்னேற வேண்டும். பிரபலமாக வேண்டும். எழுதும் திறமை வளர்க்க வேண்டும். நட்பு வட்டம் பெருக வேண்டும்.
நாங்கள் அயலகம் சென்றிருந்த போது, நேரத்தைச் செலவிட, தேடிய பொழுது, தமிழ்ப் பதிவுகள் கண்களில் பட்டன. அதனை ஆய்ந்து நானும் ஒரு வலைப்பு ஆரம்பித்து நான் பிறந்ததில் இருந்து .... என வாழ்க்கைச் சரிதம் எழுத ஆரம்பித்தேன். நடை ஒரு மாதிரி இருந்தாலும் மறு மொழிகள் அதிகம் வந்த காரணத்தினால் தொடர்ந்து எழுதினேன். பிறகு கணினியில் அதிக நேரம் செலவிடும் வாய்ப்பு ( தினசரி 10 / 12 மணி நேரம் ) கிடைத்தது. கண்ணில் பட்டவற்றை எல்லாம் படித்தேன் - மறு மொழி இட்டேன். டெம்ப்ளேட் மறுமொழி அல்ல - 2 3 வரிகள் இடுகையில் இருந்து எடுத்துப் பாராட்டி எழுதிய மறுமொழிகள். திரட்டி தமிழ் மணத்தில் "ம" திரட்டியில் தினசரி என் பெயர் முதலில் இருக்க வேண்டும் என வெறியுடன் படித்து எழுதினேன். பின்னூட்டப் பிதாமகன் எனப் பெயர் பெற்றேன். இப்பொழுது இருக்கும் பதிவர்களுக்கு நான் அதிகம் அறிமுகமில்லாதவனாக இருக்கலாம். நான் சென்று பார்வை இட்ட பதிவர்களின் பெயர்கள் ஒரு இடுகையில் இட்டிருக்கிறேன். சென்று பார்க்க அன்புடன் அழைக்கிறேன்.
07 : தற்போது சில பதிவர்களிடையே கருத்து மோதல் ஏற்படுகிறேதே ? இதைப் பற்றி தங்கள் கருத்து ?
எழுத்தாளர்கள் என்றாலே சர்ச்சை இருக்கத்தான் செய்யும். தவிர்க்க இயலாது. சங்க காலத்திலேயே புலவர்கள் சர்ச்சை செய்திருக்கிறார்கள். ஆகவே கருத்து மோதல் என்பது தவறல்ல. ஆனாலும் வரம்பு மீறாமல் இருக்க வேண்டும். அணி சேர்க்கக் கூடாது. ஊதிவிட்டு மகிழ்பவர்களைத் தவிர்க்க வேண்டும். ஆனால் எனக்குத் தெரிந்த வரை எல்லா மோதல்களுமே சுபமாகத் தான் முடிந்திருக்கிறது. ரசிப்போம்.
08 : உங்களூக்கு சிகரெட், மது பானம் போன்ற பழக்கங்கள் உண்டா ?
இப்பழக்கங்கள் இல்லாத மனிதனே கிடையாது. யாராவது நான் நினைப்பது கூடக் கிடையாதென்று கூறினால் அவன் தான் உலக மகா பொய்யன். வாழ்வினில் ஒரே ஒரு தடவையாவது மது / புகை பிடித்தல் இவற்றில் ஈடு படாதவனே கிடையாது. பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு காரணங்களினால் ஈடு படுவார்கள். தவறில்லை. ஆனால் அடிமையாகக் கூடாது.
09 : மனைவியிடம் பொய் சொல்லி மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?
அந்தரங்கம் புனிதமானது. இருப்பினும் வள்ளுவரே கூறிய படி பொய்யும் பேசலாம் அவை நன்மை பயக்குமெனில். கண்டு பிடிக்கும் திறமை பெண்களிடம் அதிகம்.
10 : இது தேர்தல் சமயம் என்பதால் கேட்கிறேன். யார் ஆட்சிக்கு வந்தால் நல்லதென நினைக்கிறீர்கள் - ஏன் ?
இனிமேல் பிறப்பவர் ஆட்சிக்கு வந்தால் தான் நல்லது. இருப்பவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமெனில் கோடி வீட்டில் கொள்ளி வைப்பவர்தான் இன்று சிறந்தவர்.
11 : பணி செய்த காலத்தில் லஞ்சம் வாங்குவது / கொடுத்தது
உண்டா ?
லஞ்சம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ள பதவியில் நான் இல்லை. அதனால் லஞ்சம் வாங்க வில்லை. வாய்ப்புகள் வந்து நான் வாங்க வில்லை எனில் தான் நான் உயர்ந்தமனிதன். இன்று லஞ்சம் கொடுக்காமல் ஏதேனும் செய்ய இயலுமா ? அரசு இயந்திரங்கள் செயல் படும் விதம் உலகம் அறிந்ததே!
12 : உங்களை சோகத்தில் ஆழ்த்திய நிகழ்ச்சி எது ?
தாயும் தந்தையும் இறந்தது தான்.
13 : வலைச்சர ஆசிரியராக வாரம் ஒருவரைத் தேர்ந்தெடுத்து எழுதச் சொல்வது போல - என் பதிவினிற்கு உங்களை ஒரு வாரம் ஆசிரியராக நியமித்தால் - என் வலைப்பூவினில் எழுதுவீர்களா ?
எழுத மாட்டேன். ஏனெனில் நான் தற்பொழுது என் வலைப்பூவினிலேயே எழுதுவதில்லை.சிறப்பான காரணம் ஒன்றும் இல்லை.,
14 : பிரபல பதிவராக என்ன செய்ய வேண்டும் ?
இரண்டாவது கேள்விக்கான பதில் இதற்கும் பொருந்தும். அடிப்படை எண்ணம் நம் திறமையினை வளர்க்க வேண்டும். நாளுக்கு நாள் எழுத்து மிளிர வேண்டும். படிப்பவர்கள் / தொடர்பவர்கள் அவர்களாகப் பெருக வேண்டும். நாம் ஒவ்வொருவரையும் வாருங்க எங்கள் வீட்டிற்கென அழைப்பதெல்லாம் ஆரம்ப காலத்திலேயே நிறுத்தி விட வேண்டும். தொடர்ந்து அழைத்தால் வெறுப்பு கூடும். டெம்ப்ளேட் மறுமொழிகள் / மொக்கை / கும்மி - மழை பொழியும். பயனில்லாத ஒன்றாகச் சென்று விடும்.
15 : இந்தியாவில் உங்களுக்குப் பிடித்த, பிடிக்காத இடங்கள் எவை ?
பிடித்த இடங்கள் சென்று இரசித்த இடங்கள் அனைத்துமே - பிடிக்காத இடங்கள் செல்லாத இடங்கள் அனைத்துமே !
16 : அடுத்த தலைமுறை என்று ஒன்றிருந்தால் நீங்கள் என்னவாக பிறக்க ஆசைப் படுகிறீர்கள் ?
அடுத்த பிறவியே வேண்டாமென விரும்புகிறேன். நம் கையில் இல்லையே !
17 : உங்களிடத்தில் உங்களுக்குப் பிடித்த, பிடிக்காத விஷயங்கள் எது ?
என்னிடத்தில் எனக்குப் பிடித்த குணம் - என் தன்னம்பிக்கை. எதனையும் செய்து முடிக்க இயலும் என்ற நம்பிக்கை. பிடிக்காதது என் சோம்பேறித் தனம். அது என் இரத்தத்தில் ஊறியது. இரண்டும் முரண்பட்டதல்ல - இரண்டுமே ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்.
இதுவரை நான் சீனா ஐயாவிடம் கேட்ட கேள்விகளைப் படித்தீர்கள். இனி வாசகர்கள், நண்பர்களின் கேள்விகள்.
ஒரு வாரத்திற்கு வலைச்சரத்தில் ஆசிரியராக பணியாற்ற எதன் அடிப்படையில் பதிவர்களை தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று அறிந்து கொள்ளலாமா?
இன்னும் 5 வருஷம் கழிச்சி தமிழ் பதிவுலகம் எப்படி இருக்கும்?
.
இதுவரை நான் சீனா ஐயாவிடம் கேட்ட கேள்விகளைப் படித்தீர்கள். இனி வாசகர்கள், நண்பர்களின் கேள்விகள்.
ம.தி.சுதா; www.mathisutha.blogspot.com
என்னுடைய கேள்வி என்னண்ணா உங்களுக்கு வலைச்சரம் என்ற ஒரு தரமான வலை பதிவை தொடங்கும் ஐடியா எப்படி தோன்றியது?
வலைச்சரம் காலஞ்சென்ற நண்பர் சிந்தாநதியால் துவங்கப்பட்டு 11.11.2006 - இல் முதல் இடுகை இடப்பட்டது.
வலைச்சரம் காலஞ்சென்ற நண்பர் சிந்தாநதியால் துவங்கப்பட்டு 11.11.2006 - இல் முதல் இடுகை இடப்பட்டது.
வலைச்சரத்தின் முதல் ஆசிரியராக பொன்ஸ் பொறுப்பேற்றிருக்கிறார். பிறகு பணிச்சுமை காரணமாக சிந்தாநதி ஆசிரியர்கள் குழுவாக பொன்ஸையும் முத்துலெட்சுமியையும் சேர்த்துக் கொண்டார். பிறகு என்னிடம் பொறுப்பாசிரியர் பணி வந்தது.
***************************************************************
ரஹீம் கஸாலி; http://ragariz.blogspot.com/
ஒரு வாரத்திற்கு வலைச்சரத்தில் ஆசிரியராக பணியாற்ற எதன் அடிப்படையில் பதிவர்களை தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று அறிந்து கொள்ளலாமா?
குறிப்பிட்டுச் சொல்லும் படியாக விதி முறைகள் இல்லை. எல்லோருடைய இடுகைகளையும் படித்துக் கொண்டே போகும் போது, இவர் ஆசிரியப் பொறுப்பேற்க தகுதியானவர் என மனதில் படும் பொழுது அவரை அழைத்து விடுவோம். அவ்வளவுதான்.
***************************************************************
***************************************************************
நா.ஜானகிராமன்; http://podhujanam.wordpress.com/
பதிவுகளின் பின்னுட்டத்தில் டெம்ப்ளேட் கமெண்ட்களை (மீ த பர்ஸ்ட், முத வடை, முத வெட்டு, ரைட்டு, இன்ன பிற) போடுபவர்களை தடுக்க என்ன செய்யலாம்?
மட்டுறுத்தல் வைக்கலாம். வெளியிடாமல் இருக்கலாம். போனாப்போறாங்களே! போட்டுட்டுப் போறாங்களே!
இன்னும் 5 வருஷம் கழிச்சி தமிழ் பதிவுலகம் எப்படி இருக்கும்?
பதிவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகி இருக்கும். தரமான இடுகைகள் வெளி வரும். ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறும்.
புதிதாக எழுத வரும் புதுப்பதிவர்களை ஆக்கப்பூர்வமாக உற்சாகப்படுத்தி வழிநடுத்துவதில் பிரபல பதிவர்களின் பங்கு என்ன? (இப்பல்லாம், பதிவர்கள் பிரபலமாய்டாலே அவருக்கென்று ஒரு குழுவை சேர்த்துக்கொண்டு சுருங்கிவிடுகிறார்கள் /புதுப்பதிவர்களின் பதிவுகளுக்கு கமெண்டிடுவதை நேர விரயம் என்று நினைக்கிறார்கள்)
உண்மை தான் - நேரமின்மை என்பது உண்மையான காரணம். இருப்பினும் எல்லோருடைய இடுகைகளையும் படிப்பவர்கள் அனேகம் பேர். நாம் எழுதும் எழுத்துகள் மற்றவர்களைச் சுண்டி இழுக்க வேண்டும். பிரபல பதிவர்கள் என்று ஒருவரும் பிறப்பது கிடையாது. நட்பு வட்டம் குழுக்கள் - இவை எல்லாம் தவிர்க்க இயலாது. புதுப் பதிவர்களிடையேயும் குழுக்கள் உள்ளனவே!
***************************************************************
லக்ஷ்மி - echumi; http://www.echumi.blogspot.com/
நான் ப்ளாக்குக்கு புதுசு. கடந்த 5 மாதங்களாகத்தான் பதிவு எழுதி வருகிறேன். வலைச்சரத்தில் என்னை இதுவரை, 4-பேர்கள் அறிமுகம் செய்திருக்கிறார்கள். நானும் நிறைய ப்ளாக் போயி, மத்தவங்க பதிவெல்லாம் படிச்சு பின்னூட்டமும் கொடுத்து வருகிறேன். எல்லாரும் கலக்கலா எழுதராங்க. அவங்களுக்கு முன்னாடி நான் u,k,g. l,k,g. கூட இல்லை. ஆனாகூட நிறைய நிறைய எழுதனும்னு ஆர்வம் மட்டும் நிறையவே இருக்கு. உங்ககூட அறிமுகமும் இல்லை .இப்பதான் முதல் முதலா பேசரேன். எந்தவிதத்தில் என்ப்ளாக்கை இன்னமும் சிறப்பாக வைக்கமுடியும். தகுந்த ஆலோசனை தருவீர்களா. கம்ப்யூட்டரைப் பற்றியும் அதிகம் தெரியாது. முகம் தெரியாத பல நண்பர்கள் சமயத்தில் தகுந்த ஆலோசனைகள் சொல்கிரார்கள். ப்ளாக் எழுத ஆரம்பித்த பிறகு தான் எனக்கு நல்ல பல நட்புகள் கிடைத்திருக்காங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு. பாக்கப்போனா எனக்கு வயது கொஞ்சம் அதிகம் தான். என் சொந்தபந்தங்களே நான் கம்ப்யூட்டரில் எழுதுவதற்கு எகைன்ஸ்டதான் இருக்காங்க. எங்கரேஜ் மெண்டே கிடையாது. என்பதிவுக்கு வரும் பின்னூட்டம்தான் எனக்கு எனர்ஜி. நான் எழுதுவது என்பக்கம் யாருமே படிச்சுகூட மாட்டாங்க. எனக்கு அதைப்பத்தியெல்லாம் கண்டுக்கொள்வதே இல்லைதான். முடிந்தால் டைம் கிடைத்தால் என் ப்ளாக் வந்து என் ப்ளாக் படிச்சு எனக்கு தகுந்த ஆலோசனை சொல்லுங்க.
கலங்க வேண்டாம். - தொடர்பு கொள்க - cheenakay@gmail.com
***************************************************************
கூகுள் இலவசமாக அனைவருக்கும் ஒரு இடம் கொடுத்தது நல்லது தான் இதனால் பலர் தமது படைப்புகள் உலகத்தில் உள்ள அனைவர் பார்வைக்கும் கட்டுபாடுகளின்றி வழி கிடைக்க செய்தது மற்றும் நண்பர்கள் வட்டம் பெருக செய்தது சரி, அது போல பல ஆபாச தளங்கள் பெருக செய்வதர்க்கும் துணை புரிகிறதே உங்கள் கருத்து என்ன?
பதிவுலக அரசியல் என்றால் என்ன? தகுதியிருந்தும் பதிவுலக அரசியல் பின்பலம் இருந்தால் தான் பிரபலமாகலாம் என்று சொல்கிறார்களே உண்மையா? இந்த அரசியலில் சிக்காமல் பிரபலமாவது எப்படி?
பதிவுலக அரசியல் என்பது என்ன என்று எனக்கும் புரியவில்லை. ஆனால் தவிர்க்க வேண்டும். பிரபலமாவதற்கும் இதற்கும் தொடர்பு கிடையாது
சமையல் வலைப்பூ வைத்திருப்பவர்களுக்கு தாங்கள் கூறும் ஆலோசனை என்ன? வெஜ்,நான்வெஜ் இருவகையினரையும் திருப்திபடுத்த தனித்தனி வலைப்பூ வைத்திருப்பது நல்லதா?அல்லது ஒரே வலைப்பூவில் இரண்டும் கலந்து கொடுக்கலாமா? தாங்கள் எல்லா மக்களுடன் கலந்து பழகுபவர் என்பதால் இந்த கேள்வி,சுத்த சைவப்பிரியர்களுக்கு ஒரே வலைப்பூவில் இரு வகையான குறிப்புக்கள் கொடுப்பதால் அவர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும்? அவர்கள் வந்து செல்வதில் தடை ஏற்படுமா?
சமையல் கலை பற்றி எழுதுபவர்கள் இரண்டையும் கலந்தே எழுதலாம். யார்க்கு எது வேண்டுமோ அவர்கள் அதனை எடுத்துக் கொள்வார்கள். வந்து செல்வதில் தடை இருக்காது.
உணவுப் பழக்கத்தில் உங்கள் வரையறை என்ன?
புரிய வில்லை. உணவுப் பழக்கத்தில் வரையறை என்று ஒன்றும் இல்லை.
ஒன்றிற்கு மேற்பட்ட வலைப்பூக்கள் வைத்துக்கொள்வது பற்றி தங்கள் கருத்து. எப்பொழுதும் பரபரப்பாக செயல்படும் வலைப்பூவினரை கண்டு ஆச்சரியப்படுவதுண்டு, அவர்களின் வேலைச் சிரமங்களை எவ்வாறு சமாளிக்கிறார்கள்? எப்பொழுதும் வலைப்பூவில் இருந்தால் குடும்பத்தையும், தங்களையும் அவர்களால் கவனிக்க முடியுமா?
எத்தனை வலைப்பூக்கள் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். எழுதும் திறமையும் நேரமும் இருப்பின் செய்யலாம். குடும்பத்தையும் கவனிக்க வேண்டும். திட்ட மிட வேண்டும்.
****************************************************************
தமிழ் மணத்தில் தற்பொழுது ரேங்க் வருகிறதே!
***************************************************************
இதற்கெல்லாம் ஆயிரம் காரணங்கள் உள்ளன. விவாதிக்க இயலாது. நிறுவனங்களின் தயவு அரசிற்கு வேண்டும்.
வெயில் அதிகமாக இருக்கும் நம் நாட்டில் சோலர் சிஸ்ட்த்தை குறைந்த பட்சம் பெரிய பணக்கார நிறுவனங்கள் கூட கண்டுகொள்ளாதது ஏன்?
பலர் பயன்படுத்துகின்றனர். பெரிய அளவில் தொடர்ச்சியாக இல்லை. இதற்கும் பல காரணங்கள் உண்டு.
***************************************************************
இது நீங்கள் முடிவு செய்ய வேண்டிய செய்தி. தவறென்றோ சரியென்றோ யாரும் கூற இயலாது.
நான் எழுதுவதை ஒரு சிலர் தவிர படிப்பதில்லை. இருந்தும் ஆளில்லா கடையில் டீ ஆத்துவது போல் எழுதிக் கொண்டிருக்கிறேன். இது எவ்வளவு நாள் சாத்தியமாகும்?
இது நீங்கள் கொஞ்ச நாட்கள் பல வலைப்பதிவுகளுக்கும் சென்று படித்து மறுமொழி போடுங்கள். அவர்களை உங்கள் வலைப்பூவினிற்கு அழையுங்கள். ஆனால் தொடர்ந்து செய்ய வேண்டாம். முடிந்த வரை தமிழ் மணத்தில் வரும் அத்த்னை பதிவுகளுக்கும் சென்று மறு மொழி இடுங்கள் - தன்னால் உங்கள் வ்லைப்பூவினிற்கு அவர்கள் வருவார்கள். எழுதுவது கொஞ்சம் கவர்வதாக எழுதுங்கள்.
எந்த மாதிரி கேள்விகள் கேட்டால் நாம் சிறப்பாக பதில் சொல்லலாம் என்று இருந்தீர்கள். அந்த மாதிரியான ஒரு கேள்வியும், அதற்குரிய பதிலையும் வாசகர்களுக்கு தெரிவிப்பீர்களா?
அப்படி எல்லாம் ஒன்றுமில்லை.
***************************************************************
வாய் நிறைய வாழ்த்துகளும் மனம் நிறைய பாராட்டுகளூம் தான்.
வலைச்சரம் ஆசிரியர் பணிக்கு எந்த அடிப்படையில் ஆட்களை செலக்ட் பண்றீங்க?
இரண்டாம் கேள்விக்கான பதில்.
வலைத்தளத்தை அறிமுகப்படுத்தும் படலமே போதும்ங்கற தைரியமான எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது?
முதல் மற்றும் இரண்டாம் கேள்விக்கான பதில்.
***************************************************************
முனைவர் இரா. குணசீலன்; www.gunathamizh.blogspot.com
தமிழ் வலையுலகில் கல்விப்புலம் சார்ந்தவர்களின் பங்கு எவ்வாறு உள்ளது?
அவரவர்கள் அவரவர்கள் துறையில் சிறப்புடன் பணியாற்றுகின்றனர்.
ஒரு சிறந்த வலைப்பதிவுக்கு என்ன தகுதிகள் இருக்கவேண்டும்?
(பார்வையாளர் எண்ணிக்கையா? நிறைய இடுகைகளா? ....????)
இதற்கென்று தனித் தகுதி கிடையாது. பொதுவாக மறுமொழிகள் / இடுகைகள் / பின் தொடர்பவர்கள் இவைகளை வைத்தும் தமிழ மணத்தின் ரேங்க் படியும் சிறந்த வலைப்பதிவென கூறலாம்.
தடையாக உள்ளது?
கேள்வி புரியவில்லை. வலையுலகம், இணையத் தொடர்பு உள்ள அனைவருக்கும் செல்கிறது. கொஞ்சம் ஈடுபாடு வேண்டும். தமிழில் எழுத, படிக்க ஆர்வம் வேண்டும். பிளாக் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும். சராசரி மக்கள் என்பவர்கள் யார்? இணையத் தொடர்பு இல்லாதவர்களா? தமிழில் படிக்க ஆரவமில்லாதவர்களா?
(9840624293) படிக்கிறேன்.
குண்டு(ராஜகோபால்); http://enpakkangal-rajagopal.blogspot.com/
வலைபூ வரமா? சாபமா?
கூகுள் இலவசமாக அனைவருக்கும் ஒரு இடம் கொடுத்தது நல்லது தான் இதனால் பலர் தமது படைப்புகள்
கத்தியின் இருபக்கம் கூர்மையாகத்தான் இருக்கும். பயன்படுத்துபவர்கள் சாக்கிரதையாக பயன் படுத்த வேண்டும். அதே தான் இங்கும் (இரண்டு கேள்விகளுக்கும்)
வலைச்சரத்தில் பன்னிக்குட்டியின் (ராம்சாமி) பின்னூட்ட சாதனை பற்றி உங்கள் கருத்து?
பன்னிக்குட்டி ராமசாமி ஒரு விளையாட்டிற்காக - ஏற்கனவே இருந்த ரெகார்ட், பிரேக் பண்ண வேண்டும் என்ற எண்ணத்தில் அவரது நண்பர்கள் செய்தது அது. தவறென்று கூற மாட்டேன். தவிர்க்கலாம். இனி தவிர்ப்போம்.
***************************************************************
ஆசியா உமர்; http://asiyaomar.blogspot.com/
குடும்பத்தலைவிகள் பதிவர்களாவது பற்றி உங்கள் கருத்து. அவர்கள் இணையத்தில் நேரங்களைச் செலவழிப்பதால் ஏற்படும் நன்மை தீமை என்ன?
அது அப்பெண்கள் தீர்மானிக்க வேண்டிய நிகழ்வு. பதிவர்களாகி வெற்றிகரமாக நடத்துகிறார்கள். குடும்பச் சுமைகளையும் அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். பதிவுலக அரசியல் என்றால் என்ன? தகுதியிருந்தும் பதிவுலக அரசியல் பின்பலம் இருந்தால் தான் பிரபலமாகலாம் என்று சொல்கிறார்களே உண்மையா? இந்த அரசியலில் சிக்காமல் பிரபலமாவது எப்படி?
பதிவுலக அரசியல் என்பது என்ன என்று எனக்கும் புரியவில்லை. ஆனால் தவிர்க்க வேண்டும். பிரபலமாவதற்கும் இதற்கும் தொடர்பு கிடையாது
சமையல் வலைப்பூ வைத்திருப்பவர்களுக்கு தாங்கள் கூறும் ஆலோசனை என்ன? வெஜ்,நான்வெஜ் இருவகையினரையும் திருப்திபடுத்த தனித்தனி வலைப்பூ வைத்திருப்பது நல்லதா?அல்லது ஒரே வலைப்பூவில் இரண்டும் கலந்து கொடுக்கலாமா? தாங்கள் எல்லா மக்களுடன் கலந்து பழகுபவர் என்பதால் இந்த கேள்வி,சுத்த சைவப்பிரியர்களுக்கு ஒரே வலைப்பூவில் இரு வகையான குறிப்புக்கள் கொடுப்பதால் அவர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும்? அவர்கள் வந்து செல்வதில் தடை ஏற்படுமா?
சமையல் கலை பற்றி எழுதுபவர்கள் இரண்டையும் கலந்தே எழுதலாம். யார்க்கு எது வேண்டுமோ அவர்கள் அதனை எடுத்துக் கொள்வார்கள். வந்து செல்வதில் தடை இருக்காது.
உணவுப் பழக்கத்தில் உங்கள் வரையறை என்ன?
புரிய வில்லை. உணவுப் பழக்கத்தில் வரையறை என்று ஒன்றும் இல்லை.
ஒன்றிற்கு மேற்பட்ட வலைப்பூக்கள் வைத்துக்கொள்வது பற்றி தங்கள் கருத்து. எப்பொழுதும் பரபரப்பாக செயல்படும் வலைப்பூவினரை கண்டு ஆச்சரியப்படுவதுண்டு, அவர்களின் வேலைச் சிரமங்களை எவ்வாறு சமாளிக்கிறார்கள்? எப்பொழுதும் வலைப்பூவில் இருந்தால் குடும்பத்தையும், தங்களையும் அவர்களால் கவனிக்க முடியுமா?
எத்தனை வலைப்பூக்கள் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். எழுதும் திறமையும் நேரமும் இருப்பின் செய்யலாம். குடும்பத்தையும் கவனிக்க வேண்டும். திட்ட மிட வேண்டும்.
****************************************************************
ரத்தினவேல்; http://rathnavel-natarajan.blogspot.com/
தமிழில் வெளிவரும் வலைப்பதிவுகளில் அதிகம் படிக்கப்படும் 'முதல் பத்து வலைப்பதிவுகள்' எவை என்ற விபரங்கள் அளிக்க வேண்டுகின்றேன்.தமிழ் மணத்தில் தற்பொழுது ரேங்க் வருகிறதே!
***************************************************************
Speed Master;www.speadsays.blogspot.com
1 Japanese yen = 0.552670994 Indian rupees
1 Vietnamese dong = 0.00217855036 Indian rupees
நம் பணமதிப்பு அந்த நாடுகளை விட அதிகமாக உள்ளது ஆனால் பொருளாதாரத்தில் நாம் அவர்களை விட பின்தங்கியுள்ளோம். மக்கள் வாழுவதற்கான சிறந்த நாடுகளில் நம்மளை விட பணமதிப்பில் குறைவாக உள்ள வியட்நாம் 5 வது இடத்தில் உள்ளது. யாரேனும் விளக்கவும்?
இது தனிப்பட்ட முறையில் விவாதிக்கலாம். பல காரணங்கள் உண்டு. ஊழல் முதலான காரணம்.
பன்னிக்குட்டி ராமாசாமி அவர்கள் : ஜப்பானில் 100யென் தான் ஒரு பணம் என கூறினார்கள். அப்படி என்றால் நாம் கூறும் 100 பைசாக்கள் போலதான் அந்த 100யென் மதிப்பா யாரேனும் விளக்கம் கூறுங்கள்.
இல்லை - யென் என்பது தான் கடைசி ஜப்பானில். ஒரு யென் என்பது இந்திய மதிப்பில் ஐம்பத்து ஐந்து பைசா என நினைக்கிறேன்.
இல்லை - யென் என்பது தான் கடைசி ஜப்பானில். ஒரு யென் என்பது இந்திய மதிப்பில் ஐம்பத்து ஐந்து பைசா என நினைக்கிறேன்.
வண்ணங்களுக்கு Colour என்று சொல்லுவோம் ஆனால் கணினியில் COLOR என்றுதான் கூறிகிறோம். ஏன் என்று காரணம் சொல்லவும்?
ஆங்கிலம் - அமெரிக்க ஆங்கிலம், பிரிட்டீஷ் ஆங்கிலம் என வேறுபாடுகள் உள்ளன. கலர் என்றால் color என்பதும் colour என்பதும் இந்தியாவில் வண்ணம் என்பதற்கு பயன்படுத்துகிறோம். பெரிய பெரிய நிறுவன்ங்களுக்கு 24 மணி நேரம் மின்சார இணைப்பு கொடுத்து ஏழைகளையும், நடுத்தர மக்களையும் கஷ்டப்படுத்துவது ஏன்?
இதற்கெல்லாம் ஆயிரம் காரணங்கள் உள்ளன. விவாதிக்க இயலாது. நிறுவனங்களின் தயவு அரசிற்கு வேண்டும்.
வெயில் அதிகமாக இருக்கும் நம் நாட்டில் சோலர் சிஸ்ட்த்தை குறைந்த பட்சம் பெரிய பணக்கார நிறுவனங்கள் கூட கண்டுகொள்ளாதது ஏன்?
பலர் பயன்படுத்துகின்றனர். பெரிய அளவில் தொடர்ச்சியாக இல்லை. இதற்கும் பல காரணங்கள் உண்டு.
***************************************************************
அமைதி அப்பா; www.amaithiappa.blogspot.com
நான் சமூக சீர்திருத்தம் பற்றி மட்டுமே எழுத விரும்புகிறேன். எனது மகன், எல்லா விஷயங்களையும் எழுது என்கிறான். ஆனால், நான் எப்படி ஆரம்பித்தாலும் சமுக விழிப்புணர்வை விட்டு என்னால் வெளியில் வர முடியவில்லை. மற்ற விஷயங்கள் குறித்துதான் அனைவரும் எழுதுகிறார்களே, நாம் இந்த ஒரு விஷயத்தோடு நிறுத்திக் கொள்வோமென்று முடிவு செய்து விட்டேன். இது சரியா? இது நீங்கள் முடிவு செய்ய வேண்டிய செய்தி. தவறென்றோ சரியென்றோ யாரும் கூற இயலாது.
நான் எழுதுவதை ஒரு சிலர் தவிர படிப்பதில்லை. இருந்தும் ஆளில்லா கடையில் டீ ஆத்துவது போல் எழுதிக் கொண்டிருக்கிறேன். இது எவ்வளவு நாள் சாத்தியமாகும்?
இது நீங்கள் கொஞ்ச நாட்கள் பல வலைப்பதிவுகளுக்கும் சென்று படித்து மறுமொழி போடுங்கள். அவர்களை உங்கள் வலைப்பூவினிற்கு அழையுங்கள். ஆனால் தொடர்ந்து செய்ய வேண்டாம். முடிந்த வரை தமிழ் மணத்தில் வரும் அத்த்னை பதிவுகளுக்கும் சென்று மறு மொழி இடுங்கள் - தன்னால் உங்கள் வ்லைப்பூவினிற்கு அவர்கள் வருவார்கள். எழுதுவது கொஞ்சம் கவர்வதாக எழுதுங்கள்.
எந்த மாதிரி கேள்விகள் கேட்டால் நாம் சிறப்பாக பதில் சொல்லலாம் என்று இருந்தீர்கள். அந்த மாதிரியான ஒரு கேள்வியும், அதற்குரிய பதிலையும் வாசகர்களுக்கு தெரிவிப்பீர்களா?
அப்படி எல்லாம் ஒன்றுமில்லை.
***************************************************************
C.P. Senthil kumar; www.adrasakka.blogspot.com
நான் கடந்த 6 மாதமாக பார்த்ததில் வலைச்சரத்தில் ஃபிலாசபி பிரபாகரனின் உழைப்பு பிரம்மிக்க வைத்தது. அவருக்கு எதாவது ஸ்பெஷல் கிஃப்ட் கொடுத்தீங்களா?வாய் நிறைய வாழ்த்துகளும் மனம் நிறைய பாராட்டுகளூம் தான்.
வலைச்சரம் ஆசிரியர் பணிக்கு எந்த அடிப்படையில் ஆட்களை செலக்ட் பண்றீங்க?
இரண்டாம் கேள்விக்கான பதில்.
வலைத்தளத்தை அறிமுகப்படுத்தும் படலமே போதும்ங்கற தைரியமான எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது?
முதல் மற்றும் இரண்டாம் கேள்விக்கான பதில்.
***************************************************************
முனைவர் இரா. குணசீலன்; www.gunathamizh.blogspot.com
தமிழ் வலையுலகில் கல்விப்புலம் சார்ந்தவர்களின் பங்கு எவ்வாறு உள்ளது?
அவரவர்கள் அவரவர்கள் துறையில் சிறப்புடன் பணியாற்றுகின்றனர்.
ஒரு சிறந்த வலைப்பதிவுக்கு என்ன தகுதிகள் இருக்கவேண்டும்?
(பார்வையாளர் எண்ணிக்கையா? நிறைய இடுகைகளா? ....????)
இதற்கென்று தனித் தகுதி கிடையாது. பொதுவாக மறுமொழிகள் / இடுகைகள் / பின் தொடர்பவர்கள் இவைகளை வைத்தும் தமிழ மணத்தின் ரேங்க் படியும் சிறந்த வலைப்பதிவென கூறலாம்.
தமிழ் வலையுலகம் இன்னும் சராசரி மக்களுக்கும் சென்றடைய எது
தடையாக உள்ளது?
கேள்வி புரியவில்லை. வலையுலகம், இணையத் தொடர்பு உள்ள அனைவருக்கும் செல்கிறது. கொஞ்சம் ஈடுபாடு வேண்டும். தமிழில் எழுத, படிக்க ஆர்வம் வேண்டும். பிளாக் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும். சராசரி மக்கள் என்பவர்கள் யார்? இணையத் தொடர்பு இல்லாதவர்களா? தமிழில் படிக்க ஆரவமில்லாதவர்களா?
மதுரைப் பதிவர்கள் கல்லூரிகளில் தமிழ் வலைப்பூக்கள் ( பிளாக் ) பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு வகுப்புகள் எடுக்கிறோம். கல்லூரி அனுமதியுடன் - இரு வகுப்புகள் எடுக்கிறோம். பிளாக் துவங்குவது, தமிழில் எழுதுவது இவை பற்றி வகுப்பெடுக்கிறோம். ஈரோடு பதிவர்கள், திருப்பூர் பதிவர்கள் பல கல்லூரிகளில் வகுப்பெடுக்கிறார்கள்.
(ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன). ***************************************************************
பிரபாஷ்கரன்; http://writerprabashkaran.blogspot.com/
இன்றைய வளர்ச்சி என்பதன் மூலம் எதனைக் குறிப்பிடுகிறீர்கள்?
அறிவியல் வளர்ச்சி - தொழில் நுடப் வளர்ச்சி அனைவருக்கும் கிடைக்கும். அதனை பெறுவதற்கான வசதிகள் உள்ளவர்களுக்கு,.
15 கருத்துரைகள்:
சீனா ஐயா வுக்கு வணக்கம் பதில்கள் அருமை! மீள் பதிவிட்ட தமிழ் வாசிக்கு நன்றி புதிய பதிவர்களுக்கு பயன்படும்!
ஒரு புகழ் பெற்ற ஓவியரிடம் ஒருவர் கேட்டாராம். உங்களின் படைப்பிலேயே சிறந்த படைப்பு எது என. அவர் பதிலளித்தாராம் - எனது அடுத்த படைப்பெனெ. நீதி என்ன வெனில் சாதனை என்று ஒன்றுமில்லை. நாளுக்கு நாள் முன்னேற வேண்டும்.
பயனுள்ள பகிர்வுகள்.. பாராட்டுக்கள்...
லஞ்சம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ள பதவியில் நான் இல்லை. அதனால் லஞ்சம் வாங்க வில்லை. வாய்ப்புகள் வந்து நான் வாங்க வில்லை எனில் தான் நான் உயர்ந்தமனிதன். இன்று லஞ்சம் கொடுக்காமல் ஏதேனும் செய்ய இயலுமா ? அரசு இயந்திரங்கள் செயல் படும் விதம் உலகம் அறிந்ததே!
>>>.
இடந்த ஒரு பதிலிலிருந்தே சீனா ஐயா எவ்வளவு பக்குவப்பட்டவர்ன்னு தெரியுது ஐயா.
மீள பதிவாக்கித்தந்தமைக்கு மிக்க நன்றி,புதியவர்களுக்கு இது போன்ற பிதாமகர்களின் கருத்துகள் பயனளிக்கும்.
சிறப்பான பதிவு ! நன்றி பிரகாஷ் !
நல்ல பதிவு
என்னை மாதிரி இதுவரை இந்தப்பதிவை படிக்காதவர்களுக்கு மீள்பதிவாக்கி தந்தமைக்கு நன்றி. பேட்டி முழுதும் ஐயாவின் ஆழ்ந்த அறிவும் பக்குவ நிலையும் அழகாக வெளிப்பட்டது. அற்புதம்.
மிக அருமையான பேட்டி.
பதிவெழுதுபவர்களுக்கு மிகவும் பயன் படும்.
சீனா ஐய்யாவை பற்றி அறிந்து கொண்டேன்.
மீள் பதிவா? நான் இப்பொழுதுதான் முதல் முறை படிக்கிறேன்.
சிறப்பான பேட்டி.சீனா ஐயா அவர்களின் பதில்கள் அருமை. பகிர்வுக்கு நன்றி.
வணக்கம் பிரகாஸ்!
சீனா ஐயாவை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் அவரின் பேட்டியை இப்போதுதான் முதல் முறை பார்க்கிறேன். மீள் பதிவென்றாலும் எமக்கு புதிதே.
வாழ்க்கயில் தான் ரீவைண்ட் பட்டன் இல்ல..இங்கயாவது இருந்தது சந்தோஷமே மாப்ள நன்றி!
பெரியோரின் வாக்குகள்
பின்பற்ற விழைகிறேன் நண்பரே.
மீள் பதிவானாலும் படிக்க சுவாரசியமா இருக்கு
நல்ல பதிவு.
உங்கள் கேள்விக்கு பதில் எழுதுகிறேன்.
வாழ்த்துகள் பிரகாஷ்.
பல பதிவர்களுக்கு நல்ல ஆசோனைகளும் நம்பிக்கையும் தந்து அவர்கள் வளர சீனா ஐயாவின் பங்கு சிறப்பானது! இந்த பதில்கள் அதை நிரூபிக்கிறது!