உயிருக்கும், வாழ்வாதாரங்களுக்கும் உத்திரவாதம் இருக்கான்னு இங்க கூடங்குளத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் விடை தெரியாமல் போராடிக் கொண்டிருக்கையில் கூடங்குளத்தில் அணுஉலை மின்சார தயாரிப்பு வேலைகள் மிக வேகமாக நடந்து வருகிறது. எப்படியும் கூடங்குளத்தில் இருந்து மின்சாரம் தயாரித்தே ஆக வேண்டும் என தமிழக அரசு, மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
நம்ம ஊரு மக்களின் எதிர்ப்பை சந்தித்து பல மாநிலங்களும் வெளிச்சம் பெற போகிறது. இங்கு தயாரிக்கப்படும் மின்சாரம் பல மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்கபடலாம். இந்நிலையில் இந்த ஆண்டு நிறைவுறும் ஐந்தாண்டு திட்டத்தின் சாதனைகளை விளக்கி ஒரு கூட்டத்தில் மத்திய அமைச்சர் சுனில்குமார் பேசுகையில் தற்போதைய நிலையில் தமிழகத்திற்கு மின்சாரம் தர முடியாது என கூறியுள்ளார். ஏன் இந்த பாரபட்சம்? தமிழகத்தில் எட்டு, பத்து மணிநேர மின்வெட்டு இருப்பது அவருக்கு தெரியாதா? இன்னும் சில மாதத்தில் மின்சாரம் தயாரிக்க இருக்கும் மாநிலத்திற்கு சிறிய அளவு கூட மின்சாரம் ஒதுக்க முடியாதா? மத்திய அரசு நினைத்தால் முடியும். ஆனாலும் காங்கிரஸ் எப்போதும் தென்னிந்தியாவிற்கு அதிலும் குறிப்பாக தமிழகத்திற்கு கடுகளவு கூட நல்ல திட்டங்கள் செய்யாது. இந்நிலையில் மின்சாரம் கிடைக்குமா? சந்தேகம் தான்.
தமிழக அரசும் வேறு வழிகளில் முயற்சி செய்ததா எனத் தெரியவில்லை? கூடங்குளத்தை மட்டுமே நம்பி இருப்பது போல தெரிகிறது. இங்கே நமக்கு மின்சாரம் இல்லை என கை விரிக்கும் மத்திய அரசு, பாகிஸ்தானுக்கு சுமார் ஐயாயிரம் மெகாவாட் மின்சாரம் உதவி அளிப்பதாக நமது பிரதமர் பாகிஸ்தான் பிரதமருக்கு உறுதி தந்திருப்பதாக பாகிஸ்தான் பேப்பரான நியூஸ் டெய்லி செய்தி (தினமலர் செய்தியின் படி) வெளியிட்டுள்ளது.
இச்செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவ்வளவு மின்சாரம் எங்கிருந்து தரப்படும்? அந்த மின்சாரத்தில் ஒரு பத்து சதவீதம் தமிழகத்திற்கு ஒதுக்கினால் பல மணிநேரம் மின்வெட்டு கொஞ்சமாவது குறையுமே? ஆக, மின்சாரம் இருந்தும் நமக்கு தராமல் கை விரிகிறது மத்திய அரசு, என நம்பாமல் இருக்க முடிகிறதா? என்ன?
22 கருத்துரைகள்:
என்ன கொடுமை சரவணா இது.......
கொண்டவன் வறியவனாம்
வந்தவனுக்கு ஈகையாம்...
அதானே ! அதென்ன அடுத்த நாட்டுக்குத் தருவதாம் - நமக்கு இல்லையாம் - ம்ம்ம் - யார் தட்டிக் கேட்பது ?
ஏற்கனவே நம்ம மண்ணில் உள்ள நிலக்கரிய வச்சி தயாரிக்கிற நெய்வேலி மின்சாரம் நமக்கு கால்வாசி கூட கிடைக்கிறதில்ல.இப்ப கூடங்குளம் மின்சாரத்திற்கும் இதே நிலைதான்.மொதல்ல தனக்கு மிஞ்சினதுதான் தானம் என்கிற நிலையை நாம எடுக்கணும்.
அதானே என்ன அநியாயம்????????????
அன்பரே!
ஒரு பழமொழி சொல்வார்கள்!
பெற்ற தாய் கிங்கிணிப் பிச்சை எடுக்க மகன்
கும்பகோணத்திலே கோ தானம் செய்
தானாம்
மேலும், அம்மாவின் ஈகோ!
இன்னும் பல!
புலவர் சா இராமாநுசம்
ஓட்டு போட்டதோட உங்க கடமை முடிஞ்சது. கரண்ட் கிரண்டுன்னு ஏதாவது கேட்டீங்க அவ்வளவுதான்.
நம்ம பொரதமருக்கு காதே கேக்காது, இத்தாலிக்காரி என்ன சொல்லுதோ அதை செவ்வனே செய்து முடிப்பதே தலையாய கடமையாம் நாதாரிக்கு...
இன்றும் இந்தியாவில் வெள்ளையர்கள் ஆட்சிதான் நடக்கிறது....!!! கூட்டி கழிச்சி பாருங்க......
கூடங்குளம் மின்சாரம் தமிழ்நாட்டுக்கு முழுவதும் இல்லை என்று தானே சொல்கிறார்கள் கொசுறு மட்டும் தான் அதுவும்....செத்தாலும் தமிழன் சாகட்டும் என்று தானே இங்கே உலை வைக்கிறார்கள்
\\\பாகிஸ்தானுக்கு சுமார் ஐயாயிரம் மெகாவாட் மின்சாரம் உதவி அளிப்பதாக நமது பிரதமர் பாகிஸ்தான் பிரதமருக்கு உறுதி தந்திருப்பதாக பாகிஸ்தான் பேப்பரான நியூஸ் டெய்லி செய்தி (தினமலர் செய்தியின் படி) வெளியிட்டுள்ளது. \\\ மின்வெட்டு கூடங்குளம் அணு உலையை திறக்க மத்திய அரசு நடத்தும் நாடகம் என்பது அம்பலமாகியுள்ளது ...........விழித்தெழு தமிழா!
வாழ்க ஜனநாயகம்
என்றுதான் நமக்கு விடியுமோ?!
பிரகாஷ் சார்! இரத்தம் கொதிக்குது. ஒரு பதிவு போட என்ன பாடுபட வேண்டியிருக்கு. இரவெல்லாம் தூங்க முடியல. அவ்ளோ பவர் கட். இதுல என்னடான்னா பாகிஸ்தானுக்கு தரப் போறாங்களாம். இவங்களையெல்லாம் என்ன செய்யலாம்? அருமையான பதிவு சார்.
தம 6.
கூடங்குளம் தொறக்க விடுங்க,இருபத்துநாலு மணி நேரமும் உங்களுக்கு மின்சாரம் கெடைக்கும்!(அவங்க பெர்சனல் கஜானாவும் ரொம்பும்)
மன்மோகன் சிங்கு தமிழகத்தை எட்டி கூட பாக்கமாட்டான் சிங்கு கஜானா நிரம்புதான்னுதான் பார்ப்பான்
ரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு பதிவு எழுதி இருக்கேன்.வந்து பாருங்க
ப்ளாக்கர் திரை மூட வைப்பது எப்படி?
அவசியம் கேட்க வேண்டியது.
இந்து கடவுள்கள், இராமர் பாலம் பற்றி சீமானின் பேச்சை //////// இங்கு//////// சொடுக்கி கேட்கவும்
.
.
தாய்த்தமிழகத்தின் மீது மத்திய அரசுக்கு ஏன் இந்த ஓர வஞ்சனையோ.?
தமிழனுக்கு கிடைக்கும் ஆனா மின்சாரமில்லை பட்டை நாமம் நெற்றியில். போங்க போய் வேறவேலைய போய் பாருக்க. நாமதான் நான் இந்தியன் நான் இந்தியன் என்று கத்திக்கிட்டு கிடக்கோம் ( மத்திய அரசு )வடநாட்டுக்கரன் நம்மளை திரும்பி கூட பார்ப்பதில்லை.
செய்யது
துபாய்
நம் உயிரை பணயமாய் வைத்து பாகிஸ்தானுக்கு மின்சாரம். கொடுமை.
வாசிம்கான்களை சினிமாவில் தட்டிக்கேட்டது மட்டும் போதும் என்று நினைக்கிறார்களோ?
// எப்படியும் கூடங்குளத்தில் இருந்து மின்சாரம் தயாரித்தே ஆக வேண்டும் என தமிழக அரசு, மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. //
போங்க பாசு. நானே வேலைக்கு அங்கதான் அப்ளிகேஷன் போட்டிருக்கேன்......