CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா? இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-4

வணக்கம் வலை நண்பர்களே,
வலைப்பூ ஒன்றை ஆரம்பித்து, என்னென்ன தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை இத்தொடரின் வாயிலாக பார்த்து வருகிறோம். முந்தைய மூன்று பாகங்களை தவற விட்டவர்கள் இங்கே கிளிக்கவும்.

(குறிப்பு: இப்பதிவில் படங்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக இருப்பதால் உங்கள் கணினியில் முழுவதுமாக திறக்க சற்று நேரம் ஆகலாம். )

ப்ளாக் டாஸ்போர்ட்-இல் நமது வலைப்பூவின் settings-இல் Basic என்ற option-ஐ கடந்த பாகத்தில் பார்த்தோம். இனி settings-இல் மற்ற பகுதிகளை பார்ப்போம்.
Settings, Post and comments பற்றி பார்ப்போமா?


Posts என்பதில் show at most? 
என்பதில் உங்கள் வலைப்பூவின் முகப்பு(home page)இல் எத்தனை பதிவுகள் காட்ட வேண்டும் என்பதன் எண்ணிக்கையை இங்கு தரவும். நான் 5 posts என கொடுத்துள்ளேன். டெமோ பார்க்க இங்கு கிளிக்கவும். Post-க்கு பதிலாக Dates என கொடுத்தால் அந்த தேதியில் பகிரப்பட்டுள்ள பதிவுகளின் எண்ணிக்கையை குறிக்கும். ஆனால் நாம் பெரும்பாலும் post என்ற வசதியை தான் தேர்வு செய்திருப்போம்.

Showcase images with Lightbox 
 என்பதில் Yes கொடுத்தால் நமது பதிவில் பகிரப்பட்டுள்ள படங்களை க்ளிக் செய்தால் அதே பக்கத்தில் ஓபன் ஆகும். இரண்டு படங்களுக்கு மேலே அந்த பதிவில் இருந்தால், க்ளிக் செய்து ஓபன் செய்த படத்தின் கீழே முன்/பின் அம்புக்குறி இருக்கும். அதை பயன்படுத்தி அடுத்த படங்களை வரிசையாக பார்க்கலாம். No கொடுத்தால் படங்கள் புதிய விண்டோ-வில் திறக்கும். இரண்டு படங்களுக்கு மேலே இருந்தால் ஒவ்வொரு விண்டோ-ஆக திறக்கும்.

Comments:

Comments பகுதியில் comment location என்பது நான்கு வகைகளில் அமைக்கப்பட்டுள்ளது.
1. Embedded:

இந்த வகை கமென்ட் ஒவ்வொரு பதிவின் கீழும் அமைக்கப்பட்டிருக்கும். அதாவது பதிவிற்கு கீழும் கருத்துரை கட்டம் இருக்குமாறு அமைப்பதே இந்த முறை ஆகும். அந்த கட்டத்தில் நமது கருத்துகளை பகிரலாம். இந்த முறையால் ஒரே ஒரு பிரச்சனை என்னவெனில் நிறைய கருத்துக்கள் இருந்தால் அந்த பதிவு உள்ள பக்கம் லோடிங் ஆவதில் அதிக நேரம் எடுக்கும். பயன் என்னவெனில் threaded comment option வைக்கலாம். அதாவது ஒவ்வொரு கருத்துக்கும் பதிலளிக்கையில் அந்த கருத்துக்கு கீழேயே காட்டும்.

2. Full page:

இந்த வகையில் கருத்து பெட்டி புதிய விண்டோ-வாக திறக்கும். இதிலும் ஒரு பிரச்சனை உள்ளது. அது என்னவெனில் கருத்து இடுவதற்காக நாம் comment option-ஐ க்ளிக் செய்தால் பதிவு உள்ள பக்கம் மறைந்து கருத்துரை பக்கம் திறக்கும். இதனால் மீண்டும் பதிவு உள்ள பக்கத்திற்கு செல்ல மீண்டும் பதிவின் தலைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.

3. Popup window:

இந்த வகையில் பதிவுக்கு கருத்துபெட்டி புதிய சிறிய விண்டோ-வாக திறக்கும். இதனால் கணினி திரையில் பதிவையும், கருத்து பெட்டியையும் அருகருகே வைத்து கருத்து இடலாம். பதிவின் வரிக்கு வரி கருத்து இட இம்முறை எளிதாக இருக்கும்.

4. Hide:
இம்முறை மூலம் பதிவின் கருத்துரை பெட்டியை கருத்து இட முடியாதவாறு மறைத்து வைக்கலாம்.

 Who can comment?
இங்கு யார் யார் கருத்துரை இடலாம் என்பதை நாம் முடிவு செய்யலாம். இதற்கு சில option இருக்கிறது.

1.  

இதில் யார் வேண்டுமானாலும் கருத்துரை இடலாம். பெயரில்லாமல் Anonymous முறையில் கருத்துகள் இடுபவர்கள் பெரும்பாலும் வாதம் செய்யவும், தேவையிலாமல் பதிவின்சாரம்சத்தை திசை திருப்பவும் பயன்படுத்துகிறார்கள். எனவே, பெரும்பாலும் இம்முறையை தவிர்த்து விடுங்கள்.

2.  

இதில் மெயில் ஐடி, வலைப்பூ முகவரி, பெயரிடுதல் என கருத்துரை இடுபவரை அடையாளம் காட்டி கருத்துரை இட வைக்கலாம்.


3. User with Google Accounts 
இந்த முறை மூலம் கூகிளில் கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே கருத்துரை இட முடியும்.

4.  
இந்த முறை மூலம் வலைப்பூ மெம்பர்கள்/ பாலோயர்ஸ் மட்டுமே கருத்துரை இட முடியும்.


Comment moderation:
இதை தமிழில் கருத்துரை மட்டுறுத்தல் என சொல்லலாம். இதனால், பதிவுக்கு யாரேனும் கருத்துரை இட்டால் உடனே தானியங்கியாக வெளியிடாமல், நாம் கருத்துரை பக்கத்திற்கு வரும். அங்கே அந்த கருத்து தேவைப்படின் வெளியிடலாம். தேவையில்லை எனில் கருத்துரையை வெளியிடாமல் நீக்கலாம்.  

1. Always:
இம்முறை மூலம் கருத்துரை மட்டுறுத்தல் எப்போதும் இருக்கும்.

2. Some times:
இதில் பழைய பதிவுகளுக்கு மட்டும் கருத்துரைமட்டுறுத்தல் வைக்கலாம். அதாவது எத்தனை நாட்களுக்கு முன் உள்ள பதிவுகள் என கொடுத்துமட்டுறுத்தல் வைக்கலாம்.

3. Never:
இம்முறையை தேர்வு செய்வதன் மூலம் எல்லா பதிவுக்கும் மட்டுறுத்தல் இருக்காது. கருத்துரை இட்டவுடன் உடனே பதிவில் வெளியிடப்படும்.

Show word verification:
இம்முறையை தேர்வு செய்தால் ஒவ்வொரு கருத்துரையை பதிவு செய்யும் போது சில ஆங்கில வார்த்தைகள் டைப் பண்ண சொல்லி கேட்கும். அவற்றை பூர்த்தி செய்த பின்னரே கருத்துரை வெளியிடப்படும். இம்முறை கருத்துரை இடுபவரை சலிப்படைய செய்ய வாய்ப்பு இருப்பதால் பெரும்பாலும் 'yes' தேர்வு செய்யாமல் 'no' என்பதைதேர்வு செய்யவும்.

Comment Form Message:
இந்த கட்டத்தில்கருத்துரை இடுபவர்களுக்கு ஏதேனும் சொல்ல விரும்பினால் சொல்லலாம். மேலே படத்தில் பாருங்கள். "உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன" என நான் கொடுத்துள்ளேன்.

அடுத்து டாஸ்போர்ட்-செட்டிங்-இல் ஏனைய பகுதிகளை நாம் பார்க்கலாம்.  

ஒவ்வொரு பகுதியாக, முடிந்தளவு கூடுதல் விளக்கங்கள் பகிர விரும்புவதால் சில விஷயங்கள் உங்களுக்கு புரியாமல் இருக்கலாம். மேலும் விளக்கம் தேவையெனில் எனது மின்னஞ்சலை admin@tamilvaasi.com தொடர்பு கொள்ளவும்.
மேலும் வாசிக்க... "வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா? இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-4"



வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா? இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-3

வணக்கம் வலை நண்பர்களே,
வலைப்பூ ஒன்றை ஆரம்பித்து, என்னென்ன தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை இத்தொடரின் வாயிலாக பார்த்து வருகிறோம். முதலிரண்டு பாகங்களை தவற விட்டவர்கள் இங்கே கிளிக்கவும்.

சென்ற பாகத்தில் கூறியது போல blog options பற்றி ஒவ்வொன்றாக இந்த பாகத்தில் பார்ப்போம்.
1. Settings:
டாஷ்போர்ட்-டில் இருந்து setting கிளிக் செய்தால் கீழே படத்தில் உள்ளது போல பக்கம் ஓபன் ஆகும். அதில் வலப்பக்கம் மேலிருந்து கீழாக நிறைய options இருக்கும். அவற்றில் கீழே setting options இருக்கும். அதில் Basic, Posts and comments, Mobile and email, Language and formatting, Search preferences, Other என நிறைய options உள்ளது. அவற்றில் முதலில் இருக்கும் Basic option-இல் என்னென்ன செய்ய வேண்டும் என பார்ப்போம்.


Title:
இங்கு உங்கள் வலைப்பூவிற்கான தலைப்பை தரவும். இந்த தலைப்பு தான் உங்கள் வலைப்பூவின் மேலே காட்டும்.

Description:
இங்கு உங்கள் வலைப்பூவிற்கான விளக்கத்தை, அதாவது உங்கள் வலைப்பூ எதனை அடிப்படையாக கொண்டது என்பதை சுருக்கமாக தரவும். எனது இணையப்பூங்கா தளம் கணினி, வலைப்பூ சம்பந்தமானதால் அது பற்றி சுருக்கமாக தந்துள்ளேன். படத்தில் பார்க்க. 

Privacy:
இதில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம். 

Blog Address:
இதில் உங்கள் வலைப்பூ முகவரி காட்டும். இந்த முகவரியை மாற்ற விரும்பினால் பக்கத்தில் இருக்கும் edit க்ளிக் செய்தால் ஓபன் ஆகும் கட்டத்தில் நீங்கள் மாற்றம் செய்ய வேண்டிய முகவரியை கொடுத்து save செய்தால் மாறிவிடும். அதாவது netpoonga என்பதை inaiyapoonga என மாற்றலாம். 

இவ்வாறு செய்வதால் வலைப்பூ முகவரி மட்டுமே மாறும். மற்றவை யாவும் மாறாது.

அடுத்து add custom domain என்பதில் உங்கள் வலைப்பூவுக்கு சொந்தமாக முகவரி வாங்கி இணைக்கலாம்.

Permissions:
Blog authors:
இங்கு வலைப்பூ -க்கு யார் சொந்தகாரர் என்பதை காட்டும். அதாவது வலைப்பூ அட்மின் பெயர் காட்டும். 

புதிதாக மற்றொருவரை அட்மின் அல்லது எழுத்தாளர்(author) இணைக்க விரும்பினால் add author என்பதை க்ளிக் செய்து அவர்களின் மின்னஞ்சல் முகவரியை கொடுத்து ஓகே செய்யவும். இதனால் அந்த மின்னஞ்சலுக்கு உங்கள் வலைப்பூ மூலமாக ஒரு மின்னஞ்சல் செல்லும். அதிலுள்ள இணைப்பை அவர் க்ளிக் செய்து அவரது டாஸ்போர்ட்-இல் உங்கள் வலைப்பூ-வின் எழுத்தாளர் (author) அனுமதியை பெறலாம். 

அவருக்கு முழு அட்மின் தர விரும்பினால் admin என்பதை க்ளிக் செய்து முழு அதிகாரத்தை கொடுக்கலாம். இந்த அட்மின் விசயத்தில் மிக கவனமாக இருங்கள். ஏனெனில் அவருக்கு அட்மின் சென்றால், அவரால் உங்களை அந்த வலைப்பூவில் இருந்தே நீக்கி விட முடியும். ஆகையால் மற்றவர்களுக்கு அட்மின் தரும் போது பலமுறை யோசித்து கொடுக்கவும். தெரியாதவர்களுக்கு எக்காரணம் கொண்டும் அட்மின் தர வேண்டாம். 

Blog readers:
இதில் anybody என காட்டும். அதற்கு அருகில் உள்ள edit க்ளிக் செய்தால் மூன்று options ஓபன் ஆகும். 

Anybody என்பதை தேர்வு செய்தால் உங்கள் வலைப்பூவை யார் வேண்டுமானாலும் பார்வையிடலாம்.

Only blog authors என்பதை தேர்வு செய்தால் வலைப்பூ அட்மின் மற்றும் எழுத்தாளர் author மட்டுமே பார்வையிட முடியும்.

Only these readers என்பதில் யார் யாருக்கு மின்னஞ்சல் மூலம் இணைப்பை தருகிறீர்களோ அவர்கள் மட்டுமே பார்வையிட முடியும். 

நண்பர்களே, இன்று settings-basic மட்டும் பார்த்தோம். இன்னும் பதிவுகள் எவ்வாறு எழுதுவது, படங்கள் இணைப்பது என முக்கியமானவைகளை இனி வரும் பாகங்களில் பார்ப்போம். 

ஒவ்வொரு பகுதியாக, முடிந்தளவு கூடுதல் விளக்கங்கள் பகிர விரும்புவதால் சில விஷயங்கள் உங்களுக்கு புரியாமல் இருக்கலாம். மேலும் விளக்கம் தேவையெனில் எனது மின்னஞ்சலை admin@tamilvaasi.com தொடர்பு கொள்ளவும்.
மேலும் வாசிக்க... "வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா? இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-3"



வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா? இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-2


வணக்கம் வலை நண்பர்களே,
வலைப்பூ தொடங்குவதற்கான நமது வழி காட்டுதல் முதல் பாகத்தில் வலைப்பூ create செய்வதை பார்த்தோம். இனி அடுத்த பகுதியை பார்போம்.

ப்ரோபைல் அமைத்தல் - Profile setting:
1. வலைப்பூ தொடங்கிய பின் கீழே படத்தில் உள்ளவாறு ப்ளாக்கரில் காட்டும். அந்த பக்கத்திற்கு டாஸ்போர்டு (dashboard) என பெயர்.

2. இந்த டாஸ்போர்டு பக்கத்தின் மேல் வலது மூலையில் நமது பிளாக்கர் கணக்கில் நாம் கொடுத்துள்ள பெயர் காட்டும்.  அங்கு க்ளிக் செய்தால் கீழே படத்தில் உள்ளது போல ஓபன் ஆகும். அதில் blogger profile என்பதை க்ளிக் செய்யவும்.


3. Blogger profile க்ளிக் செய்தால் நமது ப்ரோபைலை எடிட் செய்யும் பக்கம் ஓபன் ஆகும். பார்க்க படம் கீழே,

4. அந்த ப்ரோபைல் எடிட் பக்கத்தில் Privacy, Identity, Profile photo, Genaral, Location ஆகிய பகுதிகளில் வேண்டிய தகவல்களை அளிக்கவும். இதில், privacy என்பதில் share my profile என்பதை டிக் மார்க் செய்தால் நமது ப்ரோபைல் பக்கம் மற்றவர்களுக்கு காட்டும். டிக் இல்லையென்றால் காட்டாது. டிக் மார்க் செய்வதே நன்று. ஏனெனில் உங்களது ப்ரோபைல் மற்றவர்களுக்கு காட்டா விட்டால் யாரோ அனானி (anonymous) ப்ளாக் என முடிவு செய்து தங்கள் வலைப்பூவிற்கு முக்கியத்துவம் அளிக்க மாட்டார்கள்.

5. Show my email address என்பதில் டிக் மார்க் செய்யவும். நான் டிக் மார்க் ஏன் செய்யவில்லை என அறிய விரும்பினால் இந்த லிங்கை வாசியுங்கள்.

6. Display name என்ற இடத்தில் வலைப்பூவிற்கான உங்கள் பெயரை தரவும். இந்த பெயர் தான் மிக முக்கியம். நான் தமிழ்வாசி பிரகாஷ் என கொடுத்திருப்பதாலே பதிவர் பெயர் வரும் எல்லா இடங்களிலும் தமிழ்வாசி பிரகாஷ் என்றே காட்டுகிறது.

7. அடுத்து profile photo, location ஆகியவற்றை நிரப்பவும். உங்கள் ப்ரோபைலை மற்றவர்கள் பார்க்கையில் உங்கள் போட்டோவுடன் நீங்கள் அளித்துள்ள தகவல்களை அவர்கள் அறியலாம்.

8. மேற்கண்ட ப்ரொபைலுக்கு பதிலாக கூகிள் ப்ளஸ் ப்ரோபைலை தரலாம். கூகுளும் கூகிள் ப்ளஸ் ப்ரோபைலை தான் அதிகம் வரவேற்கிறது. கூகிள் ப்ளஸ் ப்ரோபைலை இணைக்க ப்ளாக் டேஷ்போர்டில் மேலே வலது மூலையில் கீழே படத்தில் உள்ளது போல மொழி மற்றும் சக்கர வடிவம் இருக்கும். அதை க்ளிக் செய்தால் ஒரு மெனு ஓபன் ஆகும். அதில் connect to google+ என்பதை ஓகே செய்யவும். அவ்வளவு தான். திரும்ப பிளாக்கர் ப்ரொபைலுக்கு வர விரும்பினால் அதே மெனுவில் blogger profile என காட்டும். அதை க்ளிக் செய்தால் போதுமானது.
நண்பர்களே, இதுவரை ப்ரோபைல் அமைப்பதை பார்த்தோம். அடுத்து நாம் பார்க்க இருப்பது டாஸ்போர்ட்-இல் நமது வலைப்பூவில் என்னென்ன வசதிகள், அதில் மிக முக்கியமானவை எவை எவை என்பதையே???

Blog Options:
மேலே முதல் படத்தில் இணையப் பூங்கா என்ற பெயருக்கு அருகில் வலப்பக்கம் மையத்தில் ஒரு கீழ் நோக்கிய அம்புக்குறி இருக்கிறதா? அதை க்ளிக் செய்தால் கீழே படத்தில் உள்ளவாறு மெனு ஓபன் ஆகும். 

அவற்றில் நீல வண்ண வட்டம் காட்டியுள்ள பகுதிகள் மிக முக்கியமானவை. அவையே நமது வலைப்பூவிற்கு அடிப்படை கட்டமைப்பை கொண்டுள்ள பகுதிகள் ஆகும். அவற்றை பற்றி விரிவாக ஒன்றன் பின் ஒன்றாக அடுத்த பாகத்தில் பார்ப்போமா?

ஏதேனும் சந்தேகம் இருப்பின் admin@tamilvaasi.com - க்கு மெயில் அனுப்பவும்

முந்தைய பாகத்தை வாசிக்க:
வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா? இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1
மேலும் வாசிக்க... "வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா? இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-2"



வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா? இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1


வணக்கம் வலை நண்பர்களே,
வலைப்பூ என்பது ஆங்கிலத்தில் (ப்ளாக் Blog) என அழைக்கப்படும் ஓர் கருத்துப் பரிமாற்ற இலவச இணைய பக்கம் ஆகும். இந்த வலைப்பூ பற்றி நிறைய நண்பர்கள் தெரிந்தோ/தெரியாமலோ வெறும் கணக்கு மட்டுமாவது துவங்கி வைத்திருப்பார்கள். வலைப்பூவை தெரிந்தவர்கள் முறையாக எவ்வாறு பயன்படுத்துவது என தெரியாமல் இருக்கலாம். தெரியாதவர்களுக்கு முதலில் எங்கிருந்து ஆரம்பிப்பது, அதில் என்ன செய்வது? வலைப்பூவை அமைப்பது எப்படி என நிறைய கேள்விகள் எழும்.

இப்படி வலைப்பூவைப் பற்றி அறிந்தவர்களுக்கும், அறியாதவர்களுக்கும் என்னால் இயன்ற அளவு ஓர் எளிமையான வழிகாட்டுதலை என் அனுபவத்தின் மூலம் இக்கட்டுரைத் தொடர் வழியாக உங்களுக்கு அறியத் தருகிறேன்.

வலைப்பூ வசதியை Blogger, Wordpress என்ற இரண்டு தளங்கள் தருகின்றன. இவற்றில் நாம் Blogger மூலம் உள்ள வலைப்பூ பற்றியே பார்க்க போகின்றோம். 

1. Gmail account தேவை. Account துவங்க இங்கு செல்லவும்.
அந்த account மூலமாகவே Blogger தளத்திலும் உள் நுழைய முடியும்.

2. உள் நுழைந்த பின் new blog என்பதை க்ளிக் செய்தால் கீழே உள்ளவாறு ஒரு விண்டோ ஓபன் ஆகும்.

3. மேலே உள்ள படத்தில் title என்ற கட்டத்தில் உங்கள் வலைப்பூவின் பெயரை கொடுக்கவும். "இணையப் பூங்கா" என நான் கொடுத்துள்ளேன்.

4. அடுத்து address என்ற கட்டத்தில் வலைப்பூவிற்கான தள பெயரை தரவும். நான் netpoonga என கொடுத்துள்ளேன். நீங்கள் தரும் பெயர் ஏற்கனவே Blogger-ல் இருந்தால் Sorry, this blog address is not available என காட்டும். எனவே, நீங்கள் வேறு பெயரை தேர்வு செய்ய வேண்டும். உங்களது பெயர் இருந்தால் This blog address is available என காட்டும். 

குறிப்பு: Title மற்றும் Address-ஐ தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் கொள்ளுங்கள். Title என்பது வலைப்பூவிற்கான தலைப்பு, அதாவது வலைப்பூவின் முகப்பு பகுதியில் மேலே காட்டக்கூடியது. Address என்பது வலைப்பூவிற்கான முகவரி. அதாவது வலைப்பூவின் URL Name. பெரும்பாலும் Title/Address இரண்டிலும் ஒரே பெயர் வரும்படி அமையுங்கள். Title ஒரு பெயர், Address ஒரு பெயர் என வைத்தால் வாசகர்கள் குழப்பமடைய வாய்ப்பு உள்ளது. Title தமிழில் இருந்தால் Addressஐ ஆங்கில மொழிபெயர்த்தும் வைக்கலாம். அதாவது, இரண்டும் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் வைக்க வேண்டாம் என்பதில் கவனம் கொள்க.

5. Template என்ற பகுதியில் simple என்ற டெம்ப்ளேட்டை தேர்வு செய்து create blog என்பதை க்ளிக் செய்யதால் உங்களுக்கான வலைப்பூ ரெடி.

குறிப்பு: வலைப்பூவிற்கான டெம்ப்ளேட் அமைக்க இணையத்தில் நிறைய டெம்ப்ளேட்கள் இலவசமாக கிடைகின்றன. நாம் இப்போது ப்ளாக்கர் வழங்கும் டெம்ப்ளேட்டை எடுத்துக் கொள்வோம். ஏனெனில் ஒரு பத்து இடுகை(post) வரையாவது பிளாக்கர் வழங்கும் டெம்ப்ளேட்டை பயன்படுத்திய பின், நமக்கு தேவைப்படும் இணைப்புகளை இணைத்த பின்னர், மற்றைய டெம்ப்ளேட்டை அந்த வலைப்பூவிற்கு அமைப்பது மிக நல்லது.
 நண்பர்களே, வலைப்பூ தொடங்கியாச்சு. இனி என்ன செய்வது என்பதை அடுத்த பாகத்தில் பார்ப்போமே!

மேலும் வாசிக்க... "வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா? இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1"



விவரமான பையனும், விழித்த போலீஸும், பதிவர் சந்திப்பும் ( நான் என்னத்த கண்டேன்)


இருக்கேனா? இல்லையா?
போன மாசம் மொத வாரத்தில் சில பதிவுகள் எழுதினது. அப்புறம் இப்போ தான் எழுதறேன். ரொம்ப பிஸி (எப்ப பாரு, இத ஒண்ணு சொல்லிக்கிறாங்க) அப்படி நீங்க சத்தமாவே சொல்றது கேட்குது. என்ன செய்ய, பிஸியா இருக்கறதை வேறெப்படி சொல்றது? ஆனா மொபைலில் பேஸ்புக், நண்பர்களின் பதிவுகள் என ஓரளவு இருக்கேன். ஆனா, கமெண்ட்ஸ் போட முடியல. ஆனா, பதிவு பிடிச்சிருந்தா போன்ல கூப்பிட்டு நல்லது, கெட்டத சொல்லிடறேன்.

வலைச்சரத்தில் எழுதிய விஜயன் துரையின் சில பதிவுகளில் அவரது உழைப்பு நன்றாகவே தெரியும். அதனால், போனில் பாராட்டு தெரிவித்தேன். அதே போல, தி. தமிழ் இளங்கோ ஐயா அவர்களுக்கும் போனில் பாராட்டு தெரிவித்தேன். 

******************************************
பதிவரின் மிரட்டல் விமர்சனம்:
ஒரு பதிவர் ஆதிபகவன் படத்துக்கு விமர்சனம் எழுதியிருந்தார். படம் ஒர்த் இல்லை, ஆனா தியேட்டர்ல போய் கண்டிப்பா பாருங்க?ன்னு பாரா, பாராவா சொல்லி இருந்தார். யாராவது திட்டனும்னா போன் பன்னுங்கன்னும் கமென்ட்-இல் தில்லா போன் நம்பரும் தந்திருந்தார். உடனே, போன் செய்து, பதிவுல விமர்சனம் போட்டிருகிங்க, எப்படி இப்படி எழுதியிருகிங்க அப்படி பேச ஆரம்பிச்சதும், சுதாரிச்ச அவர், தெரிஞ்ச குரலாவே இருக்கே, நீங்க யார்ன்னு தெரியலையேன்னு பேச்சை டைவட் பண்ணிட்டார். அப்பொறமா என்னை கண்டுபிடிச்சிட்டார். விமர்சனம் நீளமா இருந்தாலும், நல்லா எழுதியிருக்கிங்க'ன்னு சொல்லி கட் பண்ணிட்டேன். அவரு கண்டுபிடிக்கலைனா கொஞ்ச நேரம் கலாய்ச்சிருப்பேன். ஒ.. அவர் யார்னு சொல்ல மறந்துட்டேனே? நம்ம, திடமான சீனு தான்.

******************************************
விழித்த போலீஸ்:
மதுரையில், இப்ப சமீபமா எங்க திரும்பினாலும் போலீஸ் சார், அதிக கூட்டமுள்ள ஷேர் ஆட்டோ, இருசக்கர  வண்டிகளை மடக்கி, டாக்குமென்ட் இல்லாதவங்க, சந்தேக நபர்கள் என பிடிச்சு பைன் போட்டுறாங்க. ஆனா, சில ரூல்ஸை காத்துல பறக்க விட்டுறாங்க. முக்கியமா ஹெல்மெட் பத்தி கண்டுக்க மாட்டிங்கறாங்க. எவ்வளவு தான் ஹெல்மெட் முக்கியத்துவம் பத்தி சொன்னாலும், மக்களும் சரியா பாலோ பண்றதே இல்லை. ஹெல்மெட் போடாதவங்களை போலீஸ் புடிச்சு பைன் போட்டா நல்லது தான். போலீஸ் நண்பர்களே, ஹெல்மெட் வேட்டையை தொடருங்களேன்.

என்னதான் போலீஸ் விழிப்பா இருந்தாலும், அவங்க கண்ணுல கையை வுட்டு ஆட்டுறது இந்த ஷேர் ஆட்டோக்கள் தான். அதிக கூட்டம், ஓவர் ஸ்பீடு, விபத்தை ஏற்ப்படுத்துதல் என அவங்க தொல்லை அதிகம் தான். அதனால, ஷேர் ஆட்டோவை கடுமையா கண்ட்ரோல் செய்யணும்.

ஷேர் ஆட்டோவுக்கு பதிலா பாதுகாப்பான மாற்று வாகனம் இருக்கா?

******************************************
தெளிவான பசங்க:
போன ஞாயித்து கிழமை சூரியன் எப்எம்-இல் சாலமன் பாப்பையா பட்டிமன்றம். தலைப்பு, படிப்பறிவா? பட்டறிவானு வாதம் நடந்துச்சு. 
 அதுல ஒருத்தர் சொன்ன சுவாரஸ்யம் கீழே:

அப்பா: டேய், அவன் உன்கூட தானே படிக்கிறான்.. அவன் தொன்னுத்தி அஞ்சு மார்க் வாங்கியிருக்கான். நீ இருபத்தி அஞ்சு மார்க் தான் வாங்கியிருக்க... உன்னை என்னடா செய்யறது?

மகன்: அப்பா திட்டாதிங்க...


அப்பா:ரெண்டு பேரும் ஒரே ஸ்கூல்... ரெண்டு பேரும் டீப் பிரண்ட்ஸ்,ரெண்டு பேருக்கும் ஒரே டீச்சர்,ரெண்டு பேரும் ஒண்ணாவே ஸ்கூலுக்கு போறீங்க......ஒண்ணாவே விளையாடுரிங்க....ஒண்ணாவே சாப்பிடுறிங்க...ஒரே கடையில புக், நோட் வாங்கறிங்க...அப்புறம் ஏண்டா, மார்க் மட்டும் ஒண்ணாவே எடுக்க மாட்டிங்கிற...அட்லீஸ்ட், பாஸ் மார்க் வாங்கலாமே...


மகன்:அப்பா திட்டுறத நிறுத்துங்க...எல்லாமே சரிதான்... ஆனா அவனுக்கும், எனக்கும் அப்பா வேறயாச்சே????

எப்புடி, பையன் விவரமா பதில் சொல்லி இருக்கான். 

******************************************
பதிவர் சந்திப்பு:


இடமிருந்து: நான், மதுரை சரவணன், G.M.பாலசுப்ரமணியன், சீனா ஐயா, ரமணி ஐயா
கடந்த வாரம் பெங்களூரில் இருந்து பதிவர் G.M. பாலசுப்ரமணியன் குடும்பம் சகிதமாக மதுரைக்கு வந்திருந்தார். ஐயா பாலசுப்ரமணியன் http://gmbat1649.blogspot.in/ என்ற வலைப்பூவில் எழுதி வருகிறார். அவருடன் மதுரை பதிவர்கள் சந்தித்து சிறிது நேரம் பேசிக் கொன்டிருந்தோம்.மேற்கண்ட படத்தில் இன்னொரு பதிவர் இல்லை. அவர் மதுரையை சேர்ந்த வெங்கடாசலபதி என்பவர். அவரது வலைப்பூ மென்திறன் வளர்க்க சில சிந்தனைகள் அவரும் அன்று தான் அறிமுகம் ஆனார்.

******************************************
இலவச மென்பொருள் அறிமுகம்:
இனி ஒவ்வொரு நா.எ.க பகுதியில் ஒரு இலவச மென்பொருள் தரவிறக்க லிங்க் பகிரப்படும். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Avast Browser Cleanup Tool
Remove Toolbars And Disable Unwanted Add-Ons From Your Favourite Browsers.
Features:
  1. Remove toolbars and disable unwanted add-ons from Internet Explorer, Mozilla Firefox and Google Chrome.
  2. It can help you remove browser toolbars and plugins from the system that either have a bad reputation based on community ratings, or that aggressively modify system settings.
  3. Avast Browser Cleanup is a portable tool, which means you won’t need to go through any installation hassles, and can use it on the go from a USB flash drive.
  4. Apart from removing toolbars and unwanted add-ons from supported browsers, the application also lets you disable any browser add-ons that you don’t require to be active all the time, but still want to keep installed.
  5. Avast Browser Cleanup also features an option to reset your current browser settings to the default values.
  6. The program detects major toolbars such as the Ask toolbar, Babylon Search toolbar or the AVG Security toolbar and many minor toolbars and plugins.
  7. It works on Windows XP, Windows Vista, Windows 7 and Windows 8.
Download here
******************************************

ஜில் ஜில் ஜிகர்தண்டா:


மேலும் வாசிக்க... "விவரமான பையனும், விழித்த போலீஸும், பதிவர் சந்திப்பும் ( நான் என்னத்த கண்டேன்)"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1