வணக்கம் வலைப்பதிவு தோழமைகளே,
நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மூன்றாம் ஆண்டு தமிழ் வலைப்பதிவர் திருவிழா இன்னும் ஆறே நாட்களில் (அக்டோபர் 26, ஞாயிறு) தமிழ்ச் சங்கம் தோன்றிய மதுரை மாநகரில், வரலாற்றுச் சிறப்புமிக்க மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் அருகில், கீதா நடன கோபால நாயகி மந்திர் அரங்கத்தில் கோலாகலமாக நடைபெற உள்ளது...
திருவிழாவில் என்னென்ன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன என்பதை ஏற்கனவே ஒரு முன்னோட்ட பதிவில் பகிர்ந்திருந்தோம்.
சந்திப்பு நிகழ்ச்சிகள் காலை ஒன்பது மணிக்கு ஆரம்பித்து மாலை சுமாராக நான்கு மணி வரை நடக்க உள்ளது. வெளியூர் மற்றும் உள்ளூர் பதிவர்கள் அதற்கேற்ப பயணத்தை திட்டமிட்டு நேரம் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்.
பதிவர்களே, நிகழ்ச்சிநிரல் படி எல்லா நிகழ்ச்சிகளும் இனிதே நடைபெற உங்களின் ஒத்துழைப்பு மிக அவசியம்.
பதிவர்களே, நிகழ்ச்சிநிரலை தங்களது பதிவில் பகிர்ந்து, பெருவாரியான பதிவர்கள் கலந்து கொள்ள வாய்ப்பு தாருங்கள்.
பதிவர் சந்திப்பு நிகழ்ச்சிகள் நேரலை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுபற்றிய விவரங்களை வருகிற நாட்களில் பதிவில் பகிர்கிறோம் நண்பர்களே...
பதிவர் சந்திப்பில் நிகழ்ச்சிகளை, நண்பர் மகேந்திரன் பன்னீர்செல்வம் அவர்களும் தீபா நாகராணி அவர்களும் தொகுத்து வழங்க இருக்கிறார்கள்...
வெளியூரிலிருந்து வரும் பதிவர்கள் அரங்கத்திற்கு வரும் வழித்தடம் பற்றி அடுத்த சில நாட்களில் வரும் பதிவில் பகிர இருக்கிறோம். பதிவர்கள் தங்களுக்கான வழித்தடத்தை குறித்துக் கொள்ளுங்கள்.
பதிவர் திருவிழாவில் மதிய உணவாக சுவை மிகுந்த சைவ சாப்பாடு வழங்க இருக்கிறோம். உணவு ஏற்பாடுகளை சீனா ஐயா, திண்டுக்கல் தனபாலன், தமிழ்வாசி பிரகாஷ், தமிழன் கோவிந்தராஜ் ஆகியோர் கவனித்துக் கொள்கிறார்கள்.
பதிவர் திருவிழாவிற்கான நிர்வாக வரவு செலவு கணக்குகள் தமிழ்வாசி பிரகாஷ் கவனித்து கொள்கிறார்.
அரங்க ஏற்பாடுகள், பதிவர்களுக்கான அடையாள அட்டை, விருது ஏற்பாடுகள், சிறப்பு விருந்தினர் தொடர்பு, போன்றவற்றை தமிழ்வாசி பிரகாஷ், தமிழன் கோவிந்தராஜ் ஆகியோர் கவனித்து வருகிறார்கள்.
வெளியூர் பதிவர்கள் தங்குவதற்கான அறை ஏற்பாடுகளை தமிழன் கோவிந்தராஜ், ஜோக்காளி பகவான்ஜி அவர்கள் கவனித்து கொள்ள இருக்கிறார்கள்.
இதுவரை தங்கள் வருகையை உறுதி செய்யாத பதிவர்கள் இந்த இணைப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை நிரப்பி தங்களின் வருகையை உறுதி செய்யுங்கள் நண்பர்களே!
தொடர்புடைய பதிவுகள்:
வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா-மதுரை-26.10.14 சந்திப்பு
வலைப்பதிவர் சந்திப்பு மதுரை - 2014, நன்கொடை அளிக்க விரும்புவோர் கவனத்திற்கு!!!
மதுரை பதிவர் சந்திப்பிற்கு வருகையை உறுதி செய்திருக்கும் பதிவர்களின் முதல் பட்டியல்!
மதுரை வலைப்பதிவர் சந்திப்பு 2014 நிகழ்ச்சிகள் - ஓர் முன்னோட்டம்!!!
வருகையை உறுதி செய்த பதிவர்களின் இரண்டாம் பட்டியல் - மதுரை வலைப்பதிவர் திருவிழா 2014
மதுரை வலைப்பதிவர் திருவிழாவில் கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினர்கள் யார்? யார்!!
12 கருத்துரைகள்:
இன்னும் சிலநாட்களே இருக்கும் அந்த திருநாளை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்...
மிகவும் ஆவலுடன் காத்திருகின்றோம்..
கலந்து கொள்ளும் அனைவருக்கும் மறக்க முடியாத திருவிழாவாக இருக்கும்...
கம்மிங் கம்மிங் ஆன் தி வே ஆன் தி வே
வாழ்க நலம்..
அனைவருக்கும் அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!..
விழா சிறக்க வாழ்த்துகள்!
முன்னேற்பாடுகள் சிறப்பாக நடைபெறுவதை அறிந்து மகிழ்ச்சி.இதற்காக உழைத்துக் கொண்டிருக்கும் பதிவுலக நண்பர்களுக்கு நன்றி. மதுரையில் சந்திப்போம்
பதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துகளும்.
விழா சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துகளும் கடல்கடந்து.
எங்கள் வாழ்த்துகள் !
விழா சிறக்கட்டும்
தங்கள் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
ஆவலுடன் காத்திருக்கிறேன்..
இதற்கான பணிகளைச் செய்யும் உங்களுக்கும் மற்ற நண்பர்களுக்கும் நன்றிகள்!