வணக்கம் உலக தமிழ் வலைப்பதிவர்களே!!
வருகிற அக்டோபர் 26-ஆம் தேதி மதுரையில் மூன்றாவது வலைப்பதிவர் சந்திப்புத் திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது. இவ்விழாவில் நடைபெற இருக்கும் நிகழ்வுகளின் முன்னோட்டம் பற்றி இப்பதிவில் தாங்கள் அறிந்திருப்பீர்கள். அதில் சிறப்பு விருந்தினராக இருவர் பங்கேற்க இருப்பதாக அறிவித்து இருந்தோம். அவர்கள் யாரென கீழ்வரும் பத்திகளில் பார்ப்போம்.
பிரபலஎழுத்தாளர், உயர்திரு. இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் கலந்து கொண்டு நமது பதிவர் திருவிழாவை சிறப்பிக்க இருக்கிறார். மதுரை மாநகரில் வசித்து வரும், இவர் சிறுகதைகள், நாவல்கள், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் சினிமா திரைக்கதைகளை எழுதி வருகிறார்.
இவர் தென்னிந்திய இந்துமத பாரம்பரியம் மற்றும் புராண இதிகாசங்களைக் கலந்து எழுதுவதில் வல்லவர். இவருடைய கதைகள் பொதுவாக அமானுட நிகழ்வு, தெய்வீக தலையீடு, மறுபிறவி, பேய்கள் போன்ற விஷயங்களை உள்ளடக்கியிருக்கும். இவர் கதைகள் தமிழ் நாட்டின் பல பகுதிகளில் வாழும் மக்கள் தெரிவித்த உண்மை நிகழ்வுகளின் அடிப்படையிலும் அமைந்துள்ளன.
இவருடைய இரண்டு அல்லது மூன்று புதினங்களாவது ஒவ்வொரு மாதமும் கிரைம் ஸ்டோரி
மற்றும் இன்றைய கிரைம் நியூஸ் போன்ற பதிப்பாளர்களால் வெளியிடப்படுகின்றன.
இவர் எழுதிய "என் பெயர் ரங்கநாயகி" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1999 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் வகைப்பாட்டில் மூன்றாம் பரிசு பெற்றிருக்கிறது.
மற்றொரு சிறப்பு விருந்தினராக, மதுரை கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக பணி புரிந்த பிரபல பட்டிமன்ற பேச்சாளர் உயர்திரு. தா.கு. சுப்பிரமணியம் அவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார். பட்டிமன்ற நடுவராகவும், பேச்சாளராகவும் ஆயிரக்கணக்கான பட்டிமன்றங்களில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.
இவர்கள் இருவரின் பேச்சை காண வருகை தாருங்கள் நண்பர்களே...
பதிவர்கள் தங்கள் வருகையை உறுதி செய்ய இங்கு க்ளிக்கவும்.
தொடர்புடைய பதிவுகள்:
வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா-மதுரை-26.10.14 சந்திப்பு
வலைப்பதிவர் சந்திப்பு மதுரை - 2014, நன்கொடை அளிக்க விரும்புவோர் கவனத்திற்கு!!!
மதுரை பதிவர் சந்திப்பிற்கு வருகையை உறுதி செய்திருக்கும் பதிவர்களின் முதல் பட்டியல்!
மதுரை வலைப்பதிவர் சந்திப்பு 2014 நிகழ்ச்சிகள் - ஓர் முன்னோட்டம்!!!
வருகையை உறுதி செய்த பதிவர்களின் இரண்டாம் பட்டியல் - மதுரை வலைப்பதிவர் திருவிழா 2014
4 கருத்துரைகள்:
தகவல்களுக்கு நன்றி பிரகாஷ். எனக்கு வர முடியாத சூழல்! :((((
சிறப்பு விருந்தினர்களின் கலக்கலான உரையைக் கேட்க ஆவலோடு இருக்கிறேன் )
த ம 2
சிறப்பு விருந்தினர்களை சிறப்பாக தேர்வு செய்து இருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்! இந்த முறை நேரடி ஒளிபரப்பு உண்டா?
விழா சிறக்கட்டும்
மதுரையில் சந்திப்போம்