CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



பந்தி நாகரீகம் தெரியுமா?

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg

முன் குறிப்பு:
ஒரு பதிவரின் பதிவில் கருத்துரை மட்டுறுத்தல் இருந்தும் நான் பகிர்ந்த கருத்துரைகள் அந்தப் பதிவரால் வெளியிடப்பட்டது. அப்படியிருக்கையில் கீழ்க்கண்ட கதை சற்று சுருக்கமாக அங்கே கருத்துரையில் பதிந்திருந்தேன். ஆனால் கருத்துரையில் வெளியிடப்படவில்லை. ஆபாசமாகவோ, நா கூசும் வார்த்தைகளோ, இல்லாமல் இருந்தும் வெளியிடப்படாமல், மாறாக மட்டுறுத்தல் மூலம் எனது கருத்துரை நீக்கப்பட்டது. அதற்கு அவர் கூறிய காரணம் "சைவம் சாப்பிடும் பழக்கம் கொண்ட எனக்கு இந்த சைவ/அசைவ கருத்துரையை வெளியிட விருப்பம் இல்லை" என்பதாகும். ஆகையால் எனது கருத்துரை அன்றே வெளியாகி இருந்தால் இப்போது இந்தப் பதிவுக்கு அவசியமே இருந்திருக்காது. இப்போது இந்த தகவலைக் கூற காரணம், எனது இந்தப் பதிவை ஒருவர் பதிவுலகில் அநியாயம் என்ற தலைப்பில் பதிவாக பகிர்ந்ததே காரணம். சரி, வாங்க பந்தி கதைக்கு போகலாம்.
*************
ஒரு ஊர்ல மக்கள் பெருமையாய் போற்றும்படி, காசி என்பவர் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். அவர் மக்களுக்கு தேவையான உதவிகள் செய்வதோடு, அவர்களுக்கு தமது வீட்டில், நிலத்தில் வேலையும் கொடுத்து வந்தார். அவர்களும் ஆர்வமுடன் வேலைகளை செய்து அவர்களும் வாழ்வில் முன்னேற்றம் கண்டு, முதலாளிக்கும் நற்பெயரை வாங்கித் தந்தார்கள். அவர்களுக்கு அடிக்கடி விருந்து வைத்து நன்முறையில் உபசரிப்பார். மக்களும் வயிறார உண்டு திருப்தியாக காசியை போற்றி புகழ்ந்து செல்வார்கள். 


இப்படி விருந்தோம்பல் நன்முறையில் நடந்து கொண்டிருந்த சமயம் யார் கண் பட்டதோ தெரியவில்லை, காசியால் விருந்தை தொடர்ந்து நடத்த முடியாத சூழ்நிலைக்கு ஆளானார். மக்களும் சிறப்பான விருந்தை ருசித்து பழகியதால் மிகுந்த ஏக்கம் கொண்டனர். காசியிடம் விருந்து எப்போது என உரிமையுடன் கேட்கத் தொடங்கினார்கள். இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் வழக்கம் போல சைவ உணவில் பல வகையான கூட்டு பொரியல், பலகாரங்கள், உணவுப் பதார்த்தங்கள் என அனைவரும் உண்ணும் வண்ணம் பரிமாறப்பட்டது. 

மக்களும் மகிழ்ச்சியாக உணவை ருசித்துக் கொண்டிருந்த வேளையில் ஒருவன் கையில் பெரிய பார்சலோடு வரிசையில் உள்ளவர்களைத் தள்ளிக் கொண்டு ஓரிடத்தில் உட்கார்ந்து "எனக்கு அசைவம் தான் பிடிக்கும், எவனும் எதுவும் கேட்கக் கூடாது"என கொக்கரித்துக் கொண்டே பார்சலை பிரித்தான். அவனும் அந்த ஊரைச் செர்ந்தவனானதால் மக்களும் அவனிடம் வெளியே போகச் சொல்லாமல் அவன் செயலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவனும் அசைவ சாப்பாடை அவன் அமர்ந்திருந்த இடமே சிதறும் வகையில் பரபரவென அள்ளி தின்று கொண்டிருந்தான். அவனும் அருகிலிருந்த மக்களிடம் அசைவ உணவை உண்ணுமாறு வற்புறுத்த ஆரம்பித்தான்.

இந்நிலையைக் கண்ட காசி மனம் வெதும்பி அவனை அந்தப் பந்தியிலிருந்து வெளியேற்ற வேலையாட்களுக்கு உத்தரவிட்டார். அவர்களும் அவன் செயலைக் கண்டித்து எச்சரித்தார்கள். ஆனால் அவன் அசைவத்தை விட்டபாடில்லை. பந்தியில் பார்சலை காலி செய்த பின்னரே செல்வேன் என வம்பு பிடித்தான். ஆனால் வேலைக்காரர்கள் பொது மக்கள் பசியால் வாடுவதைக் கண்டு அவனை  வெளியேற்ற முயற்சி செய்தார்கள். மக்களும் அவன் பிடிவாதக்காரன், ஆத்திரக்காரன் சொன்ன சொல்லைக் கேட்காதவன், அவனிடம் வம்பு செய்யாதீர்கள் என வேலைக்காரர்களை எச்சரித்தார்கள். ஆனால் வேலைகாரர்களுக்கு முதலாளி சொல்லுக்கு விசுவாசமாய் இருப்பதால் அவனைக் குண்டுக் கட்டாக தூக்கி வெளியே எறிந்தார்கள். சைவ பந்தியில் கலகம் செய்யும் நோக்கோடு அசைவ பார்சலுடன் வந்தவன் ஊர் மக்கள் முன்னிலையில் பந்தியை விட்டு வெளியேற்றப்பட்டான். 

அதன் பிறகே காசி முதலாளி நிம்மதியடைந்தார். பந்தியில் அவனால் ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருந்தால் விருந்தை ஏற்பாடு செய்த முதலாளி மனம் எப்பாடு படும்?  அவனுக்கு அசைவம் பிடிக்குமென்றால் தனியே போயி தின்ன வேண்டியது தானே? பலருக்கும் அசைவம் பிடிக்குமென்றாலும் விருந்தில் என்ன பரிமாறப்படுகிறதோ அந்த உணவைத் தான் உண்ண வேண்டும். அதான் பந்தி நாகரீகம். அந்த அடிப்படை நாகரீகம் இல்லாதவன் உண்டால் என்ன? உண்ணாவிட்டால் என்ன? 

விருந்து என்பது அனைவராலும் விரும்பப்படும் வகையில் இருக்க வேண்டும். விருந்தோம்பல் உறவை வளர்க்க உதவ வேண்டும். மாறாக உறவு கெட்டுவிடக் கூடாது. ஆகவே, விருந்தில் என்ன விதமான உணவுகள் இருக்க வேண்டும் என்பது ஏற்பாட்டாளரின் விருப்பமே தவிர, உண்பவரின் விருப்பம் அல்ல. ஒருவனுக்காக விருந்தையே மாற்ற முதலாளி முட்டாளும் அல்ல.


19 கருத்துரைகள்:

வெட்டிப்பேச்சு said... Best Blogger Tips

புரிந்த மாதிரியும் இருக்கு ஆனா புரியாத மாதிரியும் இருக்கு...

விடுங்க சார். தெளிவாப் பேச எத்தனையோ விசயம் இருக்க. நிம்மதியா சனங்க சாப்பிடட்டும்.

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips

நல்லது... விசுவாசம் என்றால் இப்படித்தான் இருக்கோணும்...!

sury siva said... Best Blogger Tips
This comment has been removed by the author.
”தளிர் சுரேஷ்” said... Best Blogger Tips

இன்னும் இந்த சர்ச்சை ஓயவில்லையா? தொடரவேண்டாம் என்பது என் கருத்து! பின்னர் உங்கள் விருப்பம்! உங்களின் விசுவாசம் தொடரட்டும்! துவேஷங்கள் விலகட்டும்! நன்றி!

தனிமரம் said... Best Blogger Tips

கதை சாப்பாட்டுவிசயம் என்பதால் ரசித்துப்படித்தேன்.

தனிமரம் said... Best Blogger Tips

நல்லா சொன்னீக.

தனி மரம் சார் சொன்னது போல விட்டுட்டு போங்க.//ஏன் சுப்புத்தாத்தா இந்த குசும்பு. வாசிக்கு தனி`மரம் பற்றி நல்லாகவே தெரியும் கருத்து மோதல் வேண்டாம் .பிடித்ததை பகிர்வோம் வலையில் பொதுவில்.

G.M Balasubramaniam said... Best Blogger Tips


G.m. Balasubramaniam
விருந்தை ஏற்பாடு செய்த முதலாளி மனம் எப்பாடுபடும்/இப்போதுமட்டும்...?

KILLERGEE Devakottai said... Best Blogger Tips

Im Coming.......

'பரிவை' சே.குமார் said... Best Blogger Tips

ஏதோ விவகாரம் என்பதை கதை சொல்லுது...
எதுவா இருந்தாலும் விட்டுட்டுப் போங்க... எல்லாம் சரியாகும்...

அப்பாதுரை said... Best Blogger Tips

whoa! இந்தப் பின்னு பின்னுறீங்க? சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
house rulesகளை மதிக்க வேண்டும் என்பதில் எனக்கும் உடன்பாடே. அதே நேரம் நடக்கச் சுதந்திரம் தந்துவிட்டு பக்கவாட்டில் நடப்பது தவறு என்று சொல்வதால் குழப்பம் தானே மேலிடும்?

அப்பாதுரை said... Best Blogger Tips

தமிழ்வாசி.. அழகான பெயர்.

yathavan64@gmail.com said... Best Blogger Tips

விருந்தோம்பல் நாகரிகம் பற்றி நமக்கு எடுத்து சொல்லும் அளவிற்கு போய் விட்டதை எண்ணும் போது மிகவும் வேதனையாகவே உள்ளது.
சபை நாகரிகம் சாக்கு மூட்டையில் கட்டப்பட்டுவிட்டது போல் உள்ளதே!
அவை அடக்கம் மட்டுமே அன்பை வளர்க்கும். த ம +1
நட்புடன்,
புதுவை வேலு

வருண் said... Best Blogger Tips

நீங்க என்ன ரொம்ப அப்பாவியா??? :)))

நீங்க வெஜிட்டேரியன் சாப்பிடுறவாளை எல்லாம் ஒதுக்கி வைக்கக் கத்துக்கணும்! இதையெல்லாம் இவர்களிடம் இருந்து எந்நேரமும் எதிர்பார்க்கணும்/எதிர் பார்த்து இருக்கணும். இவர்கள் "புத்தி" தெரியாமல் இவர்களையும் "நம்முடன்" சேர்த்தது "நம்மைப்போல்" நினத்தது பாவம் உங்க அறியாமை! கற்றுக்கொள்ளுங்கள் இப்பவாது. Be friends with them and keep them closer. Because we need to keep our "enemies" closer than our friends! But NEVER TRUST THEM EVER!!!

* என்னைக்கேட்டால் பார்ப்பனர்களுக்கும்/வெஜிட்டேரின்னு சொல்லிக்கொண்டு அலைபவர்களுக்கும் தனியா ஒரு தமிழ்மணப் பகுதி ஒதுக்கி இவர்களை ஒதுக்கிவிடலாம்.

* வலைச்சரத்தில் இவர் பார்ப்பனர்/வெஜி சாப்பிடுபவர், "அதனால பாம்பிடம் பழகுவதுபோல் கவனமாகப் பழகவும், பின்னூட்டமிடவும்" என்றும் "வான்" பண்ணிவிடலாம். அப்படி செய்தால் இதுபோல் அவமானப்பட வேண்டியதில்லை பாருங்க!

வருண் said... Best Blogger Tips

ஒரு பத்திரிக்கை சட்டதிட்டங்களுக்கேற்பத்தான் அதில் பிரசுரமாகும் கட்டுரைகள் வரும், ஒரு வலைதளத்தின் சட்டதிட்டங்களுக்கேற்பத்தான் அதில் நான்வெஜ் பின்னூட்டங்கள் தவிர்க்கப் படுகிறது, அனானிமஸ் பின்னூட்டங்கள் தவிர்க்கப்படுது.

யாரால்?

அப்பத்திரிக்கை, அவ்வலைதளப் பொறுப்பாளரால்!

வலைச்சரமும் அதேபோல்தான். அதற்கென்று ஒரு சில வரைமுறைகள் இருந்தால் அதை செலக்டிவாக ஒரு சிலருக்காக விலக்குவது தவறு. அது எப்படி என்றால் பெரியவா சங்க்ராச்சார்யாவையும், அம்மையார் ஜெயலகிதாவையும் சட்டம் சரியாக கவனிக்காமல் விடுதலை செய்துவிட்டு அவர்களுக்கென்று தனி சட்டம் என்பது போலாகும். டெமாக்ரசி கொலை செய்யப்படும் அபாயம் இருக்கிறது.

இது ராக்கட் சயண்ஸோ அல்லது மூளையில் அறுவை சிகிச்சையோ இல்லை. சாதாரண ஒண்ணாங்கிளாஸ் பிள்ளைகளுக்குக் கூட டீச்சர் இதுதான் வகுப்பு விதிமுறைகள்னு சொன்னால் புரிந்துவிடும். இதில் வாதம் செய்யவோ விவாதம் எதுவும் இல்லை.

மேலும் வலைச்சரம் ஒரு சில நேரங்களில் இளைப்பாறி ஒரு ப்ரேக் எடுத்து பிறகு தொடர்வது எல்லாம் காலங்காலமாக நடக்குது. என்னவோ நான் எழுதித்தான் வலைச்சரத்தை காப்பாத்தினேன், என் இஷ்டப்படி எழுத விடணும் என்பது போல் பேசுவதெல்லாம் சிறுபிள்ளைத்தனம்.

KILLERGEE Devakottai said... Best Blogger Tips


கதையை நடந்த சம்பவத்துக்கு ஏற்றார்போல் பொருத்தமாக எழுதியமைக்கு மட்டும் எமது வாழ்த்துகள்
வேண்சாமே பணிப்போர் மறப்போம் அனைத்து பதிவர்களுமே....
இதனைக்குறித்து மற்ற பதிவர்களும் எழுத வேண்டாம் 80ம் எமது தாழ்மையான கருத்து.

Manimaran said... Best Blogger Tips

@வருண்
பிரகாஷ் எதற்காக இந்தக் கதையை சொன்னார்.. இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்... என்பது புரியாமல் ஏற்கனவே முழித்துக் கொண்டிருக்கிறேன். இதில் நீர் வேறு வெடியை கொளுத்திப் போடுகிறீர்.. ஆக்சுவலா என்னதான் பிரச்சனை... கொஞ்சம் விளக்கமாக சொல்லலாமே.. பதிவுலகத்தில சண்டை நடந்து ரொம்ப நாட்களாகிறது...:-)

வருண் said... Best Blogger Tips

மணிமாறன்:

1) I just get irritated when people (whoever that may be, I care less) claims something like "I am a vegetarian and so uncomfortable" and so on so forth. It just annoys me. That is why my first response. It has nothing to do with the issue. My theory is that "that is the true color of vegetarian people and it comes out once in a while". But they pretend like "tolerant and magnanimous" for selfish reasons. They are only less than 10%! Mostly they are all highly selfish! So, They need more bloggers and readers for running their life, and SO THEY NEED non-veg- eating people support and responses as they are 90%. So, pretend and act generous and nice but THEY ARE only "pretending". You need to keep that in mind.

2) My second response is about the latest "valaicharam controversy". There is a set of rules for valaicharam invited writers. I beleive it was not followed properly. நம்ம ஊர்ல பெரிய ம்னிதர்கள் சின்னவர்களை எப்போவுமே பெரியவர்கள் ஆகவிடுவதில்லலை. இது ஒரு சாபக்கேடு. They dont know great inventions and discoveries like "youtube" or "facebook" are done by "kids" not by old people!

balaamagi said... Best Blogger Tips

வணக்கம்,
விருந்து என்பது கொடுப்பவரின் விருப்பம், உண்பவருக்கு பிடித்த வகையில்,,,,,,
நன்றி.

Nanjil Siva said... Best Blogger Tips

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்... இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்...

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1