**********************************************************************************
ஆசிரியர் : உன் பேர் என்ன? மாணவன் : எனக்கு அப்பா பேரையே வச்சுட்டாங்க சார் ஆசிரியர் : சரி, உன் அப்பா பேர் என்ன?
மாணவன் : அதான் சொன்னேனே என் பேர் தான் எங்க அப்பா பேரும்.
**********************************************************************************
சுமாரா உங்க நாடகம் எத்தனை மணி நேரம் ஓடும்? ஒரு 2 மணி நேரம் ஒடும்! அப்ப 2 மணி நேரமும் சுமாராத்தான் இருக்கும்னு சொல்றீங்க!
**********************************************************************************
அவர் விபத்துன்னா ரொம்ப பயப்படுவார் அதனால கொஞ்சம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அதிகமாவே இருக்கும்! முன்னெச்சரிக்கைன்னா என்ன செய்வார்? உதாரணத்துக்கு சொல்லணும்னா சலூனுக்கு போகும்போது கூட ஹெல்மெட் போட்டுட்டுத்தான் போவார்னா பாத்துக்கங்களேன்.
********************************************************************************
தலைவர் ஓட்டுக்குப் பணம் கொடுக்கறதை எவ்வளவு நாசுக்காச் சொன்னாரு கவனிச்சியா? கவனிக்கலையே! "என்னை என் குடும்பத்திற்காக உழைப்பவன் என்று கூறுகிறார்கள், நான் என் குடும்பத்துக்கு மட்டுமா சொத்து சேர்க்கிறேன், நாட்டில் உள்ள அனைத்துக் குடும்பத்திற்காகவும்தான் சொத்து சேர்க்கிறேன்"
********************************************************************************
தலைவர்: வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தேங்காய் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன், மறந்துடாதீங்க தேங்காய் சின்னம்... தொண்டர்: தலைவரே! நம் சின்னம் தேங்கய் இல்லை! தலைவர்: எனவே... தேங்காய் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
*********************************************************************************
ஏன் தலைவர் அந்த பாடலாசிரியரைப் போய் அடிக்கறாரு? கட்சிக்குத் தேர்தல் பிரச்சாரப் பாட்டு எழுதும்போது 'விவசாய வட்டி ரத்தானது ஜோர் ஜோர்தான்' அப்படீன்னு எழுதறதுக்குப் பதிலா 'விவசாயிகளுக்கு ரத்தானது சோறு சோறுதான்'-னு எழுதிட்டாராம்...!
*********************************************************************************
13 கருத்துரைகள்:
முதல் வருகை
அப்ப இரண்டாம் இடத்தில் நான்...
இரண்டாவது வருகை?இன்னிக்கு வடைகிடையாது.வெள்ளிக் கிழமை அதனால் பாயசம் தான்!!!!!!!!!!
நல்லா நகைச்சுவை துணுக்குகள்..
அண்ணே சூபருன்னே!
Good jokes
சில ஜோக்ஸ் நல்லா இருக்கு!
>>
ஆசிரியர் : உன் பேர் என்ன? மாணவன் : எனக்கு அப்பா பேரையே வச்சுட்டாங்க சார் ஆசிரியர் : சரி, உன் அப்பா பேர் என்ன?
மாணவன் : அதான் சொன்னேனே என் பேர் தான் எங்க அப்பா பேரும்.
haa haa ஹா ஹா செம
ஜோக்ஸ் எல்லாம் சூப்பர்....
//சுமாரா உங்க நாடகம் எத்தனை மணி நேரம் ஓடும்? ஒரு 2 மணி நேரம் ஒடும்! அப்ப 2 மணி நேரமும் சுமாராத்தான் இருக்கும்னு சொல்றீங்க!// ஹிஹிஹி என்ன எடக்கு முடக்கு...)அனைத்தும் சூப்பர் பாஸ்
இனிமை
எல்லா ஜோக்குமே ரசிக்கும்படியா இருந்தது.
ஹாஹா ரொம்ப நல்ல இருக்கு