CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!

Showing posts with label அன்பு. Show all posts
Showing posts with label அன்பு. Show all posts


இவனா என் நண்பன்?! படங்கள்

நண்பர்கள் தின ஸ்பெஷல்
நம்ம நண்பர்கள் படங்கள் கிடைக்கல. அதான் ஐந்தறிவு நண்பர்களின் படம் போட்டிருக்கேன். ரசியுங்கள்













மேலும் வாசிக்க... "இவனா என் நண்பன்?! படங்கள்"



விடியல் வருமா - கவிதை


வாழ்க்கை என்பது சில நாள் துக்கம்
சில நாள் மகிழ்ச்சி - ஆனால்
சிலரின் வாழ்க்கையில்
சோகம் மட்டுமே - ஆனாலும்
இருட்டில் இருக்கும்
எண்ணற்றோர்க்கு - ஒருநாள் 
விடியல் வரும் என்ற நம்பிக்கையுடன்
நானும் - என் வாழ்நாளில்...!
மேலும் வாசிக்க... "விடியல் வருமா - கவிதை"



நண்பனையும், எதிரியையும் நேசி!


நண்பனையும் நேசி
எதிரியை அதைவிட
அதிகமாக நேசி 
நண்பன் வெற்றிக்கு துணையாக நிற்பான்
எதிரி வெற்றிக்கு காரணமாக இருப்பான்
மேலும் வாசிக்க... "நண்பனையும், எதிரியையும் நேசி!"



வைரமுத்து தன் அம்மாவுக்காக எழுதிய கவிதை - அவரே வாசிக்கும் வீடியோ இணைப்பு

கவிஞர் வைரமுத்து தன் அம்மாவை பற்றி முதன் முதலாக எழுதிய கவிதை வரிகளை அவரே வாசித்து காட்டுகிறார். அந்த வரிகள் உங்களுக்காக இங்கே ஒலி இணைப்பாக இணைக்கப்பட்டுள்ளது. நீங்களும் இந்த கவிதை வரிகளை உங்கள் தாயாரிடம் போட்டு காட்டுங்களேன். மிகவும் அருமையான வரிகள்.
மேலும் வாசிக்க... "வைரமுத்து தன் அம்மாவுக்காக எழுதிய கவிதை - அவரே வாசிக்கும் வீடியோ இணைப்பு"



குருவி கூடு எப்படி கட்டுகிறது?படங்கள் பார்க்க..

இரண்டு குருவிகள் எப்படி தங்கள் கூட்டை எவ்வளவு பொறுமையோடு, ஆசையோடு அழகாக கட்டுகிறது என பாருங்களேன்.


மேலும் வாசிக்க... "குருவி கூடு எப்படி கட்டுகிறது?படங்கள் பார்க்க.."



காதலின் ஆசை

காதல் தோல்வி விரக்தியால் 
என் உயிரை மாய்த்த பின்னரும்
என் இதயம் துடிப்பது மட்டும்
நிற்க கூடாது என ஆசைப்படுகிறேன்
ஆம், அவளை என் இதயத்தில் குடி வைத்துள்ளேன்!
மேலும் வாசிக்க... "காதலின் ஆசை"



அந்த ஒரு நிமிடம் - (கவிதை)


நான் அவளைப் பார்த்த முதல் நிமிடம்
அவளும் என்னைப் பார்த்த முதல் நிமிடம்
ஐயகோ! என் மீது பேருந்து மோதியது அந்த நிமிடத்தில்
ஆமாம், அந்த நிமிடம் அவளை டிராபிக்கில் பார்த்திருக்க கூடாது.
அடிபட்டு சுயநினைவு இழக்கிற அந்த நிமிடம்
எனக்குள் என் அம்மா சொன்னாள்,
ஒரு நிமிடம் பொறுப்பா சாப்பாடு தயாராகி விடும் என காலையிலேயே சொன்னேனே!மகனே!!


மேலும் வாசிக்க... "அந்த ஒரு நிமிடம் - (கவிதை)"



ஏழ்மை - சிறுகதை


மாலை நேரம். சூரியன் மயங்கும் நேரம். உணவுக்காக தன் கூட்டையும், குஞ்சுகளையும் விட்டு உணவு தேடி நெடுந்தூரம் பயணித்த பறவைகள், தங்கள் வசிப்பிடத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தன. பசியினாலும் பெற்றோரின் அரவனைப்பில்லாமல் ஏங்கிக் கொண்டிருந்த குஞ்சுகள் தத்தம் பெற்றோரை பார்த்த ஆனந்தத்தில் கி..கீ..கீச்..கீச்... என ஆராவாரித்து அவர்கள் கொண்டு வந்த உணவுகளை சந்தோசமாக கொத்திக் கொண்டிருந்தன. அக்காட்சியை பார்த்து நாளெல்லாம் இரையை தேடித் தேடி பறந்த களைப்பையும் மறந்து பேரானந்தம் அடைந்தன, பெற்றோர் பறவைகள்.
மேலும் வாசிக்க... "ஏழ்மை - சிறுகதை"



மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வரலாறு

      
        எம்.ஜி.ஆர். என்ற மூன்று எழுத்தால் பாரெங்கும் புகழ்பெற்ற புரட்சித் தலைவர் மக்கள் திலகம் பாரத ரத்னா டாக்டர். எம்.ஜி. இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) என்ற மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் 1917ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் நாள் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார். அவருடைய தந்தையின் மறைவுக்குப் பின் தாயும் மகனும் தமிழகத்தில் கும்பகோணத்தில் குடியேறினார்கள். குடும்ப சூழ்நிலை காரணமாக சிறுவயதிலேயே அவர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். பின்னர் படிப்படியாக உயர்ந்து திரைப்படங்களில் நடிக்கத் துவங்கினார்.
மேலும் வாசிக்க... "மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வரலாறு"



மனைவியும் ஆம்லெட்டும்


என்னம்மா, இத்தனை தொட்டுக்க இருக்கும் பொழுது இப்ப போய் சின்ன வெங்காயம் வெட்டி ஆம்லேட் போட்டுக்கிட்டு இருக்க வாம்மா வந்து உட்கார் எவ்வளோதான் நீ செய்வாய். 
வா, சேர்ந்து சாப்பிடலாம்!

இருங்க உங்களுக்கு தொட்டுக்க ஆலேட் இல்லாம ஒழுங்கா சாப்பிட மாட்டீங்க அதுவும் சின்ன வெங்காயம் வெட்டி போட்டாதான் டேஸ்ட் சூப்பராக இருக்கும் என்று சொல்வீங்க அதுக்குதான்.

இப்படி சொன்னா கல்யாணம் ஆகி ஆறுமாதம் என்று அர்த்தம்!!!
மேலும் வாசிக்க... "மனைவியும் ஆம்லெட்டும்"



பெண்களே! ஆண்கள் ஜொள்ளு விடத் தான் நீங்கள்

           
           பெண்களை ஆண்கள் ரசிப்பதற்கு காரணம் பெண்கள் தான். பெண்கள் என்னதான் அழகாக இருந்தாலும் அவர்களின் நடை, உடை, பாவனை தான் ஆண்களின் ரசனைக்கு முக்கிய காரணம். அதாவது, கழுத்துக்கு மட்டும் பாதுகாப்புக்காக போடும் துப்பட்டா, சாயம் பூசிய உதடுகள், ஆண்களை பார்த்ததும் செவிகளை மறைக்கும் மொபைல் போன்கள், பொது இடங்களில் சிரித்து பேசும் பெண்கள் இவர்களின் மீது தான் ஆண்களின் மோசமான பார்வை முதலில் விழுகிறது.
மேலும் வாசிக்க... "பெண்களே! ஆண்கள் ஜொள்ளு விடத் தான் நீங்கள்"



கிறுக்கலும், சங்கமும்


எல்லா நண்பர்களுக்கும் இனிய வணக்கங்கள். கடந்த புதனன்று  பதிவர் நண்பர் பாலகுமார் அவர்களின் திருமணத்தில் மதுரை பதிவர்களின் சந்திப்பு அய்யா சீனா (CHEENA) தலைமையில் சிறப்பாக நடந்தேறியது. திரு. நேசமிதிரனின் இலக்கிய சுவையிலும்,  பொன்னியின்செல்வன் ( திரு கா. பா.) அவர்களின் நகைச்சுவையிலும் மூழ்கி திளைத்தோம்.
மேலும் வாசிக்க... "கிறுக்கலும், சங்கமும்"



பெண்ணை I LOVE YOU சொல்ல வைப்பது எப்படி? வீடியோ பாருங்கள்


நண்பர்களே! ஒருவன் தான் காதலிக்கும் பெண்ணானவள் எப்படி தன்னிடம்  ஐ லவ் யு சொல்ல வேண்டும் என எதிர்பார்பான்?
  • கடிதம் மூலமாக
  • நண்பர்கள் மூலமாக
  • வாழ்த்து அட்டைகள் மூலமாக
  • வெட்கத்துடன் நேரடியாக
மேலும், இன்னும் பல வழிகள் உள்ளன.
மேலும் வாசிக்க... "பெண்ணை I LOVE YOU சொல்ல வைப்பது எப்படி? வீடியோ பாருங்கள்"



புத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...


சித்தார்த்த கௌதமர், இன்றைய நேபாளத்திலுள்ள, லும்பினி என்னுமிடத்தில், மே மாதத்துப் பூரணை தினத்தில் பிறந்தார். மாயா இவரது தாயார். இவரின் பிறப்புக் கொண்டாட்டத்தின் போது சமுகந்தந்த ஞானியொருவர், சித்தார்த்தர் ஒரு பெரிய அரசனாக அல்லது ஒரு ஞானியாக வருவாரென்று எதிர்வு கூறினார். இவர் பிறப்பதற்கு முன்னரே இவரது தாயாருக்கு ஒரு வெள்ளை யானை வடிவில் தோற்றம் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. கௌதமர் பிறந்த ஏழாவது நாளே அவரது அன்னை இறந்தார். எனவே இவரை இவரது தாயின் தங்கை வளர்த்தார்.
மேலும் வாசிக்க... "புத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்..."



விளம்பரங்களில் நடிக்க கமல் முடிவு


எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுவதற்காகவே இனி நான் விளம்பரப் படங்களில் நடிக்க உள்ளேன் என நடிகர் கமல்ஹாஸன் கூறியுள்ளார்.
 


கமலின் பேட்டி:

எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை. எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தகுந்த சரியான கல்வி, ஊட்டச்சத்தான உணவு மற்றும் மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கச் செய்வது நாம் ஒவ்வொருவரின் கடமை. பொதுமக்களின் ஆதரவு பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தினை உருவாக்கும். ஒவ்வொரு குழந்தைக்கும் கனவுகள் உண்டு. அவர்களின் கனவுகளை நினைவாக்க நாம் அவர்களுக்கு உதவ வேண்டும்.
மேலும் வாசிக்க... "விளம்பரங்களில் நடிக்க கமல் முடிவு"



கவலைப்படாதே சகோதரா!


காட்டில் பலசாலியான ஒரு சிங்கம் இருந்தது. ஆனால், அது எப்போது பார்த்தாலும் கவலைப்பட்டுக்கொண்டே இருந்தது.

"எனக்கு இவ்வளவு பலம் இருந்தும், இரும்பு போன்ற நகங்களும் பற்களும் இருந்தும் என்ன உபயோகம்? கேவலம், இந்தக் காட்டுச் சேவல் கூவுகிற சத்தம் என்னை நடுங்கவைக்கிறது. இப்படிப் பயந்துகொண்டே வாழ்வது ஒரு வாழ்க்கையா? என்று தன்னைத்தானே நொந்து கொண்டபடி இருந்தது.
அதே சமயம், அங்கே ஒரு யானை வந்தது. அது மிகவும் கவலையுடன் தன் காதுகளை முன்னும் பின்னும் அடித்துக்கொண்டே நகர்ந்தது.
அதைப்பார்த்த சிங்கம், "ஏய்........ஜம்போ! உனக்கு என்ன கவலை? யாருமே உன்னை எதிர்த்து ஃபைட் பண்ணமாட்டார்களே! உன் உடலைப் பார்த்தாலே, எல்லா அனிமல்ஸீம் பயந்து ஓடுமே.....எதற்காக நீ கவலையோடு இருக்கிறாய்?" என்று ஆச்சரியத்துடன் கேட்டது.

அதற்கு யானை, "இதோ......என் காது பக்கத்தில் பறக்கும் குளவியைப் பார்த்தாயா? இது என் காதுக்குள் நுழைந்து கொட்டிவிட்டால், அவ்வளவுதான்..........என் உயிரே போய்விடும்! அதற்காகத்தான் இது காதுக்குள் போய்விடாதபடி, காதுகளை ஆட்டிக்கொண்டு கவலையோடு நடக்கிறேன்.........."என்றது.

அது கேட்டு சிங்கம் யோசித்தது. "இவ்வளவு பெரிய உடம்பை வைத்து இருக்கும் யானை கவலைப்படாது என்று நினைத்தால், அதுகூடக் கவலைப்படுகிறதே! அப்படியானால், பூமியில் இருக்கும் எல்லா உயிர்களுக்கும் ஏதாவது ஒரு கவலை இருக்கத்தான் செய்யும் போலிருக்கிறது!
கவலைப்படுவதால் வாழ்க்கை ஒன்றும் நமக்கேற்ற மாதிரி மாறப்போவதில்லை. அது மட்டுமல்லாமல் கவலைப்பட்டு, கவலைப்பட்டு நம் கண்ணெதிரே இருக்கும் ஜாலியான விஷயங்களைப் பார்த்து சந்தோஷமாகக்கூட வாழமுடியாமல் போய்விட்டதே!" என்று அது புரிந்து கொண்டது.

அன்றிலிருந்து அது கவலைப்படுவதை விட்டுவிட்டு, ஜாலியாக வாழத் தொடங்கியது!
மேலும் வாசிக்க... "கவலைப்படாதே சகோதரா!"



நட்பா? காதலா?

     
நெருங்கிய நட்பில் காதல மலர்வது சற்றுச் சங்கடமானது. ஆனால் நெருக்கமான பழக்கம் தானே காதலாகிறது? உங்கள் நண்பர் அல்லது தோழி உங்களை சாதாரண நண்பனுக்கும் மேலாக நினைக்கிறாரா? அதை தெரிந்து கொள்வது எப்படி? அதற்கு உங்களுக்கு உதவும் சில குறிப்புகள் இதோ...

       அவ்வப்போது அவர் உங்களைத் தேடுவார். நீங்கள் அவருடன் இல்லாத போது அவர் உங்களை மிஸ் செய்கிறார் என்று அர்த்தம். உங்களைப் பற்றி அதிகம் சிந்திக்கிறார் என்பதும் இதில்  தெரியும்.

      எப்போதும் உங்களுடன் நேரத்தைக் கழிக்க விரும்புவார். எபோதும் உங்களைப் பார்ப்பது அவருக்கு சந்தோஷ மனநிலையை ஏற்படுத்தும்.

      அவ்வப்போது  ஏதாவது உங்களுக்கு கொடுப்பார். அவ்வப்போது  உங்களுக்கு அன்பாக எதையாவது அளிக்கிறார் அல்லது எதையாவது அனுப்பி வைக்கிறார் என்றால், நமது உறவு நட்பையும் தாண்டியது என்று அவர் உங்களுக்கு உணர வைக்க முயலுகிறார் என்று அர்த்தம்.

       நண்பர் அல்லது தோழி உங்களை அதிகம் சீண்டி விளையாடுகிறார், கிண்டலடிக்கிறார் என்றால், அவர் உங்கள் பால் ஈர்க்கப்படிருக்க வாய்ப்பு இருக்கிறது.

       நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்கிறார், நீங்கள் சோர்ந்து இருக்கும் பொது காரணம் என்வென்று கேட்டு துளைக்கிறார் என்றால் அவர் உங்களுக்கு இனிமையான துணையாக இருக்க நினைக்கிறார், நட்பை தாண்டி உங்களைப் பார்கிறார் என புரிந்து  கொள்ளுங்கள்.

         நட்பிற்கும், காதலுக்கும் நுழிலை தான் வித்தியாசம், அதனால் ஒருவரை நன்றாக புரிந்து கொள்ளும் முன்பு நட்பை காதலாக நினைத்து கணக்கு போட்டு விடாதீர்கள். ஏன் என்றால் பலரும் காதலை விட நட்புக்குத்தான் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
மேலும் வாசிக்க... "நட்பா? காதலா?"



ஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME

            
  ஆண்களுக்கு எப்போதுமே உதடுகளை குளிப்பாட்டி எடுக்கும் அளவுக்கு முத்தமிடுவதான் பிடிக்கிறது. இதற்கு ஒரு காரணம் இருக்கிறது என்பதை சிபிஐ வைக்காமலேயே ஆராய்ந்து கண்டுபிடித்திருக்கிறார்கள்.
        பெண்களின் உதடுகளில் தங்களது உதடுகளால் அபிஷேகம் செய்யும்போது, பெண்களிடம் உள்ள அன்பின் அளவை அறியும் முயற்சியாகவே ஆண்களுக்கு ஈர முத்தம் பிடிக்கிறது என்று கூறுகிறது அந்த ஆய்வு.  ஆண்களின் இந்த முத்தத்தில் காதல் மட்டுமல்ல, கொஞ்சம் ஆராய்ச்சியும் இருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.





           நம்ம ஆளு வளமையானவளா, செழிப்பானவளவா என்பதை அறியும் ஆராய்ச்சிதானாம் இது. இதுகுறித்து ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளரான ஹெலன் பிஷர் கூறுகையில், வெறும் முத்தத்தோடு நிற்காமல் உதடுகளால் துளாவுவதைத்தான் ஆண்கள் அதிகம் விரும்புகிறார்கள்.  அந்த முத்தம் எவ்வளவுக்கு ஆழமாக, இருக்கிறதோ அந்த அளவுக்கு ஆண்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.




         இன்னும் ஒரு காரணமும் அதில் இருக்கிறது. அது, பெண்ணின் உணர்ச்சிகளைத் தூண்டுவிக்கும், டெஸ்டோஸ்டிரானை தங்களது முத்தத்தின் மூலம் பார்ட்னரிடம் அனுப்பி விடும் உத்திதான் அது. முத்தத்தின் மூலம் தனது காதலி அல்லது மனைவியை வசியப்படுத்தி விட வேண்டும், மற்றவை அப்போதுதான் எளிதாக இருக்கும் என்ற எண்ணமும் கூட ஆண்களின் இந்த வெட் முத்தத்திற்கு ஒரு காரணம் என்கிறார் ஹெலன்.
           அமெரிக்காவின் பென்சில்வேனியாவின் ஈஸ்டன் நகரில் உள்ள லபாயெட் கல்லூரியின் ஆய்வாளரான வென்டி ஹில் என்பவர் கூறுகையில், ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி முத்தம்தான் எல்லாவற்றுக்கும் ஆரம்பம். அதை நம்பிக்கையின் வெளிப்பாடாகவும் கருதுகிறார்கள்.




            எந்த அளவுக்கு முத்தம் ஆழமாகவும், தீவிரமாகவும் இருக்கிறதோ அதை வைத்து தங்களது பார்ட்னரின் நம்பகத்தன்மையை அறிந்து கொள்ள முடியும் என்பது ஆண் மற்றும் பெண்களின் நம்பிக்கை.  ஒரு உறவு சிறப்பாக அமையும் போது அது அருமையான பழக்கமாக மாறுகிறது. ஆனால் உறவில் லேசான விரிசல் வந்தாலும் கூட அதை ஒட்ட முடியாத கண்ணாடிச் சிதறல்களுடன் ஒப்பிடலாம் என்கிறார் பிஷர்.



 - மீனகம்--
மேலும் வாசிக்க... "ஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1