CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



BLOG எழுத, படிக்க என்ன Ph.D பட்டமா முடிக்கணும்?!



            என்னங்க, பதிவின் தலைப்பை பார்த்து யோசிக்கறீங்களா? ப்ளாக் எழுத, படிக்க என்ன Ph.D பட்டமா முடிக்கணும்னு நினைகிறீங்களா?  நான் அப்படி சொல்ல வரவில்லை. ப்ளாக் எழுதுறவங்க அவங்களுக்குனு ஒரு ஸ்டைல் வச்சிருப்பாங்க,ஒவ்வொருவரும் தனித் தனித் துறையில் திறமையா இருப்பாங்க. வாசிக்கிற நாமளும் அவங்க அளவுக்கு திறமையா இருக்கணும்னு அவசியமில்ல. ஒரு சில அடிப்படையான விசயங்களையாவது தெரிஞ்சு வச்சிருக்கணும். அப்ப தான் பதிவுக்கான சரியான கருத்து சொல்ல முடியும். அப்படியிலாம நாமளும் கருத்து சொல்றோம்னு என்னத்தையாவது சொல்லக் கூடாது.
மேலும் வாசிக்க... "BLOG எழுத, படிக்க என்ன Ph.D பட்டமா முடிக்கணும்?!"



ஓட்டு போட இது ரொம்ப முக்கியம்!

     வாக்குப் பதிவு நடக்கும் நாளில் வாக்களிக்க செல்லும் வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள, தேர்தல் ஆணையம் வழங்கிய புகைப்படத்துடன்கூடிய வாக்காளர் அடையாள அட்டை, தேர்தல் ஆணையத்தால் தற்போது வழங்கப்பட்டு வரும் புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கண்டிப்பாக எடுத்து செல்ல வேண்டும். இந்த இரண்டு ஆவணங்களில் ஏதாவது ஒன்றுகூட இல்லை என்றால் வாக்களிக்க முடியாது.
மேலும் வாசிக்க... "ஓட்டு போட இது ரொம்ப முக்கியம்!"



எனக்கும், என் வலைப்பூவுக்கும் அரசியல்வாதி கொடுத்த மிரட்டல்!

    இந்த ரெண்டு நாளா நான் நிம்மதியாவே வேலை பாக்க முடியல. தொடர்ந்து பல நம்பர்ல இருந்து பல மிஸ்டு கால் வந்துக்கிட்டே இருந்துச்சு. பொதுவா நான் மிஸ்டு கால் வந்தாலே நான் கண்டுக்கிற மாட்டேன். ஆனா தொடர்சியா பல நம்பர்களிளிருந்து வந்ததால ஒரு நம்பருக்கு கால் பண்ணினேன்.

ஹலோ... யாருங்க இத்தன மிஸ்டு கால் கொடுக்கிறது?  ரொம்ப டார்ச்சர் பன்றிங்களே! என கேட்டது தான் மிச்சம்... அந்த பக்க போன்ல இருந்து ஒரு கர கர குரல்.  நீ தான் தமிழ்வாசி பிரகாஷா? என கேட்க, நானும் , ஆமா, நான்தான் பிரகாஷ் பேசுறேன், என்ன விஷயம்? என கேட்டேன்.
எதிர் தரப்பில், இங்க பாரு தம்பி! எங்க தலைவர் விஜயகாந்துக்கு எதிரா உன் ப்ளாக்கில் எழுதிக்கிட்டு இருக்க? இது நல்லாயில்லை. நானும் பாத்திக்கிட்டு தான் இருக்கேன். ரெண்டு மூணு மாசமா விஜயகாந்த் யாருடன் கூட்டணி சேருவார்?  அப்படின்னு நீயா ஒரு கருத்து கணிப்பு போட்ட? அப்புறம் என்னானா? விஜயகாந்த் ஜெயலலிதா கிட்ட கூட்டணி சேர்ந்தது சரியா? தவறா?  அப்படின்னு இப்ப கருத்து கணிப்பு நடத்திக்கிட்டு இருக்க... என்ன தம்பி நெனச்சிக்கிட்டு இருக்க? சரி போனாப் போகுதுன்னு விட்டா விஜயகாந்த், பிரேமலதா பிரச்சாரம் அப்படின்னு ஒரு பதிவு போட்டு அதுல காப்டன் டிவி இல வந்த வீடியோவை போட்டிருக்க. சரி அதோட நிறுத்திக்கிருவேன்னு பாத்தா வடிவேலு, எங்காள பத்தி நக்கலா கமென்ட் அடிச்சதையும், வீடியோ படமாவும் செய்திகளாவும் போட்டு நாரடிக்கிற..." என போதையில் கரகரத்தது ஒரு குரல். அப்புறம் என்னென்னமோ உளறினான்.
நாமெல்லாம் யாரு... கண்டவிங்க பேச்சை காதுல வாங்கிக்கிற மாட்டோம்ல... நம்ம வேலைய நாம கரட்ட பாப்போம்ல...
மேலும் வாசிக்க... "எனக்கும், என் வலைப்பூவுக்கும் அரசியல்வாதி கொடுத்த மிரட்டல்!"



வடிவேலுவின் கேப்டன் மீதான நக்கல் பிரச்சாரத் தாக்குதல் - வீடியோ

ஒரு பிரச்சாரத்தில் நடிகர் வடிவேலு கேப்டனின் பேச்சு உளறிய பிரச்சாரத்தை நக்கலடித்து பேசினார். அதன் விவரம் பின்வருமாறு:


     கேப்டனு நா மனுசனா? நீ மனுசனா? ஐயா கேப்டனு ஒன் எடம் உனக்கு மட்டுமா போச்சு. எத்தன ஏழ விவசாயிகளோட நிலமும் போச்சு. இப்படி நெலம் போனதுக்கு கட்சி ஆரம்பிச்சா, ஒவ்வொரு வெவசாயியும் ஒரு ஒரு கட்சி ஆரம்பிக்க வேண்டியது தான். புதுசு புதுசா சின்னம் வச்சுக்கிற வேண்டியது தான்... இந்தாய்யா நானும் இப்ப கட்சி ஆரம்பிக்கிறேன். என் கட்சி சின்னம் கொய்யாப்பழம். இப்படி கட்சி ஆரம்பிச்சா எத்தன பேரு ஆரம்பிக்கறது?
மேலும் வாசிக்க... "வடிவேலுவின் கேப்டன் மீதான நக்கல் பிரச்சாரத் தாக்குதல் - வீடியோ"



CSK திடுக் திடுக் வெற்றி - வீடியோ ஹைலைட்ஸ்

         ஐபிஎல் 4வது சீசன் தொடக்க ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ் 2 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. அனிருதா ஸ்ரீகாந்த் 64 ரன் விளாசினார். சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில் டாசில் வென்ற சென்னை அணி முதலில் பேட் செய்தது.

            தொடக்க வீரர்களாக முரளி விஜய், அனிருதா ஸ்ரீகாந்த் களமிறங்கினர்.

மேலும் வாசிக்க... "CSK திடுக் திடுக் வெற்றி - வீடியோ ஹைலைட்ஸ்"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1