CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



நீங்க மனுஷனா இல்லையா? தெரிஞ்சுக்க 20 கேள்விகள்

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
 நீங்க மனுஷனா இல்லையா? தெரிஞ்சுக்க 20 கேள்விகள் உள்ளன. விடைகளை நீங்களே சொல்லுங்கள்.
1. பொது இடங்களிலோ அல்லது சாதாரணமாகவோ நகத்தைக் கடிக்கும் பழக்கம் இருக்குதா?


2. பலரின் முன்னிலையில் பல் குத்தும் பழக்கம் இருக்குதா?


3. சாப்பிடும் போதோ அல்லது தண்ணீர் அருந்தும் போதோ, அருவருப்பான சத்தத்தை ஏற்படுத்தும் பழக்கம் இருக்கா?


4. பொது இடத்தில மூக்கு நோண்டும் பழக்கம் இருக்கா?


5. பொது இடத்தில சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருக்கா?


6. பொது இடத்தில எச்சில் துப்பும் பழக்கம் இருக்கா?


7. மொபைல் அல்லது தொலைபேசியில் பேசும் பொது, பிறருக்கு தொந்தரவு ஏற்படும் வகையில் மிகவும் சத்தமாக பேசும் பழக்கம் இருக்கா?


8. சாலையை நினைத்த இடத்தில் கடக்கும் பழக்கம் இருக்கா?


9. ஒருவர் அமர்ந்திருக்கையில் அவருக்கு முதுகு காட்டி அமரும் பழக்கம் இருக்கா?


10. அலுவலக மேசையின் மீது அமர்தல் பழக்கம் இருக்கா?


11. பெண்கள் முன்பாக இரட்டை அர்த்த விஷயங்கள் மற்றும் நகைச்சுவையாக பேசும் பழக்கம் இருக்கா?


12. ஒருவரின் உடல் ஊனம் அல்லது அறியாமையை பார்த்து கிண்டலடிபீர்களா?


13. பூங்கா போன்ற இடங்களில் புல் மீது நடப்பீர்களா?


14. ஒரு தெருவில் அல்லது பலர் வரும் வழியில் நண்பர்களுடன் நடந்து போகும் பொது பிறரைப் பற்றிக் கவலைப்படாமல் பாதையை ஆக்ரமித்துக் கொண்டு செல்லும் பழக்கம் இருக்கா?


15. வரிசை இருக்கும் இடத்தில் அதை மதிக்காமல் நடந்து கொள்வீர்களா?


16. ஒரு கலந்துரையாடலில், பிறரை பேசவிடாமல், தானே முந்திக் கொண்டு பேசுவீர்களா?


17. ஒரு பேருந்திலோ அல்லது ரயிலிலோ பயணம் செய்யும் போதோ, வயதானவர்கள் அல்லது மாற்றுத் திறனாளிகள் வந்தால் அவர்களுக்கு எழுந்து இடம் விடாமல் அமர்ந்திருப்பீர்களா?


18. தடை செய்யப்பட்ட இடத்தில் மற்றும் பிறருக்கு தொந்தரவான பொது இடத்தில் புகை பிடிப்பீர்களா?


19. பிறரின் அறை அல்லது வீட்டினுள் அனுமதியின்றி நுழைவீர்களா?


20.வீண் வதந்தியைப் பரப்புவீர்களா?

     இப்படி பல கேள்விகளை அடுக்கி கொண்டே போகலாம். இந்த மாதிரியான கேள்விகளை உங்கள் மீது ஏற்படாமல் பார்த்துக் கொண்டீர்களானால் சமூகம் விரும்புவர்களாக நீங்கள் இருப்பீர்கள். 




29 கருத்துரைகள்:

சக்தி கல்வி மையம் said... Best Blogger Tips

ஆமா சமூகம் முதல்ல உன்னை விரும்புதா?

Unknown said... Best Blogger Tips

கெட்டவை இருபதை விட்டுவிட்டால்..
இனியவை நாற்பது வரும்...

Sivakumar said... Best Blogger Tips

ஒண்ணுமே பண்ணாம இருங்கன்னு சொல்ல வர்றீக..

Admin said... Best Blogger Tips

ஒவ்வொரு மனிதனும் மேலே சொன்னதில் பாதியை செய்து கொண்டுதா இருக்கிறான்..திருத்திக்கொண்டால் மேலும் சிறப்படைவான்..


வாக்கு (in 4-TT-5)
அன்போடு அழைக்கிறேன்..

மௌனம் விளக்கிச் சொல்லும்

ADMIN said... Best Blogger Tips

நல்லதொரு எண்ணங்களை கேள்விகளாக்கி பதிவிட்டமைக்கு நன்றி பிரகாஷ் அவர்களே..!!

ஒவ்வொருவரும் இப்படி இருந்து விட்டால் போதுமே..!!! நாடு நலம் பெறும்..!!

சம்பத்குமார் said... Best Blogger Tips

நச் கேள்விகள்..

வாசிக்கும் மனிதனை சுயபரிசோதனை செய்ய வைக்கின்றன..

சூப்பர்..வாழ்த்துக்கள்

சம்பத்குமார் said... Best Blogger Tips

ஹெட்டர் பேனர் சூப்பருங்கோ..

முத்தரசு said... Best Blogger Tips

3/20 அப்ப நா பாஸ் தானே - அந்த மூனையும் விட்ட்ருவோம்லே 20/20தான்

Unknown said... Best Blogger Tips

சரிதான்...

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

இந்த விஷயங்களை பின்பற்றாமல் இருந்தாலே பாதி பிரச்சினை தீர்ந்துவிடும்...!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips

தெரிந்த விஷயங்கள்தான்னாலும் அனைவரும் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியவை!

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

இவ்வளவு கேள்விகள் கேட்குறியே நீ மனுஷனா...

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

இவ்வளவு கேள்விகள் கேட்குறியே நீ மனுஷனா...

Unknown said... Best Blogger Tips

சுய பரிசோதைனை செய்து கொள்ள
தேவையான கேள்விகள்!
நன்று! நன்றி!

புலவர் சா இராமாநுசம்

தினேஷ்குமார் said... Best Blogger Tips

ஞாபகம் வருதே....

rajamelaiyur said... Best Blogger Tips

நான் ரொம்ப நல்ல மனிதன் ..20/20

rajamelaiyur said... Best Blogger Tips

இன்றய ஸ்பெஷல்


நடிகர் விஜய்யின் நண்பன் சிறப்பு போட்டோ பதிவு

cheena (சீனா) said... Best Blogger Tips

அன்பின் பிரகாஷ் - நான் பதில் சொல்ல்லிப் பாத்தேன் - என்னை சமூகம் விரும்புகிறது - நீயும் விரும்புகிறாய் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

கோகுல் said... Best Blogger Tips

நீங்க கேட்டதில் மூன்று கேள்விக்கு என்னிடம் ஆம் என்ற பதில் இருக்கிறது.
எது ன்னு கேக்காதீங்க சீக்கிரம் இல்லைன்னு சொல்ல பழக்கப்படுத்திக்கிறேன்.

இது வரைக்கும் யாரும் இப்படி கேக்காதததுனால இப்படி.நீங்க கேட்டுட்டீங்க.இனிமே எல்லோரும் மனுஷன்தான்.ஓகே.

ad said... Best Blogger Tips

அப்ப ஒலகத்துல மனுஷங்களே இல்லயா?

Yoga.S. said... Best Blogger Tips

இரவு வணக்கம்,பிரகாஷ்!இனிய நத்தார் வாழ்த்துக்கள்.பாதி ஓ.கே!மீதி?????

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips

அருமை!
பகிர்விற்கு நன்றி நண்பரே!
கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!

இராஜராஜேஸ்வரி said... Best Blogger Tips

இப்படி பல கேள்விகளை அடுக்கி கொண்டே போகலாம். இந்த மாதிரியான கேள்விகளை உங்கள் மீது ஏற்படாமல் பார்த்துக் கொண்டீர்களானால் சமூகம் விரும்புவர்களாக நீங்கள் இருப்பீர்கள்

arumaiyaana pakirvu..

வெளங்காதவன்™ said... Best Blogger Tips

:-)

Anonymous said... Best Blogger Tips

எப்பிடியெல்லாம் கிளம்பிளாங்க... இப்பிடி எத்தின பேர் கிளம்பியிருக்கிறீங்க...???

இன்று என் பதிவுகள்...---

கிறிஸ்மஸ் வாழ்த்தும்... சுனாமி நினைவும்...
நண்பன் Trailer

அம்பாளடியாள் said... Best Blogger Tips

சகோ கல்லைக் குடுத்தே அடி வேண்டுவது என்னும் பதம்
குறிப்பது இதைத்தானா ?......ஹா ..ஹா ....ஹா ...........உங்களுக்கு
இன்னொரு விசயம் சொல்ல வேண்டும் .நாட்டில மக்கள்
நல்லதை சொன்னாக் கோவப் படுவாங்கள் .இப்ப நீங்க பாக்க
இல்ல ஹா ...ஹா .ஹா ........வாழ்த்துக்கள் சகோ இன்னும்
நல்ல விசயமா எடுத்து விடுங்க .

நாய் நக்ஸ் said... Best Blogger Tips

எல்லாரும் இல்லை என்று சொல்லுவதால் ....உலகம் அழிந்துவிடுமே என்று ...
நான் எல்லா கேள்விக்கும் ஆம் என்று பதில் கூறுகிறேன் ,...
அப்பதானே சுவாரசியம் இருக்கும்....
ஹி ..ஹி....

ராஜி said... Best Blogger Tips

சுயப்பருசோதனை செய்துவிட்டேன். கொஞ்சம் திருந்தனும்போலத்தான் இருக்கு. அதெல்லாம் புது வருசத்துல திருத்திக்குலாம்ன்னு இருக்கேன்.

ப.கந்தசாமி said... Best Blogger Tips

அவ்வளவு மோசம் இல்லைன்னு தோணுது? எதுக்கும் இன்னும் கொஞ்சம் மாத்திப் பார்க்கிறேன்.

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1