டிஸ்கி: நண்பர்களே, கீழ்க்கண்ட உரையாடல் முற்றிலும் கற்பனையே, பெரிய பீப்பா, சின்ன பீப்பா பெயர்களும் கற்பனையே, யாரையும் குறிப்பிடுவன அல்ல.
சின்ன பீப்பா: அக்கா... ஹலோ... அக்கா சீக்கிரம் போனை எடுங்க....
(பெரிய பீப்பா போனை எடுக்கிறார்)
பெரிய பீப்பா: இதோ வந்துட்டேன்டி... என்னடி இந்த நேரத்துக்கு போன் பண்ண மாட்ட? என்ன விஷயம் சீக்கிரம் சொல்லு. எம் புருசன் வர்ற நேரம் சீக்கிரம் சொல்லு...
சின்ன பீப்பா: அக்கா எக்கோ பார்க் போகலாமா வரீங்களா? அன்னைக்கு கூட போன்ல சொன்னேன்ல வீட்டுகாரர் இன்னைக்கு ஆபீஸ்ல இருந்து லேட்டா தான் வருவார். நானும் பசங்கள கூட்டிட்டு போகலாம்னு இருக்கேன்... நீங்க என்ன சொல்றிங்க?
பெரிய பீப்பா: அடியே இப்ப இப்படி திடுதிப்புன்னு சொன்னா எப்படிடி? அவரு கிட்ட ரெண்டு நாளுக்கு முன்னாடியே பிட்டு போட்டு வச்சா தான் கொஞ்சமாச்சும் தலை ஆட்டுவாரு. இப்போ கேட்டா அவ்ளோதான். என்தலை உருளும்.... போடி... சொன்னவ இப்ப சுடுதண்ணி மாதிரி சொல்றியேடி.
சின்ன பீப்பா: அக்கா... ரொம்ப தான் புருசனுக்கு பயப்படுற மாதிரி நடிக்காதிங்க. அதெல்லாம் உங்க மாமியார் கூட வச்சுக்கங்க.
பெரிய பீப்பா: சரி விடுடி.... அவருக்கு போன் பண்றேன்... பசங்க வெளியில கூட்டிட்டு போக சொல்றாங்கன்னு சொல்றேன். என்ன சொல்றார்னு பாக்கலாம்.
(பெரிய பீப்பா அவர் கணவருக்கு போனில் பேசுகிறார்.)
சின்ன பீப்பா: அஞ்சு நிமிஷமாவா பெர்மிஷன் கேட்குற இந்த குண்டம்மா?
(பெரிய பீப்பா கணவரிடம் பேசி முடிக்கிறார். சின்ன பீப்பாவுக்கு போன் செய்கிறார்.)
பெரிய பீப்பா: அடியே சின்ன பீப்பா இன்னைக்கு தாண்டி எம் புருசன் எனக்காக பேசி இருக்கார். போயிட்டு வர சொல்லிட்டார். அவரே போன் பண்ணனும்னு இருந்தாராம். அவருக்கு திடீர்னு ஆபீஸ்ல மீட்டிங் வச்சுட்ட்டாங்கலாம். அங்கேயே டின்னரும் ஏற்பாடு பண்ணி இருக்காங்களாம். நைட் வீட்டுக்கு வர ஒன்பது மணி ஆயிரும்னு சொன்னார்.
சின்ன பீப்பா: அய் ஜாலி சீக்கிரமா பார்க் வந்திடு. நான் இட்லி சுட்டுட்டு கொண்டு வரேன்... நீ சட்னி, சாம்பார் செஞ்சு கொண்டு வந்திரு. பசங்களுக்கு ஊட்டி விட்டுட்டு அப்படியே நாம பேசிகிட்டே சாப்பிடலாம்/
பெரிய பீப்பா: சரிடி... செஞ்சு கொண்டு வந்துறேன். இன்னைக்கு தான் மார்கெட் போயிட்டு வந்தேன்... எல்லாம் பிரஷ்ஷா இருக்கு.
(இருவரும் பத்து நிமிச இடைவெளியில் எக்கோ பார்க் வந்தடைகிறார்கள்)
பெரிய பீப்பா: (போனில்)அடியே எங்கடி இருக்க... நான் டிக்கெட் கவுண்டர் பக்கத்துல இருக்கேன்.
சின்ன பீப்பா: அக்கா அப்படியே ரைட் சைடு திரும்பி பாருங்க. பூ வாங்கிட்டு இருக்கேன். உங்களுக்கும் சேர்த்து வாங்கியிருக்கேன்.
பெரிய பீப்பா: தாங்க்ஸ்டி நான் வாங்கனும்னு நெனச்சேன். நீ வாங்கிட்ட...
சின்ன பீப்பா: அக்கா அந்த வாட்டர் பவுண்டைன் பக்கத்துல உட்காரலாம். அப்படியே இந்த சாரல் தண்ணி நம்ம மேல விழறது இருக்கே... செம ஜாலியா இருக்கும். பசங்களும் விளையாட பால் கொண்டு வந்திருக்காங்க. அவங்க நல்லா என்ஜாய் பண்ணுவாங்க.
பெரிய பீப்பா: என்னடி இப்படி இளச்சு போயிட்ட? என்ன செய்த?
சின்ன பீப்பா: அதெல்லாம் ஒன்னும் செய்யல... காலையில டீ காப்பி சாபிடுரத நிறுத்திட்டேன். அதுக்கு பதிலா கிரீன் டீ குடிக்கிறேன்.
பெரிய பீப்பா: அப்படியா, கிரீன் பத்தி நான் கேள்விபட்டது இல்லை. அது குடிச்சா உடம்பு குறையுமா?
சின்ன பீப்பா: உடம்பு குறையும்னு சொல்ல முடியாது. எடை அளவு சமநிலையில இருக்கும். அப்புறம் சுகர் இருக்கறவங்க, பிரஷர் இருக்ரவங்களுக்கு நல்லது.
பெரிய பீப்பா: ஓ... சரி அதை பால்ல கலந்து தானே சாப்பிடனும்?
சின்ன பீப்பா: இல்லை அக்கா பால் கலக்க கூடாது. கொஞ்சம் தண்ணிய நல்லா கொதிக்க வச்சு அடுப்புல இருந்து இறக்கி கிரீன் டீ இலையை நாலஞ்சு போட்டு அப்படியே ஒரு பத்து நிமிசத்துக்கு மூடி வச்சிரனும். அப்புறமா அதை வடிகட்டி குடிக்கணும். உடம்புக்கு ரொம்ப நல்லது.
பெரிய பீப்பா: எப்படிடி இதெல்லாம் உனக்கு தெரியுது....?
சின்ன பீப்பா: என் புருஷன்தான் வாங்கிட்டு வந்தார். பேப்பர்ல கிரீன் டீ பத்தி போட்டிருந்தாங்கலாம், அபப்டியே என்கிட்டே கூட சொல்லாம ஒரு பாக்கெட் வாங்கிட்டு வந்திட்டார்.
பெரிய பீப்பா: ஓ... அப்படியா, நானும் வாங்கிடறேன்.... நல்லதுன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் யூஸ் பண்ணாம இருந்தா எப்படி?
சின்ன பீப்பா: அப்புறம் வேற என்ன விஷயம்?
தொடரும்...
பதிவின் நீளம் கருதி மீதி அரட்டை அடுத்த பாகத்தில் வெளிவரும்....
17 கருத்துரைகள்:
பதிவின் நீளம் கருதி மீதி அரட்டை அடுத்த பாகத்தில் வெளிவரும்....// இதுல இன்னொரு பாகமா, அரட்டை சுவாரஸ்யமாக,,,
முதல் கமென்ட் டெலீட் பண்ண காரணம் வடை போடக்கூடாதாமே?
பெண்களை பீப்பா என்றழைக்கும் ஆணாதிக்கவாதி தமிழ்வாசியை கடுமையாக கண்டிக்கிறேன்!
சரி, சின்ன பீப்பா பெரிய பீப்பாவெல்லாம் இருக்கட்டும், அந்த நடு பீப்பா எங்கே?
@பன்னிக்குட்டி ராம்சாமி
பெண்களை பீப்பா என்றழைக்கும் ஆணாதிக்கவாதி தமிழ்வாசியை கடுமையாக கண்டிக்கிறேன்!///
அண்ணே..... பெண்களை பற்றியோ, ஆண்களை பற்றியோ தப்பா எழுதல.... அது ஓகே தானே?
கிரீன் டீயில கொஞ்சூன்டு லெமன் விட்டு குடிச்சு பாருங்க அட..அட...
பன்னிகுட்டியண்ணனும்....மலையாளியும்.....
வணக்கம் மச்சி,
நீங்க கற்பனைன்னு சொன்னா நாம நம்பவா போறோம்?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
எங்கேயோ ஒட்டுக் கேட்டிருப்பீங்க போல இருக்கே..
சுவாரஸ்யமான உரையாடல், வட்டார வழக்கு கலந்த மொழி நடை.
அத்தோடு உரையாடலின் வெட்டி அரட்டைக்குள்ளே ஆரோக்கிய வாழ்விற்கேற்ற தகவலையும் சேர்த்திருக்கிறீங்க.
ரசித்தேன்!
பிரகாஷ் டி, வி சீரியல்லாம் நிறைய பாக்க ஆரம்பிச்சுட்டியா?
//பதிவின் நீளம் கருதி மீதி அரட்டை அடுத்த பாகத்தில் வெளிவரும்....//
அரட்ட கச்சேரி தொடரட்டும்..
//ரொம்ப தான் புருசனுக்கு பயப்படுற மாதிரி நடிக்காதிங்க. அதெல்லாம் உங்க மாமியார் கூட வச்சுக்கங்க.//
உண்மைய புட்டு புட்டு வைக்கிறீங்க..
அரட்டைக் கச்சேரி சுவாரஸ்யமாக ஆரம்பித்திருக்கிறது பிரகாஷ். அரட்டையினூடே இப்படிப் பல பயனுள்ள செய்திகளும் வரட்டும். படித்துத் தெரிந்து கொள்கிறோம். மகிழ்கிறோம். உங்களை வாழ்த்துகிறோம். நன்றி!
அரட்டை தூள்!
கிரீன் டீ வகையாறாக்கள் அப்படியே தண்ணீரில் கரைந்து வடிகட்ட தேவை இல்லாமல் வந்திருக்கிறதே, அதை பற்றியும் எழுதுங்களேன்
பெரிய பீப்பா,சின்ன பீப்பா!பேரே ஒரு மார்க்கமா இருக்கே?எனிவே, நல்லாருக்கு!இது விழிப்புணர்வுப் பதிவு தானே? நீங்க கூட கிரீன் டீ தான் குடிக்கிறதா கேள்விப்பட்டேன்,ஹி!ஹி!ஹி!!!!
பொம்பளைங்க சைக்காலஜி நல்லா தெரிஞ்சு வச்சிருக்கீங்களே...
பெண்களை பீப்பா என்று சொல்வதை கண்டித்து மதுரை தமுக்கம் மைதானத்தில் சேலை எரிப்பு போராட்டம் நடத்தப்படும் ஜாக்கிரதை ஹி ஹி...