முல்லைப்பெரியாறு அணையின் நீர் தேக்கும் அளவை குறைக்க வேண்டும், அணை பலவீனமாக இருப்பதால் புதிய அணை கட்ட வேண்டும். நீர்க் கசிவு அதிகமாக உள்ளது. அணை உடைந்தால் கேரளாவின் நான்கு மாவட்டங்கள் அழிந்து விடும் என இப்படியெல்லாம் முட்டுக்கட்டை போட்டு வருகிறது கேரளா அரசு. அவர்கள் கோரிக்கையை நியாயப்படுத்த கோர்ட்டை நாடியது. இதில் முதல் கட்டமாக அணையின் உயர அளவு 120 அடிகள் வரை தான் நீரைத் தேக்க வேண்டும் என்று ஒரு வழக்கு கேரளா அரசால் சுப்ரீம் கோர்டில் தொடரப்பட்டது. அந்த வழக்கில் தமிழகத்திற்கு சாதகமாகவே தீர்ப்பு வந்துள்ளது. கேரளா அரசின் அந்த மனுவை நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தேவையில்லாத கருத்தையும், வதந்திகளையும் கேரளா பரப்புவதாக கோர்ட் கண்டித்துள்ளது.
இந்நிலையில் முல்லைப்பெரியாறு விஷயம் தீவிரம் அடைந்து வருவதால் தமிழக அரசியலில் எல்லா கட்சியினரும் ஒருமித்த கருத்துக்கு வந்துள்ளதாக தெரிகிறது. திமுக, அதிமுக, தேமுதிக, என பல கட்சியினரும் அணைக்காக ஒருமித்த குரல் கொடுக்க தொடங்கியுள்ளார்கள். இது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேனியில் கேரளா அரசிற்கு எதிராக தேனியில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். அதில் அவர் தமிழகம் வஞ்சிக்கப்பட்டு விட்டதாகவும், மத்திய அரசு மெத்தனமாக இருப்பதாகவும் அறிக்கை விடுத்துள்ளார். இதனால் மத்திய அரசின் இந்த போக்கை கண்டித்து தமிழக எம்பிக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். முல்லைப்பெரியாறு தமிழக உரிமை, இந்த உரிமையை யாருக்கும் நாம் விட்டுக் கொடுக்க கூடாது என ஆவேசமாக அறிக்கை விடுத்துள்ளார். மேலும் ஐயப்ப பக்தர்கள் மீதும் தாக்குதல் நடத்தி வரும் கேரளா மக்கள் மீது கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக சொத்தான அணைக்கும், அயப்ப பக்தர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு தவறி விட்டது என மத்திய அரசை சாடியுள்ளார் விஜயகாந்த்.
முதல்வர் ஜெயலலிதா இப்பிரச்சனை காரணமாக தமிழக கட்சியினர் இடையே ஒருமித்த கருத்தை உருவாக்கவும், மேற்கொண்டு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என முடிவு எடுக்கவும் சிறப்பு சட்டசபை கூட்டத்தை இன்று கூட்ட முடிவெடுத்துள்ளார். தமிழக கட்சிகளின் முக்கிய பிரநிதிகள் தீர்மானத்தை கொண்டு வந்து அது பற்றி பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கேரளா அரசை விமர்சிக்காமல் பிரச்சனையை பற்றி மட்டுமே பேச்சுவார்த்தை இருக்கவேண்டுமென அரசு தரப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்ள திமுக தலைவர் சட்டசபைக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் திமுக தரப்பு உற்சாகம் அடைந்துள்ளது.
இன்று நடக்கவுள்ள சிறப்பு சட்டசபை கூட்டத்தில் அனைத்து கட்சியினரும் ஒன்று கூடி ஒருமித்த கருத்து எட்டப்படும் என தெரிகிறது. மேலும் அணை பிரச்சனைகளை எப்படி கையாளலாம் எனவும் விவாதம் நடைபெறும் எனவும் தெரிகிறது. எப்படியோ பெரியாறு அணையை மீட்க அனைத்து கட்சிகளும் ஒன்று கூடியதில் இருந்தே தமிழக தரப்புக்கு வெற்றி கிடைக்கும் என நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இன்றைய பொன்மொழி:
உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். நீங்கள் விரும்பியதைப் பெறலாம்!
இன்றைய விடுகதை:
சங்கரன்கோவில் டப்பா
தாயும் மகளும் தேய்ப்பா. அது என்ன?
விடை அடுத்த இடுகையில்...
விடை தெரிந்தவர்கள் இங்கே கருத்துரையில் பகிர வேண்டாம். எனக்கு மெயில் (admin@tamilvaasi.com) அனுப்புங்கள். சரியாக சொல்பவர்களுக்கு ஒரு மின் புத்தக இணைப்பு அனுப்பப்படும்.
குறிப்பு:
மெயிலில் விடை அனுப்புகிறவர்கள் விடுகதை கேள்வியையும் சேர்த்தே அனுப்புங்கள். சிலர் வெறும் பதில் மட்டுமே அனுப்புவதால் எந்த விடுகதைக்கான பதிலை முயற்சித்து பார்த்திருக்கிறார்கள் என்பதில் சற்று குழப்பம் ஏற்படுகிறது.
முந்தைய இடுகையில் கேட்கப்பட்ட விடுகதைக்கான விடை: உதடு.
11 கருத்துரைகள்:
நல்லது நடந்தா சர்தேன்!
வணக்கம்,பிரகாஷ்!குடுமிபிடி சண்டையை விடுத்து,உருப்படியாக ஏதாவது தீர்மானம் நிறைவேற வேண்டுமென்று வல்லானை வேண்டுவோம்!
எது நடந்தாலும் நல்லது நடந்தா சரிதான்..
தமிழக அரசு எல்லா விஷயத்திலும்தாங்க இப்படி இருக்கு...
இன்று நடக்கவுள்ள சிறப்பு சட்டசபை கூட்டத்தில் அனைத்து கட்சியினரும் ஒன்று கூடி ஒருமித்த கருத்து எட்டப்படும் என தெரிகிறது.
>>
ஹா ஹா செம காமெடி
எல்லாம் ஒண்ணு சேர்ந்து இருக்காங்க..நல்லது நடக்கும்ன்னு நம்புவோம்..
http://www.youtube.com/watch?v=Ne_HtwMBnpg
இதையும் கொஞ்சம் பாருங்கள் தோழரே
இவர்களின் இந்த ஒருமித்த முடிவை வழக்கம் போல கேலி செய்யாமல் ஒரு நம்பிக்கை பதிவு எழுதியுள்ளீர்..நன்றி..நல்லதே நடக்கும் தோழர்..
இன்று என் வலையில்...அவள் அதுவாம்...!...
* வெத்து வேட்டு விஜயகாந்து! எத்தனை படத்தில் தேசபக்தி பேசி தீவிரவாதிகளை அடக்கி இந்தியாவை காப்பாற்றினீர்களே! பாவம் சார் நீங்கள்!
* முல்லை பெரியாறு, கூடங்குளம் ஒருங்கிணையும் தமிழர்கள்! தமிழர் எழுச்சி ஓங்கட்டும்!
* மோதல்களை தடுத்து நிறுத்துங்கள் SDPI ! சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் கோரிக்கை
* தமிழர்களின் எழுச்சியும், ஹிந்துத்துவாவின் ஆர்ப்பாட்டமும்! கூடங்குளம் அணுமின் நிலயத்தை உடனே திறக்க வேண்டும் இந்து மகாசபா ஆர்ப்பாட்டம்!
கிசுகிசு-4
மதுரையில் இருந்து தமிழ் வாசிக்கும் இவர் தன்னுடைய பதிவுகளை எப்படியாவது மகுடம் சூட்டவேண்டும் என்று ஏகப்பட்ட தமிழ்மண கள்ளஓட்டுக்களை கைவசம் வைத்திருக்கிறார். அப்படியிருந்தும் முடியாததலால் நல்ல ஜோசியரிடம் யோசனை கேட்டுவருகிறார். (நல்ல நேரம் சதீஷ் கிட்ட இல்லிங்க நல்ல ஜோசியர்கிட்ட அட சதீஷ் ரொம்ப நல்லவருங்க) தன்னை தமிழகம் முழுவதும் பிரபலபடுத்த கடந்த வாரம் ரகசியமாக சென்னைக்கும் ஒரு விசிட் அடித்துள்ளார்..
http://kavithaiveedhi.blogspot.com/2011/09/blog-post_21.html