CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



நெல்லையில் பதிவர்களின் சந்திப்பு! புதிய பதிவர்களுக்காக மலரும் நினைவுகளாக

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg

இனிய நண்பர்களே,
      நாளை (18-12-2011) ஈரோட்டில் வலைப்பூ, முகநூல், டிவிட்டர் என எல்லாவற்றிலும் கலக்கும் நண்பர்களின் சந்திப்பு இனிதே நடக்க இருக்கிறது. இந்த தருணத்தில் கடந்த ஜூன் மாதம் நெல்லையில் நடந்த பதிவர்களின் சந்திப்பு பற்றி இரண்டு பாகங்களாக பகிர்ந்த இடுகைகளை இங்கே ஒரே பாகமாக பகிர்ந்திருகிறேன். 
        புதிய பதிவர்கள் நிறைய பேர் பதிவுலகில் காலடி வைத்துக் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பலரும் ஈரோடு சங்கமத்திற்கு வருகை தர இருப்பதால், அவர்களுக்கு ஓர் எதிர்பார்ப்பு இருக்கும். ஆகவே அவர்களுக்காக நெல்லை சந்திப்பு பற்றிய பகிர்வை மீள்பதிவாக பதிவிடுகிறேன்.

நேற்று நெல்லையில் பதிவர்கள் சந்திப்பு திரு. சங்கரலிங்கம் அவர்கள் தலைமையில் இனிதே நடைபெற்றது. காலை பத்து மணியளவில் ஒவ்வொருவருக்கும் முகமறியா நண்பர்களாகிய நாங்கள் முகமறிய குடும்பமாக ஒன்று கூடினோம். இதில் சுமார் 5, 6 பெண் பதிவர்களும் அடக்கம்.

வந்திருந்த நண்பர்களை எனக்கு தெரிந்தவரை குறிப்பிட்டுளேன்.
உணவு சங்கரலிங்கம்
வலைச்சரம் சீனா
நாஞ்சில் மனோ
இம்சை அரசன் பாபு
பலாபட்டறை ஷங்கர்
மணிஜீ (தண்டோரா)
பெயர் சொல்ல விரும்பவில்லை
சி பி செந்தில் குமார்
கோமாளி செல்வா
மணி வண்ணன்
தமிழ்வாசி பிரகாஷ்
வெடி வேல் சகாதேவன்
தங்கசிவம்
வெறும்பய ஜெயந்த்
ஷர்புதீன் ( ரசிகன் )
ஸ்டார் ஜான்
ஸ்ரீவில்லிபுத்தூர் ரத்னவேல்
DR.கந்தசாமி.Phd
சித்ரா
கௌசல்யா
ரூபினா
கல்பனா
ஜோஸபின்
இன்னும் பலர் வந்திருந்தார்கள்.


    காலை பத்து மணியளவில் மிதிலா ஹாலில்-A/C பா வடிவ மேசையில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவரை பார்க்கும் வண்ணம் அமர்ந்தோம். திரு. சங்கரலிங்கம் சார் அனைவரையும் வரவேற்று பேசினார். வரிசையாக ஒவ்வொருவரும் தங்களையும் தங்கள் வலைப்பூவையும் அறிமுகம் செய்து கொண்டோம். அட்ராசக்க சி.பி அறிமுகம் அனைவரையும் சிரிக்க வைத்தது. இன்று பதிவு போட முடியவில்லையே என்ற ஏக்கம் அவர் முகத்தில் தெரிந்தது. ஒவ்வொருவரின் அறிமுகமும் மிக நகைச்சுவையாக கலகலப்பாக முடிந்தது. பின்னர் சில்லென்ன லெமன் ஜூஸ் குடித்து முடித்தது தான் தாமதம் கோமாளி செல்வா எழுந்து தன் கோக்கு மாக்கு கடிகளை எங்கள் முன் அவிழ்த்து விட்டார். அதை சொல்ல வேண்டுமானால் தனி பதிவு போட வேண்டி வரும். 
       திரு. சீனா ஐயா அவர்கள் சீனியர் பதிவர்களை பற்றியும் புதிய பதிவர்கள் பற்றியும் பேசினார். பின்னர் ஒவ்வொருவரும் பதிவுலகை பற்றியும், தாங்கள் எப்படி பதிவு எழுத வந்தோம் என்றும், பிறரின் பதிவுகள் தங்களை எப்படி கவர்ந்தன என்பதை பற்றியும் கலந்துரையாடலாக பேசினோம். பலாபட்டறை சங்கர் சீனியர் பதிவர்கள் பதிவெழுதுவதை குறைத்து விட்டார்கள் என ஆதங்கபட்டார். அவர்கள் கூகிள் பஸ்சிலும், டிவிட்டரிலும் தான் அதிகமாக தென்படுகிறார்கள் என குறிப்பிட்டார். இதே கருத்தை மணிஜியும் சொன்னார். சி.பி அவர்கள் தன் பதிவுகள் பற்றியும், ஹிட் பற்றியும் அனைவரும் கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாக நகைச்சுவையாக பதில் சொன்னார். 


சித்ரா அக்கா பேச ஆரம்பிக்கும் போது பதிவர்களிடையே சிரிப்பலை எழுந்து அவரை திக்கு முக்காட வைத்தது. இம்சை அரசன் பாபு அவர்கள் தமிழ்மணத்தின் மணி மகுடமே என வாழ்த்தினார். உங்களுக்கு மட்டும் எப்படித்தான் அவ்வளவு ஓட்டுகளும், கருத்துகளும் வருகிறதோ...என கலாய்த்தார். அதற்கு சித்ரா அக்கா எல்லோருக்கும் கமென்ட் போடுவேன், அவர்களை உற்சாகபடுத்துவேன். அவ்வளவு தான். அதோடு தான் தந்தையின் வழியில் திசை மாறாமல் செல்வதாகவும் சொன்னார்.




        இம்சை அரசன் பாபு தன் பதிவுகளை பற்றி சொல்லும் போது தன் மகளே பதிவுகளுக்கு கருவாக இருந்தாள் என பேசினார். மகளிடம் நிறைய பல்பு வாங்கியதாக நகைச்சுவையாக பேசினார்.
           ஷர்புதீன் - ரசிகன் அவர்கள் பேசிய போது, அவர் ஒரு மாத இதழுக்கு பொறுப்பாக இருப்பதாகவும், தற்சமயம் பொறுப்பெடுத்து நடத்த இயலாத நிலையில் இருப்பதாகவும் ஆதங்கப்பட்டார். யாரேனும் பொறுப்பெடுத்து நடத்தினால் நன்றாக இருக்கும் என வேண்டுகோள் விடுத்தார்.
          பெசொவி பேசிய போது தன் பெயரை ..... என சொன்னார். அவர் தன் பெயரை ஏன் வெளிப்படுத்த விரும்பவில்லை என்பதை குறிப்பிட்டார். நான் சொல்ல மாட்டேன் அவருடைய பெயரை...வெரி சீக்ரெட்...
        ஸ்டார்ஜன் அவர்கள் பேசிய தமிழ் மிக வித்யாசமாக இருந்தது. பதிவு எழுதுபவர்கள் தாங்கள் சொல்ல வந்த கருத்தை பிறருக்கு பாதகம் ஏற்படாமல் சொல்ல வேண்டும் என்றார்.
         கௌசல்யா அக்கா அவர்கள் கழுகு என்ற இணையதளத்தை பற்றி சிறப்பாக எடுத்துரைத்தார். அந்த இணையதளத்துக்காக பிரபல பதிவர்களின் பேட்டி, கட்டுரைகள் தேவை என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
          சகோதரி ஜோஸபின் பாபா அவர்கள் ஈழ தமிழர்கள் வலைப்பூவை எப்படி தாங்கள் ஊடகமாக, செய்திகளை தெரிவிக்கும் பத்திரிக்கையாக பயன்படுத்துகிறார்கள் என்பதை பற்றி சுமார் ஒரு வருட காலம் வரை ஆராய்ச்சி செய்து ஒரு கட்டுரை சமர்திருப்பதாக சொன்னார்.
        
     சகோதரி கல்பனா அவர்கள் தன் பதிவை பற்றி சிறப்பாக எடுத்து சொன்னார். அதோடு அறிவியல் சம்பந்தமாக ஒரு வலைப்பூவும் வைத்திருப்பதாக சொன்னார். இவருக்கும், பாபுக்கும் இடையே கருத்து மோதல்கள் அடிக்கடி வருமாம். சண்டை போடாத குறை தானாம். நல்ல வேளை இந்த சந்திப்பு நடத்த ஏற்பாடு செய்த சமயங்களில் இருவரும் பேசி சமாதானம் அடைந்ததாக சொன்னார். உதவியவர் டெர்ரர் பாண்டியனாம்.
      நாய்க்குட்டி மனசு ரூபினா மேடம் அவர்கள் அப்பாவுக்கு அஞ்சலி என்ற தன் பதிவை பற்றி மிகவும் சிலாகித்து பேசினார்.
             கந்தசாமி ஐயா அவர்கள் தான் பதிவுகளில் ஏன் கமென்ட் பகுதி வைப்பது இல்லை என்பதை விளக்கினார். கமென்ட் வர வர நமக்கு பொறுப்பு கூடுகிறது என பேசினார்.
          நம்ம சி.பி தான் ரொம்ப நேரமா பேசிட்டு இருந்தார். ஆமா தூங்கிகிட்டு இருந்த சிங்கத்தை காபி பேஸ்ட் ஆளுன்னு நம்மாளுக சீண்டி விட சிங்கம் சீறு கொண்டு எழுந்து பேச தொடங்கியது. தான் அனுமதி வாங்கியே அந்த பதிவுகளை காபி பேஸ்ட் செய்வதாகவும், பத்திரிக்கை உலகில் நிறைய ஆண்டுகள் உள்ள பழக்கத்தால் அந்த ஆசிரியர்களிடம் அனுமதி வாங்கியே தன் பதிவுகளில் செய்திகளை பதிவதாக சொன்னார். பதிவின் கீழே நன்றி என போடுகிறேனே எனவும் இதனால் ஒரு பிரச்சனையும் இல்லை எனவும் சொன்னார். அப்புறம் அவரின் தலைப்புகள் பற்றி எல்லோரும் கலாயத்தார்கள். கில்மா, காமடி கும்மி போன்ற தலைப்புகள் அவசியமா என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு சி.பி ஒரு பதிவு நிறைய நண்பர்களை சென்றடைய வேண்டுமானால் தலைப்பு ரொம்ப முக்கியம் என்று சொன்னார். இந்த விஷயத்தை நானும் ஆமோதித்தேன். சுமார் 50 பதிவுகள் வரை ட்ராப்டில் வைத்திருப்பதாக சொன்னார்.
          ஒரு சமூக சேவையில் பங்களிக்கலாம் என எல்லோரும் முடிவு செய்து தங்களால் முடிந்த பண உதவி செய்தோம். இது பற்றிய விளக்கமாக சங்கரலிங்கம் சார் பதிவிடுவார்.
           எல்லோரும் தாங்கள் அனுபவங்களை பகிர்ந்த பின்னர் மதிய உணவு சாபிட்டோம். நல்ல ருசியான உணவு பஃபே முறையில் பரிமாறப்பட்டது. முதலில் சூப், பின்னர் இனிப்புக்கு அல்வா, ரொட்டி நான், பன்னீர் மசாலா , பிரைடு ரைஸ், சாதம், ரசம், தயிர், பொரியல், அப்பளம், ஐஸ் கிரீம், பீடா என மதிய உணவு அருமையான ஏற்பாடாக இருந்தது.
               உணவு முடிந்த பின்னர் எல்லோரும் போட்டோ எடுத்துக் கொண்டனர். அந்த குருப் போட்டோ எடுக்க எங்களை நிக்க வைக்க போடோகிராபர் பட்ட பாடு இருக்கே, பாவம்யா அவர், அங்க தான் நிப்பேன், இங்க தான் நிப்பேன் என நம்மவர்கள் கலாய்க்க, இம்சை அரசனும் கொஞ்சம் இம்சை செய்தார். ஒரு வழியா போட்டோ எடுத்துக் கொண்டோம்.
          குற்றாலம் போக வேண்டிய ஆட்கள் ஆள் சேர்த்து கொண்டிருந்தார்கள். எனக்கு வேலை இருந்ததால் செல்லவில்லை.
இந்த பதிவர் சந்திப்பை மிக சிறப்பாக ஏற்பாடு செய்த உணவுலகம் சங்கரலிங்கம் அவர்களுக்கும், ஏற்பாட்டுக்கு உறுதுணையாக இருந்த சித்ரா அக்கா, கௌசல்யா மேடம், இம்சை அரசன் பாபு, இன்னும் ஏற்பாட்டுக்கு பங்களித்த அனைவருக்கும் எங்கள் கோடான கோடி நன்றிகளை சமர்ப்பிக்கிறோம்.
புகைப்படங்கள்:





நன்றி


27 கருத்துரைகள்:

சம்பத்குமார் said... Best Blogger Tips

வணக்கம் நண்பரே..

பசுமைமாறாத நினைவுகளை பதிவிட்டவிதம் அருமை..

உண்மைதான் எங்களைப்போன்ற புதிய பதிவர்களின் உள்ளங்களில் பதிவர் சந்திப்பில் கண்டிப்பாய் கலந்து கொள்ள ஆர்வத்தை தூண்டுகிறது உங்களுடைய மலரும் நினைவுகள்..

பகிர்ந்தமைக்கு நன்றி

நட்புடன்
சம்பத்குமார்
www.tamilparents.com

ப.கந்தசாமி said... Best Blogger Tips

நல்ல நினைவுகள். திரு.சங்கரலிங்கம் கொடுத்த நிஜ திருநெல்வேலி அல்வாவை இன்னும் மறக்க முடியவில்லை.

மகேந்திரன் said... Best Blogger Tips

வணக்கம் நண்பரே,
அருமையான ஒரு பதிவர் சந்திப்பு.
இதுபோல ஒரு தருணம் வராதா என எண்ணிக்கொண்டிருக்கும்
பதிவாளர்களில் நானும் ஒருவன். அப்போது நான் வலைத்தளம் ஆரம்பித்து
ஒரு மாதமே ஆகி இருந்த நிலை. அதுவுமில்லாமல் வெளிநாட்டில்
பணிபுரிவதால் தவற விட்டுவிட்டேன்.
உங்கள் பதிவை படிக்கையில் நானும் அங்கே இருந்த உணர்வு எனக்கு.

நன்றிகள் பல.

குறையொன்றுமில்லை. said... Best Blogger Tips

ஈரோடு பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள் நல்லபடி சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்.

Admin said... Best Blogger Tips

நினைவுகள் திரும்பிப்
பார்க்கும்போதே சுவைக்கும்..

Unknown said... Best Blogger Tips

ஈரோடு பதிவர் சந்திப்பில் நீங்கள் கலந்து கொள்வதாக கேள்விபட்டேன் அங்கே சந்திப்போம்.....மலரும்நினைவுகள் மீண்டும் மலரட்டும்

சசிகுமார் said... Best Blogger Tips

ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா.... திரும்பவும் முதல்ல இருந்தா....

ராஜி said... Best Blogger Tips

னெல்லை சந்திப்பை பற்றிய பதிவை படிச்சு படிச்சு நம்மாள போக முடியலியேன்னு ஏக்கப்பட்டேன். மீண்டும மற்றொரு சந்திப்பா? பொறாமையா இருக்கு கலந்துக்குறவங்களை பார்த்தால்...,

செல்ல நாய்க்குட்டி மனசு said... Best Blogger Tips

ராஜி நோ சந்திப்பு, ஒன்லி ரீக்கால்

சத்ரியன் said... Best Blogger Tips

பிரகாஷ்,

சந்திப்பை பத்தி எழுதனீங்க சரி.

சாப்பாட்டு வகையறாக்களையும் எழுதி ஏன்யா வயித்தெரிச்சலைக் கிளப்பறீங்க?

(மீள்பகிர்விற்கு நன்றிங்க.)

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

நெஞ்சில் மறையாத மலரும் நினைவுகள் தேனாக இனிக்கிறது நன்றி பிரகாஷ், பதிவர்கள் எல்லாரையும் கேட்டதாக சொல்லுங்கள்...!!!

இராஜராஜேஸ்வரி said... Best Blogger Tips

ஈரோடு பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்

முத்தரசு said... Best Blogger Tips

கேரளாவைச் சார்ந்த ஸ்தாபனங்கள் நகைகடை, துணிக்கடை, ஹோட்டல் உள்ளிட்ட எந்த நிறுவனத்திலும் தமிழர்கள் நுழைய மாட்டோம் என்று தீர்மானம் போட்டு கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக கேரள டீக்கடைகளையும் புறக்கணிக்க வேண்டும்.
அதை விடுத்து கல்லால் அடிப்பதும் கடையை உடைப்பதும் கூடாது.

ரஹீம் கஸ்ஸாலி said... Best Blogger Tips

மலரும் நினவுகளாக இருந்தாலும் அருமை

Unknown said... Best Blogger Tips

நன்றி

vimalanperali said... Best Blogger Tips

நல்ல முயற்சி.வாழ்த்துக்கள்.

KANA VARO said... Best Blogger Tips

அருமையான சந்திப்பாக இருந்திருக்கின்றது.

KANA VARO said... Best Blogger Tips

சுpபியை எப்பிடித்தான் கலாய்ச்சாலும் அவர் அதுக்கெல்லாம் மசியுற ஆளா?

Yoga.S. said... Best Blogger Tips

வணக்கம்,பிரகாஷ்!என்னமோ ஆலமரத்துக்குக் கீழல்ல சந்திச்ச மாதிரி தெரியுது!மரமொண்ணு(இல)தெரியுதே?ஹி!ஹி!ஹி!!!!!(போட்டோல அழகா சிரிக்கிறீங்க!)ஈரோடு பதிவர் சந்திப்பு சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்.

துரைடேனியல் said... Best Blogger Tips

Adutha thadavai vecha sollunga. Naanum varen. Enakku pakkam than Sir. Thoothukudi. Athe pol next year Erode Santhippu Nadantha polamnum irukken. Pakirvukku Nanri.

Anonymous said... Best Blogger Tips

தமிழ் வாசம் மறக்காம் ஆலமரத்தடியிலோ குளக்கரையிலோ உங்கள் சந்திப்பை வைத்திருக்கலாம்... பகிர்வுக்கு நன்றி... தொடருங்கள்... எதிர்பார்க்கிறோம்...

இன்று என் பதிவு:-- வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய முழுமையான அலசல்...

Prem S said... Best Blogger Tips

வாழ்த்துக்கள் கலக்கட்டும்

ad said... Best Blogger Tips

வாழ்த்துக்கள்.

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

நினைத்தாலே இனிக்கும்

Rathnavel Natarajan said... Best Blogger Tips

வாழ்த்துகள் பிரகாஷ்.

unknown said... Best Blogger Tips

அண்ணாச்சி... நானும் திருநெல்வேலி தான்.. இனிமே சந்திப்பு இருந்தா சொல்லுங்க.. என் அண்ணாச்சி... நானும் திருநெல்வேலி தான்.. இனிமே சந்திப்பு இருந்தா சொல்லுங்க.. என் தளத்திற்கும் வாங்களேன்...

unknown said... Best Blogger Tips

அண்ணாச்சி... நானும் திருநெல்வேலி தான்.. இனிமே சந்திப்பு இருந்தா சொல்லுங்க.. என் அண்ணாச்சி... நானும் திருநெல்வேலி தான்.. இனிமே சந்திப்பு இருந்தா சொல்லுங்க.. என் தளத்திற்கும் வாங்களேன்...

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1