ஒரு சிறுவன் சரியான முன் கோபக்காரனாக இருந்தான். அவனை கண்டிக்க நினைத்த அவனது தந்தை அவனை அழைத்து மகனே, இதோ இந்த வெள்ளைச் சுவற்றைப் பார்! நீ ஒவ்வொரு தடவையும் கோபப்படும் போதும் இந்த சுவற்றில் ஒரு ஆணியை அடிக்கப் போகிறேன் என்று சொன்னார். அதிலிருந்து அந்த சிறுவன் ஒவ்வொரு முறை கோபப்ப்படும் போதும் அந்த சுவற்றில் ஆணி அடித்தார் அந்த தந்தை. கொஞ்ச நாளில் அந்த சுவர் முழுசும் ஆணிகளால் நிரம்பியது. அதை பார்த்த சிறுவனுக்கு தனது குற்றம் என்ன என்று புரிந்தது. அதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியாமல் குற்ற உணர்ச்சியால் கூனிக் குறுகி நின்றான்.
அவனாக தந்தையிடம் அப்பா. நான் இனி கோபப்பட மாட்டேன், ஒழுங்காக இருக்கிறேன் என சொன்னான். அவனை பாசத்துடன் அனைத்து நீ கொபப்பட்டதால் நான் சுவற்றில் அறைந்த ஆணிகளை நீயே பிடுங்கி எடுத்து விடு என சொன்னார். அவனும் நாள் முழுசும் கஷ்டப்பட்டு அந்த ஆணிகளை எல்லாம் பிடுங்கினான். ஆனால் அந்த சுவர் முழுசும் அந்த ஆணிகள் அறைந்த தழும்புகள் அப்படியே இருந்தன. அந்த சிறுவன் சுவற்றின் தழும்புகளை தந்தையிடம் காட்டி அழுதான். ஆணிகளை பிடுங்கி விட்டேன். ஆனால் அதன் அடையாளம் இருகிறதே என வருத்தத்துடன் சொன்னான். அவனது தந்தை, கோபமும் இதைப் போல தான் மகனே, கோபத்தை நாம் நிறுத்தி விட்டாலும், அதன் விளைவுகளை நம்மால் அழிக்க முடியாது என்றார்.
நீதி: கோபத்தின் விளைவுகள் பயங்கரமானது. எனவே கோபம் கொள்ளுதல் கூடாது.
25 கருத்துரைகள்:
இப்பிடி எல்லாம் நாடு திருந்தினா நாம என்னாகிறது சார்?கோமாளி கதைகள் மாதிரி நீங்களும் தமிழ்"வாசி"கதைகள் தொடங்கிங்க !!
Nice...
நல்ல அறிவுரைதான். இதை என் கோவத்துக்கிட்ட சொன்னா கோவிச்சுக்குதே என்ன செய்யலாம்.
நல்ல கதை. கோபத்தில் எடுக்கும் முடிவுகள் பெரும்பாலும் தவறாகவே இருக்கும்
மாப்ள பேய் கதை போல இது என்ன சேய் கதையா ஹிஹி!
நீதிக்கதை நல்லா இருக்கு.
NALLA IRUKKU....
////நீதி: கோபத்தின் விளைவுகள் பயங்கரமானது. எனவே கோபம் கொள்ளுதல் கூடாது.////
அருமையான கதை நல்ல கருத்து
நியாயத்துக்காக கோபப்படுவதில் தப்பில்லை, ஆனால் காரணம் இல்லாமல் கோபப்படுவதால் இழப்பு நமக்கே இல்லையா...?
ரௌத்திரம் பழகு'நியாயத்துக்காக....!!!
கதை சூப்பர்...நாங்க வாடகை வீட்ல இருக்கம் ஆனி அடிக்கமுடியாது.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நான் உங்களை வழிமொழிகிறேன் மனோ அண்ணே...
ஒரு நிலைவாசற்படி நினைவாய்...நம் வலையில்..முத்தத்தின் மிச்சம்..
நல்லா இருக்கு மச்சி..
கோபத்தின் வீரியம் அதிகம்... அந்த வீரியம் அநீதியை பொசுக்கும் ஆயுதமானால் அதுதான் புரட்சி... அதன் வடுக்கள் தான் வரலாறு...
எனக்கு கோபம் வராது .. வராது ...
இன்று
ராஜபாட்டை பட விவகாரம் :விக்ரம் மேல கேஸ் போட போறேன்
உண்மையான விஷயம்...
ஆணிய புடுங்க வேண்டாம்... ஹிஹி... நல்ல குறுங்கதை.... ஆனா யாரும் சுவர் முழுக்க ஆணி அடிக்க சொல்ல மாட்டார்கள்...
இன்று என் பதிவு...கிரிக்கெட் மொக்கைஸ்..::.. 1
நிதர்சனமான உண்மை நண்பா..
சீர்திருத்தக் குட்டிக்கதை அருமை...
இரவு வணக்கம்,பிரகாஷ்!ஆணி புடுங்கியிருக்கீங்க!!!!ரைட்டு!
@இரவு வணக்கம்,பிரகாஷ்!ஆணி புடுங்கியிருக்கீங்க!!!!ரைட்டு!///
ஹிஹிஹி...
விடமாட்டேங்கிறீங்களே
என்ன?...வித்தியாசமா ஆரம்பிச்சாச்சு?
நல்ல கருத்து - சரி சரி ஆணி பிடுங்க போறேன் வர்ட்டா..
இதைத் தான் நண்பா உங்களிடம் நிறைய எதிர்ப் பார்க்கிறேன். அருமை! தொடர்க! பகிர்விற்கு நன்றி!
அப்படியே இதுக்கும் பதில் சொல்லிட்டுங்க...
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"
"தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம் "
நன்றி..
அருமையான கதை!!