அவன் ஒரு பெரிய வேலையில் இருக்கும் இளைஞன். ஒரு தடவ அவன் ஊரைத் தாண்டி ஒரு ரோட்டில் காரில் போயிட்டு இருந்தான். ரோடு வெறிச்சோடி இருந்துச்சு. அப்போ திடீர்னு ஒரு செங்கல பறந்து வந்து அவன் காரில் பட்டது. பெரும் கோபத்துக்கு ஆளான அவன் காரை நிறுத்திட்டு சுத்திமுத்தி பார்த்துட்டு "யாரது" என கத்தினான்.
"நான் தான் செங்கலை எறிந்தேன். எல்லா வண்டிகளும் நாங்க நிறுத்த சொல்லியும் நிறுத்தாம போயிட்டே இருக்கு. உங்க வண்டியை நிறுத்த எனக்கு வேற வழி தெரியல. அதான் செங்கலை எறிஞ்சேன்" என சொல்லிட்டே ஒரு சிறுவன் வந்தான்.
"எதுக்காக வண்டிய நிறுத்தின?" என இளைஞன் கேட்டான். "என் தம்பியால் நடக்க முடியாது. அவன ஒரு சக்கர நாற்காலியில் வைத்து தள்ளி வந்தேன். அவனோ தடுமாறி விழுந்துட்டான். அவன என்னால தனியா தூக்கி உட்கார வைக்க முடியவில்லை. அதான் உங்களை உதவிக்கு கூப்பிட்டேன்" என்றான் சிறுவன்.
அப்புறம் இருவரும் சேர்ந்து அவனது தம்பியை தூக்கி சக்கர நாற்காலியில் உட்கார வைத்தார்கள். இளைஞனுக்கு நன்றி சொல்லிட்டு நாற்காலியை உருட்டிட்டு போனான் சிறுவன். அதன் பிறகு செங்கலால் அடிபட்ட தனது கார் கண்ணாடியை சரி செஞ்ச அவன் கதவில் கீறிய அடையாளத்தை மட்டும் சரி செய்யவில்லை.
"ஏன்?" என அவன் நண்பர்கள் கேட்டார்கள்.
"நம் வண்டியை நிறுத்த யாராச்சும் செங்கல எடுத்து எறியிற அளவுக்கு நாம மனிதாபம் இல்லாம வண்டியில போகக் கூடாது என்பதை இந்த கீறல் எனக்கு ஞாபகப்படுத்திட்டே இருக்கும்" என சொன்னான்.
அவன் நண்பர்கள் திகைத்தார்கள்.
15 கருத்துரைகள்:
மனிதாபிமானம் வேணும்ன்னு உணர்த்தும் நல்ல கதை
மனிதாபிமானம் அப்படின்னா? எங்க கிடைக்கும் முல்லை பெரியாரிலா?
வாகன ஓட்டிகளுக்கு நல்ல பாடம்..
"நம் வண்டியை நிறுத்த யாராச்சும் செங்கல எடுத்து எறியிற அளவுக்கு நாம மனிதாபம் இல்லாம வண்டியில போகக் கூடாது என்பதை இந்த கீறல் எனக்கு ஞாபகப்படுத்திட்டே இருக்கும்" என சொன்னான்.//
மனம் திருந்திய மனிதனே மாமனிதன் இல்லையா, சூப்பர்ப் பதிவு மக்கா, கார் வைத்திருப்பவர் ஒருவராவது இந்த பதிவு படித்து மனிதாபத்துடன் நடந்தால் பிரகாஷ்'க்கு மகா வெற்றி...!!!
மனிதாபிமானம் இல்லாதவர்களுக்கு நல்ல அடி...
இன்று என் பதிவு;;; அம்பலத்தாரும் கந்தையாண்ணையும்
மனிதாபிமானம் வேண்டும்....என்று கதை உணர்த்துகின்றது...ஆனால் கார் வைத்து உள்ளவர்கள் எல்லாம் அப்படியில்லை....சில சமயம் நம் பொருளை கொள்ளையடிப்பதுக்கும் காரை நிறுத்துகின்றார்களே!
வித்தியாசமான கதை....
ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் செங்கலை எறிந்தவனை காரோட்டி அடிக்காமல் விடுவது ஆச்சரியம் தான்!!
வடுக்களின் வலிமை அது...
நல்ல கதை ....
இந்த மனிதாபிமானம் சாரதிகளுக்கு வந்துவிட்டால் சாலை விபத்துக்களில் இருந்தும் உயிர்கள் பிளைத்துவிடும்.
அருமையான மனிதாபிமானக் கருத்தினை முன்வைத்தீர்கள் சகோ .
வாழ்த்துக்கள் மிக்க நன்றி பகிர்வுக்கு .
மனிதாபிமானம் பற்றி உங்க கதை நல்லா இருக்கு..
இந்த புத்தாண்டில் சில வார்த்தைகள்..
இரவு வணக்கம்,பிரகாஷ்!மனிதாபிமானத்தைப் போதிக்க அருமையான விழிப்புக் கதை,வாழ்த்துக்கள்!
செங்கல்லால் என்று வரவேண்டுமோ???
அனைவருக்கும் மனிதாபிமானம் அவசியம் என்பதை உணர்த்தும் பதிவு அருமை நண்பரே
இன்று நமது தளத்தில்
ஆட்டிறைச்சி குணங்கள் அறிந்துகொள்ளுங்கள்
மனிதாபிமானத்தை சிறப்பாகச்சொன்ன விதம் நல்லா இருக்கு.