நண்பர்களே,
நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும் இந்த தருணத்தில் பணத்தை செலவு செய்து கொண்டாடும் புத்தாண்டு கேளிக்கை கொண்டாட்டங்கள் அவசியமில்லை என வலியுறுத்தி இந்த இடுகையில் ஐந்து காரணங்களை பகிர்ந்துள்ளேன். வாசித்து தங்கள் கருத்துகளை பகிரவும்.
1. கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பாட்டுக்கு வந்தால் அதைச் சுற்றியுள்ள மக்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களின் எதிர்ப்பை மீறி அரசு கூடங்குளம் அணுமின் நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. அப்படி செயல்பாட்டுக்கு வந்தால் ஏதேனும் விபத்து ஏற்பட்டு பெரும் சேதங்கள் நடந்தால் அந்த மக்களின் நிலை என்னாவது? கூடங்குளத்தை சுற்றியுள்ள மக்கள் உயிருக்கு உத்திரவாதம் தேவை என போராடிக்கொண்டு இருக்கையில் நமக்கு புத்தாண்டு கேளிக்கை கொண்டாட்டங்கள் அவசியமா?
2. தென்னக தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களுக்கு விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்கும் முல்லைப்பெரியாறு அணைக்கு கேரளா பெரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அணையில் விரிசல் மற்றும் அதிக நீர் தேக்கம் என சில பொய் காரணங்கள் கூறி, அதனால் கேரளாவின் சில மாவட்டங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என அவர்கள் அணையை தகர்க்க முயற்சி எடுத்து வருகிறார்கள். அவர்களை எதிர்த்து ஐந்து மாவட்ட மக்களும் சேர்ந்து பெரும் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். ஒரு வேளை கேரளாவுக்கு சாதகமாக சூழ்நிலை உருவானால் நமது மக்கள் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரத்துக்கு எங்கே போவார்கள்? அதன் விளைவுகள் எப்படி கடுமையானதாக இருக்கும்? சற்று சிந்தித்து பாருங்கள். அவர்கள் அங்கே தண்ணீர் கேட்டு போராடிக் கொண்டிருக்கையில் நமக்கு புத்தாண்டு கேளிக்கை கொண்டாட்டங்கள் அவசியமா?
3. தமிழகத்தில் ஐயா அவரது குடும்பத்துக்கு மட்டுமே முதல்வரா இருந்த காரணத்தினால் அவருக்கு பதிலாக அம்மாவை கொண்டு வந்து நம் தலையில் நாமளே மண்ணை வாரி போட்டுக் கொண்டோம். கடுமையான விலைவாசி உயர்வை தான் குறிப்பிடுகிறேன். நினைத்து பார்க்க முடியாத விலையேற்றத்தை தமிழக மக்கள் தலையில் சுமத்தி மக்களின் பொருளாதாரத்தில் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தினார். பஸ் கட்டணம், நுகர்வோர் பொருட்கள் விலை உயர்வு, பெட்ரோல் விலையேற்றம் என எல்லாவற்றிலும் பொருளாதார கஷ்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் புத்தாண்டு கேளிக்கை கொண்டாட்டங்கள் அவசியமா?
4. சாமானிய மக்களும் வாங்க முடியாத அளவுக்கு தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களின் விலை உயர்வு. சாதாரண கூலித் தொழிலாளி டீ குடிக்க கூட முடியாத அளவுக்கு கடுமையான விலையேற்றம், மின்சார பாதிப்பால் அதிகரித்து வரும் தொழிற்சாலை மூடல், அதனால் தொழிலாளர்கள் வேலை இழப்பு. நாட்டின் பண வீக்கம் அதிகமாக வீங்கி வருவதால் ஏற்படும் வங்கி வட்டி விகிதங்கள் அதிகரிப்பு என எந்தப்பக்கம் திரும்பினாலும் மக்க்களுக்கு அடிமேல் அடி விழுந்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில் பணத்தால் விளையாடும் புத்தாண்டு கேளிக்கை கொண்டாட்டங்கள் அவசியமா?
5. கொண்டாட்டங்கள் நடத்தும் ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகள் மற்றும் சங்கங்களில் அதிக பணம் கொடுத்து விரும்பத்தகாத நிகழ்வுகளை வாங்கிக் கட்டிக் கொள்ளும் அவசியமும் சில நேரங்களில் வந்து விடுகிறது. இதற்கு உதாரணம், கடந்த வருடம் சென்னையில் ஒரு கேளிக்கை விடுதியில் கொண்டாட்டத்திற்கான போடப்பட்டிருந்த மேடை சரிந்து விழுந்ததில் உயிர் சேதங்கள் ஏற்பட்டதை சொல்லலாம். சிறப்பு விருந்தினர்களாக வரும் பிரபலங்களை பார்க்கும் ஆசையால் அவதிக்குள்ளாவதும், மேலும் அவர்கள் தரும் சைவ, அசைவ வகைகளை சாப்பிடவும், சுமார் ஐந்தாறு மணிநேரங்கள் தன்னை மறந்து ஆட்டம் போடவும், பணத்தை செலவழிக்க தயாராக இருக்கிறோம். அப்படிப்பட்ட செலவு மிக அவசியமா என சற்று யோசித்து பாருங்கள். அந்தப் பணத்தில் நம் குடும்பத்தாருடன் சந்தோசமாக அருமையாக கொண்டாடலாம் புத்தாண்டை. அதை விடுத்தது குடித்து கும்மாளமிடும் புத்தாண்டு கேளிக்கை கொண்டாட்டங்கள் அவசியமா?
டிஸ்கி: மேற்கண்ட பகிர்வு என் பார்வையில் பகிர்ந்துள்ளேன். அவ்வளவே.... படங்கள் கூகிள் தேடல் மூலம் பெறப்பட்டவை.
19 கருத்துரைகள்:
முதல் வாழ்த்து
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...போதயில்லாமல் கொண்டாட விருப்பம் ஹிஹி!
வணக்கம் நண்பா,
நல்லா இருக்கிறீங்களா?
நீங்கள் கூறிய ஐந்து காரணங்களின் அடிப்படையில்
மக்களின் அவலம், துன்பம், தண்ணீர் பிரச்சினை, தலைவலி கொடுக்கும் அணு உலைகள்
இவற்றுக்கு மத்தியில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தேவை இல்லைத் தான். ஆனால் குரங்கு போல் இருக்கும் எம் தமிழர்கள் மனம் கேட்குமா? ஹே...ஹே..
கஷ்டம் கவலை இல்லாத நாளும் ஆளும் கிடையாதே.. திருவிழாக்கள் பண்டிகைகள் நம்மை ஒரு தற்காலிகமாக ஆசுவாசப்படுத்திக்கொள்ள மட்டுமே அந்த ஒரு நாள் சந்தோசம் மேலும் ஒரு நிமிடம் கூட நம்மிடம் இருக்கப்போவது இல்லை, புது கவலைகள் எப்போதும் காத்துக்கொண்டே இருக்கும்.. அதனால
தேவை இல்லைதான்.......... ஆனால் ஆடம்பரமா கொண்டடுரத தவிர்க்கலாம்.. பரஸ்பரம் வாழ்த்துக்கள் சொல்றதுல தப்பில்ல...
மனிதன் பூமியில இருக்கும் வரை பிரச்சனைகள் இருந்துட்டே தான் இருக்கும்.. நாம் இதுக்காக ஒவ்வொரு விழா வா புறக்கணிசுட்டே வந்தம்னா வெறுமை தான் மிச்சம் ஆகும்னு நினைக்கறேன்.. ஆயிரம் பிரசைகளுகிடையில் சின்ன மன ஆறுதல் தான் விழாக்கள் நினைக்கிறேன். (இது என் கருத்து அவ்வளவே)
புத்தாண்டு வாழ்த்துக்கள் மக்கா, இதுவும் கடந்து போகும் கோபப்படாதீங்க...
Problems are having everywhere and everyone. As like celebrations only relief the people.
As well as same time we celebrate in quite discipline manner.
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... தமிழகத்தில நிறைய பிரச்சின இருக்கு என்ன???
கிரிக்கெட் மொக்கைஸ்..::.. 3
வணக்கம் பிரகாஷ்!காரணங்கள் சரிதான்.எத்தனை பேர் தயாராயிருக்கிறார்கள்,புறக்கணிக்க?????பொங்கல் வேறு வருகிறது!பட்டை,டாஸ்மாக் என்று களைகட்டுமே,??(கல்லாவும் கட்டும்!)
விடுபட்டு விட்டது;ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!(அட்வான்ட்ஸ்)
குடும்பத்துடன் புத்தாண்டை வலியுறுத்தும் உங்கள் பதிவு நன்று சகோ
கொண்டாட்டங்களை மறந்தால், எரிந்து கொண்டிருக்கும் தீ வெடித்து கலகமாய் பிறக்கும்... அதை அனைத்து வைக்க எத்தனையோ வழிகள் அவற்றுள் இதுவும் ஒன்று...
யோசிக்க வைத்த பதிவு! நன்றி நண்பா!
தங்களுக்கு மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
அன்புடன் அழைக்கிறேன் :
"மெய்ப் பொருள் காண்பது அறிவு-ஏன்?"
மேற்கூறிய காரணங்களால் மட்டும் நான் சொல்லவில்லை...
தமிழர்களாகிய நாம் ஆங்கிலப்புத்தாண்டை ஏன் கொண்டாட வேண்டும்?
நல்ல பதிவு.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
வணக்கம்.உண்மையில் எனக்கும் இந்த கொண்டாட்டங்களில் ஈடுபாடோ மரியாதையோ இல்லை.
வீதிகளிலெல்லாம் காசைக் கரியாக்கி வீசிக்கொண்டிருப்பதுதான் கொண்டாட்டமா?(பட்டாசு,வெடி).
வீண் செலவுசெய்யும் பணத்தில் நல்ல உணவு வாங்கி, வீதிகளிலேயே வாழ்க்கை நடாத்திக்கொண்டிருக்கும் வறியவர்களுக்கு கொடுத்தால், ஒருவேளை உணவாவது நிறைவாக உண்டு,வயிறுமட்டுமல்லாமல் மனமும் நிறைவார்களல்லவா!
"ஊருடன் ஒத்து வாழ்" என்கிற பழமொழிக்கு ஏற்ப
புத்தாண்டு வாழ்த்துகள் நண்பரே!
இனியபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இந்தஆண்டு இனிமையாகஅமைய வாழ்த்துகள்.
கொண்டாட ஒரே காரணம் புது வருடம் பிறக்கிறது. ஆனால் தேவையா என கேட்க பல காரணங்களுள் சில காரணங்களை தெளிவு படுத்தியமைக்கு நன்றி. இது என் மனதில் பட்டதை இட்டது.