CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



கேஸ் சிலிண்டர் இனி கிடைக்காது? என்ன காரணம்?

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
    தமிழ்நாட்டில் அம்மா ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து இன்று வரை தமிழ்நாட்டுக்கு நல்லது நடந்தது ரொம்ப குறைவு..... (அதுக்கு முன்னாடி நல்லதா நடந்துச்சா?) பிரச்சனைகள் தான் ஏராளம். அப்படி இப்போது புதுசா ஒரு பிரச்சனை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. மக்கள் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை வந்துள்ளது. இதற்கு காரணம் சமையல் எரிவாயு டேங்கர் லாரிகளின் கடந்த ஒருவார வேலை நிறுத்தமே. 

நல்ல நாளிலேயே சிலிண்டருக்கு பதிந்து வைத்து விட்டு சுமார் இரண்டு மூன்று வாரங்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. இப்போது லாரிகள் வேலை நிறுத்தத்தால் மக்கள் சிலிண்டருகாக காத்திருக்கும் நாட்கள் இன்னும் அதிகரிக்கவே செய்யும். தமிழகத்தின் சில இடங்களில் சமையல் எரிவாயு முற்றிலும் தீர்ந்து விட்டதாக செய்திகள் அறிவிக்கின்றன. 

சென்னையில் (மணலி எரிவாயு குடோன்) குழாய் மூலம் எரிவாயு சப்ளை இருப்பதால் அங்கு பாதிப்பு சற்று குறைவாக இருக்கும். ஆனால் மற்ற மாவட்டங்களில் லாரிகள் மூலமே சப்ளை செய்யப்படுவதால் ஏற்கனவே புக்கிங் செய்யப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய சிலிண்டருகான பதிவுகளை ஏஜென்சிகள் நிறுத்தி வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு சிலிண்டர் மட்டுமே வைத்திருப்போர்களின் நிலை இன்னும் பரிதாபத்திற்கு குரியது. இரண்டு சிலிண்டர் வைத்திருந்தாலும் சில வீடுகளில் ஒரு சிலிண்டர் ஒரு மாதத்துக்கும் குறைவாகவே வருகிறது. புக்கிங் செய்தால் அந்த சிலிண்டர் கிடைப்பதற்குள் இரண்டாவது சிலிண்டரும் தீர்ந்து விட வாய்ப்புள்ளது. 

வேலை நிறுத்தம் செய்யும் லாரி உரிமையாளர்களிடம் எரிவாயு நிறுவனங்கள் இன்னும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. எரிவாயு தட்டுப்பாட்டை போக்கவும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளன. இப்படி எரிவாயு பற்றாக்குறை ஏற்படுவதால் பாதிக்கபடுவது மக்கள் தான். இதனை கருத்தில் கொண்டு எரிவாயு நிறுவனங்களும், லாரி உரிமையாளர்களும் பேச்சு வார்த்தை நடத்தி சுமூகமான முடிவை எட்ட வேண்டும். 

அடிப்படை தேவைகளுள் ஒன்றான உணவை தயார் செய்ய மக்கள் ஆதிகால நிலைக்கு செல்ல நேரிடும். ஆம், விறகு அடுப்புகளையும், மரத்தூள் அடுபுகளையும் பயன்படுத்தும் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. மண்ணெண்ணெய் உபயோகப்படுத்தலாம் என்றாலும் ரேசனில் அளவோடு தான் மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. எனவே அதற்கும் ஏற்கனவே மக்களிடத்தில் பெரும் தட்டுப்பாடு உள்ளது. கள்ளசந்தையில் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் நாற்பது ரூபாய்க்கும் மேலாக விற்கப்படுகிறது. 

ஆக, எரிவாயு லாரிகள் வேலை நிறுத்தத்தால் மக்கள் பாடு படுதிண்டாட்டமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு உடனே இந்த பிரச்சனையில் தலையிட்டு எரிவாயு தட்டுப்பாட்டை நீக்கி மக்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் செய்ய வேண்டும் என்பதெ மக்கள் விருப்பம். இது தொடராத பட்சத்தில் மக்கள் படும் பாட்டை எளிதில் சொல்லிவிட முடியாது. 


18 கருத்துரைகள்:

MaduraiGovindaraj said... Best Blogger Tips

ok ok

ADMIN said... Best Blogger Tips

நாட்டு நடப்பு, மக்கள் பிரச்சனை, அடிப்படைத் தேவையை சொல்லியிருக்கீங்க.. பலே..!!

ADMIN said... Best Blogger Tips

அனைத்திலும் ஓட்டும் போட்டுட்டேன் நினைக்கிறேன்.

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@கோவிந்தராஜ்,மதுரை.
ok ok///

கேஸ் கிடைக்காதுன்னு சொன்னா ok, ok வாம்?

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@தங்கம் பழனி
நாட்டு நடப்பு, மக்கள் பிரச்சனை, அடிப்படைத் தேவையை சொல்லியிருக்கீங்க.. பலே..!!///

அன்றாடம் தேவையானதுல....

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

விக்கியும் நீங்களூம் ஒரே டைம்ல போஸ்டிங்க், எனி உள் குத்து?

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

விக்கியும் நீங்களூம் ஒரே டைம்ல போஸ்டிங்க், எனி உள் குத்து?///

நீங்களும் இப்போ தான் போட்டிருகிங்க, எனி வெளிக்குத்து?????

Unknown said... Best Blogger Tips

அது என்னய்யா மாப்ள இவங்களுக்கு சரியா குளிர் காலத்துல தான் போராட்டம் நடத்த தோனுமா...சரியா டைம் பாத்து அடிக்கறாங்க..யாரு அவஸ்தை பட்டா இவங்களுக்கு என்ன!

கோவை நேரம் said... Best Blogger Tips

சரி..சரி..எல்லாரும் இனி விறகு அடுப்புக்கு மாற வேண்டியதுதான்.

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@விக்கியுலகம்
அது என்னய்யா மாப்ள இவங்களுக்கு சரியா குளிர் காலத்துல தான் போராட்டம் நடத்த தோனுமா...///

குளிரோ, வெயிலோ... எப்ப போராட்டம்னாலும் பாதிப்பு மக்களுக்குத்தான்....

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

எல்லாரும் பழைய படி விறகு அடுப்பு யூஸ் பண்ணனும்

Unknown said... Best Blogger Tips

பொங்கல் முடிஞ்சதும்....பொங்க வச்சிட்டாங்க...நம்மளை...

Unknown said... Best Blogger Tips

@சிபி
//விக்கியும் நீங்களூம் ஒரே டைம்ல போஸ்டிங்க், எனி உள் குத்து?//

விக்கியுலகம் படித்துவிட்டு சிறிது ஓய்வு எடுத்து விட்டு பிற தளங்களுக்கு வரவும்

Marc said... Best Blogger Tips

நீங்க என்ன அடி அடிச்சாலும் நாங்க அசைய மாட்டோம்.

இப்படிக்கு
பொதுஜனம்

rajamelaiyur said... Best Blogger Tips

//தமிழக அரசு உடனே இந்த பிரச்சனையில் தலையிட்டு எரிவாயு தட்டுப்பாட்டை நீக்கி மக்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் செய்ய வேண்டும் என்பதெ மக்கள் விருப்பம். இது தொடராத பட்சத்தில் மக்கள் படும் பாட்டை எளிதில் சொல்லிவிட முடியாது.
//

சாரி அமைச்சரவை மாற்றத்துல அம்மா பிசி

இந்திரா said... Best Blogger Tips

கேஸ் என்பது மக்களோட தவிர்க்க முடியாத அத்தியாவசிய தேவையாய்டுச்சு..
என்ன பண்ணப் போறோமோ தெரியல..

நிரூபன் said... Best Blogger Tips

வணக்கம் சகோ,
மிகவும் வேதனைக்குரிய விடயத்தினைப் பதிவாகவும், செய்தி அலசலாகவும் கொடுத்திருக்கிறீங்க.

மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யச் சமையல் வாயு எவ்வளவு முக்கியம் என்பதனை உணர்ந்து அரசு உடனடியாகப் போராட்டத்தினை முடித்து வைக்க வேண்டும் என்பது தான் எனது விருப்பமும்.

உங்கள் எதிர்பார்ப்பு வெகு விரைவில் நிறைவேறிட நானும் வேண்டுகிறேன்.

ambuli 3D said... Best Blogger Tips

nice

http://www.ambuli3d.blogspot.com/

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1