சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இணையத்தில் ஒரு ப்ரௌசர் உதயமானது. அதன் பெயர் Internet Explorer 6. இது பெரும்பாலும் IE6 என்றே அழைக்கப்படுகிறது. இன்று பல புதிய பரினாமங்களுடன் கூடிய ப்ரௌசர்கள், மற்றும் சிறந்த தேடல் வசதிகள் கொண்ட ப்ரௌசர்கள் இருப்பதால், அவைகளுடன் போட்டி போட முடியாமல் IE6 ப்ரௌசர்க்கு உபயோகிப்பாளர்களின் பயன்பாடு குறைந்து வருகிறது. எனவே IE6க்கு விடை தரும் நேரம் வந்துவிட்டது என மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்து கடந்த மூன்றாம் தேதி IE6 ப்ரௌசருக்கு நிறைவு விழா கொண்டாடப்பட்டது.
2002 - 2003 காலத்தில் IE6 இணையத்தில் 90% அதிகம் பயன்படுத்தும் ப்ரௌசராக இருந்தது. பின்னர், 2006இல் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 7 மற்றும் 2008இல் பயர்பாக்ஸ் ப்ரௌசர்கள் வந்ததால் IE6 க்கு மதிப்பு குறைய ஆரம்பித்தது. IE6 ப்ரௌசர், HTML 5 க்கு துணை புரியாது.
மேலும் யுனைடட் ஸ்டேட்ஸ், ஆஸ்திரியா, டென்மார்க், பின்லாந்து, நார்வே, ஸ்வீடன் ஆகிய நாடுகளில் வெறும் ஒரு சதவீதத்திற்கும் கீழாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் மெக்ஸிகோ, உக்ரைன், போர்ச்சுக்கல், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் கடந்த ஒரு வருடமாக அவ்வளவாக யாரும் பயன்படுத்தவில்லை. மேலும் இந்த ப்ரௌசரை கைவிட கடந்த ஆண்டு மார்ச் மாதமே முடிவு செய்யப்பட்டு விட்டதாக மைக்ரோசாப்டின் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.
மைக்ரோசாப்ட் டெவலப்பர்கள், யுசர்ஸ், இணைய பாதுகாப்பு, தனியுரிமை கட்டுப்பாடுகள், இன்னும் பல மேம்பட்ட வசதிகள் மைக்ரோசாப்டின் தற்போதைய IE8 அல்லது IE9 ப்ரௌசரில் இருப்பதால் பலரும் இந்த ப்ரௌசர்களுக்கு மாறிய வண்ணம் இருக்கிறார்கள். ஆனால் சீனாவில் 25 சதவீதம் பயனாளிகள் IE6 ப்ரௌசரை பயன்படுத்தி வருவதால் அவர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் தீர சில நாட்கள் ஆகும்.
மேலும் சில புள்ளிவிவரங்களை இங்கே பகிர்ந்துள்ள படங்கள் மூலம் அறிந்து கொள்ளுங்கள்.
15 கருத்துரைகள்:
Therinthu konden....
Nanri....
IE6 மறக்கமுடியாத பிரவுசர்! கணினியில் நாம் குழந்தையா இருந்தபோது இருந்த நாடைவண்டி போன்றது....
good bye
good bye to IE6
தகவலுக்கு நன்றிங்கோ...தன்னை update and சரியானபடி marketing செய்து கொள்ளாததே...good bye க்கு காரணம்!
இப்ப மோஸில்லாவும் கூகிள் குரோமும் போட்டிக்கு இருக்கு. அவங்க தன்னை புதுப்பிச்சுக்கிட்டிருக்கணும். தகவலுக்கு நன்றி நண்பரே...
நான் எப்பவும் firefox தான்
நண்பர்களே உங்களுக்காக :
ரூபாய் 5000 மதிப்புள்ள உளவு பார்க்க உதவும் மென்பொருள் இலவசமாக(MAX KEYLOGGER)
பகிர்வுக்கு நன்றி பாஸ் நல்ல தொகுப்பு
அறிய தகவலுக்கு நன்றி மக்கா பிரகாஷ்...!!!
தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி பிரகாஷ்!!
தகவலுக்கு நன்றி....
good bye
வணக்கம் பிரகாஷ்!நான் கூட கடந்த ஆண்டு வரை இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பாவனையில் வைத்திருந்தேன்!வேஸ்ட்!
நல்ல பதிவு.
வாழ்த்துகள்.