நண்பர்களே,
நாம் படிக்கும் இடத்திலோ, வேலை பார்க்கும் இடத்திலோ நமது கட்டுரைகள் மற்றும் ஆராய்ச்சி குறிப்புகளை மற்றவர்களுக்கு ப்ரசெண்டேஷன் (விளக்க உரை) செய்யும் போது சில விதிமுறைகளை கடைபிடித்தால் மிகவும் நன்றாக இருக்கும். அதாவது நமது ப்ரசெண்டேஷன் மற்றவர்களுக்கு சலிப்பை உண்டாக்காதவாறு இருக்க வேண்டும். நாம் சொல்ல வந்த விஷயமும் பார்வையாளருக்கு தெளிவாக புரிய வேண்டும்.
இனி விதிமுறைகளை பார்ப்போமா?
1. வாழ்த்துகளோடு ஆரம்பியுங்கள். வாழ்த்துக்கள் ரொம்ப முக்கியம். அந்த நிகழ்ச்சியை பற்றியோ, வந்திருக்கும் விருந்தினர்களை பற்றியோ வாழ்த்துக்கள் இருக்கலாம்.
2. உங்களை மற்றும் குழு உறுப்பினர்களை முதலில் அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.
நாம் யார் என முதலில் தெரிவிக்க வேண்டும். நமது குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்களது தகுதி பற்றிய சிறு குறிப்பை பகிரலாம். இதனால் நமது குழு பற்றி அனைவரும் அறிய ஒரு வாய்ப்பாக அமையும்.
3. முகவுரை, பொருளுரை, முடிவுரை ஆகிய மூன்றும் இருக்க வேண்டும்.
இது மிகவும் முக்கியம். இதன்படி நமது உரை அமைந்தால் நமது பிரசன்டேஷன் இனிய பகிர்வாக இருக்கும்.
4. கொடுக்கப்பட்ட நேரத்தில் உரையை முடித்தல் வேண்டும்.
நேரம் ரொம்ப முக்கியம். பார்வையாளருக்கு சலிப்பை ஏற்ப்படுத்தாதவாறு இருக்க வேண்டும். தேவையான செய்திகளை மட்டும் பகிர்ந்து மற்றவர்களின் நேரத்தையும் வீணாக்க கூடாது.
5. படங்கள், செய்தி விளக்கங்கள், வரைபடங்கள் போன்றவை ஆர்வத்தைத் தூண்டும்.
நமது கட்டுரை சம்பந்தமாக உள்ள விஷயங்கள் பார்வையாளர்களை கவர இந்த வழிமுறைகளை கையாளலாம். இதனால் நமது விளக்கங்களும் எளிமையாக இருக்கும்.
6. சீரான வேகத்தில் உரை அமைய வேண்டும்.
ஓரிடத்தில வேகமாகவும், அப்புறம் வேகம் குறைந்தும் நமது பேச்சு இருக்க கூடாது. மேலும் நமது ஒலி அளவும் சீராக இருக்க வேண்டும்.
7. நீங்கள் பேசியது புரிந்ததா என்று பார்வையாளர்களிடம் கேட்டுப் புரிந்து கொள்ளலாம். தவறில்லை.
கண்டிப்பா இது முக்கியம். நாம பேசிகிட்டே போனாலும் மத்தவங்களுக்கு புரியுதாங்கிறத்தை நாம தெரிஞ்சு வைக்க வேண்டும். மற்றவர்களுக்கு புரியவில்லை எனில் நமது பேச்சு விதத்தை மாற்ற நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
8. கேள்விகளுக்கு சுருக்கமாக பதிளிக்க வேண்டும்.
நமது உரையை பற்றி மற்றவர்கள் கேள்விகள் கேட்க வாய்ப்பு அளிக்கலாம். கேள்விகள் சுருக்கமாகவும், நமது பதில்கள் சுருக்கமாகவும் இருக்க வேண்டும்.
9. வாழ்த்தி விடை பெறலாம்.
என்னதான் நாம் சிறப்பாக உரை நிகழ்த்தினாலும் இறுதியில் சொதப்பி விடுதல் கூடாது. ஏதேனும் தத்துவ வாக்கியங்கள் சொல்லி அனைவரையும் வாழ்த்தி நமது உரை அமைய வேண்டும்.
நண்பர்களே, எனது தொழிற்சாலையில் சில வருடங்களுக்கு முன் பிரசன்டேஷன் பற்றிய ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. அப்போது குறிப்பெடுத்த விஷயம் தான் இது. தற்செயலாக எனது புத்தகங்களை தேடிய பொழுது இந்த குறிப்பு கிடைத்தது.
images from google
27 கருத்துரைகள்:
எனது தொழிற்சாலையில் சில வருடங்களுக்கு முன் பிரசன்டேஷன் பற்றிய ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. அப்போது குறிப்பெடுத்த விஷயம் தான் இது
>>
ஆகா, இனி பிளாக்கர்லாம் நோட்டும் பென்னும் கையுமா மீட்டிங்க், மீட்டிங்கா அலைய போறாங்க பாருங்க
நல்ல பகிர்வு...,பேச்சாற்றல் அனைவருக்கும் இயல்பாய் வராது நாம் வளத்துகொள்ள இந்த கட்டுரை உதவும்
டைம் அதாவது நேரம் நல்லா இருக்கனும்னு சொல்றீங்களா!
நல்ல தத்துவம் எதும் ஞாபகம் வர்லைன்னா?
@ராஜி
ஆகா, இனி பிளாக்கர்லாம் நோட்டும் பென்னும் கையுமா மீட்டிங்க், மீட்டிங்கா அலைய போறாங்க பாருங்க///
நல்ல விசயங்களுக்கு குறிப்பெடுக்றது தப்பில்லையே....
@veedu
நன்றிங்கோ...
@விக்கியுலகம்
டைம் அதாவது நேரம் நல்லா இருக்கனும்னு சொல்றீங்களா!///
ஆமா, யாரும் பில்லி சூனியம் வச்சுற கூடாதுல.... ஹி..ஹி..
எல்லாம் உங்க பதிவு எபக்ட்டு.
@சி.பி.செந்தில்குமார்
நல்ல தத்துவம் எதும் ஞாபகம் வர்லைன்னா?///
அட, அப்போதைக்கு என்ன ஞாபகம் இருக்கோ, சொல்லுங்க
வணக்கம் நண்பா,
மிகவும் பயனுள்ள பதிவினைக் கொடுத்திருக்கிறீங்க. மிக்க நன்றி,
சில விடயங்களை பாயிண்டுகளாக கொடுக்கலாம், தொடர்ச்சியாக உரையாற்றுவதற்குப் பதிலாக சிறிய சிறிய பாயிண்டுகளை முன் வைத்து பவர் பொயிண்ட் உதவியுடன் காட்சிப்படுத்துவது இன்னமும் சூப்பரா இருக்கும்.
அட ஆமாய்யா, குறிப்புகள் அனைத்தும் கடைபிடிக்க வேண்டியவைகள் பகிர்வுக்கு நன்றி...!!!
சி.பி.செந்தில்குமார் said...
நல்ல தத்துவம் எதும் ஞாபகம் வர்லைன்னா?//
நேரா போயி மலையில இருந்து கீழே குதிக்கவும் நன்றி...
Useful post...
:)
நல்ல பகிர்வு...குறிப்புகள் அனைத்தும் கடைபிடிக்க வேண்டியவைகள் ....
அனைத்தும் அருமையான ஆலோசனைகள்..ஆனால் யாரும் கடை பிடிப்பதில்லை..கடை பிடித்தால் வெற்றி நிச்சயம்..வாழ்த்துகள்..
அனைத்தும் அருமையான ஆலோசனைகள்..ஆனால் யாரும் கடை பிடிப்பதில்லை..கடை பிடித்தால் வெற்றி நிச்சயம்..வாழ்த்துகள்..
நல்ல பகிர்வு. தாங்கள் சொன்ன ஒவ்வொரு விஷயங்களைப் பற்றியும் இன்னும் நல்ல உதாரணங்களுடன் நகைச்சுவை கலந்து எழுதியிருக்கலாமோ என்று எனக்குத் தோன்றியது.
இருப்பினும் இவை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களே!
பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
நல்ல விஷயம், பிரசண்டேசன் ஸ்லைடுகள் தயாரித்த பிறகு ஒரு தடவை பேசிப்பார்த்து ப்ராக்டீஸ் செய்து கொள்ள வேண்டும்!
பயனுள்ள பதிவு அண்ணா
சில தினங்களுக்கு முன்னர் என் துறையில் நிகழ்ந்த முன்னேற்றங்கள் குறித்து ஒரு Presentation செய்திருந்தேன். நிறைய படங்களை சேர்த்திருந்தேன். முடிவில் அனைவரும் பாராட்டினர்.
ஆனால் சுமார் ஒருமாத காலம் "என் தலையை நானே தின்றேன் " என்பது மறந்துபோய் மனம் மகிழ்ச்சி அடைந்தது உண்மை.
நல்ல ஒரு பகிர்வு. வாழ்த்துக்கள்.
மிகவும் பயனுள்ளதொரு பதிவு.பகிவுக்கு நன்றி சகோதரா.
வணக்கம் பிரகாஷ்!பயனுள்ள குறிப்புகள்,பகிர்வு!எல்லாத் தரப்பினருக்கும் உதவும்!குறிப்பாக கேப்டனுக்கு உதவும்!(ப்ளாக் படிப்பாரா?)ஹ!ஹ!ஹா!!!!!!!!
அருமையான பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள் பிரகாஷ்.
அட...தகவலுக்கும் பகிர்வுக்கும் நன்றி
அருமையான பதிவு.
எல்லோருக்கும் உகந்த பதிவும் கூட .
இன்னும் பல குறிப்புகள் எடுத்து எமக்கு எல்லாம் உதவுங்கள்
எக்காலத்துக்கும் பயன்படும் அருமையான செய்திகள். இதனோடு, புன்னகை தவழும் முகமும், ஐ காண்டாக்டும் இருந்தால் நம் உரை சிறப்பாக இருக்கும். நன்றி
பீஸ் வாங்காமல் சொல்லிகொடுத்ததுக்கு
நன்றி
நான் ஒரு சுகநல கல்வியிலாளர் என்ற முறையில் எனக்கு மிக உபயோகமான பதிவு நண்பா.
லண்டன் வீதிகளில் கீழாடை இன்றி அலையும் இளைஞர்கள்-கானொளி இணைப்பு