ஏதோ, குடும்பத்தோட நாலு பேரா சேர்ந்து போற மாதிரி கார் தான் வாங்க முடியாட்டியும், அட்லீஸ்ட் ரெண்டு பேராவது போற மாதிரி கடன உடன வாங்கி, லோனு கீனு போட்டு பிக்கப் இருக்குற மாதிரி, மைலேஜ் அதிகமா, இன்ஜின் லைப் நல்லா இருக்குற மாதிரி நாலு கம்பெனி வண்டிகள அலசி ஆராய்ஞ்சு ஒரு பைக்கை ஆசையா வாங்கறோம். வாங்கிட்டு வீட்டுல நிறுத்திட்டு பைக்கை பாக்கும் போதெல்லாம் நமக்குன்னு சொந்தமா ஒரு பைக் இருக்கித நெனச்சு ரொம்ப சந்தோஷப்படுவோம். லேசா தூசி பட்டாலும் ஆளாளுக்கு துணிய வச்சு தொடைப்போம். இப்படி நம்ம வண்டிய தங்கமா நெனச்சு இருப்போம். இப்படிப்பட்ட பைக்கை நாம ஆபீசுக்கு போகறப்போ அல்லது ஊருக்கு போகறப்போ பைக் ஸ்டாண்டில் நிருதிட்டுப் போக வேண்டிய சூழ்நிலை வரும். பைக் ஸ்டாண்டுல நம்ம வண்டி நம்பர சொல்லிட்டு நிழலான இடமா இருக்கா, வண்டிய நிறுத்த நல்லா விலாசமான இடமா இருக்கான்னு பாத்து பாத்து அந்த பைக் ஸ்டாண்டையே ஒரு ரெண்டு மூணு தடவ சுத்தி சுத்தி வந்து ஒரு இடத்தை சூஸ் பண்ணி நிறுத்திட்டு நம்ம வேலையை பாக்க போயிருவோம்.
அப்புறமா நம்ம வேலையெல்லாம் முடிச்சுட்டு பைக் எடுக்கலாம்னு நாம நிறுத்தின இடத்துக்கு வந்து பார்த்தோம்னா, அங்க நம்ம பைக் இருக்குற நிலைமையை பார்த்தோம்னா நமக்கு கண்ணீரே வந்திரும். ஆமாங்க, நம்ம பைக்கோட சைடு மிர்ரர் ரெண்டும் வேற பக்கமா திரும்பி இருக்கும். பக்கத்து பைக்குக்கும், நம்ம பைக்குக்கும் கேப்புன்னு பார்த்தோம்னா ஒரு இஞ்ச் கூட இருக்காது. வண்டியோட பம்ப்பர் பக்கத்து வண்டியோட பம்ப்பர் கூட சேர்ந்து இருக்கும். கேபிள் வயர்கள் பக்கத்து வண்டியோட ஹேண்டில் பார்ல மாட்டிட்டு இருக்கும். அப்புறமா ரோட்டுல இருக்குற தூசி, புழுதியெல்லாம் நம்ம வண்டி மேல இருக்குற மாதிரி ஒரு பீலிங் வரும். வேறென்ன செய்றது? நம்ம வண்டிய அந்த இடத்துல இருந்து எடுக்கணும்னா அந்தப்பக்கம் அஞ்சாறு வண்டிகளையும், இந்தப்பக்கம் அஞ்சாறு வண்டிகளையும் கொஞ்சம் கொஞ்சமா நகத்தி கடைசியா நம்ம வண்டியை எடுக்க வேண்டிஇருக்கும். அங்க ஸ்டாண்டுல இருக்கறவங்கள ஹெல்ப்புக்கு கூப்பிடலாம்னு பார்த்தா,அப்பா பார்த்து அவங்க வேணும்னு வேற பக்கமா திரும்பிக்கிட்டு இருப்பாங்க. இல்லையினா யார்கிட்டயாவது வாக்கு வாத்ததுல இருப்பாங்க.
ஒரு வழியா வண்டியை வெளியே எடுத்து துணிய வச்சு தூசி போற மாதிரி தொடச்சு வீட்டுக்கு போறப்ப இனிமே ஸ்டாண்டுல பைக் வைக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணுவோம். ஆனாலும், அடுத்த நிமிசமே, வேலைக்கு ஊருக்கு போகணும்னா இந்த கஷ்டத்தை எல்லாம் சந்திச்சு தான் ஆகணும்னு நாமல நாமளே தேத்திக்கணும்.
31 கருத்துரைகள்:
இதனால் தங்கள் சொல்ல வரும் நீதி என்ன?
நாளைக்கு பைக்க ஸ்டேண்ட்ல விட போறீங்களா? இல்லையா? என்ன பண்ணீங்கன்னு போஸ்ட் போடுங்க
பைக் நிறுத்த முடியாம கஷ்டப்படுறீங்க போல. பேசாம வண்டி வாங்க லோன் போடும்போதே பைக் ஸ்டேண்டுக்கும் லோன் போட்டு சொந்தமா பைக் ஸ்டேண்ட் வாங்கிடுங்கண்ணா
சரியாச் சொன்னீங்க தல
அதுலயும் அஞ்சு ஆறு நாள் ஒரேயடியாய் நிறுத்திவிட்டுச் சென்று திரும்பிவந்து பார்த்தோம்னா கண்ணுல ரத்தக்கண்ணீர் விடாத குறைதான்
இதுக்கு இங்க ஒருநாளைக்கு 20 ரூவா வாடகைவேற.
மேற்கூரை இல்லாத பைக் ஸ்டாணட்தான் இங்க அதிகம்.
என்னா ஒரே நல்ல விஷயம்னா 24 மணிநேரத்துலயும் நடுநிசின்னாலும் இரவு நேர டவுன் பஸ் இல்லாத நேரங்கள்லயும் உதவுறதால இத சகிச்சுதான் ஆகணும் போல இருக்கு..
வேற வழி ? ? ?
முதல் போட்டோவில ரொம்ப அழகா இருக்கீங்களே!
அண்ணே அது விலாசம் இல்ல விசாலம்...
இதுக்கு தான் நான் வண்டியே வாங்கல...
த்சோ!த்சோ!!!!!!!நல்லா "பட்டிருக்காரு" போல!!!!ஹி!ஹி!ஹி!!!
பைக்கோட ஸ்டாண்டா,பைக்கு பார்க்(park)பண்ணுற ஸ்டாண்டான்னு விளக்கமா சொல்லுங்க தல!
தருமி அண்ணே - மொதப் படத்துல ரொம்ப அழகா இருக்கறவரு யாருண்ணே
//தருமி அண்ணே - மொதப் படத்துல ரொம்ப அழகா இருக்கறவரு யாருண்ணே// என்ன தம்பி! இது தெரியலையா? அவருதான் நம்ம தமிழ்வாசி!!! ஒத்தக்கடை பக்கத்தில நிக்கிறாருல்ல. ரொம்ப இஸ்டைலா இருக்காருல்ல ...!:)
உண்மை உண்மை
உண்மையைத் தவிர வேறு இல்லை..
சில இடங்கள்ல பெட்ரோல் திருட்டுவேற .
Nalla solli irukeenga.....
:)
/டுத்த நிமிசமே, வேலைக்கு ஊருக்கு போகணும்னா இந்த கஷ்டத்தை எல்லாம் சந்திச்சு தான் ஆகணும்னு நாமல நாமளே தேத்திக்கணும்.//
இது எப்பவும் நடக்குறதுதான்
சில இடங்களில் பெட்ரோல் கூட எடுக்கின்றனர்
என்ன கொடுமை
இதுக்கு பெயர் என்ன ?திருட்டா ? ஏமாற்றா ?
சோதனை மேல் சோதனையா??? பைக் வேதனைதான்!!
வாசிக்கு இப்படி ஒரு கோபமா? பைக் வைத்திருந்தால் இப்படி எல்லாம் அதிகம் இம்சை வரத்தான் செய்யும் .மனசைத் தேற்றுவம் விதியை நொந்துகொண்டு.
உண்மைதான்! வேதனை தரும் விஷயம்தான்!
-காரஞ்சன்(சேஷ்)
அது சைடு ஸ்டேண்டா? அது பத்தலேன்னா பெரிய ஸ்டேண்டா வாங்கி ஃபிட் பண்ணிக்கிறதுதானெ?
உங்களை பல்சுவை பதிவர்கள் என வலைசரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்
பல்சுவை பதிவர்கள்
மாமனார் கிட்ட இருந்து புதுபைக் எப்ப ஆட்டைய போட்டிங்க மக்கா?
உண்மை தான் நண்பரே !
அன்பின் பிரகாஷ் சார்!
உங்களது எல்லா பதிவுகளையும் மொபைல் மூலம்தான் படிக்கிறேன். ஆனால் என்னுடைய கணினி மூலமாக உங்கள் தளத்தை அணுக முடியவில்லை. கிராபிக்ஸ் அல்லது படங்கள் அல்லது ஏதோ ஒன்று என்னவென்று சொல்லமுடியவில்லை. என்னுடையது Pentium 4 and XP. என்னுடைய இன்டெர்நெட் கனெக்சன் ரொம்ப ஸ்லோ. அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் மற்ற தளங்களெல்லாம் ஓபன் ஆகிறதே. உங்கள் தளம், முனைவர் குணசீலன் தளம் மற்றும் சில நண்பர்களின் தளத்தைத் தவிர மற்ற தளங்கள் எளிதாக ஓபன் ஆகிறது. என்னவென்று இனம் கண்டுகொள்ள இயலவில்லை. உங்கள் தளத்தை கொஞ்சம் எளிமைப்படுத்துங்கள்.அப்போது பலன் கிடைக்கிறதா என்று பார்க்கலாம். என்னைப் போன்றவர்கள் எத்தனை பேர்களோ தெரியவில்லை. ஆகவேதான் பின்னூட்டங்களும், வாக்குகளும் இட முடிகிறதில்லை. இந்த பின்னூட்டத்தை என்னுடைய நண்பருடைய கணினியிலிருந்து தான் பதிவு செய்கிறேன். நன்றி !.
tha ma 9.
உங்கள் வேதனை எனக்கு புரிகிறது அண்ணா..ஆனா அவங்களுக்கு புரியலே..
சொத்துகளுக்கு பத்திரப் பதிவு மட்டும் இனி செல்லாது வருவாய் துறையில் பட்டா பெறுவது அவசியம்
உங்களுடைய இந்தப் பதிவு குமுதம் ரிப்போர்ட்டர் 4/3/2012 இதழில் 34 ஆம் பக்கத்தில் வெளியாகி உள்ளது.
வாழ்த்துக்கள் சார்!
பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் நட்புடன் சீனா
@அமைதி அப்பா
தகவலுக்கு நன்றி சார்.
பைக் வைத்திருப்பவர்கள் படும் பாட்டைப் பார்த்ததால் தான்..............
நான் இன்று வரை பைக்கே வாங்கவில்லை!
ஹி...ஹி..