கடந்த சில நாட்களாக பேஸ்புக்கில் பகிர்ந்த படங்களை பார்ப்பதில் பல வசதிகள் வந்த வண்ணம் உள்ளது. படங்களுக்கு வலப்பக்கத்தில் படங்களுக்கான கருத்துகளை பார்க்க வசதி வந்தது. தற்போது படங்களை முழு ஸ்கிரீன்ல் பார்க்க வசதி வந்துள்ளது. இதன் மூலம் படத்தின் தெளிவு தன்மையில் எந்த மாற்றமும் ஏற்படாது. கிட்டத்தட்ட ஒரிஜினல் படத்தை விட சுமார் நான்கு மடங்கு பெரிது படுத்தி காட்டுகிறது. படத்தின் குவாலிடியை பொறுத்து இதன் அளவு மாறுபடும். ஆனால் தெளிவில் குறை இருக்காது.
இரண்டு வழிகளில் Full Screen Modeஐ பெறலாம்:
1. பகிரப்பட்ட படத்தை கிளிக் செய்து மவுசை முன்னும் பின்னும் நகர்த்தி பார்த்தால் வலது மேல் மூலையில் ஒரு இருபக்க அம்புக்குறி காட்டும், அதை கிளிக் செய்தால் அந்த படம் முழு ஸ்கிரீன் மோடில் காட்டும்.
2. பகிரப்பட்ட படத்தை கிளிக் செய்தால் படத்தின் கீழே option என இருக்கும். அங்கே கிளிக் செய்தால் Enter full screen என இருக்கும். அதன் மூலமும் full screen mode க்கு செல்லலாம்.
escape கொடுத்தால் full screen modeஇல் இருந்து பழைய நிலைக்கு திரும்பலாம்.
மேற்கண்ட இரண்டு வழிகளில் உங்களுக்கு பிடித்த வசதியை பயன்படுத்தி full screen modeஇல் படங்களை பார்க்கலாம்.
8 கருத்துரைகள்:
நல்ல தகவல் பிரகாஷ் ! நன்றி !
நல்ல தகவல்!
த.ம. 1
இந்த கமெண்ட் ஒருத்தரை டென்சன் செய்யும் ஏதோ என்னால ஆன சேவை!
Thanks...nanba.....
தகவலுக்கு நன்றி சார் ..!
Piriyosanamana pathivu nanpa
தகவலுக்கு நன்றி!