செய்தி:
ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுக்கு, விதிமுறைகளை மீறி ராணுவ நிலம், அளவுக்கு அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.
நம்ம கமென்ட்:
இதெல்லாம் ரொம்ப கம்மி. நம்ம ஊரு பெரும்புள்ளிகள் கிட்ட தகவல் அறியும் சட்டம் பாய்ந்தால் கையாடல் செய்த நிலத்தில் ஒரு குட்டி கண்டமே உருவாக்கலாம்.
செய்தி:
மும்பை தாக்குதல் பயங்கரவாதி அஜ்மல் கசாப்பிற்காக, மகாராஷ்டிரா மாநில அரசு இதுவரை, 25 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.
நம்ம கமென்ட்:
மொத்ததுல அவனோட கூட்டத்துக்கே இந்தியாவுக்குள் தாக்குதல் நடத்த ரொம்ப குறைவாகவே பணம் செலவாயிருக்கும். இந்தளவு பணம் இருந்திருந்தா இன்னும் புதுசா டெக்னாலஜியோட தாக்கி இருப்பானுக?
செய்தி:
இதுவரையில் நாம் இளைய சமுதாயத்தினரை பார்த்து, "இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள்' என கூறுவதை, பழமொழியாக கொண்டிருந்தோம். இனி, "இன்றைய அமைச்சர்கள் நாளைய சிறைக் கைதிகள்' என்ற சூழ்நிலை உருவாகும் என, கம்யுனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச்செயலாளர் பேச்சு.
நம்ம கமென்ட்:
ஒரு வேளை ரொம்ப அனுபவமா இருக்குமோ? இன்றைய சிறைக் கைதிகளும் நாளைய அமைச்சர்கள்ன்னு சொன்னாலும் பொருந்துமே!
செய்தி:
சித்திரை முதல் நாளையே தமிழ் புத்தாண்டாக மீண்டும் அறிவிக்க வேண்டுமென பல கோடி தமிழர்கள் விரும்பியதால், அரசு மாற்றி அறிவித்தது' என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
நம்ம கமென்ட்:
அப்போ நம்ம ஐயா அந்த பல கோடி தமிழர்கள் லிஸ்ட்டில் இல்லையா? என்ன கொடுமை?
செய்தி:
"விஜயகாந்த் கோபப்படுகிறான் என்று கூறுகின்றனர். மக்களுக்கு நல்லது செய்யவில்லை எனில், எனக்கு கோபம் வரும். மற்றவர்கள் நல்லதைச் செய்திருந்தால், நான் கட்சி ஆரம்பித்திருக்க மாட்டேன்" விஜயகாந்த் பேச்சு.
நம்ம கமென்ட்:
நீங்க மட்டும் கோவப்படல. உங்க கட்சியில இருக்குற மிச்சம் சொச்சம் தொண்டர்களும் ரொம்ப கோவமா இருக்கறாங்க போல?
செய்தி:
மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தது யார் என்பதில் ஆளுங்கட்சிக்கும், காங்கிரசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், சட்டசபையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நம்ம கமென்ட்:
வரலாறு ரொம்ப முக்கியம் அரசியல்வாதிகளே, இந்த மாதிரி அடிக்கடி மறந்துட்டு சண்டை போடாதிங்க!
செய்தி:
கர்நாடகாவில் பீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாகக் கூறப்படுவது தவறான தகவல். பீர் தயாரிப்பு மற்றும் சப்ளையில் எந்த பாதிப்பும் இல்லை' என, மாநில கலால் துறை அமைச்சர் கூறினார்.
நம்ம கமென்ட்:
பீருல ஏதோ உள்நாட்டு குழப்பம் வந்திருக்கும் போல. கணக்கு பாக்ரவங்க பீர் அடிச்சு மப்பாகி கணக்கு வழக்கு குழம்பியிருக்கும்!
12 கருத்துரைகள்:
ஆகா...நீங்களுமா....? கமென்ட் நலலா இருக்குங்க...
நல்லாயிருக்கு!தொடரலாம்! சா இராமாநுசம்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய
தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
நடப்புகளும் அதற்கான தங்கள் கருத்தும்
நல்லா இருக்குது நண்பரே.
எல்லா கமெண்டும் சூப்பர்
இன்று
கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியவை ..(புத்தாண்டு ஸ்பெஷல் )
உங்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே..........
காலை வணக்கம் பிரகாஷ் !இனிய நந்தன வருட வாழ்த்துக்கள்!
அண்ணே அவ்வளவும் சூப்பர்
இன்றைய பதிவு50 தேடுஇயந்திரங்களில் உங்கள் பதிவுகளை இனைக்கலாம்
உங்க கமெண்ட்ஸ்லாம் அழுத்தம் திருத்தமா நச்சுன்னு இருக்கு. தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் தம்பி
நீங்களுமா.....??????????
:)))))))))
அனைத்தும் அருமை...
//மும்பை தாக்குதல் பயங்கரவாதி அஜ்மல் கசாப்பிற்காக, மகாராஷ்டிரா மாநில அரசு இதுவரை, 25 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.//
எனக்கு வந்த ஒரு செய்தி:
பசங்களா, தப்பு பண்ணா அஜ்மல் ரேஞ்சுக்கு சின்னதா பண்ணுங்க.. பிக்பாக்கெட், பாங்க் கொள்ளை இப்படி பெருசா பண்ணா ஸ்பாட் என்கவுண்டர் தான்!
இதை நினைத்து அழுவதா, இல்லை சிரிப்பதா?
கம்மென்ட் எல்லாம் 'டாப்'பா இருக்கு.