ஜவ்மிட்டாய், நாம சிறு வயதில் பார்த்த மிட்டாய். இப்போ இந்த மிட்டாய் எங்க இருக்குன்னே தெரியாத அளவுக்கு அழிஞ்சு போச்சு. நீளமான மூங்கில் கொம்பில் அதன் உச்சியில் ஒரு அழகான பொம்மை கையில் சிங்க்ச்சாவை தட்டிக் கொண்டு பார்க்க அழகாக இருக்கும். அந்த பொம்மைக்கு அடியில் இருந்து ஜவ்மிட்டாய் அந்த மூங்கில் கொம்பில் சுத்தி வச்சிருப்பாங்க.
ஜவ்மிட்டாய் பொம்மை |
பையன்களுக்கு வாட்ச் டிசைனும். பொண்ணுங்களுக்கு நெக்லஸ் டிசைனும் ஜவ்மிட்டாயில் செஞ்சு தருவாங்க. இப்ப மதுரையில நடந்த சித்திரை திருவிழாவில ஜவ்மிட்டாய் வித்துட்டு வந்தாரு ஒரு பெரியவர். சின்னப் பசங்களுக்கு அதைப் பார்த்ததும் ஆச்சர்யங்கள். ஒரு பொம்மையில் இருந்து மிட்டாய் டிசைன் செஞ்சு தர்றாங்களே என ஆச்சர்யப்பட்டார்கள். அந்த ஜவ்மிட்டாய் விற்பவர் இனி அடுத்த திருவிழாவுல தான் பாக்க முடியும் இந்த ஜவ்மிட்டாய், பசங்களே, வாங்கிக்கங்க என கூவி கூவி விற்பனை செய்தார்.
ஜவ்மிட்டாயில் நெக்லஸ் |
வாட்ச் அஞ்சு ரூபாய் எனவும், நெக்லஸ் பத்து ரூபாய் எனவும் விலை வச்சிருந்தார். அண்ணன் பசங்களுக்கு வாங்கி தந்ததும் ரொம்ப ஆர்வமா சாப்பிட்டாங்க. டிபரன்ட் டேஸ்ட்டா இருக்குன்னு சொன்னாங்க பசங்க. நீங்களும் ஜவ்மிட்டாய் பொம்மையை பார்த்துக்கங்க.
21 கருத்துரைகள்:
எவ்வளவு இனிமையான தருணங்கள்....
அவை கொடுத்த மகிழ்ச்சி....இதுவரை எதுவும் கொடுத்ததில்லை...
ரொம்ப இனிமையான பகிர்வு.. பாராட்டுக்கள்..
தேள், பாம்பு, கம்மல், மூக்குத்தி, மோதிரம், பிரேஸ்லெட்டுன்னு இவங்க கைவண்ணத்துல நானும் சுவைச்சு இருக்கேன்.
ஜவ் மிட்டாயா ...ஜவ்வு மிட்டாயா...
இதை நானும் சாப்பிட்டு இருக்கிறேன்..அழகர் திருவிழாவில் வித்தது தானே...
நானும் பதிவிட்டு இருக்கிறேன்
http://www.kovaineram.com/2012/04/blog-post.html
அடுத்த அழகர் திருவிழாவில் மீண்டும் ஜவ் மிட்டாய் வாங்கலாம்.பதிவும் போடலாம்..அப்படிதானே
சின்ன வயசில பார்த்திருக்கேன், சாப்பிட்டதில்லை ..!
//ஜவ்மிட்டாய் வாங்கலியோ ஜவ்மிட்டாய்//
என்னய்யா இது..தமிழ்வாசி புது தொழில்ல இறங்கிட்டாரா?
ஜவ்வுமிட்டாயை எவ்வளவு நீளம் வரை பிய்யாமல் இழுக்கலாம்னு சொல்லியிருந்தால், பதிவு முழுமை பெற்றிருக்கும்.
அஹா .. அதை கடிகாரம் போல கையில் கட்டி கொண்டு பின்பு சுவைப்பது ... அருமை ...
செம பதிவு பிரகாஷ். இன்னும் விரிவா எழுதிருக்கலாம். அவசியம் இது போன்ற விஷயங்களை பதிவு செய்து வைக்க வேண்டும்
வணக்கம்,பிரகாஷ்!எங்கள் ஊரிலும் அந்தக்(எங்கள்) காலத்தில் விற்பார்கள்!இப்போது.................ஹும்!எல்லாமே சிதைந்து விட்டது!!!!!
எனக்கும் ரொம்ப பிடிக்கும் !
மலரும் நினைவை ஊட்டிய பதிவு.ஒரு விசயத்தை சொல்ல மறந்து விட்டீர்கள் சகோதரரே! .கையில் சுற்றப்படும் வாட்சை பிய்து எடுக்கும் போது முடியுடன் ஒட்டி தரும் தொல்லையை சொல்லியிருக்கலாம்.என் பிள்ளைகளுகுக்கு ஜவ் முட்டாயியை எவ்வாறு விளக்குவது என்பதுதான் இப்போதைய என் தலை போகும் வேலை.
ஜவ்வு மிட்டாய் மறக்க முடியாத
பால்ய கால பைவ் ஸ்டார்!
இந்த மனிதர்களை இப்போது பார்ப்பது அரிதாகி விட்டது. இந்த மாதிரி விழாக்களில்தான் பார்க்க முடியும் போலிருக்கிறது
சிறூவயது நினைவுகள் மனதில் அரும்பின!
நன்றீ!
-காரஞ்சன்(சேஷ்)
என் சின்ன வயசுல ரசிச்சு கையில கட்டி அப்றம் சாப்ட்டிருக்கேன். இந்த வியாபாரிகள் இன்னிக்கு வழக்கொழிஞ்ச போயிட்டாங்கன்னு நினைச்சேன். இன்னும் இருக்காங்கன்றதுல சந்தோஷம்.
அந்த நாள் ஜாபகம் வந்ததே ...
உண்டால் அம்ம இனிது
படம்
கண்டால் என்ன இனிது
நேரில் கண்டதும் உண்டு
உண்டதும் உண்டு
புலவர் சா இராமாநுசம்
ஜவ் மிட்டாய் சாப்பிட்ட காலம் மனசுக்குள் இனிப்பாய் இறங்கியது...
சின்ன வயதில் ரொம்ப விரும்பி சாப்பிட்ட ஜவ்வு மிட்டாயை இப்போதெல்லாம் பார்க்க முடிவதில்லை..
நீங்களாவது பார்த்தீங்களே!!
பழைய நினைவுகளை நினைவூட்டியதற்கு நன்றி!!
ஆகா...படத்த பாக்குரப்போவே எச்சில் ஊருகிறது....