முயல் திரைப்படம் S.P.S. குகன் அவர்களால் ஒளிப்பதிவு மற்றும் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி வரும் படம். இந்த திரைப்படத்தை P & V Media Production, SPS Media Works என்ற பேனரால் தயாரிக்கப்படுகிறது. சுமார் ஐயாயிரத்துக்கும் அதிகமான புகைப்படக்கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள் இந்த படத்தின் தயாரிப்பில் பங்கு பெற்றிருப்பதால் இந்த முயல் திரைப்படம் உலக சாதனை படைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை இந்த அளவுக்கு அதிகமான நபர்கள் ஒரு திரைப்பட தயாரிப்பில் பங்கு பெற்றது இல்லை.
முயல் இயக்குனர் குகனுடன் நான் |
மேலும் பொது மக்களும் இந்த படத்தின் தயாரிப்பில் இணைய வேண்டும் என குகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.குகன் ஏற்கனவே மதுரை டூ தேனி வழி ஆண்டிபட்டி, சனிக்கிழமை சாயிந்திரம் அஞ்சு மணி போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராக இருந்துள்ளார்.
முயல் படத்தில் ஒரு காட்சி |
ஜீ. வி. பிரகாஷ் இசையமைக்கும் முயல் படத்தில் முரளி, சரண்யா, ராஜ்குமார், பிரபு, சிவானி, ஐஸ்வர்யா, மீரா கிருஷ்ணன், சிங்கமுத்து, முத்துக்காளை மற்றும் ரஞ்சனி ஆகியோர் நடிக்கிறார்கள்.
சூட்டிங் ஸ்பாட்:
இந்த படத்தின் சில காட்சிகள் எனது வீட்டிற்கு அருகே உள்ள வீட்டில் எடுத்தார்கள். ஐஸ்வர்யாவை மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்க்க வருகிற நிகழ்ச்சி எடுக்கப்பட்டது. இந்த சூட்டிங் நடந்துட்டு இருக்கும் பொது கேமரா பிளாஷ் ஆப் செய்து போட்டோஸ் எடுத்துட்டு இருந்தேன். அப்புறமா கேமராவில் செட்டிங் மாத்தி போட்டோ எடுக்கும் போது பிளாஷ் ஆப் செய்ய மறந்து ஒரு ஸ்டில் எடுத்து விட்டேன். அப்போது பிளாஷ் லைட் அடித்தவுடன் டைரக்டர் குகன் கட், கட், கட் யார் அது, யார் அது பிளாஷ் அடிச்சது என கேட்க அசடு வழிஞ்சுட்டே நான் தான்னு சொல்ல, குகன் சார் ஒண்ணுமே சொல்லாம அடுத்த ஷாட்டுக்கு ரெடி சொல்ல நான் ஸ்ஸ்ஸ்அபா என்றேன்.
அதுவரை திரும்ப திரும்ப ஒரே ஷாட் எடுத்துட்டு இருந்தாங்க. ஆனா அடுத்த ஷாட் ஓகே பண்ணிட்டார். அப்புறம் சூட்டிங் இடைவேளையில் குகன் சாரிடம் அறிமுகம் செய்து கொண்டேன். அப்போ போட்டோ பிளாஷ் ஆப் பண்ணிட்டு எடுங்கன்னு சொன்னார். அசடு வழிஞ்சுட்டே ஹி..ஹி.. என்றேன். பின்னர் அவருடன் இணைந்து ஒரு போட்டோ எடுத்துக் கொண்டோம்.
நடிகை ஐஸ்வர்யாவுக்கு காட்சியை விளக்குகிறார் இயக்குனர் குகன் |
14 கருத்துரைகள்:
வணக்கம் பிரகாஷ்!முயல் வெற்றி பெற வாழ்த்துக்கள்!போட்டோ(உங்க)நல்லாருக்கு.
கலக்குறீங்க தல ..!
இந்த மாதிரி திரைப்படங்கள் எல்லாம் வெற்றி பெற்றால்தான் சிறு பட்ஜெட் திரைப்படங்களுக்கு எதிர்காலம் உண்டு.. என் வாழ்த்துக்கள் படக்குழுவினருக்கு உண்டு
பிளாஷ் போட்டு படம் எடுத்ததுக்கு நான் டைரக்டரா இருந்தா காது மேல ஒன்னு விட்டுருப்பேன்........ஹிஹி! ஒரு ஆசைதான்....படம் வெற்றியடைய வாழ்த்துகள்!
முயல் உறங்காமல் இருந்தால் சரி....!!!
படத்தை படமா எடுங்க பாம்பு படம் எடுக்குராப்ல எடுத்துறாதீங்க, அப்புறமா சிபி விமர்சனம் போட்டு கொல்லப்போறான்.
வாழ்த்துக்கள் பிரகாஷ் !
பிரகாஷ்..எப்பவும் போஸ் கொடுக்கும் போது போடுற நெக் பனியன் ஷர்ட் எங்க...?
முயல் இயக்குனர் குகனுடன் நான்...
>>>ஏன் இந்த விளம்பரம்?! ஹீரோவா நடிக்கலாம்ன்னு ஐடியா எதாவது வந்திருக்கா?!
வாய்ப்பு எப்பவும் வராது ...உடனடியா நடிக்க சான்ஸ் கேட்டிடுங்க....
பிளாஷ் போட்டு படம் எடுத்தீங்களா?! ஹா ஹா ஹா ஹா ஹா
நடத்துங்க..
அப்படியே படத்துல சின்னதா ஒரு காட்சியில தலைகாட்டுறீங்களாமே??
வாழ்த்துகள் பிரகாஷ்.
நாளுக்கு நாள் உங்க அழகு கூடிகிட்டே போகுது பிரகாஷ் அண்ணா
உண்மையிலே இது ஒரு அறிய சந்தர்ப்பம்.படத்திற்கு முதல் விளம்பரம் உங்கள் மூலமாக.வெற்றிபெற வாழ்த்துக்கள்.