ஹாய் பிரண்ட்ஸ்....
எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளாச்சு பதிவு எழுதி. இப்போ ஒரு பதிவு எழுத டைம் கெடச்சுச்சு.
டிஸ்கி: (எவன் கண்டுபுடிச்சது இந்த டிஸ்கிய, அப்படின்னு யாராச்சும் டென்ஷன் ஆனா, அதன் வரலாற்றை பதியவும்)
"நான் என்னத்த கண்டேன்" அப்டின்னு ஒரு புதிய பகுதி மூலமா உங்களை சந்திக்க வந்திருக்கேன். நம்ம பிரண்ட் செங்கோவியின் "நானா யோசிச்சேன்" ரேஞ்சுக்கு இல்லாட்டியும் எதோ என்னால முடிஞ்ச ரேஞ்சுக்கு படைப்பை (ஹி... ஹி...) தந்திருக்கேன்.
இன்னைக்கு நம்ம நாட்டின் 64வது குடியரசு தினம். அனைவருக்கும் வாழ்த்துகள். அந்தக்காலத்தில் அன்னியரிடமிருந்து நம்ம நாட்டை நமது முன்னோர்கள் போராடி மீட்டுத் தந்திருக்காங்க. ஆனா நம்ம அரசியல்வாதிகள் நம்ம வர்த்தகத்தை பாதிக்கும் மேல அந்நியருக்கு விக்க முடிவு பண்ணியிருக்காங்க. இதனால நமக்கு லாபமா? நஷ்டமா? லாபமா இருந்தாலும், நஷ்டமா இருந்தாலும் நம்ம வர்த்தகம் அந்நியர் கைக்கு போயிருச்சு என்பதை மறுக்க முடியாது. இப்ப சாதகமா இருந்தாலும் பின்னாடி பாதகமா மாறாதுன்னு என்ன நிச்சயம் அரசியல்வாதிகளே? நீங்க இப்ப அஞ்சாண்டு ஆண்டுட்டு கல்லா நொப்பிட்டு ஏப்பம் விட போயிருவிங்க. காலம் முழுசும் பிரச்னையை சந்திக்கிறது நானும் எனது வருங்காலமும் தான் என நினைக்கும் போது, கையை பிசையரத தவிர என்ன செய்றதுன்னு தெரியில. ஏன்னா நாங்கெல்லாம் சேர்ந்து தானே உங்களை ஆட்சியில உட்கார வச்சிருக்கோம். இப்ப நாங்க யோசனை பண்ணி என்ன செய்றது? சரி, விடுங்க புலம்பாம குடியரசு தினத்துல டிவில நிறைய படம் போடறாங்க. பார்க்க போறேன். நீங்களும் எதையும் கண்டுக்காம டிவி பாக்க உட்காருங்க.
"டேய்... தம்பி மேல ஏறு... படியில நிக்காத.... ஏறுடா.... நீ கீழ விழுந்தா அஞ்சு நிமிசத்துல உன் கதை முடிஞ்சிரும். ஆனா எனக்கு ஆயுள் முழுசும் பிரச்சனை. சொன்னாக் கேளுடா தம்பி" என ஒரு கண்டக்டர் புலம்பறத பார்த்தேன். நெஜமாலுமே பாவங்க கண்டக்டர்ஸ்... டிக்கட் போட்டு, கணக்கு வழக்கை குறிப்பெழுதி, பஸ் ஸ்டாப்பில் எறங்க வேண்டியவங்களை எறக்கி, ஏற வேண்டியவங்களை ஏத்தி, இப்படி தங்களோட வேலைக்கு நடுவுல இப்படி ஸ்கூல் பசங்களை படியில நிக்க விடாம மேல ஏத்த அவர் படும் பாடு சொல்லி மாளாதுங்க... ஸ்கூல் பசங்களே படியில நிக்க வேணாம்னு உங்க நல்லதுக்கு தான் கண்டக்டர் சொல்றாங்க. புரிஞ்சு நடந்துக்கங்க பாய்ஸ்....
நேத்து, இன்னைக்கு, நாளைக்கு என மூணு நாளைக்கு வரலாறு காணாத லீவு விட்டிருக்காங்க. ஸ்கூலுக்கு, ஆபீசுக்கு லீவு விட்டத சொல்ல வரல. நம்ம அரசின் பட்ஜெட்டில் பெரும் பங்கு வகிக்கும் டாஸ்மாக் தான் மூணு நாள் லீவு. இப்படி லீவுன்னு ஒரு பேப்பர்ல ரெண்டு நாளுக்கு முன் படிச்சேன். அதுல லீவு வந்தாலும் குடிமகன்கள் குடிக்காம இருக்க மாட்டாங்க. ரெண்டு நாளைக்கு முன்னாடியே பாட்டில் பாட்டிலா வாங்கி ஸ்டாக் பண்ணிக்குவாங்க. அதனால டாஸ்மாக் அந்த மூணு நாளைக்கு பெருசா லாஸ் ஆகாதுன்னு ஒரு அதிகாரி பேட்டி தந்திருக்கார். எப்புடி, நம்ம மக்கள் காரியத்துல கண்ணா இருப்பாங்கன்னு நம்மாளுக புரிஞ்சு வச்சிருக்காங்க பாருங்க.
தோணி கேப்டனா இருக்கனுமா வேணாமா? பலரும் பல கருத்துக்களை சொல்லிட்டு இருக்காங்க. தோனிக்கு வயசாயிருச்சு. அவரு கேப்டன் தகுதியை இழந்துட்டார், அவரு முன்ன மாதிரி நிறைய ரன் அடிக்கறது இல்லை. வேணும்னா ஒன் டே மேட்சுக்கு மட்டும் கேப்டனா வச்சுக்கலாம். காம்பிர், விராட் ஹோலி ரெண்டு பேருல ஒருத்தரை கேபடனா ட்ரை பண்ணலாம். இப்படி கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் எதிர்ப்பு தர்றாங்க. அதே சமயத்துல தோணி சிறந்த கேப்டன், அவருக்கு பின் இன்னொருத்தர் என தேடும் காலம் இப்ப இல்லை. தோணி தலைமையில் T20, 50 over உலககோப்பை வாங்கியிருக்கோம். அவரு களத்தில் கோவப்படாம பிரச்னையை ஈஸியா கையாளுவார். இப்படியும் சில ஜாம்பவான்கள் சொல்றாங்க. என்னக்கென்னவோ, இப்போ இந்திய டீமில் துவக்கம், மிடில் ஆர்டர், பவுலர்ஸ் என எல்லாமே சரியான பார்ம் இல்லாம ஆட்டம் கண்டுகிட்டு இருக்குன்னு நினைக்கிறேன். இதையெல்லாம் சரி பண்றத வுட்டுட்டு கேப்டனை குறை சொல்றதுல நியாயம் இல்லைன்னு நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றிங்க?
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில நம்ம (ஆமா நம்ம, எல்லா பதிவர்கள், பேஸ்புக்ல இருக்கறவங்க எல்லாரும் இவருக்கு ரசிகர்கள் ஆகிடாங்க) பவர் ஸ்டார் தனது உலகப்புகழ் நடிப்பில் பட்டையை கிளப்பியிருக்கார். சந்தாணம் பவரை ஓட்டு ஓட்டு என ஓட்டியும் பவர் அசராமல் நடிப்பு திறமையை காட்டினதுல, அவரை வச்சு படம் எடுக்க பிரபல டைரக்டர்ஸ் கியூவுல நிக்கறதாகவும், சுமாரா அம்பது லட்சம் சம்பளம் பேசி இருப்பதாகவும் நியூஸ் அடிபடுது. ஆகா... பவர் ஒர்த் பவருக்கு தெரியுமா? தெரியாதோ? மத்தவங்களுக்கு தெரியுதுப்பா.....
நம்ம பிரபல பதிவர், ஊர் சுற்றும் வாலிபன், ஹோட்டல்களின் பலி ஆடு, வருங்கால சினிமா வில்லன் கோவை நேரம் ஜீவா போன வாரம் நெல்லை விஜயம் செய்து உணவு ஆபீசரிடம் அல்வா வாங்கிட்டு இருந்தார். அதனால் என்னவோ தெரியில என்கிட்டே போன்ல பேசுறப்போ அல்லவா ச்சே... அல்வா பத்தி அதுவும் இருட்டுக்கடை அல்வா பத்தி ரொம்பவே புகழ்ந்து சொல்லிட்டு இருந்தார். மச்சி.. இருட்டுக்கடை அல்வா போல எங்க மதுரை பிரேமா கடை அல்வாவும் பேமசு தான்னு நான் சொன்னேன். அவரு போய்யா.. மதுரைன்னா மணக்கும் மல்லி, ஜில் ஜிகர்தண்டா தான் பேமசுன்னார். நானும் விடல.. அதேபோல தான்யா அல்வாவும் பேமசு. இருட்டுக்கடை அல்வா ஒரு டேஸ்ட்ன்னா, மதுரை பிரேமா விலாஸ் அல்வாவும் டேஸ்ட்தான் என சொன்னேன். ஆனா பயபுள்ள நம்பவே இல்லை. ஒரு நாள் மதுரை வர்றப்ப அல்வா வாங்கி தா.. டேஸ்ட் பண்ணிட்டு நல்லா இருக்கான்னு சர்டிபிகேட் தர்றேன்னு சொல்லியிருக்காரு. ஆக, ஜீவா மதுரைக்கு வர்றப்ப அல்வா கடைல சொல்லி கொஞ்சம் இல்ல.. இல்ல... நிறைய டேஸ்ட் இருக்குற மாதிரி அல்வா செய்ய சொல்லனும்னு முடிவோட இருக்கேன். அவ்வ்வ்வவ்வ்வ்வவ்...
டுடே ஜில்...ஜில்...ஜிகர்தண்டா..(புதிய இணைப்பு):
22 கருத்துரைகள்:
என்ன தல அல்வா கொடுக்கப் போறேன்னு சொல்லிட்டு புதிய இணைப்பா ஜில் ஜில் ஜிகிர்தண்டா கொடுத்துட்டீங்க....
யோவ், ஆரம்பிச்சாச்சா?...சூப்பர்!
//டுடே ஜில்...ஜில்...ஜிகர்தண்டா..(புதிய இணைப்பு): //
பார்த்தா, பழைய இணைப்பு மாதிரி தெரியுதே....................?
// இருட்டுக்கடை அல்வா போல எங்க மதுரை பிரேமா கடை அல்வாவும் பேமசு தான்னு நான் சொன்னேன்//
உண்மை தான் மக்களே..தமிழ்வாசி எனக்கு வாங்கிக்கொடுத்திருக்கிறார்.
@சீனு
என்ன தல அல்வா கொடுக்கப் போறேன்னு சொல்லிட்டு புதிய இணைப்பா ஜில் ஜில் ஜிகிர்தண்டா கொடுத்துட்டீங்க.... ///
அல்வா சூடா இருந்தாதான் டேஸ்டா இருக்கும். ஆனா ஜிகர்தண்டா கூலா ஜில்லுனு இருந்தாதான் டேஸ்ட்.. அதான் இணைப்புக்கு ஜில் ஜில் தலைப்பூ...
(சமாளிப்பிங்க்ஸ்)
@செங்கோவி
//டுடே ஜில்...ஜில்...ஜிகர்தண்டா..(புதிய இணைப்பு): //
பார்த்தா, பழைய இணைப்பு மாதிரி தெரியுதே....................? ///
உம்ம ரேஞ்சுக்கு எல்லாமே பழசு தானே...
@செங்கோவி
// இருட்டுக்கடை அல்வா போல எங்க மதுரை பிரேமா கடை அல்வாவும் பேமசு தான்னு நான் சொன்னேன்//
உண்மை தான் மக்களே..தமிழ்வாசி எனக்கு வாங்கிக்கொடுத்திருக்கிறார்.////
ம்ஹும்... வாங்கி சாப்பிடாம ஜீவா நம்ப மாட்டார் செங்கோவி!
கலக்கலான பகிர்வு! நீண்ட நாளுக்கு பின் வந்த முதல் பதிவே சிக்சர்தான்! பட்டையை கிளப்புங்க! நன்றி!
இன்று முதல் பதிவுகள் ஆரம்பமா...? வாழ்த்துக்கள்...
ஜில் ஜில் ஜிகிர்தண்டா... ப்ளிச்... ப்ளிச்...
குடியரசு தின வாழ்த்துக்கள்...
வருக! வருக!
சூப்பர்ண்ணே!
வணக்கம்,பிரகாஷ்!!இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்.நீஈஈஈஈஈண்ட இடைவெளிக்குப் பிறகு...........அருமை!!!
@s suresh
கலக்கலான பகிர்வு! நீண்ட நாளுக்கு பின் வந்த முதல் பதிவே சிக்சர்தான்! பட்டையை கிளப்புங்க! நன்றி! ///
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
@திண்டுக்கல் தனபாலன்
இன்று முதல் பதிவுகள் ஆரம்பமா...? வாழ்த்துக்கள்...
ஜில் ஜில் ஜிகிர்தண்டா... ப்ளிச்... ப்ளிச்...
குடியரசு தின வாழ்த்துக்கள்... ///
குடியரசு தின வாழ்த்துக்கள் சார்...
இன்னைக்கு கொஞ்சம் டைம் இருந்துச்சு. அதான் பதிவு...
@T.N.MURALIDHARAN
koodal bala///
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@Yoga.S.
வணக்கம்,பிரகாஷ்!!இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்.நீஈஈஈஈஈண்ட இடைவெளிக்குப் பிறகு...........அருமை!!! ///
வணக்கம் யோகா ஐயா....
குடியரசு தின வாழ்த்துக்கள்.
யோவ்..உன்கிட்ட பேசினா கொஞ்சம் கேர்புல்லா தான் இருக்கனும் போல....அப்படியே ரிகார்ட் பண்ண மாதிரியே எழுதி இருக்க....
@தமிழ்வாசி பிரகாஷ்நன்றி!
வாழ்த்துக்கள் சகோ தொடர்ந்து கலக்குங்க .படிக்க நேரம் போதவில்லை
இரண்டு வாரம் ஓய்வில் செல்ல இருப்பதால் ஆறுதலாக வந்து பாடிக்கின்றேன் .
நன்றி வணக்கம் :)
@கோவை நேரம்
யோவ்..உன்கிட்ட பேசினா கொஞ்சம் கேர்புல்லா தான் இருக்கனும் போல....அப்படியே ரிகார்ட் பண்ண மாதிரியே எழுதி இருக்க....////
விடுயா.... அல்வா தரேன் சப்புக்கொட்டி சாப்பிட்டுக்கோ...
@அம்பாளடியாள்
வாழ்த்துக்கள் சகோ தொடர்ந்து கலக்குங்க .படிக்க நேரம் போதவில்லை
இரண்டு வாரம் ஓய்வில் செல்ல இருப்பதால் ஆறுதலாக வந்து பாடிக்கின்றேன் .
நன்றி வணக்கம் :)////
மெதுவா வந்து பாடுங்கோ சகோ..
இருட்டுக்கடை அல்வா ஒரு டேஸ்ட்ன்னா, மதுரை பிரேமா விலாஸ் அல்வாவும் டேஸ்ட்தான் என சொன்னேன். ஆனா பயபுள்ள நம்பவே இல்லை.
>>
ஜீவா, ஹோட்டல் ஹோட்டலா சுத்தி சாப்பிட்டு ருசியே மறந்து போய்ட்டார் போல! அந்த கடை அல்வான்னா எனக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கு மட்டுமில்ல என் பசங்களுக்கும் ரொம்ப பிடிக்கும். நல்லா இருக்கும் எங்களுக்கென்னமோ திருநெல்வேலி அல்வா விட இதுதான் பிடிச்சிருக்கு