அப்பாடா... ஜட்ஜையா ஒரு வழியா கமலின் விஸ்வரூபம் படத்துக்கான இடைக்கால தடையை அந்தா இந்தான்னு இழுத்தடுச்சு தடை நீக்கப்பட்டதுன்னு உத்தரவு போட்டுட்டார். இதையடுத்து படம் இன்னும் சில நாட்கள்ல ரிலீஸ் பண்ண போறாங்கன்னு நினைக்கிறேன். .
இனி தமிழகத்தில், பதிவுலகில் என்னென்ன நடக்கும் என ஓர் கற்பனை.
ஒரு பதிவர் தான் படம் பாக்க போனதையே ஒரு விமர்சனமா எழுதிட்டு கடைசி பாராவில படத்தோட விமர்சனத்தை எழுதுவார். அப்பாடா இன்னொரு பிரபல சினிமா விமர்சன பதிவருக்கு முன்னாடியே பதிவு போட்டாச்சுன்னு ஓர் திருப்தியோட வேலைக்கு போவார்.
இன்னொருத்தர் கையில நோட்டு, பேனாவோட படம் பாக்க போவார். படத்தோட வசனம், ஹீரோயின் எப்பப்ப சிரிச்சாங்க, இயக்குனரிடம் கேட்க வேண்டியவை, அப்படின்னு குறிச்சுட்டு வந்து சுமாரா ஒரு நீளமான பதிவு போடுவார். அதுல நாலஞ்சு கவர்ச்சி படம் கண்டிப்பா உண்டு. அப்புறமா விஸ்வரூபத்தை நான் இயக்குனா எப்படி இருக்கும்னு ஒரு பதிவு கண்டிப்பா உண்டு.
அடுத்தடுத்து நம்ம மக்கள்பலரும் விமர்சனம் எழுதி hits அடிப்பாங்க. அதுல சிலர் நெகட்டிவ் விமர்சனம் எழுதிட்டு அவங்க கமென்ட் பாக்ஸ் முழுசும் வாக்குவாதமா போயிட்டு இருக்கும்.
அப்புறமா விஸ்வரூபத்திற்கு சம்பந்தமே இல்லாத பதிவுக்கு கூட விஸ்வரூபம்னு தலைப்பு வச்சு நிறைய பதிவுகள் வெளிவரும்.
விஸ்வரூபம் டிவி ரைட்ஸ் வாங்குன டிவி தன் சேனல்ல எக்ஸ்குளுசிவ் என தலைப்பு போட்டு ஒரு காம்பியரை வச்சு ஒரு நிமிசத்துல வர்ற மாத்ரி பாட்டை எடிட் பண்ணி போடுவாங்க. விளம்பரங்களும் அதிகமா வரும். இப்படியே அவுங்களுக்கு நல்ல வருமானமும் வரும்.
ரைட்ஸ் வாங்காத டிவியில விஸ்வரூபத்தின் சம்பந்தமான எதுவும் போடமாட்டாங்க. அது தெரியாம நாம இந்த நிகழ்ச்சியில பாட்டு வரும், அந்த நிகழ்ச்சியில படத்தை பத்தி ரெண்டு மூணு சீன் வரும்னு காத்துட்டு இருப்போம். அதனால எந்த டிவி ரைட்ஸ் வாங்கியிருக்காங்கனுதெரிஞ்சுச்சு அந்த டிவியில மட்டும் படத்தை எதிர்பாருங்க.
எல்லா டிவி சேனல்லையும் விமர்சனம்னு ஒரு அரை மணி நேரம் படத்தை தாளிச்சு எடுப்பாங்க. அது போதாதுன்னு எல்லா தமிழ் செய்தி சேனல்களும் தங்கள் பங்குக்கு நாலஞ்சு பேர வட்டமா உட்கார வச்சு படத்தை பத்தி நியாயம் அநியாயம் பேசுவாங்க. கசகசன்னு எல்லோரும் ஒரே நேரத்துல அடிச்சுக்கோ, பிடிச்சுக்கோன்னு பேசி கடைசி வரை என்னா சொல்ல வராங்கன்னு புரியாமலே நிகழ்ச்சி முடிஞ்சிரும்.
எல்லா தின பேப்பர்கள், வார இதழ்கள் எல்லாம் விஸ்வரூப விமர்சனம் மற்றும் கமல் பேட்டின்னு போட்டு கலர் கலரா படங்களையும் போட்டு பக்கத்தை நிரப்புவாங்க.
உள்ளூர், வெளியூர் கலை நிகழ்ச்சிகள் எல்லாத்துலயும் கமல் கலந்துட்டு விஸ்வரூபம் படத்துக்கு விளம்பரமும், ஆடியன்ஸையும் கூட்டம் சேர்ப்பார். அப்படியே டிவியில வர்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில விஸ்வரூபம் படத்தை வச்சு விஸ்வரூப ஸ்பெசல்ன்னு விதவிதமா பாட்டு பாடி நாலஞ்சு வாரம் ஓட்டுவாங்க.
அப்புறமா முக்கியமா ஒண்ணு சொல்ல மறந்துட்டேன். படத்துக்கு தடை போட காரணமா இருந்தவங்க தியேட்டர்ல ரகளையை ஸ்டார்ட் பண்ண சான்ஸ் இருக்கு. படத்தை பத்தி நெகடிவ்வா அவங்க சார்பு டிவி, பேப்பர்ஸ் என முடிஞ்ச அளவு எங்கெங்க விமர்சனம் பண்ண முடியுமோ, அதெல்லாம் கரெக்டா செய்வாங்க.
டிடிஹெச்-ல பணம் கட்டுனவங்க கொஞ்சம் சந்தோசப்படுவாங்க. ஆனா எப்போ படம் போடுவாங்கன்னு எதிர்பார்ப்பில் கொஞ்சம் டென்சனும் ஆவாங்க. படம் ஒளிபரப்பு பத்தி எந்த அறிவிப்பும் வராமல் போனால் அவுங்களும் விஸ்வரூபம் படத்துக்கு கேஸ் போடவும் சான்ஸ் இருக்கு.
அப்படியே டிடிஹெச்ல படம் வெளிவந்தாலும் திருட்டு சிடி தயாரிக்க பலரும் ட்ரை பண்ணுவாங்க. அப்படியும் ஏதாச்சும் சிடி வெளிவந்தாலும் வரும்.
டிடிஹெச்-ல பணம் கட்டுனவங்க கொஞ்சம் சந்தோசப்படுவாங்க. ஆனா எப்போ படம் போடுவாங்கன்னு எதிர்பார்ப்பில் கொஞ்சம் டென்சனும் ஆவாங்க. படம் ஒளிபரப்பு பத்தி எந்த அறிவிப்பும் வராமல் போனால் அவுங்களும் விஸ்வரூபம் படத்துக்கு கேஸ் போடவும் சான்ஸ் இருக்கு.
அப்படியே டிடிஹெச்ல படம் வெளிவந்தாலும் திருட்டு சிடி தயாரிக்க பலரும் ட்ரை பண்ணுவாங்க. அப்படியும் ஏதாச்சும் சிடி வெளிவந்தாலும் வரும்.
இந்நேரம் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செஞ்சிருப்பாங்க. அவங்க பக்க நியாயத்துக்கு இன்னும் சில கட்சிகள், அமைப்புகள்ன்னு ஆதரவு திரட்டுவாங்க. பேப்பர்ல அவங்க அறிக்கைகள் அனல் பறக்கும்.
அப்புறம் இப்பவே "ஆதிபகவன்" படத்தை போட்டு காட்டனும், இந்துக்களை அவமதிக்குற மாதிரி காட்சிகள் இருக்குன்னு சில அமைப்புகள்எதிர்ப்பு குரல் தராங்க. அவங்களுக்கும் அந்த படத்தை போட்டு காட்ட ஏற்பாடு பண்ணுவாங்க. இப்படியே எல்லா படத்துக்கும் ஏதாவது ரூபத்துல ஊர், பேரு தெரியாத அமைப்புகள் திடீர்னு மொளச்சு படத்தை எங்களுக்கு போட்டு காட்டணும்னு எதிர்க்க ஸ்டார்ட் பண்ணுவாங்க. இப்படியே அவங்கெல்லாம் தமிழ்ல வர்ற எல்லா படத்தையும் பிரீயா பார்க்க சான்ஸ் கெடச்சிரும்.
கமென்ட் அப்டேட்ஸ்:
Karthik Somalinga said... இனி ஒரு வாரத்துக்கு திரைமணம் முகப்பு முழுக்க விஸ்வரூபமா இருக்கப் போகுது!!! :)
எல்லா தமிழ்பதிவு திரட்டிகள், முக்கியமா தமிழ்மணம், திரைமணம் என கொஞ்ச நாள்களுக்கு எங்க பார்த்தாலும் விஸ்வரூபம் பட கருத்துக்கள், விஸ்வரூபமா இருக்கும்.
கமென்ட் அப்டேட்ஸ்:
Karthik Somalinga said... இனி ஒரு வாரத்துக்கு திரைமணம் முகப்பு முழுக்க விஸ்வரூபமா இருக்கப் போகுது!!! :)
எல்லா தமிழ்பதிவு திரட்டிகள், முக்கியமா தமிழ்மணம், திரைமணம் என கொஞ்ச நாள்களுக்கு எங்க பார்த்தாலும் விஸ்வரூபம் பட கருத்துக்கள், விஸ்வரூபமா இருக்கும்.
டிஸ்கி:
சரி பிரண்ட்ஸ்... இன்னும் நிறைய சொல்லிட்டே போகலாம். விட்ட தொட்ட கருத்துகள்/ நடக்க போகும் சம்பவங்களை கமென்ட்ல சொல்லுங்க. அப்டேட் பண்ணிக்கிறேன்.
டிஸ்கி: எப்படியோ நானும் விஸ்வரூபம் தலைப்பை வச்சு ஒரு பதிவு போட்டுட்டேன்.
13 கருத்துரைகள்:
முடங்கிப் போகும் விண்டோஸ் இயக்கம் - http://mytamilpeople.blogspot.in/2013/01/computer-problem-and-solutions.html
ரொம்ப பாதிக்கப் இருக்கீங்கன்னு நினைக்கிறன் :-)
@சீனு
ரொம்ப பாதிக்கப் இருக்கீங்கன்னு நினைக்கிறன் :-) ///
என்ன சொல்ல வரீங்க சீனு???
///இப்படியே எல்லா படத்துக்கும் ஏதாவது ரூபத்துல ஊர், பேரு தெரியாத அமைப்புகள் திடீர்னு மொளச்சு படத்தை எங்களுக்கு போட்டு காட்டணும்னு எதிர்க்க ஸ்டார்ட் பண்ணுவாங்க.///
இது என்ன இன்னிக்கி நேத்தா நடக்குது? கமலுக்கு பிரச்சினையில்லாம வெளிவந்த படம்தான் என்ன? லூஸ்ல விடுங்கண்ணே..
இனி ஒரு வாரத்துக்கு திரைமணம் முகப்பு முழுக்க விஸ்வரூபமா இருக்கப் போகுது!!! :)
@Dr. Butti Paul (Real Santhanam Fanz)
ஹாய் புட்டி பால்... எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளாச்சு சந்திச்சு!!!
இது என்ன இன்னிக்கி நேத்தா நடக்குது?///
அதச் சொல்லுங்க...
அடேங்கப்பா..நல்ல ஆராய்ச்சிய்யா!
@Karthik Somalinga
வாங்க கார்த்திக்... கமென்ட்டியதுக்கு தாங்க்ஸ்....
இனி ஒரு வாரத்துக்கு திரைமணம் முகப்பு முழுக்க விஸ்வரூபமா இருக்கப் போகுது!!! :) ///
உங்க கருத்தை அப்டேட் பண்ணிகறேன்....
ஹி ஹி ஹி... உண்மைதான் பாஸ்... எப்பிடி சமாளிக்கப்போறோமோ தெரியல!! இதுகளால எண்டைக்கோ விஸ்வரூபம் என்றத கேட்டாலே நமக்கு கடுப்பு வராம இருந்தா சரி!!
ஒரு வாரமாவே இதே பேச்சுதான்! திரும்பவும் அப்பீல் பண்றாங்க தெரியுமா? ரஜினி வேற கமல் வீட்டுக்கு போயிறுக்கார்! ஒரே ரகளைதான் போங்க!
இன்னிக்கு டிவில ஸ்பெஷல் புரோகிராம். லைவ்வா ஓடிக்கிட்டு இருக்கு.
வணக்கம்,பிரகாஷ்!///எல்லா தமிழ்பதிவு திரட்டிகள், முக்கியமா தமிழ்மணம், திரைமணம் என கொஞ்ச நாள்களுக்கு எங்க பார்த்தாலும் விஸ்வரூபம் பட கருத்துக்கள், விஸ்வரூபமா இருக்கும்.////நாம இருப்பமா?????????????????
அட சூப்பர் தல ..