இருக்கேனா? இல்லையா?
போன மாசம் மொத வாரத்தில் சில பதிவுகள் எழுதினது. அப்புறம் இப்போ தான் எழுதறேன். ரொம்ப பிஸி (எப்ப பாரு, இத ஒண்ணு சொல்லிக்கிறாங்க) அப்படி நீங்க சத்தமாவே சொல்றது கேட்குது. என்ன செய்ய, பிஸியா இருக்கறதை வேறெப்படி சொல்றது? ஆனா மொபைலில் பேஸ்புக், நண்பர்களின் பதிவுகள் என ஓரளவு இருக்கேன். ஆனா, கமெண்ட்ஸ் போட முடியல. ஆனா, பதிவு பிடிச்சிருந்தா போன்ல கூப்பிட்டு நல்லது, கெட்டத சொல்லிடறேன்.
வலைச்சரத்தில் எழுதிய விஜயன் துரையின் சில பதிவுகளில் அவரது உழைப்பு நன்றாகவே தெரியும். அதனால், போனில் பாராட்டு தெரிவித்தேன். அதே போல, தி. தமிழ் இளங்கோ ஐயா அவர்களுக்கும் போனில் பாராட்டு தெரிவித்தேன்.
******************************************
பதிவரின் மிரட்டல் விமர்சனம்:
ஒரு பதிவர் ஆதிபகவன் படத்துக்கு விமர்சனம் எழுதியிருந்தார். படம் ஒர்த் இல்லை, ஆனா தியேட்டர்ல போய் கண்டிப்பா பாருங்க?ன்னு பாரா, பாராவா சொல்லி இருந்தார். யாராவது திட்டனும்னா போன் பன்னுங்கன்னும் கமென்ட்-இல் தில்லா போன் நம்பரும் தந்திருந்தார். உடனே, போன் செய்து, பதிவுல விமர்சனம் போட்டிருகிங்க, எப்படி இப்படி எழுதியிருகிங்க அப்படி பேச ஆரம்பிச்சதும், சுதாரிச்ச அவர், தெரிஞ்ச குரலாவே இருக்கே, நீங்க யார்ன்னு தெரியலையேன்னு பேச்சை டைவட் பண்ணிட்டார். அப்பொறமா என்னை கண்டுபிடிச்சிட்டார். விமர்சனம் நீளமா இருந்தாலும், நல்லா எழுதியிருக்கிங்க'ன்னு சொல்லி கட் பண்ணிட்டேன். அவரு கண்டுபிடிக்கலைனா கொஞ்ச நேரம் கலாய்ச்சிருப்பேன். ஒ.. அவர் யார்னு சொல்ல மறந்துட்டேனே? நம்ம, திடமான சீனு தான்.
ஒரு பதிவர் ஆதிபகவன் படத்துக்கு விமர்சனம் எழுதியிருந்தார். படம் ஒர்த் இல்லை, ஆனா தியேட்டர்ல போய் கண்டிப்பா பாருங்க?ன்னு பாரா, பாராவா சொல்லி இருந்தார். யாராவது திட்டனும்னா போன் பன்னுங்கன்னும் கமென்ட்-இல் தில்லா போன் நம்பரும் தந்திருந்தார். உடனே, போன் செய்து, பதிவுல விமர்சனம் போட்டிருகிங்க, எப்படி இப்படி எழுதியிருகிங்க அப்படி பேச ஆரம்பிச்சதும், சுதாரிச்ச அவர், தெரிஞ்ச குரலாவே இருக்கே, நீங்க யார்ன்னு தெரியலையேன்னு பேச்சை டைவட் பண்ணிட்டார். அப்பொறமா என்னை கண்டுபிடிச்சிட்டார். விமர்சனம் நீளமா இருந்தாலும், நல்லா எழுதியிருக்கிங்க'ன்னு சொல்லி கட் பண்ணிட்டேன். அவரு கண்டுபிடிக்கலைனா கொஞ்ச நேரம் கலாய்ச்சிருப்பேன். ஒ.. அவர் யார்னு சொல்ல மறந்துட்டேனே? நம்ம, திடமான சீனு தான்.
******************************************
விழித்த போலீஸ்:
மதுரையில், இப்ப சமீபமா எங்க திரும்பினாலும் போலீஸ் சார், அதிக கூட்டமுள்ள ஷேர் ஆட்டோ, இருசக்கர வண்டிகளை மடக்கி, டாக்குமென்ட் இல்லாதவங்க, சந்தேக நபர்கள் என பிடிச்சு பைன் போட்டுறாங்க. ஆனா, சில ரூல்ஸை காத்துல பறக்க விட்டுறாங்க. முக்கியமா ஹெல்மெட் பத்தி கண்டுக்க மாட்டிங்கறாங்க. எவ்வளவு தான் ஹெல்மெட் முக்கியத்துவம் பத்தி சொன்னாலும், மக்களும் சரியா பாலோ பண்றதே இல்லை. ஹெல்மெட் போடாதவங்களை போலீஸ் புடிச்சு பைன் போட்டா நல்லது தான். போலீஸ் நண்பர்களே, ஹெல்மெட் வேட்டையை தொடருங்களேன்.
என்னதான் போலீஸ் விழிப்பா இருந்தாலும், அவங்க கண்ணுல கையை வுட்டு ஆட்டுறது இந்த ஷேர் ஆட்டோக்கள் தான். அதிக கூட்டம், ஓவர் ஸ்பீடு, விபத்தை ஏற்ப்படுத்துதல் என அவங்க தொல்லை அதிகம் தான். அதனால, ஷேர் ஆட்டோவை கடுமையா கண்ட்ரோல் செய்யணும்.
ஷேர் ஆட்டோவுக்கு பதிலா பாதுகாப்பான மாற்று வாகனம் இருக்கா?
******************************************
தெளிவான பசங்க:
போன ஞாயித்து கிழமை சூரியன் எப்எம்-இல் சாலமன் பாப்பையா பட்டிமன்றம். தலைப்பு, படிப்பறிவா? பட்டறிவானு வாதம் நடந்துச்சு.
அதுல ஒருத்தர் சொன்ன சுவாரஸ்யம் கீழே:அப்பா: டேய், அவன் உன்கூட தானே படிக்கிறான்.. அவன் தொன்னுத்தி அஞ்சு மார்க் வாங்கியிருக்கான். நீ இருபத்தி அஞ்சு மார்க் தான் வாங்கியிருக்க... உன்னை என்னடா செய்யறது?
மகன்: அப்பா திட்டாதிங்க...
அப்பா:ரெண்டு பேரும் ஒரே ஸ்கூல்... ரெண்டு பேரும் டீப் பிரண்ட்ஸ்,ரெண்டு பேருக்கும் ஒரே டீச்சர்,ரெண்டு பேரும் ஒண்ணாவே ஸ்கூலுக்கு போறீங்க......ஒண்ணாவே விளையாடுரிங்க....ஒண்ணாவே சாப்பிடுறிங்க...ஒரே கடையில புக், நோட் வாங்கறிங்க...அப்புறம் ஏண்டா, மார்க் மட்டும் ஒண்ணாவே எடுக்க மாட்டிங்கிற...அட்லீஸ்ட், பாஸ் மார்க் வாங்கலாமே...
மகன்:அப்பா திட்டுறத நிறுத்துங்க...எல்லாமே சரிதான்... ஆனா அவனுக்கும், எனக்கும் அப்பா வேறயாச்சே????
எப்புடி, பையன் விவரமா பதில் சொல்லி இருக்கான்.
******************************************
பதிவர் சந்திப்பு:இடமிருந்து: நான், மதுரை சரவணன், G.M.பாலசுப்ரமணியன், சீனா ஐயா, ரமணி ஐயா |
கடந்த வாரம் பெங்களூரில் இருந்து பதிவர் G.M. பாலசுப்ரமணியன் குடும்பம் சகிதமாக மதுரைக்கு வந்திருந்தார். ஐயா பாலசுப்ரமணியன் http://gmbat1649.blogspot.in/ என்ற வலைப்பூவில் எழுதி வருகிறார். அவருடன் மதுரை பதிவர்கள் சந்தித்து சிறிது நேரம் பேசிக் கொன்டிருந்தோம்.மேற்கண்ட படத்தில் இன்னொரு பதிவர் இல்லை. அவர் மதுரையை சேர்ந்த வெங்கடாசலபதி என்பவர். அவரது வலைப்பூ மென்திறன் வளர்க்க சில சிந்தனைகள் அவரும் அன்று தான் அறிமுகம் ஆனார்.
******************************************
இலவச மென்பொருள் அறிமுகம்:இனி ஒவ்வொரு நா.எ.க பகுதியில் ஒரு இலவச மென்பொருள் தரவிறக்க லிங்க் பகிரப்படும். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Avast Browser Cleanup Tool
Remove Toolbars And Disable Unwanted Add-Ons From Your Favourite Browsers.
Features:
- Remove toolbars and disable unwanted add-ons from Internet Explorer, Mozilla Firefox and Google Chrome.
- It can help you remove browser toolbars and plugins from the system that either have a bad reputation based on community ratings, or that aggressively modify system settings.
- Avast Browser Cleanup is a portable tool, which means you won’t need to go through any installation hassles, and can use it on the go from a USB flash drive.
- Apart from removing toolbars and unwanted add-ons from supported browsers, the application also lets you disable any browser add-ons that you don’t require to be active all the time, but still want to keep installed.
- Avast Browser Cleanup also features an option to reset your current browser settings to the default values.
- The program detects major toolbars such as the Ask toolbar, Babylon Search toolbar or the AVG Security toolbar and many minor toolbars and plugins.
- It works on Windows XP, Windows Vista, Windows 7 and Windows 8.
******************************************
ஜில் ஜில் ஜிகர்தண்டா:
15 கருத்துரைகள்:
சூப்பர்!
//ஆனா, கமெண்ட்ஸ் போட முடியல. ஆனா, பதிவு பிடிச்சிருந்தா போன்ல கூப்பிட்டு நல்லது, கெட்டத சொல்லிடறேன்.//
பிரபல பதிவர்னா அப்படித்தாம்யா.
//ஷேர் ஆட்டோவுக்கு பதிலா பாதுகாப்பான மாற்று வாகனம் இருக்கா? //
இருந்தா, அதையும் ஷேர் ஆட்டோ மாதிரியே தான் யூஸ் பண்ணுவோம்.
//ஜில் ஜில் ஜிகர்தண்டா: //
அய்யோ...அம்மா..........!
ஷேர் ஆட்டோவுக்கு பதிலா பாதுகாப்பான மாற்று வாகனம் இருக்கா?
>>
இருக்கே! மாட்டு வண்டி..
வணக்கம் சகோ .நகைச்சுவையுடன் கூடிய தங்களின் பொது நலன்
கருதிய இப் பகிர்வு கண்டு மகிழ்ந்தேன் .தொடர்ந்தும் எழுத வாழ்த்துக்கள் !
மதுரை போலிசுக்கு வாழ்த்துக்கள்
விவரமான போலீஸ் தான். பதிவர் சந்திப்பு படம் சிறப்பு.
///ஜில் ஜில் ஜிகர்தண்டா: ////
நமீதாவுக்கு போட்டி வந்துடுச்சிடோய்.......
சீனு ரொம்பவே திடம்...
இனிய பதிவர்கள் சந்திப்பு...
தொடந்து எழுத வாழ்த்துக்கள்...
இதுதான் ஜிகர்தண்டாவா?தெரிந்துகொண்டேன்.
அன்னிக்கு மட்டும் உங்கள கண்டுபிடிக்காம இருந்திருந்தேன்னா எனக்குள்ள இருக்க கைப்புள்ள டக்குனு முழிச்சிருப்பான்.... :-)
விஜயன் அருமையா தொகுத்து வழங்கி இருந்திருந்தான்....நானும் சொன்னேன்...
//சீனு ரொம்பவே திடம்...// நன்றி தனபாலன் சார் அவ்வ்வ்வ்வ்வ்
பதிவர்கள் சந்திப்பு அமர்க்களம்....!
ஜிகர்தண்டா சும்மா ஜில்லுன்னு கும்முன்னு இருக்கே...!
இப்போவெல்லாம் போனில கமெண்ட் சொல்ல ஆரம்பிச்சாச்சா... கலக்குங்க.
என் பதிவில் ஃபோட்டோக்கள் போட முடியவில்லை. உங்கள் பதிவில்படம் நன்றாக வந்திருக்கிறது.
நல்ல பகிர்வு...
பழுத்த எழுத்தாளரை சந்தித்து இருக்கிறீர்கள்...
சீனா ஐயா மற்றும் மதுரை சரவணனுடனான போட்டோ அருமை...
ஜிகர்தண்டா மதுரை மல்லி மாதிரி சிலிர்க்கலையே...???????????