வணக்கம் வலை நண்பர்களே,
வலைப்பூ ஒன்றை ஆரம்பித்து, என்னென்ன தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை இத்தொடரின் வாயிலாக பார்த்து வருகிறோம். முதலிரண்டு பாகங்களை தவற விட்டவர்கள் இங்கே கிளிக்கவும்.
சென்ற பாகத்தில் கூறியது போல blog options பற்றி ஒவ்வொன்றாக இந்த பாகத்தில் பார்ப்போம்.
1. Settings:
டாஷ்போர்ட்-டில் இருந்து setting கிளிக் செய்தால் கீழே படத்தில் உள்ளது போல பக்கம் ஓபன் ஆகும். அதில் வலப்பக்கம் மேலிருந்து கீழாக நிறைய options இருக்கும். அவற்றில் கீழே setting options இருக்கும். அதில் Basic, Posts and comments, Mobile and email, Language and formatting, Search preferences, Other என நிறைய options உள்ளது. அவற்றில் முதலில் இருக்கும் Basic option-இல் என்னென்ன செய்ய வேண்டும் என பார்ப்போம்.
Title:
இங்கு உங்கள் வலைப்பூவிற்கான தலைப்பை தரவும். இந்த தலைப்பு தான் உங்கள் வலைப்பூவின் மேலே காட்டும்.
Description:
இங்கு உங்கள் வலைப்பூவிற்கான விளக்கத்தை, அதாவது உங்கள் வலைப்பூ எதனை அடிப்படையாக கொண்டது என்பதை சுருக்கமாக தரவும். எனது இணையப்பூங்கா தளம் கணினி, வலைப்பூ சம்பந்தமானதால் அது பற்றி சுருக்கமாக தந்துள்ளேன். படத்தில் பார்க்க.
Privacy:
இதில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம்.
Blog Address:
இதில் உங்கள் வலைப்பூ முகவரி காட்டும். இந்த முகவரியை மாற்ற விரும்பினால் பக்கத்தில் இருக்கும் edit க்ளிக் செய்தால் ஓபன் ஆகும் கட்டத்தில் நீங்கள் மாற்றம் செய்ய வேண்டிய முகவரியை கொடுத்து save செய்தால் மாறிவிடும். அதாவது netpoonga என்பதை inaiyapoonga என மாற்றலாம்.
இவ்வாறு செய்வதால் வலைப்பூ முகவரி மட்டுமே மாறும். மற்றவை யாவும் மாறாது.
அடுத்து add custom domain என்பதில் உங்கள் வலைப்பூவுக்கு சொந்தமாக முகவரி வாங்கி இணைக்கலாம்.
Permissions:
Blog authors:
இங்கு வலைப்பூ -க்கு யார் சொந்தகாரர் என்பதை காட்டும். அதாவது வலைப்பூ அட்மின் பெயர் காட்டும்.
புதிதாக மற்றொருவரை அட்மின் அல்லது எழுத்தாளர்(author) இணைக்க விரும்பினால் add author என்பதை க்ளிக் செய்து அவர்களின் மின்னஞ்சல் முகவரியை கொடுத்து ஓகே செய்யவும். இதனால் அந்த மின்னஞ்சலுக்கு உங்கள் வலைப்பூ மூலமாக ஒரு மின்னஞ்சல் செல்லும். அதிலுள்ள இணைப்பை அவர் க்ளிக் செய்து அவரது டாஸ்போர்ட்-இல் உங்கள் வலைப்பூ-வின் எழுத்தாளர் (author) அனுமதியை பெறலாம்.
அவருக்கு முழு அட்மின் தர விரும்பினால் admin என்பதை க்ளிக் செய்து முழு அதிகாரத்தை கொடுக்கலாம். இந்த அட்மின் விசயத்தில் மிக கவனமாக இருங்கள். ஏனெனில் அவருக்கு அட்மின் சென்றால், அவரால் உங்களை அந்த வலைப்பூவில் இருந்தே நீக்கி விட முடியும். ஆகையால் மற்றவர்களுக்கு அட்மின் தரும் போது பலமுறை யோசித்து கொடுக்கவும். தெரியாதவர்களுக்கு எக்காரணம் கொண்டும் அட்மின் தர வேண்டாம்.
Blog readers:
இதில் anybody என காட்டும். அதற்கு அருகில் உள்ள edit க்ளிக் செய்தால் மூன்று options ஓபன் ஆகும்.
Anybody என்பதை தேர்வு செய்தால் உங்கள் வலைப்பூவை யார் வேண்டுமானாலும் பார்வையிடலாம்.
Only blog authors என்பதை தேர்வு செய்தால் வலைப்பூ அட்மின் மற்றும் எழுத்தாளர் author மட்டுமே பார்வையிட முடியும்.
Only these readers என்பதில் யார் யாருக்கு மின்னஞ்சல் மூலம் இணைப்பை தருகிறீர்களோ அவர்கள் மட்டுமே பார்வையிட முடியும்.
நண்பர்களே, இன்று settings-basic மட்டும் பார்த்தோம். இன்னும் பதிவுகள் எவ்வாறு எழுதுவது, படங்கள் இணைப்பது என முக்கியமானவைகளை இனி வரும் பாகங்களில் பார்ப்போம்.
ஒவ்வொரு பகுதியாக, முடிந்தளவு கூடுதல் விளக்கங்கள் பகிர விரும்புவதால் சில விஷயங்கள் உங்களுக்கு புரியாமல் இருக்கலாம். மேலும் விளக்கம் தேவையெனில் எனது மின்னஞ்சலை admin@tamilvaasi.com தொடர்பு கொள்ளவும்.
10 கருத்துரைகள்:
தொடரட்டும் பிரகாஷ்,நன்றியும் பாராட்டுகளும்.,
புதியவர்களுக்கு மட்டுமில்லாமல் சந்தேகம் வரும் எல்லோருக்கும் பயன்படும் தொடர்.
பல சந்தேகங்களும் இருந்தால் தீர்க்கும்...
தொடர வாழ்த்துக்கள்...
சார் இன்னக்குத்தான் உங்க பக்கம் வரேன் முந்தய பதிவெல்லாம் படிச்சுட்டு மறுபடி வரேன். எனக்கும் மத்தவங்களுக்கும் மிகவும் பயன்படுகிற விஷயங்கள் சொல்லி வரீங்க நன்றி
@கோகுல்
வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி கோகுல்
நிறையப் பேருக்கு பயனுள்ளதாக இருக்கும்.இதில் அடிக்கடி பயன்படுத்தப் படாத வசதிகள் இருந்தால் அதைப் பற்றியும் விரிவாக சொல்லவும்
நல்ல விடயம் ஒன்றை தொடராக எழுதுகின்றீர்கள் பாராட்டுக்கள் பாஸ்
நன்றி நன்றாக புரியும் படி உள்ளது
பயனுள்ள தகவல் தொடருங்கள் சகோ.
புதியவர்களுக்கு மிகவும் பயன் தரும் பதிவு வாழ்த்துக்கள்!
புதியவர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு.வாழ்த்துக்கள்