CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா? இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-6

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
வணக்கம் வலை நண்பர்களே,
இதுவரை இத்தொடர் வாயிலாக பிளாக் ஆரம்பித்து, என்னென்ன settings செய்ய வேண்டும் என பார்த்தோம். இனி பார்க்க போவது பதிவுகளை எப்படி எழுதுவது? எங்கு எழுதுவது? பதிவு எழுதும் போது கவனிக்க வேண்டிய விசயங்கள் என்னென்ன என பார்க்க போகிறோம்.
வலைப்பூ டாஸ்போர்ட்-இல் இரண்டாவதாக இருப்பதே posts ஆகும். இங்கு தான் நாம் பதிவுகள் எழுதக் கூடிய பக்கம் உள்ளது. Post என்பதை க்ளிக் செய்தால் கீழே படத்தில் உள்ளது போல ஒரு பக்கம் ஓபன் ஆகும். பார்க்க படம் கீழே,

பதிவுகளை எங்கு எழுதுவது?
மேலே படத்தில் B என்ற எழுத்து உள்ளதா? அதற்கு அருகில் பென்சில் போல தோற்றத்தில் படம் உள்ளதா? அதை க்ளிக் செய்தால் பதிவு எழுதக் கூடிய பக்கம் ஓபன் ஆகும். அதே போல Myblogs என்பதற்கு கீழே Newpost என்பதையும் க்ளிக் செய்தாலும் புதிய பதிவு எழுதக்கூடிய பக்கம் ஓபன் ஆகும். பார்க்க கீழேயுள்ள படம். தெளிவாக பெரிதாகி பார்க்க படத்தின் மீது க்ளிக் செய்யுங்கள்.

பதிவின் தலைப்பு எங்கே:
படத்தில் இணையப்பூங்கா என்பதற்கு அருகில் post title என இருக்கும். அங்கு நமது பதிவின் தலைப்பை கொடுக்கவும். தலைப்பு உங்கள் பதிவிற்கு ஏற்ற வகையில் தேர்வு செய்யுங்கள். நீளமாக இல்லாமல் சுருக்கமாக இருந்தால் நல்லது. தலைப்புகளில் பெரும்பாலும் (,), $,@,%,* போன்ற குறியீடுகள் இல்லாத வண்ணம் கவனமாக தேர்ந்தெடுங்கள். ஏனெனில் சிலசமயங்களில் திரட்டிகளில் பதிவை பகிரும் போது தலைப்புகள் முழுமையாக காட்டாது.

பதிவு எழுதுவது எங்கே:
தலைப்பு எழுதுவதற்கான கட்டத்திற்கு கீழே வரிசையாக நிறைய ஐகான்கள் (icons) இருக்கும். அதற்கு கீழே உள்ள கட்டத்தில் பதிவுகள் எழுத வேண்டும். பதிவுகள் பாரா பாராவாக எழுதுவது நல்லது. பதிவுக்கு ஏற்ற படங்கள் இணைத்தல் மிக அவசியம். உங்களுக்கு msword-இல் எழுத தெரிந்திருந்தால் இங்கு எழுதுவது எளிது. ஏனெனில், எழுத்தை பெரிதாக்க, தேவையான கலர் தர, வார்த்தைக்கு அடி கோடு இட என வார்த்தைகளை மாற்றம் செய்ய சில வசதிகள் பதிவு எழுவதற்காக தரப்பட்டுள்ளது.


Fonts:
மேலே படத்தில் சில icons பெரிதாக்கி காட்டப்பட்டுள்ளது.அதில் முதலாவதாக F என்பது fonts-ஐ குறிக்கும். அதில் பல fonts உள்ளது. நாம் தமிழில் எழுதுவதால் இதிலுள்ள fonts நமக்கு பயன்படாது.

Size:
T என்பது எழுத்தின் அளவை மாற்றம் செய்யப் பயன்படுகிறது. அதில் smallest, small, normal, large, largest என உள்ளன. நாம் அதிகமாக பயன்படுத்துவது normal என்பதையே. முக்கிய வாக்கியங்களை large கொடுத்து பெரிதாக்கியும் காட்டலாம்.  பார்க்க படம் கீழே.

Header format:
மேலே படத்தில் மூன்றாவதாக அம்புக்குறி கட்டப்பட்டுள்ளது. இதில் வாக்கியங்களை தலைப்பு, துணை தலைப்பு என alignment செய்யலாம். வாக்கியத்தின் font size மற்றும் ஒவ்வொரு வரிகளுக்கு இடையேயுள்ள இடைவெளி நமது தேர்வுக்கு ஏற்ப மாறுபடும் (பார்க்க படம்). ஆனாலும் normal என்பதையே பெரும்பாலும் உபயோகப்படுத்துங்கள்.

Font colour:
படத்தில் நான்காவதாக உள்ள அம்புக்குறி உள்ள icon எழுத்துக்களின் வண்ணங்கள் அமைக்க பயன்படுகிறது. சில வாக்கியங்களை, வார்த்தைகளை குறிப்பிட்டு காட்ட வெவ்வேறு வண்ணங்கள் கொடுக்கலாம். வார்த்தை, வாக்கியங்களை தேர்வு செய்து தேவையான வண்ணத்தை க்ளிக் செய்து மாற்றலாம். 

Text background colour:
படத்தில் ஐந்தாவதாக காட்டப்பட்டுள்ள அம்புக்குறி உள்ள icon வார்த்தைகள், வாக்கியங்களின் (text background colour) பின்புலத்தில் வண்ணங்கள் மாற்ற பயன்படுகிறது. வார்த்தை, வாக்கியங்களை தேர்வு செய்து தேவையான வண்ணத்தை க்ளிக் செய்து பின்புல வண்ணத்தை மாற்றலாம். 

Word alignment:
மேலே படத்தில் ஆறாவதாக காட்டப்பட்டுள்ள அம்புகுறி உள்ள icon வார்த்தைகள், வாக்கியங்களின் alignment செய்யப் பயன்படுகிறது.


Left:
இதன் மூலம் வாக்கியங்களை/வார்த்தைகளை பதிவின் இடப் பக்கமாக நிறுவலாம்.

Center: 
இதன் மூலம் வாக்கியங்களை/வார்த்தைகளை பதிவின் மையப் பகுதியில் நிறுவலாம்.

Right:
இதன் மூலம் வாக்கியங்களை/வார்த்தைகளை பதிவின் வலப் பக்கமாக நிறுவலாம்.

Justify:
இதன் மூலம் வாக்கியங்களை/வார்த்தைகளை பதிவின் முழு அகலத்திற்கு சமமாக நிறுவலாம்.

இதில் சந்தேகம் இருப்பின் மேலே உள்ள படத்தில் பார்த்து அறிந்து கொள்ளுங்கள். இந்த பதிவு முழுமைக்கும் justify alignment பயன்படுத்தியுள்ளேன்.

நண்பர்களே, பதிவு எழுதும் பக்கத்தில் இன்னும் சில icons உள்ளது, அவற்றைப் பற்றி அடுத்த பாகங்களில் பாப்போம். 

ஒவ்வொரு பகுதியாக கூடுதல் விளக்கங்களுடன் இத்தொடரில் பகிர விரும்புவதால் ஒருசில பகுதிகள் உங்களுக்கு புரியாமல் இருக்கலாம். ஏதேனும் சந்தேகங்கள், விளக்கங்கள் தேவைப்பட்டால் எனது மின்னஞ்சலை admin@tamilvaasi.com தொடர்பு கொள்ளுங்கள்.


4 கருத்துரைகள்:

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips

விளக்கம் சூப்பர்...

சேவை தொடர வாழ்த்துக்கள்...

கூடல் பாலா said... Best Blogger Tips

பதிவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இத்தொடர் நிச்சயம் உதவும்....

சீனு said... Best Blogger Tips

விளக்கப் படங்களுடன் கூடிய பதிவு அருமை.. இவ்வளவு சிரத்தை எடுக்கும் உங்களின் பதிவுலகக் காதல் புரிகிறது ! :-)

Unknown said... Best Blogger Tips

நன்றி அண்ணா என்னைப்போல் புதிதாக எழுதுவோர்க்கு மிகவும் பயன் அளிக்கக்கூடிய பகிர்வு...

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1