CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா? இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-14

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg


வணக்கம் வலை நண்பர்களே,
இத்தொடரில் இதுவரை வலைப்பூ துவங்கி பதிவுகளை எழுதி வெளியிடுவது எப்படி என பார்த்தோம். இனி, வலைப்பூவிற்கு மிக முக்கியமான blogger template designer-இல் உள்ள options பற்றி பாப்போம்.

Adjust widths:
ஒவ்வொரு வலைப்பூவுக்கும் அதன் பக்க அகலம் சரியான அளவில் இருந்தால் தான் தோற்றம் அழகாக இருக்கும். பக்க அகலம் சிறியதாக இருந்தால்சிறிய பதிவுகள் கூட பெரிய பதிவாக காட்டும். படங்களையும் சற்று பெரியதாக இணைக்க முடியாது. Sidebar அகலமும் சரியான அளவில் இருக்க வேண்டும். பக்க அகலத்தை எவ்வாறு மாற்றலாம் என்பதை கீழ்க்கண்ட படத்தில் விளக்கியுள்ளேன்.


மேற்கண்ட படத்தில் பாருங்கள். வலைப்பூவின் பக்க அகலத்தை கூட்ட/குறைக்க வசதி உள்ளது. முதலில் இருக்கும் entire blog என்பது வலைப்பூவின் மொத்த அகலத்தை குறிக்கும். அதன் pixel-ஐ மாற்றுவதன் மூலம் வலைப்பூவின் அகலத்தை கூட்டலாம் அல்லது குறைக்கலாம். 
அதே போல அதற்கு கீழே right side bar என்ற இடத்தில pixel-ஐ மாற்றுவதன் மூலம் right side bar அகலத்தை கூட்டலாம் அல்லது குறைக்கலாம்.

பக்க அகலத்தை மாற்றிய பின்னர் அங்கேயே முன்னோட்டத்தில் பார்த்து சரியான அகலத்தை தேர்வு செய்யலாம்.
வலைப்பூவுக்கு எவ்வளவு பக்க அகலம் வைத்தால் சரியாக இருக்கும்? என கேள்வி தோன்றுகிறதா உங்களுக்கு.... 
இதோ பதில்:
முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில் நாம் புகைப்படங்களை இணைக்கும் போது சில படங்கள் பதிவு பக்கத்தை விட்டு சற்று அகலமாக சென்று விடும். அதற்கு காரணம் பதிவு பக்கத்தின் அகலம் குறைவாக இருப்பதே காரணம். எனவே, வலைப்பூவின் மொத்த அகலத்தை சுமார் 1100 pixel-க்கு அமையுங்கள்... 
அதே போல பக்கப் பட்டிகளை - side bar அகலம் சுமார் 300 pixel இருக்குமாறு அமையுங்கள்... அதாவது பதிவு எழுதும் பக்கம் 800 pixel-ஆகவும், side bar அகலம் 300 pixel இருக்குமாறு அமைத்திடுங்கள். ஏனெனில் sidebar 300 pixel இருந்தால் தான் அங்கு இணைக்கப்படும் applications, google ads என பெரும்பாலானவை sidebar-ஐ விட்டு வெளியே போகாமல் set ஆகும்.
இரண்டு side bar வைத்திருந்தால் ஒன்றை 300pixel-க்கும், மற்றொன்றை 200 pixel-க்கும் அமைத்திடுங்கள்.

Layout:

இது வலைப்பூவுக்கு மிக முக்கியமானது. நமது வலைப்பூ எப்படி தோற்றமளிக்க வேண்டும் என்பதை இங்கு தீர்மானிக்கலாம். அதாவது பதிவு எழுதும் பக்கத்திற்கு வலப்பக்கம் - right side bar, இடப்பக்கம் - left side bar, அடிப்பகுதி - footer எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்த layout பகுதியில் முடிவு செய்ய வேண்டும். 
எனது இணையப்பூங்கா வலைப்பூவுக்கு layout எப்படி  தேர்வு செய்துள்ளேன் என்பதை மேலே படத்தில் கட்டமிட்டு காட்டியுள்ளேன். கீழே வலைப்பூவின் தோற்றத்தை படத்தில் காட்டியுள்ளேன்.

மேலே படத்தில் வலைப்பூவில் பதிவு எழுதும் பக்கமும், வலது பக்கப் பட்டியும் Right side bar காட்டப்பட்டுள்ளது. கீழே உள்ள படத்தில் பதிவு பக்கம், rightside bar, footer bar-ம் காட்டப்பட்டுள்ளது.

நண்பர்களே, பெரும்பாலும் right sidebar ஒன்று அல்லது left sidebar ஒன்றும், footer bar-இல் இரண்டு அல்லது மூன்று பத்திகள்(coloumn) இருக்குமாறு தேர்ந்தெடுங்கள். 

முக்கிய குறிப்பு:
இந்த Blogger template designer settings அனைத்தும் blogger-இல் உள்ள டேம்ப்ளேட்டுகளுக்கு மட்டுமே வேலை செய்யும் என்பதை கவனத்தில் கொள்க... இதர third party டேம்ப்ளேட்டுகளுக்கு வேலை செய்யாது. எனது தமிழ்வாசி தளம் blogger templete அல்ல...Third party டெம்ப்ளேட். எனவே, html-இல் சென்று சில மாற்றங்களை செய்து பக்க அகலத்தை மாற்றியுள்ளேன். 
HTML பற்றி பொதுவாக அறிந்திருந்தாலே நமக்கு பிடித்த மாதிரி Third party டெம்ப்ளேட்டை மாற்றி அமைக்கலாம்.

ஒவ்வொரு பகுதியாக, முடிந்தளவு கூடுதல் விளக்கங்கள் பகிர விரும்புவதால் சில விஷயங்கள் உங்களுக்கு புரியாமல் இருக்கலாம். மேலும் விளக்கம் தேவையெனில் எனது மின்னஞ்சலை admin@tamilvaasi.com தொடர்பு கொள்ளவும்.

முந்தைய பாகங்களுக்கு இங்கே அழுத்துங்கள்


8 கருத்துரைகள்:

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips

படத்துடன் விளக்கம் சூப்பர்... பலருக்கும் மிகவும் உதவும்... முந்தைய பகிர்வுகளில் உங்களிடம் கேட்ட கேள்விற்கு விடையும் கிடைத்தது + அதிர்ச்சியுடன் (விரைவில் பதிவிடுகிறேன்)

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

மிக்க நன்றி மக்கா.! புதியவர்களுக்கு அதிகம் பயன்படும் பதிவு...!

ADMIN said... Best Blogger Tips
This comment has been removed by the author.
ADMIN said... Best Blogger Tips

அழகா, தெளிவா, விளக்கமா சொல்லிக் கொடுக்கறீங்க.. வாழ்த்துகள் தமிழ்வாசி சார்..! தொடருங்கள் உங்களது அற்புதமான சேவையை..!

”தளிர் சுரேஷ்” said... Best Blogger Tips

வழிகாட்டுதல் தொடர் அருமை! எளிமையான அருமையான விளக்கம்! நன்றி!

உலக சினிமா ரசிகன் said... Best Blogger Tips

நண்பர்களே...
நாளை ‘பதிவர் பட்டாபட்டி’ மறைந்து ஏழாம் நாள்.
அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,
நாளை சனிக்கிழமை 18-05-2013 அன்று,
பதிவுலகம், பேஸ்புக் ஆகிய இணைய தளங்களில், பதிவுகள்,ஸ்டேட்டஸ்,கருத்துக்கள்
எதுவும் வெளியிடாமல்...
அன்னாருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என
இணைய நண்பர்கள் தீர்மானித்து உள்ளார்கள்.

அனைவரும் இச்செய்தியை தங்கள் தளங்களில் பகிருமாறு,
இணைய நண்பர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

Laptop Repair & Services, Computer repair & services said... Best Blogger Tips

https://www.facebook.com/pages/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/527889833938365?ref=tn_tnmn

Laptop Repair & Services, Computer repair & services said... Best Blogger Tips

https://www.facebook.com/pages/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/527889833938365?ref=tn_tnmn

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1