வணக்கம் வலை நண்பர்களே,
இத்தொடரில் இந்த பாகத்தில் ப்ளாக் டாஸ்போர்ட்-இல் உள்ள LAYOUT பற்றி பார்க்க போகின்றோம்.
மேலே படத்தில் பார்ப்பது தான் layout settings.
Favicon:
இதில் மேலே இடது மூலையில் இருப்பது favicon. இதன் மூலம் உங்கள் வலைப்பூவுக்கு ஒரு icon வைக்க முடியும். BROWSER-இன் TAB-இல் இந்த ICON காட்டும்.
மேலே படத்தில் பாருங்கள். தமிழ்வாசி தளத்திற்கு ஒரு படத்தை icon-ஆக வைத்துள்ளேன். இந்த icon-ஐ எப்படி நிறுவுவது என கீழே உள்ள படத்தில் பாருங்கள்.
சதுர வடிவில் படத்தை100KB-க்கு மிகாமல் தேர்ந்தெடுத்து SAVE செய்தால் உங்கள் வலைப்பூவிலும் ICON தோன்றும்.
Navbar settings:
Layout-இன் வலப்பக்கம் இருப்பது navbar எனப்படுகிறது. இதன்மூலம் வலைப்பூவில் இருந்தவாறே ப்ளாக்கரில் signin ஆகலாம். ஆனால் பெரும்பாலும் இந்த வசதியை off செய்து வைப்பதே நல்லது (அந்த விண்டோவில் கடைசியில் off வசதி உள்ளது). ஏனெனில், signin-இல் இருக்கும் போது வலைப்பூவில் இருந்தவாறே வலைப்பூவில் மாற்றங்கள் செய்ய முடியும். இதனால் நம்மளையும் அறியாமல் சில தவறுகள் நேர்ந்து விட வாய்ப்புள்ளது.
Navbar வலைப்பூவின் மேல் பகுதியில் காட்டும். பார்க்க மேலே உள்ள படம். இதை off செய்தால் அந்த இடத்தில காட்டாது.
Header:
favcon, navbar இரண்டுக்கும் கீழே இருப்பது header ஆகும். அதில் நமது வலைப்பூவின் பெயர், வலைப்பூவின் விளக்கம் என கொடுக்கலாம். மேலும் header பகுதியில் பின்புலத்தில் நமது விருப்பமான header image-ஐ இணைத்துக் கொள்ளலாம். எவ்வாறு இணைப்பது என்பதை மேலே படத்தில் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.
ஒவ்வொரு
பகுதியாக, முடிந்தளவு கூடுதல் விளக்கங்கள் பகிர விரும்புவதால் சில
விஷயங்கள் உங்களுக்கு புரியாமல் இருக்கலாம். மேலும் விளக்கம் தேவையெனில்
எனது மின்னஞ்சலை admin@tamilvaasi.com தொடர்பு கொள்ளவும்.
முந்தைய பாகங்களுக்கு இங்கே அழுத்துங்கள்.
முந்தைய பாகங்களுக்கு இங்கே அழுத்துங்கள்.
5 கருத்துரைகள்:
it is very useful to create my own blog..thanks prakash
விளக்கம் அருமை... தொடருங்கள்...
சில வருடங்கள் பதிவு எழுதி வந்தாலும்
பல விஷயங்களைத் தங்கள் பதிவின் மூலம்தான்
தெரிந்து கொண்டு வருகிறேன்
அனைவருக்கும் பயன்படும் அருமையான பதிவுகள்
தொடர வாழ்த்துக்கள்
tha.ma 3
புதியவர்களுக்கு நல்ல வழிகாட்டி உங்கள் தொடர்.நன்றி தம்பி.