வணக்கம் வலை நண்பர்களே,
இத்தொடரில் இதுவரை வலைப்பூ துவங்கி பதிவுகளை எழுதி வெளியிடுவது எப்படி என பார்த்தோம். இனி, வலைப்பூவிற்கு மிக முக்கியமான blogger template designer பற்றி பாப்போம்.
டெம்ப்ளேட் மாற்றங்களின் போது பொறுமை மிக அவசியம் நண்பர்களே, ஒவ்வொரு option-யும் தேர்வு செய்து Apply to blog கொடுப்பதற்கு முன் நன்றாக யோசித்து திட்டமிடுங்கள்.
Blogger டாஸ்போர்டில் template என்ற பகுதியில் customize என்பதை க்ளிக் செய்தால் கீழ்க்கண்டவாறு பக்கம் ஓபன் ஆகும். இவற்றை blogger template designer என சொல்லாம். இந்தப் பகுதியானது நமது வலைப்பூவின் டெம்ப்ளேட்டின் உள் அமைப்புகளை மாற்றப் பயன்படுகிறது.
மேலே படத்தில் மூன்று பகுதிகளை குறிப்பிட்டு காட்டியுள்ளேன். மேலே இடது மூலையில் உள்ள பகுதி பிளாக்கில் தேவையான மாற்றங்களை செய்யக் கூடிய options உள்ளது.
மையத்தில் வட்டமிட்டு கட்டியுள்ள பகுதி மாற்றங்களை செய்த பின்னர் பிளாக்கில் எப்படி இருக்கும் என்பதை முன்னோட்டமாக காட்டும். இதில் நாம் செய்த மாற்றங்கள் சரிதானா என பார்த்துக் கொள்ளலாம்.
அடுத்ததாக மேலே வலது மூலையில் Apply to blog என்ற option உள்ளது. நாம் செய்த மாற்றங்கள் முழுமையாக திருப்தி அளித்தால் இந்த option-ஐ க்ளிக் செய்து உறுதி செய்யலாம்.
Blogger template designer பகுதியில் Template, Background, Adjust widths, layout, Advanced என ஐந்து வகை options உள்ளது. இனி ஒவ்வொன்றாக விளக்கமாக பார்ப்போம்.
TEMPLATES:
இதில், Simple, Dynamic views, Picture window, Awesome inc, Watermark, Ethereal, Travel என்ற வகைகளில் சில templates உள்ளது. இவற்றில் simple என்ற டெம்ப்ளேட்டை நாம் தேர்வு செய்துள்ளோம்.
நீங்கள் உங்களுக்கு பிடித்தமான டெம்ப்ளேட்டை தேர்வு செய்து அவற்றை முன்னோட்டமாக பார்த்த பின்னர் தேர்வு செய்யவும். மேலும் டெம்ப்ளேட்டை தேர்வு செய்ய உதவியாக ஒவ்வொரு டேம்ப்ளேட்டுக்கும் கீழே, உதவியாக நிறைய டெம்ப்ளேட் வடிவங்கள் உள்ளன. அவற்றையும் முன்னோட்டம் பார்த்து தேர்வு செய்யுங்கள்.
நான் simple template-க்கு கீழே இரண்டாவதாக உள்ள வெளீர் நீல கலர் உள்ள வடிவத்தை தேர்வு செய்துள்ளேன். ஒவ்வொரு கலருக்கும், எழுத்து வடிவம் சற்று மாறும். உங்களுக்கு தேவையானவற்றை தேர்வு செய்யுங்கள்.
BACKGROUND:
சிலர் தங்களின் வலைப்பூவின் பின்புலத்தில் அழகாக படங்களை இணைத்திருப்பார்கள். நாம் அவ்வாறு படங்களை எப்படி இணைப்பது என இங்கு பார்ப்போம். கீழே படத்தில் background image என்பதை கிளிக் செய்தால் புதிதாக ஒரு பக்கம் ஓபன் ஆகும், அங்கு நிறைய படங்கள் வகைப்படுத்தப்பட்டு உள்ளது. அதில் நமக்கு பிடித்தமான படத்தை தேர்வு செய்யலாம். இதனால் டெம்ப்ளேட் பார்க்க மிக கவர்ச்சியாக அழகாக இருக்கும். Blogger படங்கள் தேவையில்லையெனில் நமக்கு பிடித்தமான படத்தை கம்ப்யூட்டரில் இருந்தும் (Upload) தேர்வு செய்யலாம். கீழே படத்தில் பாருங்கள்.
சிலர் தங்களின் வலைப்பூவின் பின்புலத்தில் அழகாக படங்களை இணைத்திருப்பார்கள். நாம் அவ்வாறு படங்களை எப்படி இணைப்பது என இங்கு பார்ப்போம். கீழே படத்தில் background image என்பதை கிளிக் செய்தால் புதிதாக ஒரு பக்கம் ஓபன் ஆகும், அங்கு நிறைய படங்கள் வகைப்படுத்தப்பட்டு உள்ளது. அதில் நமக்கு பிடித்தமான படத்தை தேர்வு செய்யலாம். இதனால் டெம்ப்ளேட் பார்க்க மிக கவர்ச்சியாக அழகாக இருக்கும். Blogger படங்கள் தேவையில்லையெனில் நமக்கு பிடித்தமான படத்தை கம்ப்யூட்டரில் இருந்தும் (Upload) தேர்வு செய்யலாம். கீழே படத்தில் பாருங்கள்.
மேலே ப்ளாக்கரில் கொடுத்துள்ள business என்ற வகையில் இருந்து ஐந்தாவது படத்தைத் தேர்வு செய்துள்ளேன். அதன் முன்னோட்டம் தான் வலைப்பூவின் பின்புலத்தில் காட்டுகிறது. இதோ கீழே உள்ள படத்தில் நமது வலைப்பூ எவ்வாறு தோற்றம் அளிக்கிறது என பாருங்கள்.
ஆனால், பின்புலத்தில் படம் வைத்தால் இணைய வேகத்தைப் பொறுத்து வலைப்பூ திறக்க அதிக நேரம் எடுக்கும். ஆகவே பின்புல படத்தை தவிர்த்தல் நலம்.
ஏனெனில், எல்லோரும் வேகமான இணைய இணைப்பு கொண்டிருக்க சாத்தியமில்லை.
முக்கிய குறிப்பு:
வலைப்பூவில் மேற்கண்டவாறு நாம் மாற்றங்கள் செய்கையில் தவறு நேர்ந்தாலோ, அல்லது மாற்றங்கள் முழுவதுமே பிடிக்கவில்லை என்றாலோ, கீழே படத்தில் உள்ளவாறு Use default background and colors என்பதை கிளிக் செய்து டெம்ப்ளேட்டின் பழைய default-க்கு மாற்றலாம். பின்னர், திரும்பவும் தேவையான மாற்றங்களை செய்யலாம்.
ஒவ்வொரு
பகுதியாக, முடிந்தளவு கூடுதல் விளக்கங்கள் பகிர விரும்புவதால் சில
விஷயங்கள் உங்களுக்கு புரியாமல் இருக்கலாம். மேலும் விளக்கம் தேவையெனில்
எனது மின்னஞ்சலை admin@tamilvaasi.com தொடர்பு கொள்ளவும்.
முந்தைய பாகங்களுக்கு இங்கே அழுத்துங்கள்.
முந்தைய பாகங்களுக்கு இங்கே அழுத்துங்கள்.
5 கருத்துரைகள்:
/// ஆனால், பின்புலத்தில் படம் வைத்தால் இணைய வேகத்தைப் பொறுத்து வலைப்பூ திறக்க அதிக நேரம் எடுக்கும். ஆகவே பின்புல படத்தை தவிர்த்தல் நலம். ஏனெனில், எல்லோரும் வேகமான இணைய இணைப்பு கொண்டிருக்க சாத்தியமில்லை... ///
முக்கியமாக அனைவரும் அறிய வேண்டியது...
அண்ணே உங்களால் மட்டுமே முடியும்
பாஸ்,தமிழ் 10 ஓட்டுப்பட்டையை என்னுடைய தளத்தில் இணைக்கமுடியவில்லை.இணைக்க மாற்றுவழிகள் ஏதாவது உண்டா?
very useful information...!
//ஆனால், பின்புலத்தில் படம் வைத்தால் இணைய வேகத்தைப் பொறுத்து வலைப்பூ திறக்க அதிக நேரம் எடுக்கும். //
மிக முக்கியமான விஷயம்...
அதே நேரம் டைனமிக் டெம்ப்ளேட் எனக்கு பிடிக்கவில்லை..
மிக நல உழைப்பைக் கொடுத்து ஒரு அற்புதமான பணியை செய்து வருகிறீர்கள் வாழ்த்துக்கள்