CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



செங்கோவி! நடுநிசி 12 மணி! பதிவர்களின் கனா கானும் காலம்!!

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
அன்பான வலை நண்பர்களே....

டிஸ்கி: இந்தப் பதிவு முழுக்க முழுக்க பதிவர் செங்கோவியின் தளத்தில் நம்ம நண்பர்கள் அடித்த கும்மிகள் இன்று இல்லையே என ஏங்கும் நண்பர்களுக்காக எழுதப்பட்டது.

(செங்கோவி பற்றியும், பதிவுகள் மற்றும் அன்றைய நினைவுகளை நம்ம பதிவுலக நண்பர்கள் சிலர் கருத்தா சொல்லி இருக்காங்க. இந்த பதிவின் கடைசியில் இணைச்சிருக்கேன். அவங்க சொல்றதையும் மறக்காம படிச்சிடுங்க)
சென்ற வருடம் மதுரையில் எங்களின் சந்திப்பில் செங்கோவி
பதிவுலகில் இப்போ நிறைய புதுமுகங்களும், பிரபலங்களும், இருக்காங்க. ஆனா, ரெண்டு மூணு வருசமா நல்லா பீக்குல இருந்த பதிவர்கள் இப்போ எழுதறது கொறஞ்சு போச்சு. காரணங்கள் என்னாவாக இருந்தாலும் அப்போ, அதாவது 2011  வருட காலத்தை நெனச்சு பார்த்தா, அந்த கால பதிவுலக நாட்கள் திரும்ப வராதா என மனசு ரொம்ப ஏங்குது.

செங்கோவி எப்பவும் நைட் பண்ணெண்டு மணிக்கு கரெக்டா போஸ்ட் போட்ருவாரு.  செங்கோவி பதிவுகள் எப்பவும் செமையா இருக்கும். நானா யோசிச்சேன், மன்மதலீலை தொடர், அரசியல் பதிவுகள், சினிமா விமர்சனம் என ஒவ்வொரு நாளும் கலந்துகட்டி பதிவுகள் வரும். ஒவ்வொரு பதிவுக்கும் மொத கமெண்ட்ல ஆரம்பிச்சு கமெண்ட்ஸ் கவுண்டிங் நூறு, இருநூறுன்னு போயிட்டே இருக்கும்.

அவரு போஸ்டுல மொத கமென்ட் யாரு போடுவாங்கறதுல ஒரு போட்டியே நடக்கும். அனேகமா அப்ப தான் வடை, மொத வடைங்குற கமென்ட் பழக்கமே வந்துச்சுன்னு நினைக்கிறேன். அப்படியே மொத கமென்ட்ல கலாய்க்க ஆரம்பிச்சா, ஒவ்வொருத்தரா கூடி வர ஆரம்பிச்சிருவாங்க.

அதுவும், நானா யோசிச்சேன்ல, ஹன்சிகா, நமீதா, திரிஷா, பத்மினின்னு கலாய்ச்சு நாலஞ்சு வரிகள் இருந்தா போதும். பன்னிக்குட்டியார், தனிமரம் நேசன், நண்பர்கள் ராஜ், நிரூபன், மொக்கராசு மாமா, ரியல் சந்தானம் பேன்ஸ்(புட்டிபால்-Dr. Butti Paul), யோகா ஐயா, கோகுல் , காட்டான், மாத்தியோசி மணி என நண்பர்களின் கும்மி கமெண்ட்ஸ் ஸ்டாப் பண்ணவே முடியாது. 

எங்களுக்குள் கமெண்ட்ஸ்ல நக்கல்ஸ் போயிட்டே இருக்கும் போது, கூகிள் சாட்டில் வேற தனியா கிசுகிசுக்கள் போயிட்டு இருக்கும். அந்த கிசுகிசுக்கள் கமென்ட்ல போட்டு தனி ஆராய்ச்சியே நடக்கும். ம்ம்ம்... அதெல்லாம் ஒரு காலம். நைட்டுல ஒரு நட்பு வட்டமே ஜாலியா இயங்கினது செங்கோவி பதிவுகள்ல தான்.  அவரும் வேலைகளில் பிஸி ஆக, அப்படியே சில சமயம் பதிவு எழுதுவதற்கு லீவ் விட ஆரம்பிச்சார். நட்பு வட்டங்களும் பதிவு எழுதறதுல கொறஞ்சு போயிட்டாங்க.

பதிவுகள் குறைய காரணம், நேரம் கெடைக்கறது இல்லை, இன்னொன்னு பேஸ்புக்ல ஸ்டேடஸ், லைக், கமெண்ட்ஸ் அப்படின்னு மாறிட்டதுனால அங்கேயே பிஸி ஆகிட்டாங்க. நாங்கெல்லாம் மீண்டு.. மீண்டும் பதிவு எழுத ஆரம்பிக்க செங்கோவி பதிவு எழுதினா தான் முடியும்னு நினைக்கிறேன். ஏன்னா, அங்க தானே நட்புகள் கூடும் இடமா இருந்துச்சு. பதிவுகள் எழுதவும் ஒரு ஆர்வமும் இருந்துச்சு. 

செங்கோவி, குவைத்தில் இருந்து ஒரு மாசம் லீவுக்கு அவர் ஊருக்கு வந்திருக்கார். போன் செய்தார்,  அக்கால நினைவுகளை பீலிங்கா பேசினோம்,  அதன் பாதிப்பே இந்த பதிவு.  

செங்கோவி பற்றி நான் எழுதிய பதிவுகள்:
கண்டேன் செங்கோவியை! ப்யூர் பதிவர் சந்திப்பு!
பதிவர் செங்கோவிக்கும், நடிகை ஹன்சிஹாவுக்கும் என்ன தொடர்பு? (நானா யோசிச்சேன்)

அவரைப் பற்றியும், பதிவுகள் மற்றும் அன்றைய நினைவுகளை நம்ம நண்பர்கள் சிலர் கருத்தா சொல்லி இருக்காங்க இதோ கீழே...

செங்கோவி............. என் இணைய உலகின் வழிகாட்டி. அப்பெல்லாம், பதிவுன்னா என்ன? கும்மின்னா என்னன்னே எனக்குத் தெரியாது. அந்த உலகமே எனக்குப் புதுசு. அருமையான, அன்பான, திறமையான, தமிழை வாசித்த, நேசித்த பல அன்பு உள்ளங்களை எனக்கு அறிமுகப்படுத்திய தளம் செங்கோவி தளம்! அப்பெல்லாம் இரவிரவா கண்ணு முழிச்சு கும்மியடிப்போம். இப்ப கொஞ்ச நாளா....................... ஹூம், என்ன சொல்ல? சிறு வயதுப் பள்ளிக் காலம் போல அதுவும் மறைஞ்சு போச்சு. இன்னிக்கும் நினைச்சு பெருமூச்சு விட்டுக்கிட்டிருக்கோம். மாமா, அய்யா, அண்ணான்னு அழைக்கும் உறவுகள் உலகில் ஒவ்வொரு மூலையிலும் எனக்கு இருக்காங்க. அது செங்கோவி தளத்தால எனக்கு கிடைச்ச வரம். இன்னி வரைக்கும் முக நூல், தொலைபேசி, தொலை நகல்ன்னு அந்த உறவுகள் தொடரவே செய்யுது. ஆனா, செங்கோவி................ஹூம்.........மறுபடி வரணும். அந்த சந்தோஷத்த மறுபடியும் அனுபவிக்கணும்னு மனசு ஏங்குது. எப்ப வருவீங்க, செங்கோவி?(இன்னி வரைக்கும் உங்க தளத்துல தமிழில டைப் பண்ணி,காப்பி பேஸ்ட் பண்ணித் தான் கமெண்டு போடுறேன். இது கூட)


பன்னிக்குட்டி ராம்சாமி
பொதுவா எல்லாருக்கும் அவங்கவங்க கல்லூரி காலங்கள் ரொம்ப இனிமையா இருந்திருக்கும், வாழ்க்கை பூரா அது மாதிரி வராதான்னு நெனச்சு ஏங்கிட்டு இருப்பாங்க, செங்கோவி ப்ளாக்ல இப்படித்தான் ஒரு காலத்துல கமெண்ட்ஸ் களை கட்டுச்சு, அது அங்க வழக்கமா கமெண்ட்ஸ் போட்டுட்டு இருந்த பதிவர்கள் எல்லாருக்குமே பதிவுலக கல்லூரி நாட்களா இருந்துச்சு. செங்கோவியின் பதிவுகளும் அதுக்கேத்த மாதிரி நல்லா களம் அமைச்சு கொடுத்துச்சு. அந்த நாட்களை திரும்ப கொண்டுவரனும்னுதான் எல்லாரும் நினைக்கிறோம். பார்க்கலாம் எந்தளவு சாத்தியப்படுதுன்னு....!


ரஹீம் கஸாலி
பதிவர் செங்கோவி பதிவு போட்டாருன்னா என்னைப்போல சில பல பதிவர்களுக்கு கொண்டாட்டம் தான். அவர் பதிவுக்கு கமெண்ட் போடுவதும், அதற்கு செங்கோவி பதில் கமெண்ட் கொடுப்பதுவுமாய் ஏக கலகலப்பாக செல்லும் அன்றைய பொழுது. அதிலும் நானா யோசிச்சேன் போட்டாருன்னா அதில் அவர் நக்கலும் நையாண்டியும் தூக்கலா இருக்கும். இயல்பானநடையில் எழுதும் அவர் இப்போது எழுதாமல் இருப்பது பதிவுலகிற்கு இழப்புதான். யோவ் சீக்கிரம் வந்து எழுதுய்யா. ஐ யம் வெயிட்டிங்க்.

தனிமரம் நேசன்
பதிவுலகம் என்ற எழுத்தாசைப் பயணத்தில் தனிமரமாக நுழைந்த போது பலரும் பலவிதத்தில் எனக்குத் துணை நின்றார்கள் அந்த வகையில் எப்படி பதிவு எழுதுவது எழுத்தும்பிழை தவிர்ப்பது பந்தி பிரிப்பது முதல் பலரோடு எப்படிப் பொதுத் தளத்தில் பழகவேண்டும் என்று எனக்கு பதிவுலக வழிகாட்டியாக அமைந்தவர், நான்  எப்போதும் மதிக்கும் ஒருவர் அது மன்மத லீலை என்ற தொடரில் எனக்கு அறிமுகமாகி முருகவேட்டையில் முண்டியடித்த நானாக யோசித்தேன் என்று எங்கள் பலருக்கு அறிமுகமான பதிவாளர் செங்கோவி ஐயாதான் ! இவர் தளத்தில் முன்னர் நாம் கூடியிருந்த பசுமையான நாட்கள் மீண்டும் வருமா ? என்று இன்றும் மனம் ஏங்கும் பதிவுலகம்!, பதிவுகள் தாண்டி! குடும்பமாக! பலரோடு எனக்கு இன்றும் நட்புக்கிடைத்த அந்த நாட்கள் மறக்க முடியாது . 

அவர் தளத்தில் வரும் பன்னிக்குடியார், தமிழ்வாசி பிரகாஸ், யோகா ஐயா , மொக்கராசு மாமா,சந்தாணம் பாஸ், அப்பு அண்ணாச்சி என பலரோடு ஒன்றாகி இரவு நேர வேலையிலும் இரண்டு நிமிடங்கள் சரி இயல்பாக இடைவிடாது பேசி மகிழ்வது இவர்தளத்தில் தான் . அவர் பதிவு எப்ப வரும் என்று என் கைபேசியை நோண்டிக் கொண்டு இருக்கும் போது முதல்வடை போல முதல் பால்க்கோப்பி கேட்டு பலருடன் முண்டியடிப்பதிலும் அவை சுகமான நாட்கள் .பலருக்கும் பலரையும் பிடிக்கும் என்றாலும் பதிவுலக அரசியல், ஹிட்சு வெறி என சீண்டி தன்நிலை தாழ்ந்தாலும் இவரோ என் வழி தனிவழி இங்கு எந்தப் பின்னூட்டமும் ஏற்கப்படும் என்று திடம்கொண்டு 200000 தாண்டி ஹிட்சுகொடுத்தவர் செங்கோவி ஐயாவோடு அடிக்கடி கலாய்ப்பதும் கும்மியடிப்பதும் எப்போதும் சந்தோஸமே.

அவரோடு எனக்கு எப்படி இப்படி ஒரு நட்பு ஏற்பட்டது என்று நானே பல தடவை யோசிப்பேன் எங்களின் அலைவரிசை அதிகம் ஒன்று போல இருக்கும் . அவர் தான் என்னை முதன் முதலில் நேசரே என்று வாஞ்சனையுடன் பதிவுலகில் அழைக்கும் அன்பில் பெரியவர். அவர் மீண்டும் பதிவுலகம் வரவேண்டும் நீண்டகாலம் தனிப்பட்ட பணிகளினால் ஓய்வில் இருப்பதால் இனியும் பதிவுலகம் காக்க வைக்காமல் கமலாகாமேஸ் உடன் டூயட் பாட எங்களை எல்லாம் குதுகலமாக்க அவரின் தளத்தில் அதிகமான பதிவுகள் வரவேண்டும் என்பதே என் ஆசை! குஸ்பூ,சினேஹா ,பத்மினி என பதிவுகளுடன் இவர் தளத்தில் கும்மியடிக்க இன்னும் ஆசையுண்டு:)))
---- அன்புடன் தனிமரம்!


 Kss Rajh
இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு நாள்
நேரம் 2.20 நள்ளிரவு
மனம் படபடக்குது எப்ப கரண்ட் வரும் என்று பாலாய்போன கரண்ட் இந்த நேரமா போய்த்தொலையனும் சே என்று அழுத்துக் கொண்டே எப்ப வரும் எப்ப வரும் என்று மனம் தந்தி அடித்தது. அந்த நடுச்சாமத்தில் ஏன் கரண்டுக்காக மனம் பதை பதைக்கனும் கரண்டு வந்தால் தானே கம்பியூட்டரை ஆன் பண்ண முடியும் கம்பியூட்டரை ஆன் பண்ணினால் தானே செங்கோவி அண்ணன் தளத்திற்கு போக முடியும், அங்க போனால் தானே சந்தோசமாக கமெண்ட்டில் கும்மி அடிக்கமுடியும். ஆம் பதிவுலகில் நள்ளிரவிலும் கடையில் கூட்டமாக இருப்பது செங்கோவி அண்ணன் தளத்தில் தான். அஞ்சலி,கமலா காமேஸ், ஹன்சிகா இவர்களின் அன்பர்கள், ரசிகர்கள் கூட்டம் எப்போது செங்கோவி அண்ணன் தளத்தில் நிரம்பி வழியும். ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அது ஒரு காலம் மீண்டும் கிடைக்காதா தூக்கம் தொலைத்து மனம் கும்மியடித்த அந்த பொழுதுகள் என்று மனசு ஏங்குகின்றது...............


கருத்து சொன்ன நண்பர்கள் அனைவருக்கும் நன்றி...


45 கருத்துரைகள்:

Unknown said... Best Blogger Tips

எனக்கு இணையத்தில் பதிவு வாசிக்கும் பழக்கமே அவரது மயக்கம் என்ன விமர்சனம் படிக்க ஆரம்பித்ததில் தான்

Unknown said... Best Blogger Tips

அனைத்து உறவுகளுக்கும்,வணக்கம்!எல்லோரும் நலமே இருப்பீர்கள்.ஆனால்,இந்தப் பதிவு/பகிர்வு எங்கோ அழைத்துச் செல்கிறது.கண்கள் கலங்கி.............நிட்சயம் இத்தனை உறவுகளின் ஆதங்கங்களுக்கும் வடிகாலாக மீண்டும் வருவார்,செங்கோவி!நன்றி பிரகாஷ்!

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@சக்கர கட்டி
எனக்கு இணையத்தில் பதிவு வாசிக்கும் பழக்கமே அவரது மயக்கம் என்ன விமர்சனம் படிக்க ஆரம்பித்ததில் தான் //

கருத்திற்கு நன்றி சக்கர..

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@Subramaniam Yogarasa
அனைத்து உறவுகளுக்கும்,வணக்கம்!எல்லோரும் நலமே இருப்பீர்கள்.ஆனால்,இந்தப் பதிவு/பகிர்வு எங்கோ அழைத்துச் செல்கிறது.கண்கள் கலங்கி.............நிட்சயம் இத்தனை உறவுகளின் ஆதங்கங்களுக்கும் வடிகாலாக மீண்டும் வருவார்,செங்கோவி!நன்றி பிரகாஷ்!///

ஆம்.. ஐயா... செங்கோவி தளத்தில் தான் நாம் அறிமுகம் ஆனோம்...

ராஜி said... Best Blogger Tips

நானும் எழுத வந்த புதுசுல சிரிப்பு போலீஸ் ரமேஸ், வெங்கட், அருண்பிரசாத், வெறும்பயன்னு விடிய விடிய கூத்து கட்டி இருக்காங்க.., பதிவை படிச்சதை விடவும், கமெண்ட் படிச்சு சிரிச்ச நாட்கள் அதிகம்

”தளிர் சுரேஷ்” said... Best Blogger Tips

செங்கோவியின் மன்மத லீலை, முருகவேட்டை தொடர்கள் மறக்க முடியாதவை! 2011 வாக்கில் எழுத ஆரம்பித்த எனக்கும் கமெண்ட் கொடுத்து ஊக்கம் கொடுத்த பதிவர்களில் ஒருவர்! மறக்க முடியாத நினைவுகள்! மீண்டும் அவர் எழுத வருவார் என்ற நம்பிக்கையில்! காத்திருக்கிறேன்! நன்றி!

கோகுல் said... Best Blogger Tips

எனக்கென்னவோ அவர் பதிவுகள் குறைந்தவுடன் தான் பதிவுலகில் பதிவுகள் குறைந்து விட்டதாக தோன்றுகிறது

தனிமரம் said... Best Blogger Tips

நிச்சயம் செங்கோவி மீளவும் பதிவுலகம் வரவேண்டும் என்பதே பேராசை! அவர் முகம் காட்டியதுக்கு நன்றி பிரகாஸ்!

Unknown said... Best Blogger Tips

ஒருவேளை என்னைப் போன்றவர்கள் வலைப்பூவில் மொக்கை போடுவதால் ,அவர் எழுதுவதை நிறுத்திக் கொண்டாரோ ?இருந்தாலும் நண்பர் தமிழ்வாசி பிரகாஷ் அவர்களின் நம்பிக்கையை நிறைவேற்ற வரணும் !

Unknown said... Best Blogger Tips

ஒருவேளை என்னைப் போன்றவர்கள் வலைப்பூவில் மொக்கை போடுவதால் ,அவர் எழுதுவதை நிறுத்திக் கொண்டாரோ ?இருந்தாலும் நண்பர் தமிழ்வாசி பிரகாஷ் அவர்களின் நம்பிக்கையை நிறைவேற்ற வரணும் !

நாய் நக்ஸ் said... Best Blogger Tips

பன்னிக்குட்டி ராம்சாமி
பொதுவா எல்லாருக்கும் அவங்கவங்க கல்லூரி காலங்கள் ரொம்ப இனிமையா இருந்திருக்கும், வாழ்க்கை பூரா அது மாதிரி வராதான்னு நெனச்சு ஏங்கிட்டு இருப்பாங்க, செங்கோவி ப்ளாக்ல இப்படித்தான் ஒரு காலத்துல கமெண்ட்ஸ் களை கட்டுச்சு, அது அங்க வழக்கமா கமெண்ட்ஸ் போட்டுட்டு இருந்த பதிவர்கள் எல்லாருக்குமே பதிவுலக கல்லூரி நாட்களா இருந்துச்சு. செங்கோவியின் பதிவுகளும் அதுக்கேத்த மாதிரி நல்லா களம் அமைச்சு கொடுத்துச்சு. அந்த நாட்களை திரும்ப கொண்டுவரனும்னுதான் எல்லாரும் நினைக்கிறோம். பார்க்கலாம் எந்தளவு சாத்தியப்படுதுன்னு....!////////////////////////////



என் மனதில் உதித்ததை பன்னி மிக அழகாக சொல்லிவிட்டார்......

செங்கோவி said... Best Blogger Tips

யோவ், இப்படி தனிப் பதிவு போட்டு அழைக்கிற அளவுக்கு நான் ஒன்னும் அந்தளவுக்கு பெரிய அப்பாடக்கர் இல்லைய்யா..கொஞ்சம் வேலைப்பளு+கொஞ்சம் சொந்தப்பிரச்சினைகள் காரணமாகவே ஒதுங்கி இருக்கிறேன். ஒரு மாத வெகேஷன் முடிந்து ஊருக்குத் திரும்பியதும், பதிவெழுத ஆரம்பிக்கிறேன். அனைவரின் அன்புக்கும் இதயம் கனிந்த நன்றி.

செங்கோவி said... Best Blogger Tips

யோகா ஐயா, பன்னிக்குட்டி எல்லாம் எவ்வளவு பெரியவங்க. அவங்களையும் தொந்தரவு பண்ணி.....ப்ச், ஏம்யா இப்படிப் பண்றீங்க?

நீங்க ஃபோன்ல சொன்னப்போ ஏதோ நம்மளைக் கிண்டல் பண்ணி பதிவு எழுதப்போறீர்னு பார்த்தா, என்னால தான் பதிவுலகமே இருண்டு போச்சுன்னு போட்டிருக்கீங்க....நக்கல் தானே?

செங்கோவி said... Best Blogger Tips

என் மனம் கவர்ந்த நேசருக்கும், கிஸ்ராஜாவுக்கும் நன்றிகள்..கூட இருந்தே இந்த வேலையைச் செய்த கஸாலிக்கு அதுவும் கிடையாது!

கூடல் பாலா said... Best Blogger Tips

இடையில் வந்த வரலாறு காணாத மின்வெட்டும் பதிவுகள் குறைய முக்கிய காரணம்.....அதை பயன்படுத்தி முகநூல் பலரையும் இழுத்துக்கொண்டது....மின்வெட்டு முற்றிலும் நீங்கினால் பதிவுகள் அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது....

seik mohamed said... Best Blogger Tips

நிச்சயம் செங்கோவி மீளவும் பதிவுலகம் வரவேண்டு

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@ராஜி
நானும் எழுத வந்த புதுசுல சிரிப்பு போலீஸ் ரமேஸ், வெங்கட், அருண்பிரசாத், வெறும்பயன்னு விடிய விடிய கூத்து கட்டி இருக்காங்க.., பதிவை படிச்சதை விடவும், கமெண்ட் படிச்சு சிரிச்ச நாட்கள் அதிகம்///

ஆமா... அவங்கெல்லாம் இப்போ எழுதறதை குறச்சுட்டாங்க

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@s suresh

மீண்டும் அவர் எழுத வருவார் என்ற நம்பிக்கையில்! காத்திருக்கிறேன்! நன்றி! ///

கருத்திற்கு நன்றி சுரேஷ் சார்

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@கோகுல்
எனக்கென்னவோ அவர் பதிவுகள் குறைந்தவுடன் தான் பதிவுலகில் பதிவுகள் குறைந்து விட்டதாக தோன்றுகிறது //

எனக்கும் அப்படித்தான் தோணுது கோகுல்..

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@தனிமரம்
நிச்சயம் செங்கோவி மீளவும் பதிவுலகம் வரவேண்டும் என்பதே பேராசை! அவர் முகம் காட்டியதுக்கு நன்றி பிரகாஸ்! ///

அவரது அனுமதி பெற்றே படத்தை பகிர்ந்துள்ளேன் நேசன்...

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@Bagawanjee KA
ஒருவேளை என்னைப் போன்றவர்கள் வலைப்பூவில் மொக்கை போடுவதால் ,அவர் எழுதுவதை நிறுத்திக் கொண்டாரோ ?இருந்தாலும் நண்பர் தமிழ்வாசி பிரகாஷ் அவர்களின் நம்பிக்கையை நிறைவேற்ற வரணும் ! //

ஹா ஹா... அவரோட பதிவுல போடுவோம் பாருங்க மொக்கை.. செம ஜாலியா இருக்கும் சார்...

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@நாய் நக்ஸ்
என் மனதில் உதித்ததை பன்னி மிக அழகாக சொல்லிவிட்டார்...... //

நன்றி நக்ஸ்... உங்க கருத்தும் அதே தானா?

எதாச்சும் புதுசா எதிர்பார்த்தேன்..

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@செங்கோவி
யோவ், இப்படி தனிப் பதிவு போட்டு அழைக்கிற அளவுக்கு நான் ஒன்னும் அந்தளவுக்கு பெரிய அப்பாடக்கர் இல்லைய்யா..கொஞ்சம் வேலைப்பளு+கொஞ்சம் சொந்தப்பிரச்சினைகள் காரணமாகவே ஒதுங்கி இருக்கிறேன். ஒரு மாத வெகேஷன் முடிந்து ஊருக்குத் திரும்பியதும், பதிவெழுத ஆரம்பிக்கிறேன். அனைவரின் அன்புக்கும் இதயம் கனிந்த நன்றி. ///

ரைட்டுயா.... லீவு முடிஞ்சு ஊருக்கு போயிட்டு எழுத ஸ்டார்ட் பண்ணுங்க...

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@செங்கோவி
யோகா ஐயா, பன்னிக்குட்டி எல்லாம் எவ்வளவு பெரியவங்க. அவங்களையும் தொந்தரவு பண்ணி.....ப்ச், ஏம்யா இப்படிப் பண்றீங்க?///

நாங்க பேஸ்புக்-கில் செங்கோவி பதிவு பேச்சாத்தான் தான் பேசிட்டு இருப்போம்.

///நீங்க ஃபோன்ல சொன்னப்போ ஏதோ நம்மளைக் கிண்டல் பண்ணி பதிவு எழுதப்போறீர்னு பார்த்தா, என்னால தான் பதிவுலகமே இருண்டு போச்சுன்னு போட்டிருக்கீங்க....நக்கல் தானே?///

நெசமா நக்கல் பண்ணல மாம்ஸ்... எங்களோட நட்பு பெருக ஆரம்பித்ததே உங்க தளம் தானே...

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@செங்கோவி
என் மனம் கவர்ந்த நேசருக்கும், கிஸ்ராஜாவுக்கும் நன்றிகள்..கூட இருந்தே இந்த வேலையைச் செய்த கஸாலிக்கு அதுவும் கிடையாது! //

என்ன கிஸ் ராஜாவா?????

கஸாலிக்கு நான் நன்றி சொல்லிக்கறேன்.

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@koodal bala
இடையில் வந்த வரலாறு காணாத மின்வெட்டும் பதிவுகள் குறைய முக்கிய காரணம்.....அதை பயன்படுத்தி முகநூல் பலரையும் இழுத்துக்கொண்டது....மின்வெட்டு முற்றிலும் நீங்கினால் பதிவுகள் அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது.... ///

முற்றிலும் உண்மை பாலா... பவர் கட் பதிவுகளையும் கட் செய்து விட்டது..

அம்பாளடியாள் said... Best Blogger Tips

நான் திட்டுவதற்கென்றே தேர்ந்தெடுத்த அன்புச் சகோதரா :)நீங்கள் கூட இடையில் காணமல் போய் விட்டீர்கள் இன்று திரும்பி வந்துள்ளீர்கள் அதே போன்று செங்கோவி மட்டும்
அல்ல காணாமல் போன அனைத்து உறவுகளும் திரும்ப வர வேண்டும் என்பதே எனது ஆவலும் .மிக்க நன்றி சகோ சிறப்பான பகிர்வு இதற்க்கு .

பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips

//////செங்கோவி said...
யோகா ஐயா, பன்னிக்குட்டி எல்லாம் எவ்வளவு பெரியவங்க. அவங்களையும் தொந்தரவு பண்ணி.....ப்ச், ஏம்யா இப்படிப் பண்றீங்க?//////

பாருங்கய்யா லொல்ல.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips

/////நாய் நக்ஸ் said...
பன்னிக்குட்டி ராம்சாமி
பொதுவா எல்லாருக்கும் அவங்கவங்க கல்லூரி காலங்கள் ரொம்ப இனிமையா இருந்திருக்கும், வாழ்க்கை பூரா அது மாதிரி வராதான்னு நெனச்சு ஏங்கிட்டு இருப்பாங்க, செங்கோவி ப்ளாக்ல இப்படித்தான் ஒரு காலத்துல கமெண்ட்ஸ் களை கட்டுச்சு, அது அங்க வழக்கமா கமெண்ட்ஸ் போட்டுட்டு இருந்த பதிவர்கள் எல்லாருக்குமே பதிவுலக கல்லூரி நாட்களா இருந்துச்சு. செங்கோவியின் பதிவுகளும் அதுக்கேத்த மாதிரி நல்லா களம் அமைச்சு கொடுத்துச்சு. அந்த நாட்களை திரும்ப கொண்டுவரனும்னுதான் எல்லாரும் நினைக்கிறோம். பார்க்கலாம் எந்தளவு சாத்தியப்படுதுன்னு....!////////////////////////////



என் மனதில் உதித்ததை பன்னி மிக அழகாக சொல்லிவிட்டார்......///////

இருக்கட்டும் இருக்கட்டும்...

பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips

//////தமிழ்வாசி பிரகாஷ் said...
@தனிமரம்
நிச்சயம் செங்கோவி மீளவும் பதிவுலகம் வரவேண்டும் என்பதே பேராசை! அவர் முகம் காட்டியதுக்கு நன்றி பிரகாஸ்! ///

அவரது அனுமதி பெற்றே படத்தை பகிர்ந்துள்ளேன் நேசன்.../////

அதான் ஏற்கனவே அண்ணன் விகடன்ல வந்து போட்டோ ஊர்பூரா தெரிஞ்சு போச்சே?

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips

விரைவில் வந்து கலக்கட்டும்... வாழ்த்துக்கள்...

தனிமரம் said... Best Blogger Tips

//////தமிழ்வாசி பிரகாஷ் said...
@தனிமரம்
நிச்சயம் செங்கோவி மீளவும் பதிவுலகம் வரவேண்டும் என்பதே பேராசை! அவர் முகம் காட்டியதுக்கு நன்றி பிரகாஸ்! ///

அவரது அனுமதி பெற்றே படத்தை பகிர்ந்துள்ளேன் நேசன்.../////

அதான் ஏற்கனவே அண்ணன் விகடன்ல வந்து போட்டோ ஊர்பூரா தெரிஞ்சு போச்சே?
//பன்னிக்குட்டியாரே அந்த விகடன் எல்லாம் படித்த காலம் மலையேறிவிட்டது :))) இப்ப பதிவுகள் படிக்கவே நேரம் ஏது !ஆவ்வ்வ்வ்வ்

தனிமரம் said... Best Blogger Tips

என் மனம் கவர்ந்த நேசருக்கும், கிஸ்ராஜாவுக்கும் நன்றிகள்..கூட இருந்தே இந்த வேலையைச் செய்த கஸாலிக்கு அதுவும் கிடையாது!
//வேலை எல்லாம் முடித்து சந்தோஸமாக மீண்டும் வாங்க காத்து இருப்போம் வலையில் இங்கே தான் எப்போதும் ஏதாவது ஒரு மூலையில் :))) சினேஹா ,குஸ்பூ ,பத்மினி ,இன்னும் என்று:))) !ம்ம்ம் நன்றி பின்னூட்டம் மூலம் சரி நிலயை அறிந்த சந்தோஸம் போதும் என்றும்!

K.s.s.Rajh said... Best Blogger Tips

@செங்கோவி

////என் மனம் கவர்ந்த நேசருக்கும், கிஸ்ராஜாவுக்கும் நன்றிகள்..கூட இருந்தே இந்த வேலையைச் செய்த கஸாலிக்கு அதுவும் கிடையாது!////கே.எஸ்.எஸ்.ராஜ் என்பதை கிஸ் ராஜானு எப்ப நீங்கள் அன்போது அழைக்கத்தொடங்கினீங்களோ அன்றில் இருந்து பட்டி தொட்டி எல்லாம் நான் பாப்புலர் ஆகிட்டேன் இணைய வசதியே இல்லாத எங்க ஊரில் கூட சில நண்பர்கள் என்னைய அப்படித்தான் கூப்புடுறாய்ங்க உண்மை என்னானு தெரியாம பல பயபுள்ளைகள் என்னை கமல் ரேஞ்சிக்கு கற்பனை பண்ணிகிட்டு இருக்குதுக அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் எல்லாப் புகழும் அண்ணன் செங்கோவிக்கே

K.s.s.Rajh said... Best Blogger Tips

அண்ணன் மீண்டும் வரவேண்டும் பதிவு எழுதவேண்டும் மீண்டும் அந்த பழய கும்மிகள் தொடரவேண்டும்.

செங்கோவி அண்ணன் மீண்டும் பதிவு எழுத வந்தால் என்ன வேலை இருந்தாலும் பதிவுலகத்துக்காக ஒரு மணித்தியாலம் ஒதுக்கி மீண்டும் சீராக பதிவு எழுத நான் தயார் ஏனைய நண்பர்கள் என்ன சொல்லுறீங்க நீங்களும் எழுதுங்க மீண்டும் பழய கும்மியை ஆரம்பிப்போம்

பால கணேஷ் said... Best Blogger Tips

சென்னைக்கு வந்த சமயம் அவரை நான் பாக்க முடியாம மிஸ் பண்ணிட்டனேன்னு வருத்தப்பட்டேன் பிரகாஷ். மத்த பதிவர்களின் கருத்துக்களையும் தொகுத்து்த் தந்திருக்கறது பதிவையே அழகாக்கிடுச்சு.

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@Ambal adiyal
நான் திட்டுவதற்கென்றே தேர்ந்தெடுத்த அன்புச் சகோதரா :)நீங்கள் கூட இடையில் காணமல் போய் விட்டீர்கள் இன்று திரும்பி வந்துள்ளீர்கள் அதே போன்று செங்கோவி மட்டும்
அல்ல காணாமல் போன அனைத்து உறவுகளும் திரும்ப வர வேண்டும் என்பதே எனது ஆவலும் .மிக்க நன்றி சகோ சிறப்பான பகிர்வு இதற்க்கு . ///

என்னை திட்டி உங்க பதிவுக்கு வர வைப்பிங்க....

உங்க கருத்திற்கு நன்றி...

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@பன்னிக்குட்டி ராம்சாமி
//////செங்கோவி said...
யோகா ஐயா, பன்னிக்குட்டி எல்லாம் எவ்வளவு பெரியவங்க. அவங்களையும் தொந்தரவு பண்ணி.....ப்ச், ஏம்யா இப்படிப் பண்றீங்க?//////

பாருங்கய்யா லொல்ல.....? ////

இதான் வேணும் அண்ணே... ஸ்டார்ட் ம்யூசிக்

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@பன்னிக்குட்டி ராம்சாமி
அதான் ஏற்கனவே அண்ணன் விகடன்ல வந்து போட்டோ ஊர்பூரா தெரிஞ்சு போச்சே? ///

அட... அந்த விகடன் போட்டோ என்கிட்டே இருக்கே.. பதிவில் போட மறந்துட்டேனே!!!!

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@திண்டுக்கல் தனபாலன்
விரைவில் வந்து கலக்கட்டும்... வாழ்த்துக்கள்... //

கருத்திற்கு நன்றி டிடி.

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@K.s.s.Rajh

கிஸ் ராஜா - இந்த பெயர் எனக்கு தெரியாம போச்சே???

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@பால கணேஷ்
சென்னைக்கு வந்த சமயம் அவரை நான் பாக்க முடியாம மிஸ் பண்ணிட்டனேன்னு வருத்தப்பட்டேன் பிரகாஷ். மத்த பதிவர்களின் கருத்துக்களையும் தொகுத்து்த் தந்திருக்கறது பதிவையே அழகாக்கிடுச்சு. ///

சென்னைக்கு வந்த பதிவர்கள் யாரையும் நீங்க மிஸ் பண்ண மாட்டிங்களே???????

கருத்திற்கு நன்றி சார்.

Dr. Kalieswaran said... Best Blogger Tips

எங்கள மாதிரி யூத்ஸ் பதிவுலகம் வரும் போது கை கொடுத்து உதவுறது உங்கள மாதிரி பெரியவங்க தான். அப்ப செங்கோவி மாம்ஸ் னா இப்ப நீங்க தான் எங்களுக்கு..... என்ன சொல்றீங்க ? உண்மை தானே ?

Manimaran said... Best Blogger Tips


எழுத்தினூடே மெல்லிய நகைச்சுவை இழைந்து ஓடுவதுபோல் எழுதுவது ஒரு தனிக்கலை.அதை முதன் முதலில் நானா யோசித்தேன் படிக்கும் போதுதான் உணர்ந்தேன். நிறைய பதிவர்களுக்கு அவர்தான் வழிகாட்டி என நினைக்கிறேன்... அவர் வரணும்.... அதே பழைய பன்னீர்செல்வமா வரணும்..

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said... Best Blogger Tips

நிஜம்தாண்ணே, அப்போவெல்லாம் ரொம்ப வேல டென்ஷன்னா ரிலாக்ஸ் பண்றதே செங்கோவி அண்ணன் கடையிலதான். ராத்திரி 12 மணிக்கு ஆரம்பிச்சி மூணு மணிக்கு அண்ணன் கடைய சாத்துற வரைக்கும் அடிக்கற கும்மி.... உங்க பதிவுக்கு ரொம்ப நன்றிண்ணே, ரொம்ப நாளைக்கு அப்புறமா சொந்தங்கள பார்த்தமாதிரி இருக்கு. யோகா அய்யா, ராம்சாமி அண்ணன், கிஸ் ராஜா, நேசன், கோகுல் எல்லாருக்கும் மேல செங்கோவி அண்ணன் எல்லாரையும் மறுபடியும் ஒருமுறை சந்திக்க வாய்ப்பு கிடைச்சிருக்கு.

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1