CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



பேஸ்புக்கில் தமிழில் எழுத ஈசியான சாப்ட்வேர்!

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg

வணக்கம் வலை நண்பர்களே!
இன்று பேஸ்புக்  மொபைல், லேப்டாப், கம்ப்யூட்டரில் என அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. லேப்டாப், கம்ப்யூட்டரில் பேஸ்புக் ஸ்டேடஸ் தமிழில் டைப் செய்ய பல சாப்ட்வேர் இருந்தாலும் கூகிள் தரும் கூகிள் தமிழ் இன்புட் (google tamil input) என்ற சாப்ட்வேர் பயன்படுத்த மிக எளிமையாக இருக்கும்.

எவ்வாறு இன்ஸ்டால் செய்வது?

முதலில் இந்த பக்கத்தை ஓபன் செய்து அதில் தமிழ் என்பதை செலக்ட் செய்து, I agree என்ற கட்டத்தையும் செலக்ட் செய்ய வேண்டும்.
பின்னர் download என்பதை க்ளிக் செய்தால் கம்ப்யூட்டரில் ஒரு file download ஆகும்.

Download செய்த file-ஐ இன்ஸ்டால் செய்ய வேண்டும். 

இன்ஸ்டால் செய்த பின்  task bar - இல் right clik செய்து முதலாக உள்ள toolbars-ஐ க்ளிக் செய்து அங்கே காட்டும் language bar-இல் க்ளிக் செய்யவும். 


க்ளிக் செய்தால் computer Task bar-இல் வலது பக்கம் நேரம், தேதி காட்டும் இடத்திற்கு அருகில் EN என்ற ஐக்கான் இருக்கும். இந்த ஐகான் இருந்தால் google tamil input கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் ஆகிவிட்டது என அறியலாம்.
EN என்பதை க்ளிக் செய்தால் மேலே படத்தில் உள்ளவாறு ஓபன் ஆகும். அதில், EN English (United states), TA Tamil (India) எனவும் இருக்கும். அதில் டிக் மார்க் EN - இல் இருப்பதால் டைப் செய்தால் ஆங்கிலத்தில் எழுத்துக்கள் வரும். எனவே தமிழ் மொழி வர வேண்டும் என்பதால் நாம் TA என்பதை டிக் மார்க் செய்ய வேண்டும். 

டிக் மார்க் செய்தால் taskbar மேலே கீழேபடத்தில் உள்ளது போல ஒரு bar தோன்றும்.

பின்னர் டைப் செய்ய வேண்டிய இடத்தில், தமிழ் மொழி வாக்கியத்தின் உச்சரிப்பு ஒலிக்கு ஏற்ப ஆங்கில எழுத்துகளை டைப் செய்ய வேண்டும். உதாரணமாக, "வணக்கம்" என தமிழில் டைப் செய்ய வேண்டுமெனில், "vanakkam" என டைப் செய்து spacebar button-ஐ ஒரு அழுத்து அழுத்தினால் தமிழில் வணக்கம் என தோன்றும். 

மேலும் ஆங்கிலத்தில் டைப் செய்யும் பொது அந்த உச்சரிப்பு ஒலிக்கு தொடர்புடைய மற்ற தமிழ் வார்த்தைகளும் அடுத்தடுத்து காட்டும். இங்கே கீழே படத்தில் பாருங்களேன், "காட்டும்" என்பதற்கு kaattum என டைப் செய்யாமல் katum என தவறாக டைப் செய்ததால் கட்டும் என்று முதலில் காட்டுகிறது. ஆனால் மூன்றாவதாக "காட்டும்" என இருப்பதால் நான் மவுஸ் மூலம் மூன்றாவதை தேர்வு செய்தேன்.

இவ்வாறு நாம் தேவையான தமிழ் வாக்கியத்தை தேர்வு செய்யலாம். இவ்வாறு தமிழ் உச்சரிப்பு ஒலிக்கேற்ப ஆங்கில எழுத்துகளை டைப் செய்வதன் மூலம் தமிழ் வார்த்தைகளை பெறலாம்.

சரி, இந்த google tamil input மூலம் பேஸ்புக்கில் எப்படி டைப் செய்வது என கேட்கறீர்களா?
ரொம்ப ஈசி///
பேஸ்புக் ஸ்டேடஸ் கட்டத்தில் கர்சரை வைத்து TN என்பதை செலக்ட் செய்து தமிழ் வாக்கியத்தின் உச்சரிப்பு ஒலிக்கேற்ப ஆங்கில எழுத்துக்களை டைப் செய்தால் தமிழில் வாக்கியங்கள் கிடைக்கும். அவ்வளவு தான். 

சிலர் google translate மூலம் டைப் செய்து காப்பி செய்து பேஸ்புக்கில் பேஸ்ட் செய்வதாக தெரிகிறது. இம்முறையை பயன்படுத்தினால் காப்பி/பேஸ்ட் அவசியமில்லை. வேகமாக சாட் செய்யலாம்.
Google tamil input மொத்தம் 22மொழிகளுக்கு சப்போர்ட் செய்கிறது.
மேலும் விளக்கங்கள் அறிய கீழே உள்ள படத்தில் வாசியுங்கள்.

குறிப்பு:
1. மிக முக்கியமாக இதன் மூலம் இணைய தொடர்பு இல்லாத சமயத்திலும் தமிழில் எழுதலாம். 

2. MS OFFICE, NOTEPAD, BLOG, EMAIL, TWITTER என எதில் வேண்டுமானாலும் எளிதாக பயன்படுத்தலாம்.

3. Control பட்டனையும் G பட்டனையும் (Ctrl+G) அழுத்தினால் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும், தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் எளிதாக மாற்றி எழுதலாம்,


28 கருத்துரைகள்:

கார்த்திக் சரவணன் said... Best Blogger Tips

இரண்டு நாட்களுக்கு முன்புதான் இந்த மென்பொருளை என் கணினியில் நிறுவினேன்... ஒரு சில இடங்களில் மட்டும் எழுத்துப்பிழை வருகிறது... பகிர்வுக்கு நன்றி...

சசிகலா said... Best Blogger Tips

இது எங்களைப்போன்ற தமிழ் டைப்பிங் தெரிந்தவர்களுக்கு சரியாக இருக்குமோ ? மற்றவர்களுக்கு பயன்படும் .

ராஜி said... Best Blogger Tips

பகிர்வுக்கு நன்றி

”தளிர் சுரேஷ்” said... Best Blogger Tips

நல்லதொரு தகவல் நன்றி!

கூடல் பாலா said... Best Blogger Tips

தங்லீஷ்ல எழுதி கொல்றவுங்களுக்கு கண்டிப்பா தேவை...

Yaathoramani.blogspot.com said... Best Blogger Tips

பயனுள்ள பகிர்வு
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@ஸ்கூல் பையன்
ஒரு சில இடங்களில் மட்டும் எழுத்துப்பிழை வருகிறது... /////

ஆனாலும் NHM WRITER-ஐ விட எளிதே என நினைக்கிறேன்...

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@Sasi Kala
இது எங்களைப்போன்ற தமிழ் டைப்பிங் தெரிந்தவர்களுக்கு சரியாக இருக்குமோ ?///

நீங்களாம் தமிழ் டைபிங் ஜீனியஸ்.. உங்களுக்கு தேவையில்லை..

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@ராஜி

கருத்துக்கு நன்றி அக்கா

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips

எனது அண்ணன் இதைத் தான் பயன்படுத்துகிறார்... எனக்கு பிடிக்கவில்லை... பலருக்கும் உதவலாம்... நன்றி...

சீனு said... Best Blogger Tips

மிக அருமையான மற்றும் உபயோகமான பதிவு... ஸ்க்ரீன்சாட் அருமை... நிச்சயம் பலருக்கும் உதவும்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said... Best Blogger Tips

நான் கூகிள் இன்புட் தான் பயன் படுத்து கிறேன்

தேன் நிலா said... Best Blogger Tips

ஆரம்பகட்டத்தில் இருக்கும் புதியவர்களுக்கு இந்த மென்பொருள் பயன்படும்.. பகிர்வுக்கு நன்றி பிரகாஷ்..!!!

Thujan said... Best Blogger Tips

Phone il paavikka mudiyumaa

Ranjani Narayanan said... Best Blogger Tips

வணக்கம் பிரகாஷ்.
கூகிள் தமிழ் இன்புட் டூல் தான் நான் பயன்படுத்துகிறேன். நீங்கள் வேறு ஏதாவது சொல்கிறீர்களோ என்று நினைத்துக் கொண்டே உங்கள் பதிவை படிக்க ஆரம்பித்தேன் அட! நீங்களும் அதையே சொல்லியிருக்கிறீர்கள். தட்டச்சு செய்வது மிக மிகச் சுலபம். நீங்கள் சொல்லியிருப்பது போல offline- லும் பயன்படுத்தலாம்.

அழகான வழிகாட்டுதல் செய்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@s suresh
கருத்திற்கு நன்றி...

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@koodal bala
தங்லீஷ்ல எழுதி கொல்றவுங்களுக்கு கண்டிப்பா தேவை... ///

ஆமா... அவர்களுக்கு முக்கியமாக பயன்படக் கூடியது

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@Ramani S
கருத்திற்கு நன்றி ஐயா..

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@திண்டுக்கல் தனபாலன்
எனது அண்ணன் இதைத் தான் பயன்படுத்துகிறார்... எனக்கு பிடிக்கவில்லை... பலருக்கும் உதவலாம்... நன்றி... //

எனக்கும் சில சமயம் பிடிக்காமல் இருக்கும். ஆனால் மற்ற தமிழ் எழுதிகளை பழகாததால் உபயோக்கிறேன் சார்...

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@சீனு
மிக அருமையான மற்றும் உபயோகமான பதிவு... ஸ்க்ரீன்சாட் அருமை... நிச்சயம் பலருக்கும் உதவும் ///

ஸ்க்ரீன் ஷாட் இருந்தால் தான் எளிமையாக புரியும் சீனு.. கருத்திற்கு நன்றி.

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@T.N.MURALIDHARAN
நான் கூகிள் இன்புட் தான் பயன் படுத்து கிறேன் //

கருத்திற்கு நன்றி..

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@suppudu
ஆரம்பகட்டத்தில் இருக்கும் புதியவர்களுக்கு இந்த மென்பொருள் பயன்படும்.. பகிர்வுக்கு நன்றி பிரகாஷ்..!!! //

தமிழில் எழுத சிரமப்படுகிரவர்களுக்கு மிக எளிமையாக இருக்கும்... கருத்திற்கு நன்றி

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@Thujan
Phone il paavikka mudiyumaa///

அலைபேசியில் இந்த மென்பொருளை பாவிக்க இயலாது.. கணினியில் மட்டுமே பாவிக்க முடியும்... கருத்திற்கு நன்றி..

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@Ranjani Narayanan
கூகிள் தமிழ் இன்புட் டூல் தான் நான் பயன்படுத்துகிறேன். நீங்கள் வேறு ஏதாவது சொல்கிறீர்களோ என்று நினைத்துக் கொண்டே உங்கள் பதிவை படிக்க ஆரம்பித்தேன் அட! நீங்களும் அதையே சொல்லியிருக்கிறீர்கள். ///

முகநூலுக்கு சிலர் கூகிள் translater-இல் டைப் செய்து காப்பி செய்து பயன்படுத்துவதாக சொல்கிறார்கள்... அவர்களுக்கு இந்த பதிவு உதவும் ... கருத்திற்கு நன்றி...

VALLALAR MANAVAN said... Best Blogger Tips

Thakavalukku nantri

VALLALAR MANAVAN said... Best Blogger Tips

Thakavalukku nantri

r.v.saravanan said... Best Blogger Tips

எனது கம்ப்யூட்டர் ரில் தமிழ் தொழில் நுட்பத்தை இணைத்து விட்டேன் நன்றி பிரகாஷ்

sairamakoti said... Best Blogger Tips

இன்ஸ்டால் செய்த பின் இது டெஸ்ட் .ஆ சூப்பர் யா

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1