வணக்கம் வலை நண்பர்களே!
பேஸ்புக்கில் சிலரது பக்கத்தில் Facebook profile viewers tag என மற்ற பேஸ்புக் நண்பர்களால் tag செய்யப்படுவதாகவும், அவ்வாறு tag செய்யப்பட்டதை க்ளிக் செய்தால் அவர்கள் மூலமாக மற்றவர்களுக்கும் அதே மாதிரியான Facebook profile viewers tag செய்யப்படுகிறது. இதனால் புற்றீசல் போல நிறைய பேஸ்புக் பயனாளிகளுக்கு இந்த Facebook profile viewers tag பரவுகிறது.
இவ்வாறு Facebook profile viewers tag செய்தாலும் நம்மால் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க ஒரு வழி உள்ளது. மேலும் வாசிக்க...
1. உங்கள் பேஸ்புக் கணக்கை ஓபன் செய்யுங்கள்.
2. பேஸ்புக் முகப்பு - home பக்கத்தில் வலது மேல் மூலையில் இருக்கும் சக்கரம் போல இருக்கும் ஐகானை க்ளிக் செய்து, PRIVACY SETTINGS க்ளிக் செய்யவும்.
3. க்ளிக் செய்த பின் ஓபன் ஆகும் பக்கத்தில் இடது பக்கத்தில் timeline and tagging என்பதை க்ளிக் செய்தால் கீழே படத்தில் உள்ளவாறு ஓபன் ஆகும்.
4. அதில் Who can add things to my timeline? என்ற கேள்விக்கு இரண்டு options இருக்கும். அதில், who can post on your timeline? என்ற கேள்விக்கு பக்கத்தில் இருக்கும் edit என்பதை க்ளிக் செய்து friends அல்லது only me என்பதில் only me என்பதை தேர்வு செய்யுங்கள். இதனால் மற்ற யாரும் உங்கள் பேஸ்புக் பக்கத்தில் tag செய்ய முடியாது.
5.ஆனால், நான் friends என்பதை தேர்வு செய்துள்ளேன். அதோடு Review posts friends tag you in before they appear on your timeline? என்பதை ON செய்துள்ளேன். இதனால் என் பேஸ்புக் பக்கத்தில் நண்பர்கள் tag செய்ய முடியும்.
6.நமது பேஸ்புக் பக்கத்தில் cover image வைத்துள்ள இடத்தில் activity log என்பதை க்ளிக் செய்தால் activity log ஓபன் ஆகும். அதில் timeline review என்பதை க்ளிக் செய்யவும்.
7. Timeline review க்ளிக் செய்தால் மற்றவர்கள் நமது பக்கத்தில் tag செய்துள்ள ஸ்டேடஸ், படங்கள் என அனைத்தும் காட்டும்.பார்க்க கீழே படம்:
7. அந்த tag-ஐ நான் review செய்து add timeline என கொடுத்தால் மட்டுமே எனது பேஸ்புக் டைம்லைனில் காட்டும். அதுவரை நமது timeline-இல் மற்றவர்கள் பார்வைக்கு காட்டாது. மேலே படத்தில் காந்திமதி என்பவரின் பெயரில் profile viewers tag எனது பெயருக்கும் tag செய்யப்பட்டுள்ளது. ஆனால், நான் review வசதி வைத்துள்ளதால் அந்த message-ஐ எனது timeline-க்கு இணைக்கவில்லை. ஆகையால் எனது பேஸ்புக் கணக்கில் இருந்து இந்த profile viewers tag மற்றவர்களுக்கு பரவுவது தடுக்கப்பட்டுள்ளது என்றே நினைக்கிறேன்.
அதேபோல நண்பர் long live lakshmanan ஒரு போட்டோவை tag செய்துள்ளார். அதையும் நான் add timeline-க்கு ஓகே செய்யவில்லை.
அதேபோல நண்பர் long live lakshmanan ஒரு போட்டோவை tag செய்துள்ளார். அதையும் நான் add timeline-க்கு ஓகே செய்யவில்லை.
குறிப்பு:
நண்பர்களே, நீங்களும் tag review option on செய்து வையுங்கள். இதனால் மற்றவர்கள் tag செய்தாலும் உங்கள் timeline-க்கு காட்டாது. அதைவிட யாருமே tag செய்ய வேண்டாமென நினைத்தால் who can post on your timeline? என்ற கேள்விக்கு only me என்ற option-ஐ தேர்வு செய்யுங்கள்.
டிஸ்கி:
பேஸ்புக்-கில் ராஜி என்ற காந்திமதி அக்கா கேட்டுக்கொண்டதிற்கு இணங்கி இந்த பதிவு...
5 கருத்துரைகள்:
நல்ல விளக்கம்...
சகோதரிக்கும் நன்றி...
மிக்க நன்றி மக்கா சனித்தொல்லைகள் தாங்க முடியல....
தம்பி உடையான் படைக்கு அஞ்சான்ன்னு சொல்லுவங்க. பார்த்தியா என் நம்பிக்கை வீணாகலை.., இதுல என்னை ஏன் எதுக்கு கோர்த்து விடுறீங்கன்னு கோவம் வேற!! இப்போ பாரு எத்தனை பேரு பயன்படபோறாங்கன்னு..,
நீங்க சொன்ன மாதிரி செஞ்சு இருக்கேன். சரியா செஞ்சிருக்கேனா? இல்ல்லியான்னு போக போகதான் தெரியும்
தேவையான தகவல்! விளக்கமாக பகிர்ந்தமைக்கு நன்றி!