வணக்கம் வலை நண்பர்களே,
நீங்கள் வலைப்பூ எழுதுபவராகவும் இருக்கலாம், வாசிப்பவராகவும் இருக்கலாம். வலைப்பூ எழுதுபவர்கள் உங்கள் பதிவுக்கு வாசகர்கள் நிறைய பேர் வர வேண்டுமானால் உங்கள் வலைப்பூவில் பாலோயர் விட்ஜெட் முக்கியமாக இருக்க வேண்டும்.
ஒருமுறை உங்கள் பதிவை வாசித்தவர்கள் உங்கள் வலைப்பூவை தொடர விரும்பினால் இந்த விட்ஜெட்-இல் இணைவதன் மூலம் உங்களின் ஒவ்வொரு பதிவையும் அவர்கள் வாசிக்கும் வாய்ப்பு கூடும். அதே போல வலைப்பூ வாசிப்பவர்கள் இந்த பாலோயர் விட்ஜெட்-இல் இணைவதன் மூலம் அந்த வலைப்பூவின் ஒவ்வொரு பதிவையும் வாசிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
ஒருமுறை உங்கள் பதிவை வாசித்தவர்கள் உங்கள் வலைப்பூவை தொடர விரும்பினால் இந்த விட்ஜெட்-இல் இணைவதன் மூலம் உங்களின் ஒவ்வொரு பதிவையும் அவர்கள் வாசிக்கும் வாய்ப்பு கூடும். அதே போல வலைப்பூ வாசிப்பவர்கள் இந்த பாலோயர் விட்ஜெட்-இல் இணைவதன் மூலம் அந்த வலைப்பூவின் ஒவ்வொரு பதிவையும் வாசிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
சிலரின் வலைப்பூவில் இந்த பாலோயர் விட்ஜெட் இல்லாமல் உள்ளது. மேலும் சிலரின் வலைப்பூவில் இந்த பாலோயர் விட்ஜெட் (google friend connect வசதியை கூகிள் நீக்கிய சமயத்தில்) காணாமல் போய் விட்டது.
Follower widget பாலோயர் விட்ஜெட் உங்கள் வலைப்பூவில் நிறுவுவது எப்படி?
1. Blogger-இல் template சென்று அங்கே மேல் வலப்பக்கத்தில் உள்ள backup/restore என்பதை க்ளிக் செய்து, பின் திறக்கும்பாக்ஸில் உள்ள download full template என்பதை க்ளிக் செய்து உங்கள் வலைப்பூவின் html-ஐ backup எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
2. Blogger-இல் settings சென்று language and formatting சென்று language என்ற கட்டத்தில் english (united kingdom) என தேர்வு செய்யுங்கள். சிலர் தமிழ் மொழியை தேர்வு செய்து வைத்திப்பதால் பாலோயர் விட்ஜெட் உங்கள் வலைப்பூவில் கண்டிப்பாக காட்டாது.
3. Blogger-இல் layout க்ளிக் செய்து தோன்றும் பக்கத்தில் add gadget என்பதை க்ளிக் செய்தால் திறக்கும் விண்டோவில். மேல் இடது மூலையில் more gadget என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
4. அதில் 25 gadgets இருக்கும். கடைசியாக இருக்கும் followers என்ற கேட்ஜெட்-ஐ தேர்வு செய்து save செய்தால் உங்கள் வலைப்பூவிற்கு followers widget கிடைத்து விடும்.
5. Follower gadget இணைத்த பின் உங்கள் வலைப்பூவில் கீழ்கண்டவாறு தோன்றும்.
அதில் Join this site என்பதை க்ளிக் செய்து நமது கூகிள் கணக்கின் மூலம் இணையலாம். பேஸ்புக், ட்விட்டர் கணக்கு மூலமும் இணையலாம். பலரும் இணைந்த பின் கீழே படத்தில் உள்ளவாறு பாலோயர் விட்ஜெட் தோன்றும்.
முக்கிய குறிப்பு:
சிலர் தங்கள் தளத்தில் பாலோயர் விட்ஜெட் இணைத்திருந்தாலும் காட்டாது. அதற்கு காரணம் இந்த பதிவில் எழுதியுள்ள இரண்டாம் பாயின்ட் தான் காரணம். தமிழ் மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றிவிட்டு பாருங்கள், உங்கள் வலைப்பூவில் பாலோயர் கண்டிப்பாக இருக்கும்.
அண்மைய பதிவுகள்:
18 கருத்துரைகள்:
பலருக்கும் உதவும் தரும் தகவல்... நன்றி...
எனக்கு எல்லாம் நீங்க இருக்கும்போது என்ன கவலை....???
அன்பின் பிரகாஷ் - தகவல் பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
புதியவர்கள் அறிந்து கொள்ளவேண்டிய பதிவு...!
Thanks to
தகவலுக்கு நன்றி.. இதெல்லாம் சரிங்க பிரகாஷ்... பாலோயர்சை அதிகப் படுத்த ஏதாவது குறுக்கு வழி இருக்கா..?
நல்ல பயனுள்ள தகவல்.
அண்ணாத்தே
நீ சொன்னா மாத்ரீயே செஞ்சேன்... அப்படீயே கரீட்டா வந்துடுச்சுபா!
ரொம்ப டாங்க்ஸ்பா
சகோ மிகவும் பயனுள்ள பகிர்வு. நிறைய படிக்கவில்லை. நேரம் இருக்கும போது வந்து படிக்கிறேன்.
உண்மைதான் முதலில் ஆங்கிலம் பிறகு தமிழ் மொழியை தேர்வு செய்தால் காணாமல் போய் விடும். டெம்ப்லட் மாற்றும் போது இதே பிரச்சினை இருக்குமா ?
இருக்கு .ஆனா இன்னும் அதிகம் பேர் சேரணும் அதுக்கு என்ன வழி
சொல்லுக ?......க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :))))))))))) வாழ்த்துக்கள் சகோ அருமையான
பகிர்வு http://thanjavur14.blogspot.ch/ இந்தத் தாத்தாவின் வலைத் தளத்தில்
இந்த வேலையை நீங்கள் தான் செய்தும் கொடுக்க வேண்டும் என்பது
எனது வேண்டுகோள் .அருமையான ஆக்கங்கள் எழுதுகிறார் முதியவர்
அவருடைய ஆக்கங்கள் பலரையும் சென்றடைய வேண்டும் என்பது
எங்கள் விருப்பம் (அவரைப் பார்த்தால் எங்கள் தாத்தா நினைவில்
வருவதனாலோ என்னவோ )ஏதாவது உதவி செய்ய வேண்டும் எனத்
தோன்றுகிறது .முடிந்தால் உதவுங்கள் .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .
நல்லதொரு தகவல். இதையெல்லாம் நான் தெரிஞ்சு என்ன பண்ண போறேன்?! அதான், என் பிளாக்கை பட்டி பார்க்க நீயிருக்கியே!!
வணக்கம்... தங்களை தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன்... நேரம் கிடைக்கும் போது பகிருங்கள்... நன்றி... வாழ்த்துக்கள்...
லிங்க் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/07/Try-Training-Success.html
மிகவும் அருமை தகவல்... திரு.திண்டுக்கல் தனபாலன் ஐயா அவர்கள் மூலம் தகவல் தெரிந்து.
உங்களின் வலைத்தளத்திற்கு நான் முதல் முறையாக வருகிறேன்..
அன்புடன்: S. முகம்மது நவ்சின் கான்
அண்ணா...
உங்க புண்ணியத்துல கொண்டு வந்துட்டேன்...Follower gadjet..ஐ...ரொம்ப ரொம்ப நன்றிண்ணா....
http://ponsenthilkumar.blogspot.in/
@Manimaran illai
//சிலர் தமிழ் மொழியை தேர்வு செய்து வைத்திருப்பதால் பாலோயர் விட்ஜெட் உங்கள் வலைப்பூவில் கண்டிப்பாக காட்டாது// இதற்குத் தீர்வு இதோ! பிளாகர் ‘பின்பற்றுபவர்கள்’ (Blogger Follower widget) செயலி இப்பொழுது தமிழிலும்! http://agasivapputhamizh.blogspot.com/2013/11/blogger-follower-widget-in-tamil-also.html
//தகவலுக்கு நன்றி.. இதெல்லாம் சரிங்க பிரகாஷ்... பாலோயர்சை அதிகப் படுத்த ஏதாவது குறுக்கு வழி இருக்கா..?//
குறுக்கு வழி இருக்கே.... விவேகனந்தர் தெரு, துபாய் குறுக்கு சந்து வழியா போங்க...