CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



சும்மா எட்டிப் பாத்தேனுங்க..... (லென்ஸ் ரவுண்ட்)

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
அல்லாருக்கும் வணக்கங்.....

லவ் லெட்டர்
திடீர்னு பிளாக்ன்னு ஒண்ணு இருக்கறத இப்பத்தான் நெனச்சு பாத்தேன். காரணம் நக்ஸ் நக்கீரன் தான். ரொம்ப நாளா நம்ம நக்ஸ் பதிவு போடு.. பதிவு போடுன்னு போன்ல, சாட்ல ஒரே டார்ச்சர்.... யோவ்... நீ மட்டும் தெனமும் பதிவு போடறியா?ன்னு ஒரே ஒரு கேள்விதான் கேட்டேன்.... மனுஷன் ரோஷம் பொத்துட்டு வந்து தன்னோட லவ்வு ஸ்டோரிய எழுதிட்டாரு... இந்த சீனு பய லவ் லெட்டர் போட்டின்னு சொன்னாலும் சொன்னான்... நக்ஸ் அண்ணனும் லவ் லெட்டர் எழுதி களத்துல குதிச்சுட்டாரு. 




நக்ஸ் எழுதிட்டாரு, அட, நானும் லவ் லெட்டர் போட்டில கலந்துக்கலாம்னு பார்த்தா, யாரை நெனச்சு லவ் லெட்டர் எழுதறதுன்னு ரொம்ப கன்பியுஸ் ஆகிப்புட்டேன். அப்ப சாட்டுல நக்ஸ் வந்து அவரோட லவ் லெட்டர் படிச்சியா.. படிச்சியான்னு நச்சரிச்சு, என்னையும் லவ் லெட்டர் எழுத சொன்னார். யோவ் நக்ஸ் யாரை நெனச்சு லெட்டர் எழுதறது தெரிலன்னு கேட்டேன்... இந்தா பிடி, இந்த போட்டோல இருக்குற பிகரை நெனச்சு லவ் லெட்டர் எழுதுன்னு சொல்லி ஒரு போட்டோவ அனுப்ச்சார். 

போட்டோவ பாத்தா, அது இன்னொருத்தரோட லவ்வர்னு தெரிஞ்சு, நக்ஸ் நீ அனுப்பினது இன்னொருத்தரு ஆளு... அப்படியெல்லாம் நான் லெட்டர் எழுத மாட்டேன்னுட்டேன். சரி விடுங்க நக்ஸ், நானே யாரையாச்சும் நெனச்சு ஒரு லவ் லெட்டர் எழுதிக்கறேன்னு சொல்லிட்டு பிளாக்கரை ஓபன் செஞ்சா பாஸ்வேர்ட் மறந்து போச்சு... ஆங்... ரொம்ப நேரமா யோசிச்சு பார்த்து, பாஸ்வேர்ட் கண்டுபிடிச்சேன், அட, என் ஜிமெயில் அக்கௌன்ட் பாஸ்வேர்ட் தான் பிளாக்கருக்கும்ன்னு....

டேய்ன்னு... கழுத்தை நெரிக்க ஓடியாரீங்களா.... தோ.. உங்களுக்காக நக்ஸ் அனுப்புன போட்டோவ மேல போட்டிருக்கேன்... பார்த்துட்டு கூல் ஆயிருங்க... ம்ம்ம்ம்... மீ எஸ்கேப்பு....
ஆனா, இப்ப வரைக்கும் நக்ஸ் எதுக்காக சமந்தா போட்டோவ மட்டும் செலக்ட் செஞ்சு அனுப்பினார்ன்னு தெரியல,.... 
**************************************************

காசு... பணம்.... துட்டு..... மணி.. மணி...
அப்புறம் கொஞ்ச நாளா, "காசு... பணம்.... துட்டு..... மணி.. மணி...ன்னே" ஒத்த லைனை பாடிட்டே இருக்கேன். அட, நான் மட்டும்தான் அந்த ஒத்த லைனை பாடிட்டு இருக்கேன்னு நெனச்சா, பல பேரும் அப்படி பாடிட்டு இருக்காங்க... இந்த பேஸ்புக் பக்கம் கொஞ்சம் ஸ்டேடஸ்சை மேஞ்சு பார்த்தா தெனமும் யாராச்சும் ஒருத்தராச்சும் அந்த லைனை போட்டுட்டே இருக்காங்க.... சரி விடுங்க, அப்படியாச்சும் காசு பணமெல்லாம் நம்மகிட்ட இருந்துட்டு போகட்டுமே... இன்னொரு வாட்டி சொல்லிக்கறேன், காசு... பணம்.... துட்டு..... மணி.. மணி...,; நீங்களும் ஒருவாட்டி பாட்டை பாடி பார்த்திருப்பிங்களே....

**************************************************

மோகினி
தொண்ணூறு கால தமிழ் சினிமாவுல மோகினி-ன்னு ஒரு நடிகை இருந்தாங்களே, ஞாபகம் இருக்கா? என்னா அழகு... தமிழ் சினிமா நடிகைங்க சும்மா பூசுன மாதிரி இருந்தாத் தான் நம்மாளுகளுக்கு பிடிக்கும். அந்த காலத்து ஸ்ரீதேவி முதல் நடுவுல வந்த குஸ்பு, இப்ப இருக்குற ஹன்சிகா வரை அப்படியே... சரி... சரி... மோகினின்னு சொல்லிட்டு ஹன்சிகா நியாபகத்துக்கு போயிட்டேன். லோக்கல் சேனல்ல வா...வா.. அன்பே...ன்னு(படம்: ஈரமான ரோஜாவே) பாட்டு பார்த்தேன்... செம ரசனையான மெலோடி பாட்டு. பாட்டை ரசிச்சுட்டே மோகினி அழகையும் ரசிக்கலாம். அந்த காலத்துல நிறைய ரசிகர் பட்டாளமே இருந்திருக்கும். ம்ஹும்.. இப்ப இந்த காலத்துல மோகினி நடிச்சா அவங்க ஃபேன் ஆகியிருப்பேன். இப்ப மோகினி ஆண்ட்டி ஆகிருப்பாங்களேன்னு சொல்ற உங்க மைன்ட் வாய்ஸ் கேட்குது... அட.... மோகினி டீனேஜ்ல இருந்தா ஃபேன் ஆகியிருப்பேன்னு சொன்னேன்யா.  கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி சீரியல்ல நடிச்சாங்கன்னு நினைகிறேன். 
கூகிள்ல மோகினின்னு தேடுனா நமீதா போட்டோ தான் அதிகமா இருக்கு... ஏன்னு தெரியல. மோகினி ஆண்டியா தான் நிறைய போட்டோல இருக்காங்க. அதான் யூட்யுப்ல அந்த பாட்டை தேடி ஸ்கிரீன்ஷாட் எடுத்தேன்.. ஹா ஹா... 

(ஸ்கிரீன்ஷாட் எடுக்க ஈசியான சாப்ட்வேர் வேணுமா? இந்த பதிவுல கீழே லிங்க் தந்திருக்கேன். டவுன்லோட் செஞ்சுக்கங்க)
**************************************************

மதுரை சிட்டி ஒண்வே
நம்ம மதுரையில நெறைய ரோடு ஒண்வே ஆக்கியிருக்காங்க. எனக்கு தெரிஞ்சு பெரியார்ல இருந்து விளக்கு தூண், ஏகே.அகமது கடை இருக்குற தெக்குமாசி வீதி ரோட்டுக்கு பெரியார் பஸ்ஸ்டாண்டுல இருந்து நேரா எப்பவும் போல போக முடியாது. நேதாஜி ரோடு ஆரியபவன், முருகன் கோயில் வந்து லெப்ட் கட் எடுத்து மேலமாசி வீதி டச் செஞ்சு கீழவெளி வீதி டச் பண்ணி விளக்குத்தூண் சந்திப்புக்கு வரணும்னு நினைக்கிறேன். என்னங்க, தலை சுத்துதா? புதுசா மாத்தியிருக்கறதுனால அப்படித்தான் இருக்கும்னு நினைக்கிறேன். எனக்கு இந்த ஒண்வே மாற்றம் ஓகே தான். ஏன்னா, என் வீட்டுல இருந்து விளக்குத்தூண் ஏரியாவுக்கு போகணும்னா எப்பவும் பெரியார் போயிட்டு தெக்குமாசி வீதி வழியை யூஸ் பண்ண மாட்டேன். செல்லூர் பிரிட்ஜ் ஏறி, யானைக்கல் வந்து நேரா விளக்குத்தூண் போயிருவேன். அதனால எனக்கு நோ பிராப்ளம்.

ஒண்வே பத்தி விவரமா தெரிஞ்சுக்கனுமா, இங்க க்ளிக் பண்ணுங்க.
**************************************************

நம்ம சீனு இந்த கடைசி லைன் வரை ஒரு கேள்வி கேட்டுட்டே இருக்கான். "லவ் லெட்டர் எழுதுவிங்களா? அண்ணே..."


இலவச ஸ்கிரீன்ஷாட் சாப்ட்வேர்:
"லென்ஸ் ரவுண்ட்" பகுதியில பிரீ சாப்ட்வேர் பத்தி ஷேர் பண்ணலாம்னு இருக்கேன். இந்த பகுதியில ஸ்கிரீன்ஷாட் எடுக்க ரொம்ப ஈசியான சாப்ட்வேர் ஒண்ணு உங்களுக்கு சொல்ல போறேன்.

PICPICK - இதான் அந்த சாப்ட்வேர்.


கிட்டத்தட்ட ரெண்டு மூணு வருசமா இதான் யூஸ் பண்றேன். ரொம்பவே ஈசியான சாப்ட்வேர்.

இந்த சாப்ட்வேர் பத்தி அதன் இங்கிலீஸ் தளத்துல விளக்கமா பாக்க இங்க க்ளிக் பண்ணுங்க.

டவுன்லோட் பண்ணனும்னா:
Download Home Free Version ---->>>  க்ளிக் பண்ணுங்க.
******************************************
 லென்ஸ் ரவுண்ட் - லென்ஸ் என்றால் என்ன? விளக்கம் அடுத்த "லென்ஸ் ரவுண்ட்" பகுதியில்.......!!!



30 கருத்துரைகள்:

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips

மோகினி மாமி ஆயிட்டாங்க...!

பிக்கப் செய்து விடுகிறேன் - ஸ்கிரீன்ஷாட் சாப்ட்வேரை...! நன்றி...

கார்த்திக் சரவணன் said... Best Blogger Tips

காசு பணம் துட்டு மணி மணி...

பாடியாச்சு..

//நம்ம சீனு இந்த கடைசி லைன் வரை ஒரு கேள்வி கேட்டுட்டே இருக்கான். "லவ் லெட்டர் எழுதுவிங்களா? அண்ணே..."//

ஹிஹி...

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

நக்கீரன் அண்ணன் மறுபடியும் போன்ல சாட்ல வர ஆரம்பிச்சிட்டாரா ? ஆண்டவா உடனே என் போன் நம்பரை மாத்தனுமே....

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

ஒ ஒ ஒ ஒ இதுதான் சமஞ்சாவா ச்சே ச்சீ சமந்தாவா....?

நக்கீரன் அண்ணன் செமையாதான் அனுப்பி இருக்கார், அண்ணே எனக்கும்....அனுப்புங்க....

கவியாழி said... Best Blogger Tips

பணம்...பணம்..அதனால் கெடுதே குணம்.

ரூபக் ராம் said... Best Blogger Tips

எனக்கு மாதவி உங்களுக்கு மோகினி... சேம் ப்ளட்...

இன்னும் ஐந்து நாட்கள் தான் சார், சீக்கரம் ஆள பிக்ஸ் பண்ணுங்க

Unknown said... Best Blogger Tips

# இப்ப வரைக்கும் நக்ஸ் எதுக்காக சமந்தா போட்டோவ மட்டும் செலக்ட் செஞ்சு அனுப்பினார்ன்னு தெரியல,.... #
அட இதுகூடவா தெரியலே ?முதல்லே அனுப்பின போட்டோவைப் பார்த்து நீங்க 'கடுப்பு 'ஆனதாலே ,எடுப்பா இருக்கிற சமந்தா இடுப்பைப் பார்த்தாலாவது ஜொள் ..சாரி காதல் கடிதம் நீங்க எழுதுவீங்கன்னு அனுப்பி இருக்கார் நக்ஸ் !

ezhil said... Best Blogger Tips

Screen shot உபயோகமான தகவல் ...நன்றி...

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@திண்டுக்கல் தனபாலன்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தனபாலன்

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@ஸ்கூல் பையன்
காசு பணம் துட்டு மணி மணி...

பாடியாச்சு..///

தினமும் பாடிருங்க ஸ்கூல்பையன்...

சீனு said... Best Blogger Tips

ஹா ஹா ஹா எல்லாரும் லெட்டர் எழுதுறீங்களோ இல்லையோ ஒரு பச்சபுள்ளைய கிண்டல் பண்ணி எழுதுறீங்க, இதுக்காகவே அடுத்து ஒரு போட்டி அறிவிச்சு நம்ம நக்ஸ் நடுவரா வச்சி உங்க எல்லாரையும் பலி(ழி) வாங்குறேன் ஹா ஹா... ஆனாலும் கடைசி வரைக்கும் நம்ம சீனு கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லலியென்னெ... :-)

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@MANO நாஞ்சில் மனோ
நக்கீரன் அண்ணன் மறுபடியும் போன்ல சாட்ல வர ஆரம்பிச்சிட்டாரா ? ஆண்டவா உடனே என் போன் நம்பரை மாத்தனுமே....//

ஆமா மக்கா... போன்ல, ஸ்கைப்ல, சாட்ல எது வசதின்னு கேட்கிறார்... எல்லாத்தையும் நான் சேஞ் பண்ணனும்??

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@கவியாழி கண்ணதாசன்
பணம்...பணம்..அதனால் கெடுதே குணம்.///

ரொம்ப சரியா சொன்னிங்க கவியாழி அண்ணே...

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@ரூபக் ராம்
இன்னும் ஐந்து நாட்கள் தான் சார், சீக்கரம் ஆள பிக்ஸ் பண்ணுங்க///

அஞ்சு நாள்ல பிக்ஸ் பண்ணனுமா? நமக்கு கடுதாசிலாம் ஒத்து வராது ரூபக்....

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@Bagawanjee KA
முதல்லே அனுப்பின போட்டோவைப் பார்த்து நீங்க 'கடுப்பு 'ஆனதாலே ,எடுப்பா இருக்கிற சமந்தா இடுப்பைப் பார்த்தாலாவது ஜொள் ..//

அதே.. அதே தான் பகவான் சார்...

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@ezhil

Screen shot உபயோகமான தகவல் ...நன்றி...///

வருகைக்கும், கருத்திற்கும் நன்றி..

Unknown said... Best Blogger Tips

லிங்கிற்கு நன்றி

ராஜி said... Best Blogger Tips

என்ன தம்பி!? ஹவுஸ்பாஸ் ஊருல இல்லியா?! ஹன்சிகா, சமந்தா, மோகினின்னு பொண்ணுங்க பேரா வருது?!

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@ராஜி
என்ன தம்பி!? ஹவுஸ்பாஸ் ஊருல இல்லியா?! ஹன்சிகா, சமந்தா, மோகினின்னு பொண்ணுங்க பேரா வருது?!///

இதான் உங்க கமெண்ட்டா இருக்கும்னு பதிவு எழுதும் போதே முடிவு பண்ணிட்டேன்...

Manimaran said... Best Blogger Tips

இதெல்லாம் ரொம்ப அநியாயங்க...மோகினி ஏதோ கண்ணாம்பாள் காலத்து செட் மாதிரி பேசுறீங்க....அம்மணி ஸ்கூல் படிக்கும் போதே நடிக்க வந்ததுங்க... பிரகாஷ்...90 களில் நீங்க என்ன LKG UKG யா படிச்சிங்க...
ஆனா பாக்குறதுக்கு கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருந்தது. எப்படிப்பாத்தாலும் அது நம்ம செட்டுதான்.

//அந்த காலத்துல நிறைய ரசிகர் பட்டாளமே இருந்திருக்கும். ம்ஹும்.. இப்ப இந்த காலத்துல மோகினி நடிச்சா அவங்க ஃபேன் ஆகியிருப்பேன். //

இதன் மூலம் உங்கள் வயதைக்குறைத்து காண்பிப்பதற்காக அம்மணியை ஆண்டியாக்கிய உங்கள் மீது வழக்குதான் போடனும் :-))

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@Manimaran
இதெல்லாம் ரொம்ப அநியாயங்க...மோகினி ஏதோ கண்ணாம்பாள் காலத்து செட் மாதிரி பேசுறீங்க....அம்மணி ஸ்கூல் படிக்கும் போதே நடிக்க வந்ததுங்க... பிரகாஷ்...90 களில் நீங்க என்ன LKG UKG யா படிச்சிங்க...
ஆனா பாக்குறதுக்கு கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருந்தது. எப்படிப்பாத்தாலும் அது நம்ம செட்டுதான். ]////
அண்ணே... ஒரு தபா கூகிள் சர்ச் செஞ்சு பாருங்க... இப்ப இருக்குற மோகினியை

/அந்த காலத்துல நிறைய ரசிகர் பட்டாளமே இருந்திருக்கும். ம்ஹும்.. இப்ப இந்த காலத்துல மோகினி நடிச்சா அவங்க ஃபேன் ஆகியிருப்பேன். //

இதன் மூலம் உங்கள் வயதைக்குறைத்து காண்பிப்பதற்காக அம்மணியை ஆண்டியாக்கிய உங்கள் மீது வழக்குதான் போடனும் :-))

அண்ணே.. நீங்க மோகினி ரசிகர்னு தெரிஞ்சுகிட்டேன்...

Unknown said... Best Blogger Tips

நன்றாக(சமந்தா ஸ்டில் அல்ல!) இருந்தது!

செங்கோவி said... Best Blogger Tips

அப்போ மோகினியை நினைச்சாவது லவ் லெட்டரை எழுதும்யா.

செங்கோவி said... Best Blogger Tips

யூடியூப் வீடியோல இருந்து ஸ்க்ரீன் ஷாட் மட்டும் தானெடுக்க முடியுமா? அந்த ஸ்க்ரீன்ல இருக்கிறதை வெளில எடுக்க சாப்ட்வேர் இல்லையா பிரகாஷ்?

நாய் நக்ஸ் said... Best Blogger Tips

விளம்பரத்துக்கு.....நன்றி....!!!

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@Subramaniam Yogarasa
நன்றாக(சமந்தா ஸ்டில் அல்ல!) இருந்தது!//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி யோகா ஐயா

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@செங்கோவி
யூடியூப் வீடியோல இருந்து ஸ்க்ரீன் ஷாட் மட்டும் தானெடுக்க முடியுமா? அந்த ஸ்க்ரீன்ல இருக்கிறதை வெளில எடுக்க சாப்ட்வேர் இல்லையா பிரகாஷ்?///

அதான் நானும் தேடிட்டு இருக்கேன் மாம்ஸ்... எந்த சாப்ட்வேர்?????

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@நாய் நக்ஸ்
விளம்பரத்துக்கு.....நன்றி....!!!//

சொன்னபடி பதிவுல நக்ஸ் பேரை போட்டுட்டேன்... நீங்க பணத்தை என் அக்கௌன்ட்ல போட்ருங்க....

test said... Best Blogger Tips

நானும் சின்ன வயசுல அந்தப்பாட்டில மோகினி ஆன்டியப் பாத்திருக்கேன்.

அப்புறம் நம்ம அண்ணன் செங்கோவி என்ன சொல்றார்? திரும்ப வர்றாராமா? :-)

விமல் ராஜ் said... Best Blogger Tips

என் வலைப்பூவிற்கு வந்து சிறப்பிததற்கு நன்றி !!!!

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1