அஜித்தின் ஆரம்பம்
இப்ப சொல்வாங்க... நாளைக்கு சொல்வாங்க. படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடியாவது சொல்வாங்க என நம்பி இருந்த அஜித் ரசிகர்களின் வயிற்றில் போன வாரம் பாலை வார்த்துள்ளது அஜித்தின் 53 படக் குழு. ஆம், Ajith53 என ரசிகர்களால் பெயரிடப்பட்ட படத்திற்கு "ஆரம்பம்" என பெயரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு ரசிகர்களிடம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கிறது.
++++++++++++++++++++++++++++++++++++++
ஹன்சிகா ரசிகர்கள் அதிர்ச்சி
சின்ன குஸ்பு, சின்ன குஸ்புன்னு ரசிகர்கள் மயங்கி கிறங்கிய ஹன்சிகா, நடிகர் சிம்புவை காதலிப்பதாக ட்விட் செய்து ரசிகர் இதயத்தை சுக்குநூறாக வெடிக்க வச்சுடாங்க. ஏற்கனவே, சிம்பு பலபேரோட லவ் கிசுகிசுல மாட்டியிருந்தது அம்மணிக்கு தெரியுமான்னு தெரியல. சரி, எப்படியோ ஜோடி லவ்வுக்கு பை....பை சொல்லாம இருந்தா சரி..
++++++++++++++++++++++++++++++++++++++
பதிவுலக தொடர்பதிவு
பதிவுலகில் ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சாங்க என் முதல் கணினி அனுபவம் தொடர்பதிவு, ஒரே வாரத்தில் நம்ம பதிவர்கள் தங்கள் அனுபவத்தை எழுதி கலக்கிட்டாங்க. அடுத்து பலரும் தொடர்பதிவுக்கு என்ன தலைப்பு வைக்கலாம்னு ரூம் போட்டு யோசிச்சிட்டு இருக்காங்கனு உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
++++++++++++++++++++++++++++++++++++++
பதிவர்களின் குறும்பட முயற்சி
இளம்பதிவர் நண்பர்கள் வலைப்பூ ராஜ் தன் நண்பர்களுடன் இணைந்து ஒரு குறும்படத்தை திரைக்கதை எழுதி இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். பதிவர் துஷ்யந்தன் தன் வலைப்பூவில் எழுதிய "வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா" என்ற தொடர் குறும்படமாக எடுக்கப்பட உள்ளது. இவர்கள் முயற்சி பெரும் வெற்றி பெற நமது வாழ்த்துக்களையும், ஆதரவையும் வழங்குவோம் நண்பர்களே...
++++++++++++++++++++++++++++++++++++++
நடிகை கனகாவின் சோகம்
குணப்படுத்த முடியாத அளவுக்கு கடுமையான புற்றுநோயால்
பாதிக்கப்பட்டிருக்கும் கனகா, கேரளாவில் புற்றுநோயாளிகளை
அவர்களின் மரணகாலம் வரை வைத்து பராமரிக்கும் மருத்துவனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். இப்போது அந்த மருத்துவமனையில் கனகா மரணத்தை எதிர்பார்த்து
புற்றுநோயுடன் போராடிக் கொண்டிருக்கிறார். கனகா மருத்துவமனையில்
சிகிச்சையின் போது அவரை பக்கத்தில் இருந்து பார்த்துக் கொள்ள கூட யாரும்
இல்லை. இப்போது அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை
நிர்வாகத்திடம் தன்னை சந்திக்க யாருக்கும் அனுமதி தரக்கூடாது என்று கனகா
கூறியிருக்கிறார். இதனால் மருத்துவமனை நிர்வாகம் கனகாவை யாரும் சந்திக்க
அனுமதிப்பதில்லை என்று கூறுகிறார்கள். மிகவும் அதிர்ச்சியான செய்தி தான் நண்பர்களே...
++++++++++++++++++++++++++++++++++++++
இன்றைய இலவச மென்பொருள்:
நினிட் (ninite) என ஒரு இணையதளத்தில் நம் கணினிக்கு தேவையான மென்பொருட்களின் டவுன்லோட் இணைப்பு உள்ளது. அதில் நமக்கு தேவையான மென்பொருட்களை தேர்வு செய்து உடனே கணினியில் இன்ஸ்டால் செய்யலாம்.
லென்ஸ் ரவுண்ட் - லென்ஸ் என்றால் என்ன? விளக்கம் அடுத்த "லென்ஸ் ரவுண்ட்" பகுதியில்.......!!!
25 கருத்துரைகள்:
கனகா பற்றிய செய்தி மனதை கனக்க வைக்கிறது
நாளை பதிவுலக நண்பர்கள்,,,சொந்தங்கள் அனைவரயும் ஒரு தொடர் பதிவுக்கு அழைக்கிறேன்...கை விட்டுடாதீங்க மக்கா....!!!!இனிமையான_______
அழகான,அம்சமான நடிகை!திரையுலகமும் வீணடித்து, இப்போ வாழ்க்கையும்..............ஹூம்!!!!
என்ன திடீர்ன்னு ஹன்சிகா மேல பாசம் பொழியுறாப்புல இருக்கு!?
தம்பி ராஜின் குறும்படம் வெற்றியடைய வாழ்த்துகள்
தலைப்புக்கா பஞ்சம்?! பிடித்த 10 பாடல், பிடித்த 10 படம், ரசித்த 10 ஊர், நான் சின்ன பிள்ளையா இருந்த போது, என் வழ்வில் பெண் பார்க்கும் படலம்ன்னு இப்படி எத்தனை தலைப்பு இருக்கு?!
@நாய் நக்ஸ்
நாளை பதிவுலக நண்பர்கள்,,,சொந்தங்கள் அனைவரயும் ஒரு தொடர் பதிவுக்கு அழைக்கிறேன்...கை விட்டுடாதீங்க மக்கா....!!!!இனிமையான_______ ///
யோவ்????
பதிவர்களே ஜாக்கிரதை... தொடர்பதிவுக்கு அழைக்கிறாராம் நக்ஸ்.
ஹன்சிகா- சிம்பு காதல் அதிர்ச்சியான செய்தி
கனகா செய்தி வருத்தமானது. இதே போல் நடிகை 'நிஷா' பற்றிய செய்தி முகநூலில் சில வாரங்களுக்கு முன் வாசித்தேன்
ராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
கனகா - வருத்தமான செய்தி...
' ஊரென்ன சொன்னா என்ன.... ஒன்னாக நின்னா என்ன... ஓம்பேரை பாடி நிப்பேன் மாமா.. '
கஷ்டமாக இருக்கிறது.
நண்பர்களின் குறும்பட முயற்சிக்கு வாழ்த்துக்கள்...
ஆரம்பம் வெற்றிபெற வாழ்த்துவோம்.
ஹன்சிம்பு எவ்வளவு தூரம் போகும்?
மென்பொருள் இணைப்புக்கு நன்றி.
மாங்குயிலே... பூங்குயிலே... இன்னைக்கு சோகக் குயிலாக... வருத்தமளிக்கிறது.,
//அஜித்தின் ஆரம்பம்//
அய்யய்யோ..பதிவர்கள்ளாம் விமர்சனம் எழுதும்போது, ஆ......ரம்பம்-னு எழுதுவாங்களே!
பதிவர் கிஸ்.ராஜா மற்றும் துஷ்-க்கு வாழ்த்துகள்.
கனகாவுக்கு அவர் அம்மா இறந்ததில் இருந்தே, அடி மேல் அடி தான்..பாவம்.
கதம்ப தகவல்கள் அருமை! கனகா செய்தி மிகுந்த அதிர்ச்சி தந்தது! நண்பர்களின் குறும்பட முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்!
@Subramaniam Yogarasa
////அழகான,அம்சமான நடிகை!திரையுலகமும் வீணடித்து, இப்போ வாழ்க்கையும்..............ஹூம்!!!! ////
ஆமாம் ஐயா....
@ரூபக் ராம்
ஹன்சிகா- சிம்பு காதல் அதிர்ச்சியான செய்தி///
ஹா ஹா... உங்களுக்கும் அதிர்ச்சியாச்சா?
@திண்டுக்கல் தனபாலன்
ராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...////
அவரை ஊக்குவிப்போம் தனபாலன்
@Manimaran
' ஊரென்ன சொன்னா என்ன.... ஒன்னாக நின்னா என்ன... ஓம்பேரை பாடி நிப்பேன் மாமா.. '
கஷ்டமாக இருக்கிறது. ////
ஆமாம் நண்பரே..
@சே. குமார்
////மென்பொருள் இணைப்புக்கு நன்றி.////
உபயோகித்து பாருங்கள் நண்பரே..
@செங்கோவி
//////அஜித்தின் ஆரம்பம்//
அய்யய்யோ..பதிவர்கள்ளாம் விமர்சனம் எழுதும்போது, ஆ......ரம்பம்-னு எழுதுவாங்களே!////
ஆகா... இப்படியெல்லாம் யோசனை தரது???? ஏன்யா ஏன்?
@செங்கோவி
பதிவர் கிஸ்.ராஜா மற்றும் துஷ்-க்கு வாழ்த்துகள். //
என்ன கிஷ், துஷ்... ன்னு...
@செங்கோவி
கனகாவுக்கு அவர் அம்மா இறந்ததில் இருந்தே, அடி மேல் அடி தான்..பாவம். ///
ஆமாம்... கணவர் பிரிந்தது... ஆவி அமுதா நஷ்டஈடு வழக்கு என பிரச்சனைகள்
@s suresh
கதம்ப தகவல்கள் அருமை! ///
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சுரேஷ்..
நினிட் (ninite) உபயோகமான தகவல் நன்றி பிரகாஷ்